RightClick

தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மிக நடைமுறைகள்=2
எப்போதும் சாப்பிட்டு முடித்த சில நிமிடங்கள் வரையிலும் எவரிடமும் பேசாமல் இருப்பதும் அவசியம் ஆகும்.நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ப்ளாட்டின நிமிடங்கள் இந்த நிமிடங்களே!!!
என்னதான் வேகமான வாழ்க்கை என்று நாம் மாறினாலும் நமது உடல் இன்னும் அதற்குத் தயாராகவில்லை என்பதே உண்மை.எனவே,வேகமாக ஒவ்வொரு செயலையும் தினமும் செய்து,செய்து சில வருடங்களிலேயே  நாம் ஒவ்வொருவரும் மாரடைப்பு,ஆஸ்துமா,சுவாசக்கோளாறு,ஆண்மைக்குறைவு/பெண்மைக்குறைவு என்று மாட்டிக்கொண்டு அதன் பிறகு ஆரோக்கியத்துக்கு ஆயிரக்கணக்கில்/லட்சக்கணக்கில் செலவழிக்கலாமா?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த ஒரு இழிவான நிலையில் இருந்தாலும் சரி;அல்லது எந்த ஒரு உயர்வான புகழில் இருந்தாலும் சரி;நிச்சயமாக உங்களது பிறந்த ஜாதகப்படி முற்பிறவி கர்மாக்கள்,இந்தப் பிறவியில் செய்த பாவவினைகள் என்று ஒரு சுமை இருக்கத்தான் செய்யும்.ஒருவரது பிறந்த ஜாதகத்தை வைத்து நாம் திருமணம் செய்ய,வேலை தேட,செல்வச்செழிப்பை அடைய,ராசியான எண்ணைத் தேர்ந்தெடுக்க,ராசியான நிறத்தைத் தேர்வு செய்து அதற்கு ஏற்றாற்போல வீடு.வாகனம்,ஆடைகளைத் தேர்வு செய்யலாம்;ஆனால் அதற்காக மட்டும் கடவுள் நமக்கு அந்த ஜாதக அமைப்பில் பிறக்க வைக்கவில்லை;
இதுவரை செய்த தவறுகள்,திமிரான நடவடிக்கைகள்,பொறாமையால் பிறருக்குச் செய்த கேடுகள்,ரத்த உறவுகளுக்கும் நெருங்கிய நட்புகளுக்கும் செய்த துரோகங்களை அறிந்து அதிலிருந்து மீள்வதற்கான சூட்சுமங்கள் அதனுள் ஒளிந்திருக்கின்றன;அந்த சூட்சுமங்களை திறமை வாய்ந்த ஜோதிடர்களைக் கொண்டு கண்டறிந்து அதிலிருந்து இந்தப் பிறவியிலேயே மீண்டு இந்த பிறவியிலும் அடுத்தப் பிறவியிலும் நிம்மதியாகவும்,வசதியாகவும்,ஜாலியாகவும் வாழவே பிறந்த ஜாதகம் இருக்கிறது;இது பலருக்குப் புரிவதில்லை;யாரையுமே நம்பாதது போல உண்மையை மட்டும் ஜாதகம் பார்த்துச் சொல்லும் ஜோதிடரையும்/அருள்வாக்கு சொல்பவரையும் சந்தேகப்படுகின்றனர்;அரிய அபூர்வமான ஆன்மீக வழிகாட்டியை தனது சந்தேகபுத்தியால் அல்லது பணக்கணக்கு போட்டு விலகிச் சென்றுவிடுகின்றனர்;

இருப்பினும்,சரியான ஆன்மீக குருவை இந்தப்பிறவியிலேயே சந்திக்க விரும்புவோர் ஒரு எளிய வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்;அது என்னவெனில்,மாதம் ஒரு வியாழக்கிழமை தோறும் அண்ணாமலைக்குச் சென்று அன்று இரவுக்குள் கிரிவலம் செல்ல வேண்டும்;இவ்வாறு மாதம் ஒரு வியாழக்கிழமை வீதம்,குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து கிரிவலம் சென்றால், நிச்சயமாக அவரவரின் சுபாவம்,பிறந்த நட்சத்திரம்,செய்யும் தொழில் இவற்றுக்கு ஏற்றாற்போல ஒரு சரியான ஆன்மீக குருவை அடைவர்.வியாழக்கிழமை செல்ல முடியாதவர்கள் அவரவரின் வாரவிடுமுறைநாளில் இவ்வாறு மூன்று ஆண்டுகளுக்கு கிரிவலம் செல்ல வேண்டும்;அவ்வாறு செல்லும்போது மஞ்சள் நிற ஆடை அணிந்து,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு மனதுக்குள் “ஓம்அருணாச்சலாய நமஹ” ஜபித்தவாறு கிரிவலதூரம் முழுவதும்(பதினான்கு கி.மீ) யாரிடமும் பேசாமல் பயணிக்க வேண்டும்;தொடர்ந்து இவ்வாறு ஐந்து முதல் பத்து வரை பயணித்தப் பின்னர்,உள்பிரகார கிரிவலம் செல்லும் சந்தர்ப்பம் அமையும்;(தற்போது இந்த கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் சட்டப்படி தடைவிதித்திருக்கிறது);அவ்வாறு உட்பிரகார கிரிவலம் ஐந்துமுறை வரை சென்றப்பின்னர்,உங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தின் மூலமாக சரியான ஆன்மீக குருவை அடைவீர்கள்;அதன் பிறகும்,மூன்று ஆண்டுகள் வரை அதாவது முப்பத்தாறு தடவை வரை வியாழக்கிழமை அல்லது வாரவிடுமுறைநாட்களில் கிரிவலம் சென்றால் மட்டுமே அந்த ஆன்மீக குருவின் நெருங்கியத் தொடர்புக்கு வருவீர்கள்;நீங்கள் உரிமையோடு அவரை எப்போதும்,முன் அனுமதியின்றி சந்திக்கும் பாக்கியம் உண்டாகும்.(நம்மவர்கள் எதையும் சோடா பாட்டில் உற்சாகத்தோடு ஆரம்பிப்பார்கள்;ஓ! ஸாரி!!! பெப்ஸி பாட்டில் உற்சாகத்தோடு ஆரம்பிப்பார்கள்;அதோடு சரி;ஒரு வழிமுறையை முழுமையாகப் பின்பற்றுவோர் மிக மிகக் குறைவு.இப்படிப்பட்டவர்களுக்கு மன உறுதி குறைவு;ஆன்மீகம் பற்றிய விஷயத்தில் ஆர்வக் கோளாறு மட்டுமே உண்டு)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தமிழில் ஏராளமானவர்கள் வலைப்பூக்கள் எழுதுகிறார்கள்;எழுத்தாற்றலை வலைப்பூ மூலமாகவே வளர்த்துக்  கொள்கிறார்கள்;பலருக்கு ஒரே ஒரு ஜிமெயிலைக்கொண்டே சுமார் 300 வலைப்பூக்கள் இலவசமாக நடத்திட முடியும் என்ற தொழில்நுட்ப உண்மை தெரியாது;1970களில் பிறந்தவர்கள் வலைப்பூக்களிலும்,1980களில் பிறந்தவர்கள் முகநூலிலும்,1990 களில் பிறந்தவர்கள் முகநூல்,ஜிப்ளஸ்ஸிலும்,ட்விட்டரிலும், ஐக்கியமாகிவிட்டார்கள்;மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லாத் துறைகளிலும்(அரசியல்,ஆன்மீகம்,ஜோதிடம்,மருத்துவம்,சித்த மருத்துவம்,மாந்திரீகம்,வைஷ்ணவம்,சைவம்,பயணம்,சமையல்,காம வக்கிரம்,நகைச்சுவை,இணையத் தொழில்நுட்பம்,கேலிகிண்டல்,வரலாறு,சிந்தனை,நாத்திகம்,மார்க்ஸிஸம்,ஆத்திகம்,கட்சிக்கொள்கை,பத்திரிகையுலக அனுபவம்,காவல்துறை அனுபவம்,ஓவியப் படைப்புகள்,புகைப்படம் பற்றிய அடிப்படை,செல்போன் வாங்குவது பற்றிய அடிப்படை,பெண்ணியம்,தலித் இலக்கியம்,தமிழ் இலக்கியம்,சரசக் கலை,மருந்துகளின் வரவுகள்,கணினியைப்பாதுகாக்கும் இலவச தொழில் நுட்பம்,ஈழ அரசியல்,சட்ட நுணுக்கம்,இணையம் வழியாக சம்பாதிக்கும் வழிமுறை,பேனா நட்பு,காம நட்பு,தியானம்,சினிமா தொழில் அனுபவம்,சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள்,சினிமா கிசுகிசு,ஹாலிவுட் திரைப்படங்கள் விமரிசனம்,தமிழ்த்திரைப்படப் பாடல்கள் வீடியோவாகவும்,ஆடியோவாகவும் பதிவேற்றுதல்,ஆன்மீகப்பாடல்களை சேகரித்தல்,மகான்களின் வாழ்க்கக வரலாற்றைச் சேகரித்தல்,புதிய கண்டுபிடிப்புக்களைப் பற்றி எழுதுதல்,வட்டாரப் பிரச்னைகளை விரிவாக ஆதாரத்துடன் வெளியிடுதல்) எழுதித் தள்ளுகிறார்கள்;இதில் அவர்களாகவே ஒரு குழுவாக பிரிந்து இன்னொரு குழுவை கிழிகிழி என்று கிழிக்கிறார்கள்;ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவுக்குள் உளவாளியை ஊடுருவி அந்தக் குழுவை பிளக்கிறார்கள்;நடைமுறைக்கு ஒவ்வாத வலைப்பூக்களை தொடர்ந்து எழுதுகிறார்கள்;தொடர்ந்து நடத்த முடியாமல் புதுபுது வலைப்பூக்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார்கள்;
மறுபக்கம் இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் இருக்கும் இணைய ஜாம்பவான்கள் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்;அவ்வாறு அறிமுகப்படுத்தும் முன்பே எந்த தொழில்நுட்பம் எந்த நாட்டில் பிரபலமாகும் என்பதை அவர்கள் முன் கூட்டியே மதிப்பிட்டுத்தான் அறிமுகப்படுத்துகிறார்கள்;ஏனெனில்,300 ஆண்டுகளாக நம்மை ஆண்ட கிறிஸ்தவ ஆங்கிலேயனால் இந்தியாவின் ஆணிவேர்களை அசைக்க முடியவில்லை;யார் எந்த விதத்தில் திறமையானவர்கள் என்பதைக் கண்டறியமுடியவில்லை;அதற்கென்று தகுதியான உளவாளிகளை அவர்களால் உருவாக்கிட முடியவில்லை;அவர்களைப் பொறுத்த வரையிலும் உலக அரசியலில் தம்மைத் தவிர எந்த நாடும் பணபலத்தோடு எழுந்துவிடக்கூடாது என்ற ஒரே ஒரு நோக்கமே இந்த தொழில்நுட்பத்தை உலக அளவில் பிரபலப்படுத்தக் காரணம்! ஒரு காலம் வரும்! அது கி.பி.2100 ஆக இருக்கலாம்;அல்லது கி.பி.2400 ஆகவும் இருக்கலாம்;தேவைப்படும் போது நமது நாட்டில் இருக்கும் இந்து தர்மத்தின் துறைவாரியான வல்லுநர்களை தமது மதத்திற்கு மாறச் சொல்வார்கள்;அவ்வாறு மாறாதவர்களை கொல்வார்கள்;இதை வாசிக்கும் போது இது ஏதோ பைத்தியக்காரன் எழுதியது போலத்தான் இருக்கும்;ஆனால்,இந்து தர்மத்தை அழித்தொழிப்பதில் இறுதிக்கட்டமே இந்த தொழில்நுட்பயுகத்தின் நோக்கம்!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க ஒரு சுலபமான வழி உண்டு;அது என்னவெனில்,தினமும் ஐந்து பக்கங்களுக்கு ஏதாவது ஒரு கதை,கட்டுரையை நோட்டு/காகிதத்தில் எழுத வேண்டும்;இணையம் அல்லது எம்.எஸ்.வேர்டில் எழுதக் கூடாது;அதே சமயம்,அந்த கதை/கட்டுரையானது வேறு ஏதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்து எழுதாமல் உங்கள் சிந்தனையில் இருந்து புறப்பட்டதாக இருக்க வேண்டும்;மேலும்,அப்படி ஐந்து பக்கங்களுக்கு எழுதி முடிக்கும் வரையிலும் வேறு எந்தக் குறுக்கீடும் இருக்கக் கூடாது;செல்போன்,டிவி,இணையம் என்று வேறு எந்த கவனத்திசைதிருப்பலும் இல்லாமல் எழுத வேண்டும்;இவ்வாறு தினமும் எழுதிக்கொண்டே வந்தால் நமது தன்னம்பிக்கை அதிகரிக்கும்;இந்த உண்மையானது மனோதத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட உடலியல் உண்மை ஆகும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
எப்போதும் இது நடக்காது;அது முடியாது;எனக்குத்தான் அப்பவே தெரியும்ல, நான் தான் அன்றைக்கே சொன்னேனே,இது முடியாது என்று எப்போதும் நெகடிவ்வாகப் பேசுபவர்கள்,எப்போதும் எதையும் குறை சொல்பவர்களை உங்கள் அருகில் வைத்துக்  கொள்ளாதீர்கள்;இப்படிப்பட்டவர்கள் உங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையையும் தகர்த்து உங்களை நடைபிணமாக ஆக்கிவிடுவார்கள்;இப்படிப்பட்டவர்களின் உறவை முறித்துவிடுங்கள்;இவர்கள் தானும் வளரமாட்டார்கள்;நம்மையும் வளரவிட மாட்டார்கள்;இவர்கள் உங்கள் அறைத்தோழராக/தோழியாக/உடன் பணிபுரிபவராக இருந்தால் இவர்களை விட்டு எவ்வ்வ்வளவு வேகமாக விலகுகிறீர்களோ அவ்வளவு நல்லது என்பதை உணருங்கள்;
இந்த குணமுடையவர்கள் வீட்டிற்கு ஒருபோதும் செல்லாதீர்கள்;அவ்வாறு செல்லும் சூழ்நிலை(ஒருவேளை) உண்டானால் முப்பது நொடிகளுக்கு மேல் அங்கே இருக்காதீர்கள்;இப்படிப்பட்டவர்களின் வீட்டில் பிரகாசமான விளக்குகள் எரிந்தாலும்,ஒருவித ஏக்கம் பரவியிருக்கும்;நீங்கள் முப்பது நொடிகளுக்கும் மேலாக அங்கே இருந்தால் உங்களது தன்னம்பிக்கையைத் தகர்த்துவிடும்;
இந்த குணமுடையவர்களிடம் ஒருபோதும் உங்களது சிறு சாதனையைக் கூடச் சொல்லாதீர்கள்;உங்களது சிறு சாதனையைப் பற்றிய செய்தி கூட செல்லாதபடி கவனமாக இருங்கள்;அதேபோல உங்களுடைய சிறு அவமானங்கள்/தோல்விகளைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்;உங்களை மனோரீதியாக முடமாக்கிவிடுவார்கள்;சிலருக்கு இப்படிப்பட்டவர்களே வாழ்க்கைத் துணையாக அமைந்துவிடுவதுண்டு;அது அவர்களின் விதி என்றுதான் சொல்ல வேண்டும்;
பிறவி சுபாவம்,ஆயுள் இந்த இரண்டையும் அவ்வளவு சுலபத்தில் ஜாதக ரீதியாகவோ,ஜாதக மனோதத்துவ வழிகாட்டுதல் படியோ மாற்றிவிட முடியாது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பல ஆன்மீக எழுத்தாளர்கள்,ஜோதிட எழுத்தாளர்கள் ஏராளமான சிவமந்திரங்களை ஜோதிட மாத இதழ்களிலும்,வலைப்பூக்களிலும்,மின் அஞ்சல் வழியாகவும் வெளியிடுகிறார்கள்.இதில் மாந்திரீக மந்திரங்களும் உண்டு;அவ்வாறு யார் முதலில் எழுதி வெளியிடுகிறார்களோ அவர்கள் அடுத்த சில வாரங்களில் இருந்து எதிர்பாராத சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள்;அவர்களுக்கு ஏற்படும் அந்தச் சிக்கல்களுக்கான காரணம் அவர்களின் பிறந்த ஜாதகத்தில் கண்டுபிடிக்க முடியாது;ஒரு ஆன்மீகக்கட்டுரையை வெளியிட்டால்,அதை வாசித்த உடனே பலர் அதை காப்பி,பேஸ்ட் செய்து தமது வலைப்பூ அல்லது இணையதளம்,முகநூல்,டுவிட்டர் மற்றும் மின் அஞ்சல் வழியாக வெளியிடுகிறார்கள்;பரப்புகிறார்கள்;அது பெரும்பாலும் தவறான ஆட்களைப் போய்ச்சேருகிறது;அந்த தவறான ஆட்கள் அதை தினமும் ஜபிக்க ஆரம்பிக்கிறார்கள்;அதுவும் நாம் சொல்லியுள்ள வழிமுறையில் மட்டும் ஜபிக்காமல் தமது சொந்த சிந்தனைப்படி ஜபிக்க ஆரம்பிக்க,அவ்வாறு செய்பவர்களின் உடல் ஆரோக்கியம்,மனவலிமை கெட்டுப்போகிறது;
தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே தகுதியான சிவமந்திரத்தை(எந்த மந்திரத்தையும்) நேரில் போதிக்க வேண்டும்;(சொல்லிக் கொடுக்க வேண்டும்)கூடவே,அவர்கள் அதை ஒழுங்காக ஜபிக்கிறார்களா ? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.முறையாக ஜபித்தால்,அந்த மந்திரத்தை ஜபிக்க சொல்லிக்கொடுத்தவரது ஆன்ம சக்தி அதிகரிக்கும்;முறையாக ஒரே ஒருவர் மட்டும் அந்த மந்திரத்தை ஜபிக்காவிடில்,நேரில் உபதேசம் வாங்கியவர்களுக்கு பலவிதமான சோதனைகள்,பிரச்னைகள்,உடல் உபாதைகள் வரும்;எனவே,வலைப்பூக்கள் நடத்துபவர்கள் இதுவரை தாங்கள் வெளியிட்டிருக்கும் சிவமந்திரங்கள் பற்றிய பதிவுகளை உடனடியாக நீக்கிவிடுவது நல்லது;
நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று,நீச்சலே தெரியாவனுக்கு நீந்தச் சொல்லித்தருவது போன்றது யார் வேண்டுமானாலும் மந்திரங்களைப் பற்றி பதிவுகள் எழுதி வெளியிடுவது;சரியாக நீந்தத் தெரியாதவர்களால் நீந்தச் சொல்லிக் கொடுப்பவரையே அது ஆழ்கடலுக்குள் ஆழ்த்திக் கொன்றுவிடும்.ஜாக்கிரதை!!!

#########################################################                                         சிவன் சொத்து குல நாசம்;பெருமாள் சொத்து கோத்திரநாசம் என்பவையெல்லாம் இன்றும் நிரூபிக்கப்படும் உண்மைகள்;இந்த பழமொழியை நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்;கோவிலுக்குச் சென்றால்,கோவிலில் தரப்படும் விபூதி,குங்குமத்தைக் கூட அங்கேயே கொட்டிவிட்டு வந்துவிடுகிறோம்.இது மாபெரும் தவறு.கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள்,கடைகளை ஆக்கிரமித்துக் கொண்டு அல்லது உரிய வாடகை/விளைச்சல்களைத் தராமல் இருந்தால் மட்டுமே சிவன் சொத்து குலநாசம் என்பது செயல்படும்.                         ##########################################################
பல கோவில்களில் நமக்குத்தரப்படும் விபூதிகளை வீட்டிற்குக் கொண்டு செல்ல சதுரமான காகிதங்கள் முறையாக கிழிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்;இவைகள் பெரும்பாலும் தினசரி(செய்தித்தாள்கள்)களில் இருந்து கிழிக்கப்படுகின்றன;இவ்வாறு தினசரி செய்தித்தாள்களை கிழித்து வைப்பது தவறு;ஏன் என்பதை நமது ஆன்மீககுருவிடம் கேட்டபோது, “நாம் கோவிலுக்குச் சென்று நமது பிரச்னைகளை மனப்பூர்வமாக நினைத்து வேண்டுகிறோம்;நமது பிரார்த்தனை வெற்றிபெறவே விபூதி,குங்குமம்,மஞ்சள் காப்பு போன்றவைகள் தரப்படுகின்றன;அவ்வாறு நாம் வாங்கும் விபூதி,குங்குமம்,மஞ்சள்காப்பு போன்றவைகள் அச்சிடப்படாத காகிதங்களில் மடிக்கப்பட்டு நாம் எடுத்துச் சென்றால் நமது கோரிக்கைகள் உடனே நிறைவேறும்;எனவே,கோவில்களுக்கு விபூதி மடிக்க காகிதம் வடிவாக கிழிப்பவர்கள் வெற்று வெள்ளைக்காகிதம் அல்லது மஞ்சள் நிறக்காகிதத்தைப் பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;உரிய கோவிலுக்கும்,வழிபட வரும் பக்தர்களுக்கும்!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ