RightClick

ராசிகளை சனிபகவான் கடக்கும் காலமும்;நாம் பின்பற்ற வேண்டிய பைரவ வழிபாட்டு முறைகளும்!!!விரையச்சனி(ஏழரைச்சனியின் ஆரம்பக் கட்டம்)
          26.6.2012 முதல் 16.12.2014 வரை விருச்சிகராசி
          17.12.2014 முதல் 11.02.2018 வரை தனுசு ராசி
          12.02.2018 முதல் 15.12.2020 வரை மகர ராசி
          16.12.2020 முதல் 16.03.2023 வரை கும்பராசி
          17.03.2023 முதல் 23.02.2026 வரை மீன ராசி

மிகவும் துயரம் தரும் ஜன்மச்சனி(ஏழரைச்சனியின் உச்சகட்டம்)
 26.06.2012 முதல் 16.12.2014 வரை துலாம் ராசி
 17.12.2014 முதல் 11.02.2018 வரை விருச்சிக ராசி
 12.02.2018 முதல் 15.12.2020 வரை தனுசு ராசி
 16.12.2020 முதல் 16.03.2023 வரை மகர ராசி
 17.03.2023 முதல் 23.02.2026 வரை கும்பராசி
 24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகள் வரை மீனராசி


வாக்குச்சனி/பாதச்சனி(ஏழரைச்சனியின் இறுதிக் கட்டம்)
26.6.2012 முதல் 16.12.2014 வரை கன்னி ராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை துலாம் ராசி
12.02.2014 முதல் 15.12.2020 வரை விருச்சிக ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை தனுசு ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை மகர ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு கும்பராசி


ஏழரை ஆண்டுகளில் தரும் சிரமங்களை இரண்டரை ஆண்டுகளிலேயே தரும் அஷ்டமச்சனி:
26.06.2012 முதல் 16.12.2014 வரை மீனராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை மேஷ ராசி
12.02.2018 முதல் 15.12.2020 வரை ரிஷப ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை மிதுன ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை கடக ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சிம்ம ராசி


விரையச்சனி காலத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிவிடும்;வருமானத்திற்கும்,செலவிற்குமான இடைவெளி படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும்;வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும்;அவ்வாறு அலைச்சல்கள் வருவதற்கு நமது கவனக்குறைவே காரணமாக அமையும்.


ஜன்மச்சனி காலத்தில் உயிரைத் தவிர அனைத்தையும் இழக்கும்(தற்காலிகமாகத்தான்!) சூழ்நிலை படிப்படியாக உருவாகும்;சேமிப்புகள் கரைந்துவிடும்;கணவன் மனைவிக்குள் தவறான புரிந்து கொள்ளுதல் ஏற்பட்டு பிரியவேண்டியிருக்கும்;அடிக்கடி சண்டைகள் வரும்;நிரந்தரமான பிரிவோ,நிரந்தரமான நிம்மதியான வாழ்க்கையோ இருப்பது அரிதாக இருக்கும்;இந்த கால கட்டத்தில் சுயதொழில் துவங்கிடக் கூடாது;ஏற்கனவே செய்துவரும் தொழிலை விரிவு படுத்தாமல் இருப்பதும் அவசியம்;குருப்பெயர்ச்சி ஓரளவு நிம்மதியைத் தரும்;ஆனாலும்,நம்மைச் சுற்றியுள்ளவர்களால் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவோம்;நிரந்தரமான வேலை அமைவது அரிது;அலைந்து திரிந்து பார்க்கும் வேலையைத் தேர்வு செய்வது நன்று;நமது தனித்திறமை நமது மேலிடத்திற்குத் தெரியாமல்,வேறு யாரோ ஒருவர்/ள் தன்னுடையதாகக் காட்டி முன்னேறுவார்;நம்மால் எதுவுமே செய்ய முடியாது; தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்ளும் குணத்தின் மீது ஆளுமைத்திறன் தாக்குதல் நடைபெறும்;அவமானத்தின் முழுப்பரிமாணத்தையும்,புறக்கணிப்பின் அர்த்தத்தையும் உணரும் சூழ்நிலை இந்தக் கால கட்டம் ஆகும்.பலர் கடனால்/நோயால்/தேவையற்ற எதிர்ப்புகளால் படாத பாடு படுவர்;எப்போதும் அகலக்கால் வைக்காமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்;

வாக்குச்சனி காலத்தில் நாம் எதைப் பேசினாலும்,அது பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்;ஜன்மச்சனிகாலத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விடவும் நீளமாக இருக்கும்;ஒரு சிறு செயலைக் கூட ஒரே தடவையில் செய்து முடிக்க முடியாமல் 900 நாட்கள் நகர்ந்தால் எப்படி இருக்கும்? அதே போல ஆகிவிடுமோ என்ற அச்சம் தொடரும்;பண வரவு கொஞ்சம் அதிகரிக்கும்;

அஷ்டமச்சனி காலமானது ஏழரைச்சனி முடிந்த 13 வது ஆண்டில் துவங்கும்;இரண்டரை ஆண்டுகளில் ஏழரைச்சனிகாலத்தில் தந்த அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தே ஆகவேண்டும்;இதெல்லாம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பொருந்தும்.விதி விலக்காக ஒரு சிலருக்கு மட்டும் பொருந்தாது;ரிஷப லக்னத்தில் பிறந்து,திரிகோணத்தில் சனி இருக்க ஒருவர் பிறந்திருந்தால் அவருக்கு ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் நன்மைகளை மட்டுமே செய்யும்.இவர்கள் முற்பிறவிகளில் ஸ்ரீகால பைரவப் பெருமானை முழு முதற்கடவுளாக வழிபட்டவர்கள் ஆவர்.

ஏழரைச்சனி 26.6.2012 அன்றுடன் சிம்மராசிக்காரர்களுக்கு நிறைவடைந்தாலும்,மறுநாளே அவர்களுக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவான் தந்துவிட மாட்டார்;அந்த நாளில் இருந்து குறைந்தது ஒரு வருடம் கழிந்தப் பின்னரே,அவரது வயது,கல்வித்தகுதி,திறமை,தனித்திறமை,பேச்சாற்றல்,யூகிக்கும் சாமர்த்தியம் இவைகளுக்குப் பொருத்தமான வேலை/தொழில் அல்லது இரண்டையும் தருவார்;

ஏழரைச்சனி காலத்தில் சாதாரண வேலை அல்லது தொழிலில் இருக்கலாம்;ஏழரை முடிந்த ஒரு வருடத்துக்குள் சிறந்த வேலையில் சேர வேண்டும்;சேமிக்கத் துவங்க வேண்டும்;தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும்;ஒரு போதும் பிறருக்குத் தீங்கு தரக் கூடாது;ஒரு போதும் பிறர் மனதை நோகடிக்கக்கூடாது;ஒரு போதும் தவறான வழியில் சம்பாதிக்கக் கூடாது;தவறான வழியில் சொத்து சேர்க்கக் கூடாது;தவறான வழியில் பெண்களை(ஆண்களும்)/ஆண்களை(பெண்களும்) அணுகக்கூடாது;அப்படி தவறான வழியில் செல்பவர்களுக்கு தண்டனை அஷ்டமச்சனி காலத்தில் கடுமையாக இருக்கும்;அதுவரையிலும் நம் ஒவ்வொருவரின் செயல்களும்,பேச்சும்,சிந்தனையும் நமது ஜாதகத்தில் பத்தாமிடத்தில் பதிவாகிவரும்;

எனவே,அடுத்த 13 ஆண்டுகளுக்கு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன விதமான சனிப்பெயர்ச்சிகள் வர இருக்கின்றன என்பதை தெரிவித்துவிட்டோம்;அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானைச் சரணடைந்து நிம்மதியும்,பணக்கஷ்டமும் இல்லாத வாழ்வைப் பெறுவீர்களாக!!!

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ