RightClick

நோய் தீர்க்கும் திருத்தாண்டகம் பாடலும்,அதன் மகிமையும்!!!எனது நண்பரின் அப்பா தினமும் அவர் வாழ்ந்து வந்த ஊரில் சிவாலயம் செல்லும் வழக்கம் உடையவர்;சிவாலயம் சென்று மூலவரின் முன்பாக அமர்ந்து குறிப்பிட்ட தேவாரப் பதிகங்களைப் பாடுவார்;இந்தப் பழக்கத்தை அவருடைய அப்பா சுமாராக ஐம்பது ஆண்டுகளாகச் செய்துவர,அந்த பழக்கம் இவருக்கும் வந்துவிட்டது.

எனது நண்பரின் அப்பாவுக்கு ஜோதிடத்தில் அளவற்ற ஆர்வமுண்டு;ஜோதிடத்தை அவர் தொழிலாகச் செய்யாவிட்டாலும்,பொழுதுபோக்காக பல ஆராய்ச்சிகள் செய்து பலருக்கு முக்கியமான எதிர்காலச் சம்பவங்களை கணித்துச் சொல்லியிருக்கிறார்.அப்படிப்பட்டவருக்கு தனது மரணம் எப்படி வரும்? என்பதை ஆராய்ந்து சளியினால் தனக்கு  வரும் என்பதைக்கண்டறிந்திருக்கிறார்.

கூடவே தனது நெருங்கிய உறவு மற்றும் நட்பு வட்டத்தில் எப்படியெல்லாம் மரணம் வருகிறது? என்பதையும் சில ஆண்டுகளாக ஆராய்ந்திருக்கிறார்.அதன் மூலமாக அவர் எடுத்த முடிவு என்னவெனில்,சளியின் வேதனையால் தனது உயிர் பிரியக்கூடாது என்று உறுதிபூண்டிருக்கிறார்.அவரது ஜனன ஜாதக கிரகநிலையும் அதற்கு துணைபுரிந்திருக்கிறது.

அது தொடர்பாக தேவாரப்பாடல் ஏதும் உள்ளதா? என்பதை ஆராயும்போது அதற்கும் ஒரு பதிகம் இருப்பதை அறிந்தார்;அந்தப்பதிகத்தை பல சிவனடியார்களிடம் கேட்டு அது சளியினால் மரணம் வராமல் இயற்கையாகவே வர வைக்கும் பதிகம் தான் என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார்.
அந்த பதிகத்தை தினமும் அவர் பாடிக் கொண்டே வந்ததால்,அவரது மரணம் சளியினால் வராமல் இயற்கையான முறையில் வந்திருக்கிறது.இது தொடர்பாக தனது மகனுக்கும் அறிவுறுத்தியிருக்கிறார்.அவரது மகனும்,தனது அப்பாவின் மரணத்துக்குப் பிறகு மீடியம் மூலமாக அந்தப் பதிகத்தின் ‘சக்தியை’ உணர்ந்திருக்கிறார்.சைவத்தில் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இருக்கிறது.கலியுக வேகத்தில் அது எல்லோருக்கும் பரவ வில்லை;

இந்த பதிகத்தை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களிடம் கொண்டு சென்று இதைப் பற்றிக் கேட்டோம்;அவரது பதிலும் உண்மை என்பதை உறுதி செய்தமையால் ஆன்மீகக்கடல் வாசக உலகிற்கு வழங்குகிறோம்:
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய தேவாரத்தில் ஆறாம் திருமுறை திருத்தாண்டகத்தில் திருக்கன்றாப்பூர் பகுதியில் ஏழாவது பாடலாக பாடியிருக்கிறார்.

இந்தப்பதிகத்தை வயது முதிர்ந்தவர்கள் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் இருபத்தேழு முறை தமது வீட்டில் அல்லது அருகில் இருக்கும் சிவாலயத்தில் பாட வேண்டும்.


ஐயினால் மிடறைப்புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி மயானத்தி விடுவதன்முன் மதியஞ்சூடும்
ஐயனார்க் காளாகி அன்புமிக்கு அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே


*உலகில் எப்போதெல்லாம் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதோ,அப்போதெல்லாம் தண்ணீர்ப்பஞ்சம் உண்டாகும்* என்பது திருமுறைகளில் புதைந்திருக்கும் சைவ ரகசியம் ஆகும்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ