RightClick

மீண்டும் நிம்மதியிழக்கும் பூமி!!!


10.4.2013 முதல் 21.5.2013 வரையிலும்,19.8.2013 முதல் 8.10.2013 வரையிலும் செவ்வாயும்,சனியும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு பூமி மற்ரும் இந்தியாவின் பிறந்த ராசியான கடகராசியைப் பார்க்கப் போகின்றன;நம் அனைவரின் மனதுக்கும் அதிபதியான சந்திரனின் ராசியும் கடகமே என்பதை இந்த கணத்தில் நினைவில் கொள்வது நல்லது;எனவே, 16.12.2014 வரை தினமும் ஏதாவது ஒரு வழிபாடு செய்யாவிடில்,நாம் நமது மனது,நமது ஆத்மா மூன்றுமே தடுமாறி நமது வாழ்க்கையில் இந்த நாட்களில் எதிர்பாராத குழப்பங்கள்,சண்டைச் சச்சரவுகள் ஏற்பட இருக்கிறது;இதனால்,கடகராசி,தனுசுராசி மட்டுமல்ல;அனைத்து ராசியினரும் பாதிப்புக்குள்ளாக இருக்கிறார்கள்.


இந்த அழிவுக்கு மனிதர்களாகிய நாமே காரணம் ஆகும்.வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் மனிதநேயம்,பூமியின் நலம் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல் தனது நாட்டின் சுயநலப்போக்கோடு செயல்பட்டு வந்தது முதல் காரணம் ஆகும்.உலக மயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்கமயமாக்கலை இந்தியா முழுக்க மட்டுமல்ல;இந்த உலகம் முழுக்க பரப்பியதால் கோடிக்கணக்கான அப்பாவி மனிதர்கள் மூன்றுவேளை  சாப்பாடு சாப்பிடுவதற்காக பணம்,பணம்,பணம் என்று வெறிபிடித்து ஒவ்வொரு நாளும் ஓடும்விதமாக கார்பரேட் நிறுவனங்கள் தமது மார்க்கெட்டிங் டெக்னிக்குகளை உலகமயமாக்கிவிட்டன;உணவுக்கு செலழித்துக்கொண்டிருந்த சாதாரண மனிதர்களை (செல்போனில்)பேசுவதற்கும்,ஆரோக்கியம் என்ற நம்பவைத்து சுத்தமான குடிநீருக்கும்(மினரல் வாட்டர்) செலவழிக்கும் விதமாக தினசரி வாழ்க்கையை நாசமாக்கியதுதான் பிரதான காரணம் ஆகும்.உலகின் முதல் இளைஞர்ப் பட்டாளம் இருக்கும்  இந்தியாவில் தண்ணீருக்கும் விலை வைக்கத் துவங்கியிருக்கின்றனர்;ஆற்று நீராக இருந்தாலும்,கிணற்றுநீராக இருந்தாலும்,குளத்து நீராக இருந்தாலும் செல்போன் ரீசார்ஜ் செய்தால்தான் வீட்டிற்கு தண்ணீர் தரப்படுமாம்;தனக்குப் பிறகு,எந்த நாடும் உலகவல்லரசாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக ஒழுக்கக் கேட்டை இணையத்தின் மூலமாக உலகமயமாக்கியதும் அடுத்த காரணங்கள் ஆகும்.


அடுத்து வர இருக்கும் இந்த யுத்தக் கிரகங்களின்பார்வையால் நமது பூமியானது சிலபல மாற்றங்களை சந்திக்க இருக்கிறது;கடல் பரப்பு அதிகரித்து,நிலப்பரப்பு சுருங்கப் போகிறது.இதை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக இதன் கோரத்தை குறைக்க நாம் ஒவ்வொருவரும் பின்வரும் ஏதாவது ஒன்றை தினமும் பின்பற்றுவோம்;நம்மை நவக்கிரகங்களின் பாதிப்பிலிருந்தும் உலக அழிவிருந்தும் பாதுகாப்போம்;

தினமும் ஒருமணிநேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்தல்;


தினமும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று வழிபாடு செய்தல் அல்லது ஓம்சிவசிவஓம் ஜபித்தல்;

தினமும் 131 சித்தர்கள் மந்திரங்கள் ஜபித்தல்;

இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் விடாமல் தினமும் பின்பற்றிவந்தால்,சிக்கல்கள் நிறைந்த நமது காலத்தில் நமது தினசரி வாழ்க்கை எந்த ஒருகுறையுமின்றி சீராகும்;அதேசமயத்தில்,நமது சுற்றுப்புறத்தில் அழிவு வராது;நாம் வாழும் பூமியில் வர இருக்கும் அழிவுகள் மனித சஞ்சாரமில்லாத இடங்களுக்கு மாறிவிடும்.

ஓம்சிவசிவஓம்