RightClick

வெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே!!!


நமது ஆன்மீக  குரு திரு.சகஸ்ரவடுகர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இதுவரை சுமாராக ஆயிரம் ஆத்மாக்களின் கர்மவினைகள் தீர ஆன்மீக வழிகாட்டுதல் செய்து அனைவருக்கும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து  தொடர்ந்து ஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும்  என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும்? என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆகும்)


இந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)இதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.
20.3.2013 புதன் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை
27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 வரை (அந்தந்த நாடுகளில் இதே நேரத்தைப் பின்பற்றுங்கள்;அதுதான் சரி)

நீண்ட நாட்களாக தகுந்த வரன்  கிடைக்கவில்லையே? என்று ஏங்குபவர்கள்,அவர்களின் பெற்றோர்,சகோதர சகோதரிகள்,நட்பு வட்டம் என யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் மேற்கூறிய வழிமுறையில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் நிச்சயம் தகுந்த வரன் விரைவில் அமைந்துவிடும்.


அலுவலகத்தில் நியாயமான பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்காமல் திண்டாடுபவர்களும் இவ்வழிபாடு மூலமாக நிச்சயமாக அவர்கள் மகழ்ச்சியை அடைவார்கள்.


நீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் மனமுருகி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயமாக ஸ்ரீகாலபைரவரின் அருளால் புத்தரபாக்கியத்தைப் பெறுவார்கள்


பிறரின் சதிச்செயல்களால் பிரிந்திருக்கும் கணவன்/மனைவி இருவரில் யாராவது ஒருவர் மட்டும் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவரிடம் முறையிட்டால்,பிரிந்தவர் சேருவர்.(அர்ச்சகர்/பூசாரியிடம் புலம்ப வேண்டாம்.அது புதுச்சிக்கல்களை உருவாக்கிவிடும்)


கடுமையான பண நெருக்கடியில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் வேண்டினால் நிச்சயமாக பணவரவு நிச்சயம்!


தனது திறமையும்,படிப்புக்கும் ஏற்ற வேலை தேடுவோர் அல்லது வேறு சிறந்த சம்பளத்தில் இடமாற்றத்துக்கு விரும்புவோர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்தால் அவர்கள் விரும்பும் வேலை கிட்டிவிடும்.


அன்புக்கு ஏங்கித் தவிப்பவர்கள்,தனிமையில் வாழ்ந்து தன்னையே வெறுத்து தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் அவர்களின் தனிமை போய்விடும்;தகுந்த நட்பு அல்லது வாழ்க்கைத் துணை அல்லது நெருக்கமான சிநேகிதம் உண்டாகும்.


(பலதமிழ்நாட்டுக்குடும்பங்களில் பணம்,பணம் என்று ஏங்குவதால் ரத்த உறவுகளிடம் ஆறுதலாகக்கூட பேச நேரமில்லாமல் இருக்கிறார்கள்;அல்லது வேண்டுமென்றே பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.இதனால் தான் பருவ வயதில் இருக்கும் மகன்/ள் அல்லது மனைவி/கணவன் தடம் மாறிச் செல்கிறார்கள்)

ஏழரைச்சனியால் அவதிப்படும் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிக ராசியினர் மற்றும் அஷ்டமச்சனியால் கஷ்டப்படும் மீனராசிக்காரர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரைச் சரணடைந்தால் அவர்களின் மன உளைச்சல்கள்,பண நெருக்கடிகள்,வர இருக்கும் அவமானங்கள் விலகிச் சென்றுவிடும்.

ப்ளாக் மெயில் அல்லது வீண் பழியால் சிக்கித் தவிப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.

வெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்போர் அல்லது டெபுடேஷனுக்காக காத்திருப்போர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை மனதார வழிபட்டால் நிச்சயமாக அவர்கள் வேண்டியது கிட்டும்.
தொலை தூர நாடுகளில் வசிப்போர் இங்கே இருக்கும் எட்டு பைரவர்களை நோக்கியவாறு அமர்ந்து பைரவ சஷ்டிக்  கவசம் பாடினாலே போதுமானது;

மேற்கூறிய நேரத்தில்,ஸ்ரீகாலபைரவர் சன்னதியின் முன்பாக பைரவ சஷ்டிக்கவசம் பாடலாம்;ஸ்ரீகால பைரவர் மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்கலாம்.
முயன்று பார்ப்போமா!!! ஸ்ரீகால பைரவரின் அருளைப்பெறுவோமா!!!


ஓம்சிவசிவஓம்