RightClick

அனுபவம் நிறைந்த வாஸ்து நிபுணர் திரு.பழனியப்பன் அவர்கள்,சென்னை


வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?சிவனுக்கும் அந்தகன் எனும் அசுரனுக்கும் சண்டை நடந்தது ,அப்போது ஈசன் மிகவும் கோபத்துடன் சண்டையிடும் வேளையில் அவர் உடலில் இருந்து விழுந்த வியர்வை துளி பூமியில் பெரிய மனித உருவம் கொண்ட உடலாக தோன்றியது எனவும் அவனுக்கு தங்க முடியாத பசி ஏற்ப்படதாகவும் , அவன் தேவர், மனிதர், அசுரர் என அனைவரையும் மேலும் பூமியில் உள்ள அனைத்தையும் பிடித்து உண்ண ஆரம்பித்தான்.
உடனே அனைவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர்.

ஈசன் அனைவரின் விருப்பபடி அந்த மனித உருவத்தை பூமியின் மேல் குப்புற தள்ளி மண்ணை பார்த்து அந்த மனித உருவம் படுத்திருகுமாறு தூங்க வைத்து அவன் மீது 45 தேவதைகளையும் காவலுக்கு வைத்து வருடத்தின் நான்கு பருவகாலத்திலும் ஒரு பருவத்திற்கு மூன்று முறை (மாதத்திற்கு ஒரு முறை ) விழிக்கும் போது வீடு,மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு மனை பூஜை செய்வதின் மூலம் அதை கட்டுபவர்கள் தரும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பசியை போக்கி கொள்ளும் படி ஈசன் பணித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வாஸம் செய்ய இடம் தருவதால் அவனை வாஸ்து புருஷன் (மனையின் தலைவன் )என்று பிரம்மாவால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .         

வாஸ்து என்பது அறிவியலா ?

ஆமாம் வாஸ்து என்பது முழுமையான அறிவியலே,
வாஸ்து பகவான் எனும் உருவகம் கூட முழுமையான அறிவியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது  வாஸ்து என்பது ஒரு வடமொழி சொல் நாம் வசிக்கும் இடம் வாஸஸ்தலம் எனப்படும் இந்த வார்த்தையில் இருந்து உருவானதாக சிலர் கூறுகிறார்கள், வேறு சிலரோ வாஸ்தவம் என்ற சொல்லில் இருந்து வந்ததாக கூறுவார் காரணம் வாஸ்தவம் உண்மை என்று பொருள்படும் . ஆக நம் முன்னோர்கள் தான் உணர்ந்ததை உதாரணத்துடன் சொல்ல வார்த்தை கிடைக்காமல் கூறியிருக்கலாம்.
வாஸ்து என்பது எதை அடிப்படையாக கொண்டது என ஆராய்ந்தால் காந்த அலைகளின் அடிப்படையே என்பதுதான் உண்மை.பிரபஞ்சத்தில் இருந்து வரும் காந்த அலைகள் பூமியின்  மீது நம் கண்களுக்கு புலப்படாத வகையில்  மழை போன்று பெய்து கொண்டே உள்ளது.இந்த காந்த அலைகள் வெவ்வேறு கோள்கள் ,நட்சத்திரங்கள் மற்றும் சூரியன்கள் போன்றவைகள் பிரபஞ்சத்தில் சுழலும் போது வெளிப்படும் காந்த அலைகளே பூமியின் மீது பெய்து கொண்டே உள்ளது. இந்த காந்த அலைகள் பிரபஞ்சத்தில் இருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதால் அவை சுழன்று ,பயணித்து ,கரைந்துகொண்டே தென் துருவத்தில் இருந்து வடதுருவத்தை நோக்கி பயணிக்கிறது. நாசா வும் பூமியின் மீது தென் துருவத்தில் இருந்து வடக்கு நோக்கி பரவும் காந்த அலையின் படத்தை வெளியிட்டு உள்ளது.
 http://cosmicview.qwriting.org/archives/tag/magnetic-fields 
அது போல் இந்த காந்த ஓட்டத்தில் தடை வரும்போது நாம் செய்யும் செயலில் தடை ,உடல்நலம் பாதிப்பு பொருள் வரவு தடை போன்றவைகள் வருகின்றன

வாஸ்து பகவானின் உருவத்தின் காரணம் 


வாஸ்து பகவானை மனித உருவமாக சித்தரித்து இருப்பதற்கு காரணத்தை ஆராயிந்து பாரத்தால் மிகவும் பிரம்மிப்பாக இருக்கும் நாம் வசிக்கும் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை ஆராய்ந்தோமானால் ஒரு மனிதனை வாஸ்து பகவான் போல குப்புற படுத்து இருப்பதாக பார்த்தோமானால் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ள இடம் அந்த பகுதியில் வரும் மனித உறுப்போடு தொடர்பு உள்ளதாக இருக்கிறது. எனவே இந்த ஒப்பீடு படிதான் வாஸ்து பகவானை அமைத்தனர் .
காரணம் ஆரோக்கியம் தான் மிகபெரிய செல்வம், ஆரோக்கியம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை ,ஆரோக்கியமாக இருந்தால் நன்றாக சிந்திக்க முடியும்,நல்லவற்றை செய்யமுடியும் .தவறு செய்தால் அது ஆரோக்கிய குறைபாடே ,சரியான வைட்டமின் மூளைக்கு செல்லாததால் அவன் தவறு செய்வான் தண்டனை பெறுவான்                                 பத்து வருட அனுபவமுள்ள வாஸ்து நிபுணர் திரு.பழனியப்பன் அவர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.உங்களுடைய வீடு,தொழிலகங்கள்,தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்க இவரை அணுகலாம்.கட்டுமானத்தை இடிக்காமல் வாஸ்து தோஷத்தை நிவர்த்தி  செய்வதில் வல்லுநராகிய இவரது செல் எண்;9941474877