RightClick

நீண்டகால வழக்குகள்,பல ஆண்டுப்பணப்பிரச்னை,தலைமுறைகளுக்கும் தொடரும் வறுமை,பலகாலமாக வாட்டிடும் நோய்,தீராத மன உளைச்சல்களைப் போக்கும் திருக்கண்டியூர் பிரார்த்தனை!!!

விண்வெளியில் பல பூமிகள்  இருக்கின்றன.இந்த பூமிகளில் இதுவரை முப்பதாயிரம் மனித இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றன.இந்த மனித இனங்களோடு நமது முன்னோர்களாகிய சித்தர்கள் நட்பு வைத்திருந்தார்கள்;அடிக்கடி ககனக் குளிகையின்  மூலமாகப் போய் வந்தார்கள்; நாமும் இந்த நூற்றாண்டுக்குள் இந்தத் தொடர்பை மீண்டும் புதுப்பிக்கத் துவங்குவோம்;இந்த முப்பதாயிரம் மனித இனங்கள் வாழ்ந்து வரும் பூமிகளை விட்டுவிட்டு,ஸ்ரீகாலபைரவர் தமது வீரதீரச்செயல்களை நாம் வாழும் பூமியில் செய்திருக்கிறார் என்றால்,நமது பூமி பூர்வபுண்ணியம் மிக்கதுதானே!நாம் ஒரு மெக்ஸிக்கனாகவோ,சீனனாகவோ,ரஷ்யனாகவோ பிறந்திருந்தால் இந்த அட்டவீரட்டானங்களைப் பற்றிய தகவலாவது நம்மைத் தேடி வந்திருக்குமா.அட,நமது பக்கத்து  மாநிலங்களான கேரளா,ஆந்திரா,கர்னாடகாவில் பிறந்திருந்தால் இந்த ஆலயங்களைப் பற்றி அறிந்திருக்க முடியுமா? நமது வாழ்நாளில் ஒரே ஒரு முறை இங்கேதான் செல்லமுடியுமா?


ஸ்ரீகாலபைரவரின் முதல்வீரட்டமான திருக்கண்டியூர் வீரட்டானம்,சிவாலயமாக தஞ்சை டூ பெரம்பலூர் மெயின் ரோட்டில் திருவையாறுக்கு அருகில் அமைந்திருக்கிறது.கோவில் கோபுரத்தைக் கடந்தது,கோவிலுக்குள் நுழைந்ததும் கோவிலின் கொடிமரமும்,அதற்கு முன்பு ஒரு சிறிய கோபுரமும் தெரியும்.(படத்தினுள் இல்லை;கொடிமரத்துக்கும் முன்பாக முதலில் இருப்பது அதுதான்!!!)பல நூற்றாண்டுகளாக பல லட்சக்கணக்கானவர்களின் பிரச்னையை இந்த சிறு கோபுரம் தீர்த்து வைத்திருக்கிறது.ஆமாம்!

மூலவரான பிரம்மச்சிரக்கண்டீஸ்வரருக்கும்,மங்களாம்பிகைக்கும் அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று மதியத்திற்குள் அபிஷேகம் செய்ய வேண்டும்;பிறகு,இங்கே அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவருக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.இந்த ஸ்ரீகாலபைரவருக்கு அபிஷேகம் செய்யும் போது பின்வரும் பொருட்களால் கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும்;அவை:அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்.இந்த அபிஷேகங்களை மாலை ஐந்து மணிக்குள் முடித்துவிட வேண்டும்;இந்த அபிஷேகங்களை முடிக்கும் குருக்கள்/பூசாரிக்கு கண்டிப்பாக ரூ.150/-தட்சிணை தர வேண்டும்.ஒரு வேளை ஒன்றுக்கும் மேற்பட்ட குருக்கள் எனில்,ஒவ்வொருக்கும் இதே தொகையை தட்சிணையாகத் தர வேண்டும்;வசதியுள்ளவர்கள் குருக்களுக்கு வேட்டியும்,துண்டும் எடுத்துத் தரலாம்;

பிறகு, மூன்றுக்கு மூன்று என்ற அளவில்  ஒரு சதுரமான கோடு போடாத காகிதத்தில் நமது நீண்டகால ஏக்கத்தை/தீர வேண்டிய பிரச்னையை/குணமாக வேண்டிய நோயை/விரைவாகக் கிடைக்க வேண்டிய தீர்ப்பை எழுத வேண்டும்.அவ்வாறு எழுதியதை யாரிடமும்,எக்காரணம் கொண்டும் காட்டக்கூடாது;அவ்வாறு காட்டினால்,இந்த வழிபாட்டின் பலன் கிட்டாமல் போய்விடும்.எச்சரிக்கை!!!

எழுதி,ஒரு சிறு நூலால் கட்டி இந்த கோபுரத்தின் மீது மாலை ஐந்து மணிக்கு மேல் எட்டு மணிக்குள் கட்டிவிட வேண்டும்.கட்டி முடித்தப்பின்னர்,வேறு எந்தக்கோவிலுக்கும் செல்லாமல்,யார் வீட்டிற்கும் செல்லாமல் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இந்த அபிஷேகங்களை ஒரே ஒரு முறை செய்தாலே போதும்.இவ்வாறு செய்தால்,நீண்டகால(தலைப்பை பார்க்கவும்) பிரச்னைகள் (அதனதன் தன்மையைப் பொறுத்து) அடுத்த ஒன்பதாவது நாள் அல்லது வாரம் அல்லது மாதத்திற்குள் தீர்ந்துவிடும் என்பது பைரவ நிச்சயம்!!!
இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ