RightClick

ஆண்டுக்கு ஒருமுறை வரும் காலபைரவ அஷ்டமியைப்(9/5/13)பயன்படுத்துவோம்! பைரவப் பெருமானின் அருளை அள்ளுவோம்!!!

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கார்த்திகை மாதமும்,பரணி நட்சத்திரமும்,தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்த நன்னாளில் பிரபஞ்சத்தின் தலைவனாகிய சதாசிவன் என்ற ஆதிசிவனின் நெற்றியில் இருந்து ஸ்ரீகால பைரவப் பெருமான் உதயமானார்; ஆதிசிவனின் பிள்ளைகளாக விநாயகர்,முருகக் கடவுள்,ஐயப்பன் இருக்கிறார்கள்;ஆனால்,ஆதிசிவனின் அவதாரமாக பைரவப் பெருமானும்,வீரபத்திரரும் இருக்கிறார்கள்.பெரும்பாலானவர்கள் பைரவரையும்,வீரபத்திரரையும் ஆதிசிவனின் மகனாகவே பேசவும்,எழுதவும் செய்கிறார்கள்.அது பொருத்தமானது அல்ல;

பரணி நட்சத்திரத்தில் பவுர்ணமி தோன்றுவதில்லை;அதனால்,ஒவ்வொரு ஆண்டும் வரும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியை பைரவ ஜன்ம அஷ்டமி என்று கொண்டாடி வருகிறோம்.

அதே போல,சித்திரை மாதத்து அமாவாசையானது பெரும்பாலும் பரணி நட்சத்திரத்திலேயே வரும்;சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பரணி நட்சத்திரத்தில் நமது ஆத்மாக் காரனாகிய சூரியனும்(தமிழில் ரவி என்று பெயர்!),நமது மனக் காரகாகிய சந்திரனும்(தமிழில் சந்திரனுக்கு மதி என்று பெயர்!!) ஒன்று சேருகின்றனர்.அப்போது பைரவசக்தி பூமிக்கு அளவற்ற விதத்தில் வெளிவரும்;
இந்த விஜயவருடத்தின் சித்திரை மாதத்து அமாவாசையானது 9.5.2013 வியாழக்கிழமை வருகிறது.இந்த நன்னாளில் நாம்
1.கால பைரவர் 108 போற்றியைப் பாடலாம்
அல்லது

2.நமது நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து வியாழக்கிழமை வரும் இராகு கால நேரமான மதியம் 1.30 முதல் 3 மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயம் அல்லது அம்மன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகால பைரவருக்கு அபிஷேகம் செய்யலாம்.அபிஷேகப் பொருட்கள்:அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித் தைலம்,செவ்வரளி மாலை மற்றும் உதிரிப்பூக்கள்,பால்.நிவேதனாமாக அவல் பாயாசத்தைப் படைக்கலாம்;
அவ்வாறு அபிசேகம் செய்யும் போது கூட்டாக ஸ்ரீகால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து ஸ்ரீகால பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை பாடலாம்;தனியாளாகச் செல்லும் நிலை வந்தால் மனதுக்குள் ஜபிக்கலாம்;
அல்லது
3.அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை ஸ்ரீகால பைரவர் சன்னதியில் அமர்ந்து எழுதலாம்;(எழுதும் போது என்ன உணர்வு வந்தது என்பதை எமக்கு மின் அஞ்சல் மூலமாகத் தெரிவிக்கவும்)
அல்லது
4.கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே அல்லது தங்குமிடத்திலேயே கால பைரவர் 108 போற்றி அல்லது கால பைரவர் 1008 போற்றியை எழுதலாம்;எழுதிவிட்டு நமது வீட்டு பூஜை அறையில் அல்லது பணப் பெட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லது
5.இந்தப் பதிவையும்,ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியையும் பிரிண்ட் எடுத்துக் கொண்டு சுமாராக 108 ஜெராக்ஸ் எடுத்து உங்கள் நட்பு மற்றும் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களிடம் விநியோகம் செய்யலாம்.
மேலும்
உங்கள் குழந்தைகள் என்ன வயதாக இருந்தாலும் சரி! அவர்களை 9.5.2013 வியாழன் மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்க வைத்து ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை வீட்டில் எழுத வைக்கலாம்.
9.5.13க்குப் பிறகு, இதே போல ஏழு பரணி நட்சத்திரம் வரும் நாட்களில் தொடர்ந்து செய்ய வேண்டும்.ஏழாவது பரணி நட்சத்திரம் வரும் நாளில் அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம் சென்று காலபைரவபெருமானுக்கு அவல் பாயாசத்தை படையலாக வைத்து கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும்.செய்த பின்னர்,அவல் பாயாசத்தை அங்கே வரும் பக்தர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;நாமும் அதில் ஒருபகுதியைச் சாப்பிடலாம்;
இந்த ஆண்டின் பரணி நட்சத்திரம் வரும் நாட்களும்,அந்த நாளில் ராகு கால நேரமும்(அடைப்புக்குறிக்குள்);அயல்நாடுகளில் இருப்பவர்கள்,இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்குமான வித்தியாசத்தைப் பின்பற்ற வேண்டும்;
பல ஆலயங்களில் நாம் குறிப்பிடும் ராகு கால நேரத்தில் ஸ்ரீகால பைரவருக்கு பூஜை செய்ய அனுமதிப்பதில்லை;அந்த சூழ்நிலை வந்தால் காலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள் அல்லது மாலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள் பூஜை செய்யலாம்;அல்லது நமது குலதெய்வம் கோவிலில்(கால பைரவர் இருந்தால்!!!) இந்த தேதிகளையும்,நேரங்களையும் முழுமையாகப்பின்பற்றலாம்.

5.6.13 புதன் மதியம் 2.30 முதல் 6.6.13 வியாழன் மாலை 4.12 வரை;(வியாழன் மதியம் 1.30 முதல் 3 வரை)

3.7.13 புதன்(மதியம் 12 முதல் 1.30 வரை)

30.7.13 செவ்வாய்;(மாலை 3 முதல் 4.30 வரை)

26.8.13 திங்கள் மதியம் 1.01 முதல் 27.8.13 செவ்வாய் மதியம் 2.23 வரை;(இராகு காலம் வர வில்லை)
23.9.13 திங்கள்(காலை 7.30 முதல் 9 வரை)

20.10.13 ஞாயிறு(மாலை 4.30 முதல் 6 வரை)

16.11.13 சனி காலை 11.19 முதல் 17.11.13 ஞாயிறு காலை 12.21 வரை(இதில் இராகு காலம் வரவில்லை;ஆனால்,ஞாயிற்றுக்கிழமையன்று கார்த்திகை மாத முதல் நாளும்,பவுர்ணமியும் சேர்ந்து வருகிறது;எனவே,காலை ஐந்து முதல் ஏழுக்குள் வரும் நேரத்தைப் பயன்படுத்துவது உத்தமம்)

14.12.13 சனி(காலை 9 முதல் 10.30 வரை)

10.1.14 வெள்ளி(காலை 10.30 முதல் 12 வரை)

6.2.14 வியாழன்(மதியம் 1.30 முதல் 3 வரை)

6.3.14 வியாழன்(மதியம் 1.30 முதல் 3 வரை)

2.4.14 புதன்(மதியம் 12 முதல் 1.30 வரை)

ஏழு பரணி நட்சத்திரம் வரும் நாட்களுக்கு மட்டுமே இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.அதற்கு மேல் செய்யக் கூடாது.இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலமாக நமது வாழ்நாள் முழுவதும் பைரவரின் பாதுகாப்பு கிட்டும்;பைரவரின் அருள் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.இந்த அரிய ரகசியத்தை எனக்குப்போதித்த எனது ஆன்மீககுரு திரு.சிவமாரியப்பன் அவர்களுக்கு கூகுள்(1க்குப்பின்னர் நூறு சைபர்கள்) நன்றிகள்!!!

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ