RightClick

தீராத கடன்களைத்தீர்க்க உதவும்(விஜய) தமிழ்ப்புத்தாண்டு வழிபாடு!!!


சூரியனுக்கு மிக அருகில் பூமி வரும் மாதமே சித்திரை ஆகும்.இந்த வானியல் பேருண்மையை டெலஸ்கோப்,ரேடியோ டெலஸ்கோப்கள் கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது தமிழ் முன்னோர்களாகிய சித்தர் பெருமக்கள் மூலிகைகளின் துணை கொண்டு கண்டுபிடித்துவிட்டனர்;அதனால் தான் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று பல லட்சம் ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர்.


எதிர்வரும் புத்தாண்டு, கிறிஸ்தவத் தேதியின்படி 14.4.13 ஞாயிற்றுக்கிழமையன்று உதயமாகிறது.இந்த தமிழ் வருடத்தின் பெயர் விஜய ஆகும்.இது தமிழ் வருடத்தின் 27 ஆம் ஆண்டு ஆகும்.இந்த தமிழ்வருடப்பிறப்பன்று மாலை ஆறு மணிக்கு மேல் பத்து மணிக்குள் நாம் சிங்கம்புணரியில் அமைந்திருக்கும் முத்துவடுக சித்தரின் ஜீவசமாதிக்கு வந்துவிடுவோம்; மல்லிகைப்பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலை;தேங்காய்,வாழைப்பழங்கள் ஆறு,நெய்தீபம்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,பால்,வெற்றிலையும் கொட்டைப்பாக்கும் நமது ஊரிலிருந்தே வாங்கி வருவோம்;14.4.14 ஞாயிறு நள்ளிரவு பூஜைக்கு இவைகளைத் தந்து,அபிஷேகத்தில் கலந்து கொள்வோம்;பிறகு,அங்கேயே தூங்குவோம்;


(ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இப்படித்தான் இங்கே பூஜை நடைபெற்று வருகிறது;பூஜையின் ஆரம்பத்தில் இரவு ஒன்பது மணியளவில் இங்கே அன்னதானம் நடைபெற்றுவருகிறது)

குறைந்தது ஒரு வருடம் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவோர்,குறைந்தது ஒரு வருடம் வரை வாரா வாரம் அல்லது தினமும் ஸ்ரீகால பைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்வோருக்கு அந்த இரவுத்தூக்கத்தில் முத்துவடுகசித்தரின் தரிசனமும்,ஆசிர்வாதமும் கிட்டும்;இந்த தமிழ்ப்புத்தாண்டில் இந்த ஜீவசமாதிக்கு வருகை தருவோர் அனைவரின் கடன் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.விடிந்ததும்,வேறுஎந்தக் கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்வோம்;இதன் மூலம் நாம் நேற்று நள்ளிரவு(14.4.13 நள்ளிரவு) முத்து வடுக சித்தரிடம் வேண்டிய பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்.


மிகப்பெரிய அளவில் கடன்கள் தொல்லையால் அவதிப்படுவோர்,இந்த ஜீவசமாதிக்கு தொடர்ந்து ஐந்து பவுர்ணமிகளுக்கு வருகை தர வேண்டும்.வரும்போது எலுமிச்சை மாலை அல்லது மல்லிகைப்பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலை,பால் போன்றவைகளை வாங்கிக் கொண்டு வர வேண்டும்;நள்ளிரவு பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கலந்து கொள்வதன் மூலமாக முத்து வடுகசித்தரின் அருளாசி கிட்டும்;எப்பேர்ப்பட்ட கடனாக இருந்தாலும் வெகு எளிதாகவும்,வெகு விரைவாகவும் தீர்ந்துவிடும்.


சிங்கம்புணரிக்குச் சென்றடையும் வழி:மதுரைக்குத் தெற்கே இருந்து வருபவர்கள்,மதுரை மேலூரைச் சென்றடைய வேண்டும்;மேலூரில் இருந்தும்,மாட்டுத்தாவணியில் இருந்தும் சிங்கம்புணரிக்கு அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன.தூரம் 28 கி.மீ.


மதுரைக்கு வடக்கே இருந்து வருபவர்கள் கொட்டாம்பட்டியில் இறங்க வேண்டும்;அங்கிருந்து சிங்கம்புணரிக்கு மினி பஸ்கள் அடிக்கடி இருக்கின்றன;இங்கிருந்து ஏழு கி.மி.தூரம் தான்!


மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் அமைந்திருக்கும் திருப்பத்தூர் செல்ல வேண்டும்.திருப்பத்தூரில் இருந்து சிங்கம்புணரிக்கு அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன;இங்கிருந்து சிங்கம்புணரி 25 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கிறது.இதுவும் ஒரு வழி!


மிக எளிய வழி எதுவெனில்,மதுரை மேலூர் வந்தடைந்து,இங்கிருந்து சிங்கம்புணரி செல்வது மட்டுமே!!!


சிங்கம்புணரி சிறிய ஊர்;இங்கிருக்கும் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் முத்துவடுக சித்தர் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கே குளிக்கும்,கழிப்பிட வசதிகள் இல்லை;ஆனால்,சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் தனியார் தங்கும் விடுதிகள் ஒருசில இருக்கின்றன;


சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் இறங்கி வாத்தியாரய்யா சமாதி என்று விசாரித்தால் வெகு விரைவில் முத்துவடுக சித்தர் ஜீவசமாதியைச் சென்றடையலாம்.


இந்த அரிய உபதேசத்தை நமக்கு அருளியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் ஆவார்.அவருக்கு நம் மனப்பூர்வாக கூகுள் நன்றிகளைச் சொல்லிக் கொள்வோம்.


ஓம்சிவசிவஓம்