RightClick

பைரவப் பெருமானின் ஆசிபெற உதவும் மிதுன குருப்பெயர்ச்சி!!!ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மனமகிழ்ச்சியைத் தருபவர் குருபகவான் ஆவார்.மனித உடலில் இருதயத்திற்கு அதிபதியான அவர் முழுச் சுபக் கிரகமாகத் திகழ்கிறார்.ஒருராசியைக் கடக்க ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறார் குருபகவான்!!! மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களான வீடு/வேலை/தொழில் மாற்றம், திருமணம்,குழந்தைப்பிறப்பு,கடன் தீரல்,வராக்கடன் வசூலாகுதல்,சொந்தமாக வீடு வாங்குதல் அல்லது கட்டிக் குடியேறுதல்,தங்க நகை சேமிப்பு,பணச் சேமிப்பு,கஷ்டங்களிலிருந்து மீள சரியான ஜோதிடரை சந்தித்தல் போன்றவைகளுக்குக் காரகத்துவம் குரு பகவானின் பொறுப்பில் இருக்கிறது.
சனிபகவானும்,குருபகவானும் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை மேஷராசியில் முதல் நட்சத்திரமான அசுபதி/அஸ்வினியின் சந்தித்துக் கொள்கின்றனர்.இந்த சந்திப்பின் அடிப்படையிலேயே தமிழ் வருடங்கள் 60 என்று நமது முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.


28.5.13 செவ்வாய்க்கிழமை அன்று இரவு மணி 9.15க்கு குருபகவான் ரிஷபராசியின் இறுதி முனையான மிருகசீரிடம் 2 ஆம் பாதத்தில் இருந்து மிதுனராசியின் ஆரம்ப முனையான மிருகசீரிடம் 3 ஆம் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார்.மிதுனராசியை 12.6.14 வரை கடந்து சென்று 13.6.14 அன்று கடகராசிக்குப் பெயர்ச்சி ஆக இருக்கிறார்.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில்,13.6.14 அன்று குருபகவான் உச்சமடைய இருக்கிறார்.இதன் மூலம் பொருளாதாரரீதியான உயர்வுகள் ஒவ்வொரு இந்தியர்களிடமும் ஏற்பட இருக்கின்றன.
28.5.13 செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குருபெயர்ச்சி ஆவதால்,பூமியில் நிலம் சார்ந்த மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.மனதாலும்,ஐம்புலன்களாலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கித் தேடல் உள்ளவர்களுக்கு இந்த ஒரு வருடம் சிக்கல்கள் நிறைந்த வருடமாக அமையும் என்பதை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் நமக்கு குருப்பெயர்ச்சிப் பலன்களாகத் தெரிவித்திருக்கிறார்.
மேலும்,ஜோதிடப்படி இந்த குருப்பெயர்ச்சி ஏழரைச்சனியில் ஜன்மச்சனியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு மகத்தான நிம்மதியையும்,பணரீதியான/மனரீதியான/மணரீதியான/குடும்பம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் முடிவு கட்டப் போகிறது.எழுபது சதவீத கஷ்டங்கள் நீங்க இருக்கின்றன.

ரிஷபம்,கடகம்,சிம்மம்,தனுசு,கும்ப ராசிக்காரர்களுக்கு குருவால் கோடி நன்மைகள் கிடைக்க இருக்கின்றன.
மேஷம்,மிதுனம்,கன்னி,விருச்சிகம்,மீனராசியினருக்கு இதுவரை குருபகவானால் கிடைத்துவந்த நற்பலன்கள் குறையத்துவங்கியிருக்கும்.

கோடி நன்மைகள் கிடைக்க இருக்கும் ராசிக்காரர்கள் அவைகளை முழுமையாகப் பெறவும்,பணரீதியான.மனரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள இருக்கும் மற்ற ராசிக்காரர்கள் அவைகளை எதிர்கொள்ளவும் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஒரு எளிய வழிபாட்டுமுறையை நமக்கு அருளியிருக்கிறார்.அவரது ஆசியோடு உங்களுக்குத் தெரிவிக்கிறது ஆன்மீகக்கடல்!!!

உலகத்தின் முதல் விநாயகர் ஆலயமான பிள்ளையார் பட்டிக்கு 28.5.13 செவ்வாய்க்கிழமை அன்று செல்ல வேண்டும்.அங்கே முழுமுதற்கடவுளாக வீற்றிருக்கும் கற்பக விநாயகருக்கு அந்த கோவில் சம்பிராதயப்படி பூஜை செய்ய வேண்டும்;பூஜையை முடித்துவிட்டு,அந்த ஆலய வளாகத்தினுள் அமைந்திருக்கும் குபேர லட்சுமி பைரவப்பெருமானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிக்க வேண்டும்;பிறகு,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;(ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை அந்தக் கணத்தில் ஜபிக்கலாம்)
பிறகு கோவிலுக்கு வெளியே ஐந்து சாதுக்களுக்கு ஐந்து இட்லி+நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியுடன் தானம் செய்யவேண்டும்.

இவ்வாறு தானம் செய்துவிட்டு,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டிற்கும் செல்லாமலும் நமது இருப்பிடத்தைச் சென்றடைய வேண்டும்.
28.5.13 செவ்வாய்க்கிழமை காலை ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் அல்லது மதியம் பனிரெண்டு மணி முதல் ஒரு மணிக்குள் அல்லது இரவு ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் மேலே கூறிய முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.

தங்களது தினசரி வாழ்க்கையில் கடுமையான சிக்கல்கள் உள்ளவர்கள்,பலவிதமான எதிர்ப்புகள் உள்ளவர்கள்,தேவையே இல்லாமல் கோர்ட் கேஸ் என்று அலைபவர்கள் இந்த செவ்வாய்க்கிழமை துவங்கி தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளுக்கு பிள்ளையார்பட்டிக்குச் சென்று இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.28.5.13 அன்று மட்டுமே குபேர லட்சுமி பைரவபெருமானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிக்க வேண்டும்.மற்ற செவ்வாய்க்கிழமைகளில் அதற்குப்பதிலாக வழக்கமான செவ்வரளிமாலையை மட்டுமே அணிவிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளுக்கு செய்து முடித்தால்,முடித்த 90 நாட்களுக்குள் எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகள்,சிக்கல்கள்,பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும்.

அடுத்த ஏழு செவ்வாய்க்கிழமைகள்:
4/6/2013
11/6/2013
18/6/2013
25/6/2013
2/7/2013
9/7/2013

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ