RightClick

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(2.5.13வியாழன்) வழிபாடு!!!

நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;


கடந்த  மூன்று ஆண்டுகளாக ஜோதிடமும் ஆன்மீகமும் கலந்த ஆராய்ச்சியை  செய்து,கிடைத்த அற்புத முடிவு இது;இந்த ஆராய்ச்சியில் இருபது வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.ஆராய்ச்சிக்க்கு ஒத்துழைப்புக் கொடுத்து,தமது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டின் பலன்களை உணர்ந்து பகிர்ந்து கொண்டனர்.


பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ணதாதேவியின் இடுப்பில் கைவைத்தபடி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் இருக்கிறாராம்.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.                                            26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)                             28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
29.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.


சித்திரை மாதத்து தேய்பிறை அஷ்டமி 2.5.13 வியாழக்கிழமை காலை பத்து மணி இருபத்தைந்து நிமிடத்தில் இருந்து துவங்கி, 3.5.13 வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி இருபத்தெட்டு நிமிடம் வரை அமைந்திருக்கிறது.வியாழக்கிழமை இராகு காலம் மதியம் ஒன்றரை மணியில் இருந்து மூன்று மணி வரை வருகிறது.எனவே,உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி:வைகாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=31.5.13 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணி பதினொரு நிமிடத்தில் இருந்து 1.6.13 சனிக்கிழமை மாலை மணி ஐந்து,நிமிடம் ஐம்பத்து நான்கு வரை அமைந்திருக்கிறது.(சனிக்கிழமை ராகு காலம் காலை ஒன்பது முதல் பத்து முப்பது வரை)சனிக்கிழமையில் வருவதால்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

சித்ராபவுர்ணமி+கிரகணநாளில் பைரவ சஷ்டி கவசம் எழுதுவோம்!!!விஜய வருடத்தின் முதல் பவுர்ணமியானது  25.4.13 அன்று ஆரம்பித்து மறுநாள் 26.4.13 வரை இருக்கிறது.பவுர்ணமியோடு சேர்ந்து கிரகணமும் வருவதால்,இந்த பவுர்ணமியானது அதிமுக்கியத்துவம் பெறுகிறது.ஆமாம்! மேஷ ராசியில் ஆத்மக்காரனாகிய சூரியன்,ஞானக் காரனாகிய கேதுவுடன் சேர.மனக்காரனாகிய சந்திரன்,ராகுவுடன் துலாம் ராசியில் சேருகிறது.ஆண்டுக்கு ஒருமுறையே இவ்வாறு கிரகணம் அமையும்.இந்த நன்னாளில் இன்னொரு சூட்சுமரகசியம் அமைவது என்னவெனில்,சூரியனும் கேதுவும் ஸ்ரீகால பைரவரின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் சேர்ந்து இந்த கிரகணத்தை தோற்றுவிப்பதால்,இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒருவேளை இந்த கிரகண நாளை விட்டு விட்டால் மீண்டும் இதே கிரகணம் உருவாக பதினெட்டு ஆண்டுகள் தான் ஆகும்.கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களின் விளைவாக நாம் இப்போதைய வசதிகளை அனுபவிக்கிறோம்;செல்வாக்குடன் இருக்கிறோம்;நமது ரேஞ்சுக்கு புகழுடன் வாழ்ந்துவருகிறோம்;அதே போல ,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த தீயச் செயல்களின் விளைவாக இந்தப் பிறவியில் கடன்கள் அல்லது நோய் அல்லது அவமானம் அல்லது புறக்கணிப்பு அல்லது மனவேதனைகள் அல்லது இவைகள் அனைத்தையும் அனுபவித்தும் வருகிறோம்.இந்த இரண்டும் நாடாளும் மன்னனாக இருந்தாலும் சரி,வீட்டிலேயே மரியாதை இல்லாத பெண்ணாக (ஆணாக) இருந்தாலும் சரி=அனைவருக்கும் பொதுவாகவே அமைந்திருக்கிறது.இதில் நமது தீயச் செயல்களின் விளைவுகளைத் தாங்க முடியாமல் ஏதேதோ வழிபாடு,பரிகாரம் செய்து வருகிறோம்.இதைச் செய்தாலாவது நாம் நிம்மதியை அடைய மாட்டோமா? என்று ஏங்குகிறோம்.

அந்த ஏக்கத்தை நீக்கிட ஒரு அரியவாய்ப்பு இன்றும்(25.4.13),நாளையும்(26.4.13) ஏற்பட்டிருக்கிறது.நாம் செய்ய வேண்டியது இதுதான்:

நமது ஆன்மீகக்கடலில் பிப்ரவரி மாதம் 2013 இல் வெளியிடப்பட்டிருக்கும் பைரவ சஷ்டி கவசத்தை இந்த இருநாட்களில் எழுதி முடிப்பது மட்டுமே!

எங்கே எழுதுவது?

வசதி உள்ளவர்கள் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் எழுதலாம்.அது முடியாதவர்கள் அவரவர் வீட்டிலேயே எழுதலாம்;கூட்டுக் குடும்பமாக இருப்பவர்களில் அனைவருமே எழுதலாம்.ஒரே நிபந்தனை:=இரண்டே நாட்களில் பைரவ சஷ்டி கவசத்தையும் எழுதி முடித்துவிட வேண்டும்.சரி! எப்போது இந்த இரண்டு நாட்களில் எழுத வேண்டும்?

இந்த இரண்டு நாட்களில் எப்போது வேண்டுமானாலும் எழுத ஆரம்பிக்கலாம்;எப்போது வேண்டுமானாலும் எழுதி முடிக்கலாம்;

சரி! எதில் எழுதுவது?

நோட்டு புத்தகத்தில் எழுதலாம்;வெள்ளைக் காகிதத்தில் எழுதலாம்;கணினியில் டைப் செய்யக் கூடாது;


எப்படி எழுதுவது?

அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவதும்,எழுதி முடிப்பதும் அவசியம்.

எழுதி முடித்துவிட்டு என்ன செய்ய?

எழுதி முடித்ததை பத்திரப்படுத்தி வைக்கவும்:அடுத்தபடியாக 9.5.13 வியாழக்கிழமை அன்று சித்திரை மாதத்து அமாவாசை வருகிறது.இந்த அமாவாசையானது ஸ்ரீகால பைரவப் பெருமானின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் வருகிறது. அன்று ஸ்ரீகாலபைரவரின் 1008 போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் 1008 போற்றியை இத்துடன் சேர்த்தே எழுதி வைக்கவும்.


மேலும்

உங்கள் மகன்/ள் பள்ளிப் படிப்பு/பாலிடெக்னிக்/கல்லூரி படித்துக் கொண்டிருப்பவரா?இந்தியாவில் ஆண்டுவிடுமுறைக் காலம் துவங்கியிருக்கிறது.எனவே,உங்கள் மகன்/ளை  பின்வரும் ஸ்ரீகால பைரவ மந்திரத்தை தினமும் நூற்றிஎட்டுமுறை எழுதச் சொல்லலாம்;மீண்டும் பள்ளி/கல்லூரி திறக்கும் வரையிலும் தினமும் எழுதச் சொல்லலாம்;
தாங்கள் எழுதியவைகளை தங்களின் வீட்டுப்பூஜை அறையில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் பத்திரமாக வைக்கவும்.தாங்கள் மனப்பூர்வமாக எழுதியது எப்படி உங்களுக்கு பாதுகாவலாக,வழிநடத்தும் பைரவ சக்தியாகச் செயல்படுகிறது என்பதை உணர்வீர்கள்.
இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது செய்வதன் மூலமாக உங்களுடைய நீண்டகாலப் பிரச்னைகள் தீரத்துவங்கும்;


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

முக்கியமான விஷயம் இவைகளில் எதை எழுதத் துவங்கினாலும்,எழுதுபவர் அசைவம் சாப்பிடக் கூடாது;எச்சரிக்கை!!!நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் பகுதி 5
அதிகரிக்கும் விலைவாசி,அதற்கு இணையாக உயராத சம்பளம் இவைகளாலும்,பொதுமக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மத்திய அரசு,அதன் கொள்கைகள் போன்றவைகளால் இந்தியாவில் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது;அதுவும் கடந்த எட்டு ஆண்டுகளில் இன்னும் படுமோசமாகிவிட்டது.இதனால்,குடும்பத்தில் அன்பு,பாசம் போன்றவைகளின் இடத்தினை பணம் கைப்பற்றிவிட்டது;இதன் விளைவாக,பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.இந்த சூழ்நிலையால் குடும்ப உறவுகள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மாதா,பிதா,குரு,தெய்வம் என்ற வரிசைக்கு உரிய மாண்புகளைப் பெரும்பாலானவர்களால் பின்பற்ற இயலவில்லை;பெற்ற தாய்,தந்தையரை ஒரு போதும் நோகடிக்கக்கூடாது;அவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது;அவர்கள் ஒரு போதும் நம்மால் அழக்கூடாது என்றெல்லாம் நமது தமிழ்ப் பண்பாடு தெரிவிக்கிறது.இதுவே பின்னாளில் இந்து தர்மமாக பரிணமித்து ஆசிய நாடுகள் முழுவதும் பரவியது;இந்த கோட்பாடுகளைச் சிதைக்கும் விதமாக இந்தியாவில் உலகமயமாக்கலும்,அமெரிக்க மயமாக்கலும் திணிக்கப்பட்டுவருகின்றன.இதனால்,பெரும்பாலான பெற்றோர்களுக்கு தனது மகன் அல்லது மகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கூட செய்ய முடியாத நிலை பெரும்பாலான குடும்பங்களில் உருவாகிவிட்டன;டீன் ஏஜ் வயதிலேயே தனக்குத் தேவையான படிப்பைப் படிக்கவும்,தனது தினசரிச் செலவுகளைச் சமாளிக்கவும் பகுதி நேர வேலைக்குச் செல்லும் இளைஞர்கள்,இளம்பெண்கள் எண்னிக்கை பல மடங்கு பெருகிவிட்டன என்பது பெருமைக்குரிய விஷயம். அவர்கள் தனது இருபத்தைந்து முதல் முப்பது வயதுக்குள் பொருளாதாரத் தன்னிறைவை எட்டும் விதமாக வேலை அல்லது தொழிலில் இறங்கி சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்;இந்த சமயத்தில்,சாதிக்கும் தனது மகன்/ளை நினைத்துப் பெருமைப் படும் பெற்றோர்களை விடவும் அவர்களிடம் இருந்து எப்படியெல்லாம் பணம் பறிக்கலாம்? என்று திட்டமிட்டு ஏமாற்றும் பெற்றோர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தமது பெற்றோர் தம் மீது வைத்திருப்பது பாசம் அல்ல;வெறும் வேஷம் என்பதை அறியும் போது தமது பெற்றோர்களுக்கு தருவதை முழுமையாக நிறுத்திவிடுகின்றனர்.இப்போது பெற்றோர்கள் தமது மகன்/ளை போனிலும்,நேரிலும்(சிலர் அலுவலகத்துக்கு வந்தும் கூட) சாபமிடுகின்றனர்.
தமது மகன்/ள் படிக்கும் காலத்தில் ஒரு சிறு உதவியும் செய்யாமல் இருந்து இப்போது சாபமிடும் பெற்றோர்களின் சாபம்/வேதனை அவர்களின் மகன்/ளுக்கு பலிதமாகுமா? ஒரு போதும் ஆகாது.
யார் தன்னையே தியாகம் செய்து தனது மகன்/ளின் படிப்புக்கும்,திருமணத்திற்கும் அக்கறை எடுத்து அவர்களின் குடும்பத்தை நிலைநிறுத்தும் வரையிலும் பொறுப்பாக இருக்கிறார்களோ, அவர்களின் சாபம் மட்டுமே அவர்கள் பெற்று வளர்த்த மகன்/ளைப் பாதிக்கும் விதமாக பலிக்கும்;
8888888888888888888888888888888888888888888888888888888888

தனிப்பட்ட தியானத்தை விடவும் கூட்டு தியானம் மிக விரைவான பலன்களைத் தரும்;சிவமந்திரம் ஜபித்தாலும்,பைரவ மந்திரம் ஜபித்தாலும் தனியாகத் தான் நாம் நமது வீடு அல்லது தங்குமிடத்தில் ஜபித்து வருகிறோம்.அடிக்கடி நாம் ஜீவசமாதி இருப்பிடம் அல்லது கோவில்களில் பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம்.அப்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகிறார்கள்.அவ்வாறு வரும்போது கூட்டாக ஜபிக்கும்போது அவர்களில் பலருக்கு அடுத்த சில நாட்களிலேயே  நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறிவிடுகின்றன;இதை பலமுறை நமது வாசகர்கள் நேரிலும்,மின் அஞ்சலிலும் தெரிவித்திருக்கின்றனர்;
குறைந்தது மூன்று பேர்கள்,ஐந்து பேர்கள் அல்லது மூன்று தம்பதியர்,ஐந்து தம்பதியர் நாம் அடிக்கடி தெரிவிக்கும் ஜீவசமாதி அல்லது நமது ஊரில் இருக்கும் ஜீவசமாதிகளுக்கு அமாவாசை அல்லது பவுர்ணமி அன்று பகலில் அல்லது மாலையில் அல்லது இரவில் ஒரு மணி நேரம் வரை கூட்டாக ஜபிக்கலாம்;அவ்வாறு மூன்று பேர்/மூன்று தம்பதியினர் ஜபிக்கும்போது அனைவரும் சிவமந்திரம் மட்டும் அல்லது ஏதாவது ஒரு பைரவர் மந்திரம் மட்டுமே ஜபிக்க வேண்டும்.
அந்த மூன்று பேர்கள்/மூன்று தம்பதியரின் கோரிக்கைகள் மற்றும் நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அனைவரின் கோரிக்கைகளும் விரைவாக நிறைவேறும் என்பதை உணரலாம்.
இவ்வாறு கூட்டாக தியானம் செய்யும் போது அனைவரும் அணிய வேண்டிய ஆடையின் நிறம் மஞ்சள்.
இவ்வாறு ஒருமுறை செய்து பாருங்கள்! பலன் என்ன என்பதை எமக்கு மின் அஞ்சலில் தெரிவிக்கவும்.
22222222222222222222222222222222222222222222222222222222
எத்தனையோ மந்திரங்களை நாம் ஆன்மீகக்கடலில் வெளியிட்டு வருகிறோம்.அத்தனை மந்திரங்களையும் ஒருவரே ஜபிக்கக்கூடாது;அது மாபெரும் தவறு. பஞ்சபூத தத்துவப்படி,மனிதர்கள் ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறார்கள்.சிலர் மண் தத்துவத்தில் பிறந்தவர்கள்! இவர்கள் பொறுமையின் சிகரமாக இருப்பர்;சிலர் நீர் தத்துவத்தில் பிறந்தவர்களாக இருப்பர்;இவர் எதையும் கிரகிக்கும் தன்மையோடு இருப்பர்;சிலர் நெருப்பு தத்துவத்தில் பிறந்தவர்களாக இருப்பர்;இவர்கள் மார்கெட்டிங்,அரசியல்,காவல் துறையில் சிறப்புப் பிரிவுகளில் இருப்பர்;சிலர் காற்று தத்துவத்தில் பிறந்தவர்களாக இருப்பர்;இவர்கள் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பதிலும்,அதை கிரகிப்பதிலும் காற்றைப் போலச் செயல்படுவர்;சிலர் ஆகாய தத்துவத்தில் இருப்பர்;இவர்களிடம் மேலே கூறிய நான்கு தத்துவமும் இருக்கும்.
எனவே,ஆன்மீகக்கடலில் வெளிவரும் மந்திரங்கள்,அது தொடர்பான பதிவுகளை நீங்கள் முதன்முதலில் வாசிக்கும் போது ஏதாவது ஒரு மந்திரம் ஈர்க்கும்.அதை மட்டும் தொடர்ந்து ஜபித்து வருவது நன்று.அந்த மந்திரத்தை குறைந்தது ஒரு ஆண்டு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரையிலும் ஜபித்துவந்தால் உங்களின் ஆன்மீக வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிவிடுவீர்கள்;
9999999999999999999999999999999999999999999999999999999
எளிமையை விரும்புவோர்,ஏழரைச்சனியை எதிர்கொள்ளத் தயாராவோர்,வசதி வாய்ப்புகளுக்கு மயங்காமல் இருந்திட விரும்புவோர் எளிய அதே சமயம் கடினமான படுக்கையில் தூங்கப் பழக வேண்டும்;தலையணையைக் கூட தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.இதன் மூலமாக உடல் வலி ஒருபோதும் வராது.ஆனால்,வெறும் தரையில்(அது மொசைக் அல்லது கிரானைட் அல்லது பளபளப்பான எந்த ஒரு தரையாக இருந்தாலும்) ஒரு போதும் தூங்கக் கூடாது.
11111111111111111111111111111111111111111111111111111111
இந்தியாவில் பள்ளி ஆண்டுத்தேர்வுகள் நிறைவடைந்துவருகின்றன;அடுத்த வாரங்களில் பாலிடெக்னிக்,கல்லூரி ஆண்டுத் தேர்வுகளும் நிறைவடைந்துவிடும்.ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வதை இந்த வருடம் தவிர்த்துவிட்டு,உங்கள் குழந்தைகளோடு அட்ட வீரட்டானங்களுக்கு சுற்றுலா சென்று வருவது நல்லது.செல்லும் போது அட்டவீரட்டானங்களின் வரலாற்றை நமது ஆன்மீகக்கடலில் வாசித்துவிட்டு,அங்கே செல்லவும்.அவ்வாறு சென்றால்,அதன் பழமையை நினைத்து பிரமித்துப் போய்விடுவீர்கள்:அங்கே சென்ற பிறகு,உங்கள் குழந்தைகளுக்கு அந்தக் கோவிலின் பெருமைகளைச் சொல்லவும்.முடிந்தால் அங்கே ஸ்ரீகால பைரவர்நூற்றிஎட்டு எழுதச் சொல்லவும்.முடிந்தால் நீங்கள் அங்கே சென்று ஸ்ரீகால பைரவ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நூற்றி எட்டு முறை அல்லது ஆயிரத்து எட்டுமுறை எழுதவும்.ஜபிக்கவும் செய்யலாம்.
சில குடும்பங்களால் கோடை விடுமுறைக்கு எங்கும் செல்லமுடியாத சூழ்நிலை இருக்கலாம்;அவ்வாறு இருக்கும்போது அவரவர் குழந்தையை ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டை தினமும் எழுதச் சொல்லலாம்.வீட்டில் அல்லது அருகில் இருக்கும் சிவாலயம் சென்று அங்கே மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை ஸ்ரீகால பைரவர் சன்னதி முன்பாக அமர்ந்து எழுத வைக்கலாம்;தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் உங்கள் ஊரில் இருந்து நூறு ரூபாய் பேருந்து/ரயில் கட்டணத்தில் பயணித்துச் சென்றால் வரும் பழமையான சிவாலயத்துக்கு குடும்பத்துடன் செல்லவும்.அங்கே உங்கள் குழந்தையையும் அழைத்துச் சென்று அந்த சிவாலயத்தின் வரலாற்றை(கோவில் ஸ்தல வரலாறு வாங்கி) விவரிக்கலாம்;அங்கே மாலை நேரத்தில் அல்லது உங்களுக்கு வசதியான நேரத்தில் ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டு போற்றியை எழுத வைக்கலாம்;கூடவே நீங்களும் உங்கள் குழந்தையோடு சேர்ந்து ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டு போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் நூற்றி எட்டு போற்றியை எழுத வேண்டும்.இது மிகவும் பூர்வபுண்ணியம் மிக்க செயல் ஆகும்.கோடை விடுமுறை நிறைவடைந்ததும்,இவ்வாறு எழுதப்பட்டவைகளை எமக்கு அனுப்பி வைக்கலாம்.அனுப்பி வைக்க மே அல்லது ஜீன் கடைசியில் aanmigakkadal@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
5555555555555555555555555555555555555555555555555555555555
ஓரளவு குரல் வளம் உங்களுக்கோ உங்கள் குழந்தைக்கோ இருந்தால் ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டு போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் நூற்றி எட்டு போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆயிரத்து எட்டு போற்றியை பாடச் சொல்லி உங்கள் செல்போனில் அல்லது கணினியில் பதிவு செய்யவும்.பதிவு செய்த பின்னர்,தினமும் காலையில் அவைகளை ஒலிக்கச் செய்யவும்.இதன் மூலமாக நீங்கள் பாடிய இந்த பாடல்களை நீங்களே கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்;தினமும் கேட்க,கேட்க உங்கள் ஆழ்மனதில் பைரவரைப் பற்றிய பாடல் பதிவாகிவிடும்.உங்கள் வீட்டில் பைரவரைப் பற்றிய எண்ணங்கள் பரவி நிலைத்து நிற்கும்.இதன் மூலமாக உங்கள் குடும்பத்தில் எந்த எதிர்மறை சக்தியும் நுழையக் கூட முடியாது.செய்வோமா?
00000000000000000000000000000000000000000000000000000000
ஓரளவு எடிட்டிங் வசதி உடையவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பழமையான சிவாலயம் அல்லது அம்மன் கோவிலில் இருக்கும் ஸ்ரீகால பைரவர் சன்னதியில் இந்த நூற்றி எட்டு ஆயிரத்து எட்டு போற்றிகளை நீங்களே(அல்லது உங்கள் குழந்தைகள்) பாடுவது போல கேமிரா செல்போனில்/டிஜிட்டல் கேமிராவில் பதிவு செய்து  வைத்துக் கொள்ளலாம்.தினமும் அதை உங்கள் கணினி/டிவியில் ஒளிபரப்பவும் செய்யலாம்.இதுவும் பைரவரின் அருளைப் பெறும் ஒரு டெக்னிக் ஆகும்.
இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்வதாக இருந்தால்,அட்டவீரட்டானங்களுக்குப் பயணித்து அங்கே ஸ்ரீகால பைரவர் முன்பாகப் பாடுவது போல ஆடியோவாகவோ வீடியோவாகவோ பதிவு செய்யலாம்.அட்டவீரட்டானங்களில் திருக்கோவிலூர்,திருவதிகை,திருக்கடையூர்,திருக்கண்டியூர் எப்போதும் ஜன நடமாட்டம் அதிகமுள்ளவை;மற்றவைகளில் அவ்வளவாக ஆட்கள் வருவது இல்லை;
1.திருக்கோயிலூர்=விழுப்புரத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது
2.திருவதிகை=பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தூரத்தில்
3.திருக்கண்டியூர்=தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் எட்டாவது கி.மீ.தூரத்தில் சாலையோரத்தில்
4.வழுவூர்=மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் ஒன்பதாவது கி.மீ.தூரம் சென்று அங்கிருந்து சாலையிலிருந்து மூன்று கி.மீ.தூரம் கிராமத்துப் பாதையில் பயணிக்க வேண்டும்.
5.திருப்பரசலூர்=மயிலாடுதுறையில் இருந்து பரசலூர் சென்று விசாரிக்கவும்.ஆட்டோ/டாக்ஸியில் பயணிக்க வேண்டும்.
6.திருக்கடையூர்
7.திருவிற்குடி=திருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் வழியில் யூ வடிவச் சாலையைக் கடந்ததும்,கிராமத்துச் சாலைக்குள் நுழைய வேண்டும்.சில கி.மீ தூரத்தில் ஒரு பாலம் வரும்.அந்த பாலத்தின் வழியே சென்றால் ஒரு கிராமம் வரும்.
8.குறுக்கை=மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில்
எனவே,உங்களுக்கு வசதியான வீரட்டானங்களுக்குப் பயணித்தும் செய்யலாம்.இதன் மூலமாக ஸ்ரீபைரவருடைய ஆசி வெகு விரைவில் கிட்டும்.
3333333333333333333333333333333333333333333333333333333333
உங்கள் குழந்தை நன்றாக படிக்கவில்லை;அடிக்கடி ஞாபகமறதி ஏற்படுகிறதா? கவலை வேண்டாம்.இந்த கோடைவிடுமுறையில் தொடர்ந்து ஆறு புதன் கிழமைகள் திருகண்டியூர் சென்று அங்கே இருக்கும் பிரம்மா சரஸ்வதிக்கு தேனால் அபிஷேகம் செய்யவும்.பட்டரிடம் சொல்லி அபிஷேகம் செய்யப்பட்ட தேனை சேகரித்து வீட்டுக்குக் கொண்டு வரவும்.படிப்பு மந்தமாக இருக்கும் உங்கள் மகன்/ளுக்குத் தரவும்.இந்த ஆறு புதன்கிழமைகளுக்கு அபிஷேகம் செய்யச் செல்லும் போது உங்கள் மகன்/ளையும் கண்டிப்பாக அழைத்துச் செல்லவும்.உங்கள் வீட்டிலிருந்து திருக்கண்டியூர்,திருக்கண்டியூரிலிருந்து வீடு என்றவிதமாக பயணத்திட்டம் வகுத்துக் கொள்ளவும்.திருக்கண்டியூரில் தங்கும் வசதிகள் இல்லை;வெகு தூரத்தில் இருந்து வருபவர்கள் தஞ்சாவூரில் தங்கிக்கொள்ளவும்.
6666666666666666666666666666666666666666666666666666666666
கல்லூரியின் இறுதியாண்டு படிப்பு முடிப்பவர்கள் அல்லது அதற்கு முந்தைய வருடப் படிப்பு முடிப்பவர்களா உங்கள் குழந்தைகள்? நீங்கள் இந்த கோடையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் எட்டை உங்கள் மகன்/ள் தரிசிக்க வைக்க வேண்டியதுதான்.இதன் மூலமாக சிறந்த வேலை அவனு/ளுக்கு கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை;
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை(தற்போது இங்கே வழிபாடு நிறுத்தப்பட்டிருக்கிறது)

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ணதாதேவியின் இடுப்பில் கைவைத்தபடி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் இருக்கிறாராம்.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.                                            26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
                            28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.

29.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இவைகளில் அண்ணாமலை காகா ஆஸ்ரமம்,திண்டுக்கல் தாடிக்கொம்பு,ஜெயதுர்காபீடம்,பொன்பேத்தி,இலுப்பைக்குடி,           வயிரவன்பட்டி,சிதம்பரம்,அழிபடைதாங்கி,அண்ணாமலையின் உட்பிரகாரம் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் ஆவர்.மற்ற இடங்களைப் பற்றி இன்னும் நேரில் சென்று மதிப்பிடவில்லை;பவுர்ணமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடத்துவங்கி,தேய்பிறை அஷ்டமியன்று எட்டாவது ஆலயத்தில் வழிபடுவது நன்று.இந்த வழிபாடு கல்லூரி/பாலிடெக்னிக் படிப்பை முடிக்க இருப்பவர்களுக்கு  மட்டுமே பொருந்தும்.
777777777777777777777777777777777777777777777777777777777


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

சித்திரா பவுர்ணமியன்று(25.4.13 ) பாம்புக்கோவில்சந்தையில் வழிபடுவோம்!!!நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம் சங்கரன்கோவில்,புளியங்குடி,கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது.இந்த கிராமம் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது.தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி,காலை 11 மணி,மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது.சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது.மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,சங்கரன்கோவில்,பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது.பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக(செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.பயணித்ததும்,ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும்.அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.

விஜய வருடத்தின் முதல் பவுர்ணமியானது 25.4.13 வியாழக்கிழமை இரவு மணி 2.08 க்குத் துவங்குகிறது;துவங்கி மறுநாள் 26.4.13 வெள்ளிக்கிழமை இரவு 12.10க்கு நிறைவடைகிறது;இந்த பவுர்ணமியில் வியாழக்கிழமை இரவு மணி 1.19க்கு சந்திர கிரகணம் துவங்கி இரவு 1.55க்கு நிறைவடைகிறது.
மேஷ ராசியில் கேது நிற்கிறது;கேதுவுடன் சூரியன் சித்திரை மாதம் முழுவதும் இணைந்திருக்கிறது;துலாம் ராசியில் ராகு நிற்கிறது;இந்த துலா ராகுவுடன் சந்திரன் 25.4.13 மற்றும் 26.4.13 இரண்டு நாட்களும் சேருகிறது.ராகுவுடன் சேரும் சந்திரன்,ஆத்மக்காரனாகிய சூரியனுக்கு நேர் ஏழாம் ராசிக்கு வருகிறது.எனவே,சந்திரன் முழுபலமான பவுர்ணமியை எட்டுகிறது.அவ்வாறு பவுர்ணமியாக உதயமாகும்போது உடன் இருக்கும் ராகு அதை சந்திரக் கிரகணமாக மாற்றுகிறது.சாஸ்திரத்தை முழுமையாகவும்,சிரத்தையாகவும் பின்பற்றுவோர் இந்த 25.4.13 வியாழக்கிழமை மாலை 4 மணிக்குப் பிறகு எதுவும் சாப்பிடக் கூடாது;
கிரகண நேரத்தில் ஜபிக்கும் எந்த ஒரு மந்திரஜபமும் அளவற்ற தெய்வ சக்தியை நமக்கு ஈர்த்துத் தரும்;

25.4.13 வியாழக்கிழமை அன்று இரவு திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் தாலுகாவில் அமைந்திருக்கும் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் அமைந்திருக்கும் மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியத்தில் கூடுவோம்;(வரும் போது ஒருகிலோ டயமண்டு கல்கண்டு,விதையில்லாத கறுப்பு திராட்சை,விதை நீக்கப்பட்ட பேரீட்சை பழங்கள்,ஒரு பத்தி பாக்கெட்,ரோஜா மாலை,நெய் பாக்கெட் இவைகளுடன் இரவு ஒன்பது மணிக்குள் வருவோம்)கூட்டு பிரார்த்தனை செய்வோம்.இதன் மூலமாக நமது நீண்டகாலப் பிரச்னைகள் தீரும்;நீண்ட கால நியாயமான ஏக்கங்கள் நிறைவேறும்.இங்கே,சகல வசதிகளும் இருக்கின்றன.பெண்களுக்குத் தனியாக தங்கும் வசதிகள் இருக்கின்றன;இங்கே வரும் போது முடிந்தவரையிலும் வெள்ளை நிற வேட்டியும்,துண்டும் அணிந்தவாறு தியானிப்போம்.வியாழக்கிழமை இரவில் தங்கிபிரார்த்தனை செய்வோம்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹமதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு அனைவரும் வருக!!! சேவை புரிக!!!


மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து


சோலைமலை முருகன் கோயிலில் 37 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.

15 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது. 

எனது தந்தை திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். "திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா" என்று கேட்டபோது,

திருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்து
அளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .

ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தன்று, 10,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது. கடந்தா இரண்டாண்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு , காவல்துறை தடைவிதித்தனர்.

இந்தாணடு திருக்கல்யாணம் 23-04-2013 அன்று நடக்கிறது 40 ஆயிரம் பேருக்கு வழங்கபடுகிறது.இதை முன்னிட்டு, பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது.இந்த விருந்தில், பூந்தி, வாழைப்பழம் , கல்கண்டு சாதம் , எலுமிச்சைச்சாதம் , தக்காளிச்சாதம் , சாம்பார்ச்சாதம் மற்றும் தயிர்ச்சாதம் தண்ணீர் பாக்கெட் தட்டில் வழங்கப்படும்இடம்பெறுகிறது.

22-04-2013 அன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது ,மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும்.

விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.

திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்ய அழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை"
C/o சாமுண்டி விவேகானந்தன்
சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell: 9442408009 , Shop: 0452 2345601. மதுரை மீனாட்சி திருக்கல்யாணவிருந்தில் சேவை செய்ய விரும்புவோர் நமது சகோதரர் திரு.ஹரிமணிகண்டன் 9841267823 ஐ அழைக்கவும்.அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.

வெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=3ஆறு புதன்கிழமைகளின் மாலை நேரத்தில் ஸ்ரீகாலபைரவரின் அருளாற்றல் வெளிப்படுவதை தமது ஆத்மசக்தியால் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் கண்டறிந்து நமக்கு அந்த தேவ ரகசியத்தை ஆன்மீகக்கடல் மூலமாக அருளினார்.
அவ்வாறு அருளியதன் மூலமாக ஏராளமான வாசக,வாசகிகளின் பல வருடப் பிரச்னைகள் தீர்ந்தன;கடுமையான மன உளைச்சல்கள் விலகின;இது தொடர்பாக பல வாசக,வாசகிகள் தொடர்ந்து அவரவர் அனுபவங்களை தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்;ஒரே ஒரு புதன் அல்லது இரண்டே இரண்டு புதன் கிழமைகள் என்று ஸ்ரீகாலபைரவரை வழிபட்டதாலேயே எப்படியெல்லாம் இருந்த தமது நீண்டகால பிரச்னைகள் தீர்ந்தன என்பதை விவரித்த வண்ணம் இருக்கின்றனர்.இந்தச் சம்பவம் உரிய வாசகரின் அனுமதியோடு வெளியிடப்படுகிறது:-

 அந்த பெற்றோர்களுக்கு ஐந்து குழந்தைகள்;இரு மகள்கள்,மூன்று மகன்கள்.நால்வருக்கும் திருமணம் ஆனப்பின்பு,மகள்கள் தத்தம் குடும்பத்தோடு வெளியூர்களில் வாழ்ந்து வருகிறார்.மூன்று சகோதரர்களில் ஒருவர் தான் நமது ஆன்மீகக்கடல் வாசகர்.தொடர்ந்து மூன்றுவீடுகளில் நடு வீடு இவருக்குக் கிடைத்தது;இவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது;இவரது வீட்டின் ஒரு பக்கம் இவரது அண்ணனும்,இன்னொரு பக்கம் இவரது தம்பியும் வசித்து வந்தனர்.பதினைந்து ஆண்டுகளாக வாழ்க்கை சொந்த வீட்டில் நகர்ந்தது.நரகமாக!
இவரது அண்ணனும்,தம்பியும் தினமும் குடிக்கும் பழக்கமுள்ளவர்கள். இவரது அண்ணன் மனைவியும்,தம்பி மனைவியும் இவர்களுக்கு கொடுத்த துன்பத்துக்கு அளவே கிடையாது;இவர்களின் குழந்தைகள் விளையாண்டால்,அவர்களைக் காரணமே இன்றி அடிப்பது;இவர்களின் தண்ணீர்க்குழாயை உடைப்பது;ப்ளாஸ்டிக் வாளிகளை உடைப்பது.எழுத்தில் வாசிப்பதை விடவும்,நேரில் உணர்ந்தவர்களுக்கே அந்த வலியும் வேதனையும் தெரியும்.இது போன்ற தொல்லைகளை சொந்த உறவுகளே செய்யும் போது ஏன் தான் நாமெல்லாம் இவர்களோடு பிறந்தோம்? என்று தோன்றும்.நமது ஆன்மீகக்கடல் வாசகரோ வீண் வம்பு எதற்கு? சண்டைபோட்டால்,அவமானமாகிவிடுமே என்று அமைதியாகிவிடுவார்;
இதுதொடர்பாக இந்த சகோதரர்களோடு வாழ்ந்து வந்த இவரின் பெற்றோர்களிடம் புகார் செய்தும்,அவர்களின் பேச்சை இரு மருமகள்களும் மதிப்பதே இல்லை;ஒரு கட்டத்தில் இவரது பெற்றோரை மருமகள்களில் ஒருத்தி அடித்து நொறுக்கிவிட அவர்கள் அந்த நள்ளிரவிலும்,தனது உடல்நிலை மோசமாக இருந்த சூழ்நிலையிலும் தனது மகளின் வீட்டுக்குப் புறப்பட்டுப் போய்விட்டனர்;அவர்கள் போன அடுத்த சில வாரங்களில் இவரையும் சண்டையிட்டு வெளியேற்றிவிட்டனர்.சொந்த வீடு இருந்தும்,வாடகை வீட்டிற்கு குடியேறுவது எவ்வளவு வேதனையானது?!!
காரணம் நமது வாசகரின் சகோதரர்களின் மனைவிகள் பில்லி ஏவல் சூனியம் வைப்பதை ஒரு சுபாவமாகவே கொண்டவர்கள்.நிம்மதியின் மதிப்பு வார்த்தையில் அனைவருக்கும் புரியாது;பல ஆண்டுகளாக சிக்கல் மேல் சிக்கல்களைச் சந்தித்து,படாத அவமானமெல்லாம் பட்டவர்களுக்கு மட்டுமே அதன் மதிப்பை உணரமுடியும்.சுமாராக மூன்று ஆண்டுகளாக நமது ஆன்மீகக்கடல் வாசகர் தனது வீட்டை விற்க முயன்று கொண்டே இருக்கிறார்.இவரது சகோதரர்களின் திருவிளையாடல்களால் அது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று புதன் கிழமைகளுக்கு அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் சென்று ஸ்ரீகாலபைரவரை மாலை நேரத்தில் மனமுருகி பிரார்த்தனை செய்து,இரண்டு நெய்தீபங்கள்,செவ்வரளி மாலை,டயமண்டு கல்கண்டுகளுடன் வழிபட்டார் நமது ஆன்மீகக்கடல் வாசகர் குடும்பத்தோடு! மூன்றாவது புதன் கிழமை முடிந்த பத்தாவது நாள் இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் இவரது வீட்டை இவர் எதிர்பார்த்ததை விடவும் அதிக விலைக்கு வாங்கிவிட்டார்.
இப்பொழுது எங்கள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை பைரவருக்கு கோடானகோடி மனமார்ந்த நன்றிகள் .         தங்களுக்கும்    நன்றிகள்  ஐயா!!!