RightClick

வெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்!!!அந்த பெண்மணி டீன் ஏஜ்ஜை தற்போதுதான் கடந்திருக்கிறார்;ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்;ஆண் தன்மை நிறைந்த பெண்கள் கி.பி.1990 முதல் நிறைய பிறந்துள்ளார்கள்;(அதே போல பெண் தன்மை நிறைந்த ஆண்களும் நிறைய பிறந்துவருகிறார்கள்;)எதையும் துணிச்சலாகச் செய்பவர்;பணிபுரியும் இடத்தில் இவரிடம் காதலைச் சொல்லி பல ஆண்கள் இவரிடம் வசவும்,அடியும் வாங்கியிருக்கின்றனர்;இருப்பினும்,ஒரே ஒரு ஆண் ஏழு ஆண்டுகள் துரத்தி,இந்தப் பெண்மணியின் மனதில் இடம் பிடித்துவிட்டான்;அதன் பிறகு,ஒரே ஆண்டில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு,பிரிந்துவிட்டார்கள்;இவரது காதல்ப் பேச்சுக்களை அவன் செல்லில் பதிந்து வைத்திருக்கிறான்;இந்த சூழலில் அவன்,இவளைத் திருமணம் செய்ய தனது பெற்றோர்கள்,நண்பர்கள்;இந்தப் பெண்மணியின் நண்பர்கள்,உறவினர்கள் என்று ஒரு பெரிய லாபியை உருவாக்கி,அவர்கள் மூலமாக இவளது சம்மதத்தைக் கட்டாயப்படுத்தி வாங்கியிருக்கிறான்;
இந்த சூழ்நிலையில் இந்தப் பெண்ணுக்கு பதவி உயர்வு வந்தது;அதன் மூலமாக தினமும் இணையத்தில் பணிபுரியும் சூழ்நிலை உண்டானது;நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவை வாசித்து வந்திருக்கிறார்;அவர் தொடர்ந்து மூன்று புதன் கிழமைகளுக்கு அலுவலகத்தில் அரைமணி நேரம் அனுமதி கேட்டு,ஸ்ரீகாலபைரவரை முறைப்படி வழிபட்டு வந்திருக்கிறார்;இந்தப் பெண்மணியின் முன்னாள் காதலன் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது,ஒரு திருப்பத்தில் வேகமாகத் திரும்பியிருக்கிறான்;அந்த திருப்பத்தில் சாலை சாலையாக இல்லாமல் குண்டும் குழியுமாக இருந்ததால்,அவனது செல்போன் தவறி கீழே விழுந்திருக்கிறது;அது தெரியாமல்,வீட்டிற்குச் சென்றுவிட்டான்;வெகு நேரமாக செல்போனில் இருந்து அழைப்புகள்/குறுந்தகவல் எதுவும் வராமல் போனதால் செல்போனைத் தேடியிருக்கிறான்;செல்போன் காணவில்லை;
இவன் அந்த இடத்தைக் கடந்ததும்,ஒரு பொக்லைன் வந்திருக்கிறது;அந்த பொக்லைனால் அந்த செல்போன் நசுங்கி தூள்தூளாகிவிட்டது;மறுநாள் அந்தப் பாதை வழியாக வேலைக்கு தனது பெப் ப்ளஸ்ஸில் பயணித்த இந்தப் பெண்மணி அந்த நொறுங்கிய செல்போன் இருக்கும் இடத்தைக் கடக்கும் போது திடீரென வண்டி நின்றுவிட்டது;சுமாராக பதினைந்து நிமிடங்களுக்குப்பிறகு, வண்டி ஸ்டார்ட் ஆனது;வண்டி புறப்படும்போது,அந்த நொறுங்கிய செல்போனின் பின்பகுதியில் இந்த பெண்ணின் ஒட்டப்பட்டிருந்த போட்டோப் பகுதி தெரிந்திருக்கிறது;எப்போதும் நெரிசலாக இருக்கும் அந்த சாலையில் அந்த நேரமாகப் பார்த்து போக்குவரத்து சிறிதும் இல்லை;அதை அந்தப் பெண் எடுத்து,அது தனது போட்டோ தானா? என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார்;உடனே,அந்தப் பையனின் செல்லுக்கு போன் செய்திருக்கிறார்.போன் போகவில்லை; நீங்கள் அழைத்த எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று குரல் வர,சந்தோஷமடைந்தவர்;இன்று மதியத்துக்குள்ளாகவே அந்த பையனின் செல்போன் காணாமல்போனதை விசாரித்து உறுதி செய்திருக்கிறார்.விருப்பமில்லாமல் நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தம் நின்று போனது;


ஸ்ரீகால பைரவருக்கு கோடி நன்றிகள் சொன்ன அந்தப் பெண்மணி இதை எம்மிடம் தகவலாகச் சொல்லியிருக்கிறார்.அவரது அனுமதியோடு இந்த பதிவு வெளியிடப்படுகிறது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அவர் ஒரு கல்லூரியின் பேராசிரியர்.அவரது 32 ஆம் வயதில் கேது சார மஹாதிசை ஆரம்பமாகியிருக்கிறது.அவரது பேச்சு,சிந்தனை அனைத்தும் கோவில்கள்,சித்தர்கள்,வாசியோகம்,நவகண்டயோகம் என்று அவரது தேடல் அதிகமாக அவர் நமது ஆன்மீகக்கடல் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.அவரது குலதெய்வம் எது ? என்பது அவருக்குத் தெரியவில்லை;அதை அவரது அம்மா,அப்பாவிடம் கேட்க அவர்களுக்குத் தெரியவில்லை;கடந்த ஒன்பது மாதங்களாக தனது அப்பாவழி உறவினர்கள் இருக்கும் ஊர்கள்,கிராமங்களுக்குச் சென்று விசாரித்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் இவரை இவரது உறவினர்கள் பார்த்தாலே தலைதெறிக்க ஓட ஆரம்பித்துள்ளார்கள்.இவர் பேசும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்களால் கேட்கும் மனோநிலை உருவாகவில்லை;(இவர் எதிர்காலத்தில் இவரது குலதெய்வப்பூசாரியாகவும்,ஆன்மீகப்பேச்சாளராகவும் பரிணமிக்கப் போகிறார்)நமது பதிவுகளில் ஸ்ரீகாலபைரவரின் ஆற்றலைப் பயன்படுத்துவோமா?வைப் படித்துவிட்டு,தொடர்ந்து நான்கு புதன்கிழமைகளுக்கு ஸ்ரீகாலபைரவரை கர்மசிரத்தையாக வழிபட்டிருக்கிறார்.

மூன்றாவது புதன்கிழமை வழிபட்டு முடித்துவந்த வெள்ளிக்கிழமையன்று இவரது தூரத்து உறவினர் தற்செயலாக அறிமுகமாகியிருக்கிறார்.முதல் அறிமுகத்திலேயே இவரது குலதெய்வம் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டார்;அடுத்த இரண்டாம் நாளன்றே(ஞாயிறு) தனதுகுலதெய்வத்தின் இருப்பிடம் சென்று வழிபட்டிருக்கிறார்.அவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை;நாம் ஒவ்வொருவரும் ஸ்ரீகாலபைரவரை வழிபட்டாலோ,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டாலோ நமது வழிபாட்டிற்கான பலன் முதலில் நமது குலதெய்வத்திற்குச் செல்லும்;அதனால்,நமது குலதெய்வத்தின் சக்தி அதிகரிக்கும்; நமதுகுலதெய்வத்தின் சக்தி அதிகரித்தால்,நமக்குத்தான் முதலில் வரங்களைத் தரும்;அதன்மூலமாக நாம் சகலவிதமான பிரச்னைகளில் இருந்தும் விலகிவிடுவோம்;தினமும் காலபைரவர் வழிபாடு செய்பவர்களுக்கு இந்த உண்மை பலமுறை நிரூபணமாகியிருக்கிறது;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஓம்சிவசிவஓம்

உங்கள் தட்டில் உணவா... விஷமா?உங்கள் சர்க்கரையில் சத்து இருக்கிறதா..?
ஆரோக்கியம் பேசும் 'அலர்ட்' தொடர் - 12
டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்
அவேர்னஸ் 
ர்க்கரை, பல தாவரங்களில் உண்டென்று கூறினேன். அவற்றில் கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை. பனை, தென்னை மரங்களிலிருந்து இப்போதும் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. என்றாலும், உலக சர்க்கரை வர்த்தகத்தில் பெரும்பகுதியாக இருப்பது கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரைதான். ஆகவே, இதை முதலில் தெரிந்துகொள்வோம்.
'இதைத் தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகப்போகிறது?'
இன்றைக்கு, சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் உலக அளவில் நாம் முதலிடம் பிடித்திருப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளத்தான்! ஆம்... சத்துமிக்க பொருளாக விளையும் கரும்பு, 'வெள்ளைச் சர்க்கரை' என்கிற பெயரில் எப்படி நஞ்சாக மாற்றப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளத்தான்!
வயல்களில் விளையும் கரும்பு, சர்க்கரை ஆலைகளுக்குள் போய், சர்க்கரையாக மாறுவதற்கு முன் பல்வேறு கட்டங்களைக் கடக்க வேண்டும். முதலில், கரும்பைத் துண்டுகளாக்கி, அதன் சாறு பிழியப்படுகிறது. இந்தக் கரும்புச் சாற்றில் சுண்ணாம்பு சேர்க்கப்பட்டு கொதிக்க வைக்கப்படுகிறது. பிறகு, இந்தக் கலவை ஆற வைக்கப்படுகிறது. இதில் வரும் சர்க்கரைப் பாளங் களை, திடமான கரும்பு சாற்றில் கலக்கிறார்கள். இதற்கு, 'அஃபினேஷன்' (Affination) என்று பெயர். கரும்புச் சாற்றின் இயல்பான நிறம் பழுப்பு. இந்த நிறம், இத்தகைய செயல்பாடு மூலமாக சற்று மாறுகிறது.
அடுத்த கட்டமாக, கார்பனேஷன் அல்லது ஃபாஸ்படேஷன் என்ற முறைகளில் சுத்தப்படுத்தப்படுகிறது. கார்பனேஷன் முறையில் கால்சியம் ஹைராக்ஸைடு + கார்பன் டை ஆக்ஸைடு கலவை பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு முறையில் கால்சியம் ஹைட்ராக்ஸைடு + ஃபாஸ்பாரிக் அமிலம் கலவை பயன்படுகிறது. இதன் மூலம் மேலும் சில பொருட்களும் சர்க்கரை சாற்றிலிருந்து நீக்கப்படுகின்றன.
அடுத்த கட்டமாக, 'ஆக்டிவேட்டட் கார்பன்’ என்கிற எலும்புச் சாம்பல் படுகையில் கரும்புச் சாறு செலுத்தப்படுகிறது. இதுவே சர்க்கரையின் பரிசுத்த வெள்ளை நிறத்துக்குக் காரணம் (தற்போது இதற்கு மாற்றாக 'அயன் எக்சேஞ்ச் ரெசின்’ என்கிற படுகையை சில இடங்களில் உபயோகிக்கிறார்கள்). வெள்ளையாக்கப்பட்ட இந்தச் சாறு, மறுபடியும் கொதிக்க வைக்கப்படுகிறது. அதன் பின்னர், அந்தக் கலவை ஆறியபின், அதன் மேல் சிறிது சர்க்கரைத் தூளைத் தூவுகிறார்கள். முடிவு - வெண்மையாக ஜொலிக்கும் வைரத்துகள்கள் போன்ற 'சீனி’ குவியல் கிடைக்கிறது.
இதில், பிழிந்ததுபோக மீதம் இருக்கும் சக்கைக் கலவை 'மொலாஸஸ்' (Molasses)  என்கிற பெயரில் ஒதுக்கப்படுகிறது. இக்கலவையிலும் 30% சுக்ரோஸ், 25% குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ், சிறிது இரும்புத்தாதுக்கள் மிஞ்சி இருக்கின்றன. இக்கலவை பிரவுன் சர்க்கரை செய் வதற்கும், மதுபானம் தயாரிப்பதற்கும், மாற்று எரிபொருள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறது ('பிரவுன் சுகர்' என்கிற பெயரில் கிடைக்கும் போதைப்பொருளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை).
சர்க்கரை ஆலையில் நடைபெறும் இத்தனை வேதியல் முறைகளையும் என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள் தெரியுமா? 'சுத்திகரிப்பு முறைகள்' (Refining Process/Purification) அதாவது, கரும்புச் சாற்றில் கலந்துள்ள மாசுகளையும், அசுத்தங்களையும் (Impurities)  அகற்றுகிறார்களாம்! உண்மையில் அவர்கள் அகற்றுவது முழுக்க முழுக்க நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்களைத்தான்! ஆம்... சுத்திகரிக்கும் முன் கரும்புச் சாற்றில் உள்ள சத்துப் பொருட்கள் என்னென்ன என்பது தெரிந்ததால், நீங்கள் அதிர்ந்துதான் போவீர்கள் (பார்க்க பெட்டிச் செய்தி)!
கரும்புச்சாறு மொத்தம் மூன்று முறை கொதிக்க வைக்கப்படுகிறது. இதில் ஆவியாகிப் போகும் சத்துக்கள் பல. அதன்பின் சுண்ணாம்புக் கலவை, கால்சியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு, சல்ஃபர் டை ஆக்ஸைடு, ஃபாஸ்பாரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பல்வேறு கெடுதல்களுக்குக் காரணமாக அமைவதாகப் பலர் உறுதியாக நம்புகின்றனர்.
கரும்புச் சாற்றிலிருக்கும் அத்தனை சத்துப் பொருட்களும், உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், கனிமங்களும், நுண் ஊட்டப்பொருட்களும் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டு, 260 கலோரிகள் மட்டுமே கொடுக்கும் வெறும் இனிப்பு மிட்டாயாகத்தான் (Empty calories) சர்க்கரை நம்மிடம் வந்து சேர்கிறது.
இங்கே ஒரு விஷயத்தையும் மறக்காமல் சொல்லியாக வேண்டும். சர்க்கரையின் வெண்மை நிறத்துக்குக் காரணமாக அமைவது - மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பல்தான். ''நீங்கள் எல்லோரும் இதுவரை, 'சர்க்கரை சைவ உணவு' என்று நினைத்திருந்தால், உங்கள் கருத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்!'
இந்த வெள்ளைச் சீனியைவிட, மொலாஸஸ் மூலம் தயாரிக்கும் 'பிரவுன் சீனி' சற்று உயர்ந்தது என்று பலரும் முதலில் நினைத்தனர். ஆனால், அது வெறும் கற்பனைதான்.
நட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றில் காபி கப்புடன் வெள்ளைச் சீனி, பிரவுன் சீனி, சுகர் ஃபிரீ பொட்டலங்கள் வைக்கப்படும் - உண்மையில் வெள்ளைச் சீனிக்கும் பிரவுன் சீனிக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. இரண்டுமே கெடுதிதான் (சுகர் ஃபிரீயின் லட்சணத்தைப் பிறகு சொல்கிறேன்).
கரும்புச் சாறுக் கலவையைக் கொதிநிலையில் வைத்து, வேதிப் பொருட்கள் எதுவும் சேர்ப்பதற்கு முன் கட்டியாக எடுக்கப்படும் பொருள்தான் கருப்பட்டி. இதையும் 'பிரவுன் சர்க்கரை' என்று சிலர் அழைப்பர். இந்த சர்க்கரை, உண்மையில் உடலுக்கு மிகவும் நல்லது. இதைப் பற்றியும் பின்னர் விளக்குகிறேன்.
அரிசியோடு சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அரிசியையும் இப்படித்தானே கெடுத்தோம்? சத்துக்கள் மிகுதியான தவிட்டுப் பகுதியை அறவே நீக்கிவிட்டு, மேலும் மேலும் தீட்டி வெறும் இனிப்புப் பண்டமாக மாற்றினோம் அல்லவா - அதையேதான் சர்க்கரையிலும் செய்திருக்கிறோம். கரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்தே இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாக மாற்றிவிட்டோம். விளைவு? வெள்ளை அரிசி எப்படிச் சர்க்கரை நோய்க்கு மூலகாரணமாக அமைகிறதோ, அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் வெள்ளை சர்க்கரையும் அதே வேலையைத்தான் செய்கிறது.
முன்பெல்லாம் உலகளவில் சராசரி மனிதன் ஒரு வருடத்தில் 7 - 10 கிலோ சர்க்கரை மட்டுமே உபயோகித்தான். தற்போது சராசரி ஆண்டு உபயோகம் 25 - 30 கிலோ வரை உயர்ந்துவிட்டது. உலகளவில் சர்க்கரை நோய்த் தாக்கம் தற்போது அதிகமாகி வருவதற்கும் இதற்கும் தொடர்பு உண்டென்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால்... 'அரிசிக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடித் தொடர்பு இல்லை' என்று எப்படி இதுவரை டாக்டர்கள் சொல்லி வந்தார்களோ, அதைப்போலவே... 'சீனிக்கும் சர்க்கரை நோய்க்கும் தொடர்பில்லை' என்று பெரும்பாலான டாக்டர்கள் இப்போதும் கூறிவருவதுதான் வேடிக்கை?!கிறிஸ்தவ ஆங்கிலேயன் நமது இனிப்புப்பொருளான வெல்லத்தின் மகிமையை உணர்ந்து,அந்த இடத்துக்கு நிரந்தரமான நோயைத் தரும் சீனியைக் கொண்டு வந்த புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது? அல்லது நமது நாட்டு மக்களின் வெள்ளைத் தோல் மயக்கத்தை எப்போது நீக்குவது?

வெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே!!!நமது ஆன்மீக  குரு திரு.சகஸ்ரவடுகர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இதுவரை சுமாராக ஆயிரம் ஆத்மாக்களின் கர்மவினைகள் தீர ஆன்மீக வழிகாட்டுதல் செய்து அனைவருக்கும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து  தொடர்ந்துஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும்  என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும்? என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆகும்)


இந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)இதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.

27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 வரை பவுர்ணமியும் புதன் கிழமையும் சேர்ந்து வருவதால் இந்த புதன் கிழமை மிகவும் சக்தி வாய்ந்த பைரவ புதனாக இருக்கப் போகிறது;பிரார்த்தனை செய்து உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்;கடன்களை அடைத்துக் கொள்ளுங்கள்;நீண்டகால (நியாயமான) லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் (அந்தந்த நாடுகளில் இதே நேரத்தைப் பின்பற்றுங்கள்;அதுதான் சரி)
                                                            கடந்த ஆறு புதன்கிழமைகளில் ஏதாவது ஒரே ஒரு புதன் கிழமையன்று மட்டும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்குச் சென்று முறைப்படி வழிபட்டவர்களும்;ஒன்றுக்கும் மேற்பட்ட புதன்கிழமைகள் வழிபட்டவர்களுக்கும் ஏராளமான நற்பலன்கள் கிடைத்துவருகின்றன;தியான தீட்சைகளை பலவிதமான ஆன்மீக பயிற்சி அமைப்புகள் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றன;அவைகளில் ஏதாவது ஒன்றில் தீட்சை எடுத்தவர்கள்,இந்த புதன்கிழமைகளில் ஏதாவது ஒரு புதன் கிழமையன்று ஸ்ரீகால பைரவரை வழிபடச் சென்றிருக்கின்றனர்;அருள் வாக்கு சொல்பவர்கள்,தனது முற்பிறவிகளால் தவ ஆற்றலை இயற்கையாகவே பெற்றவர்கள் என பலரும் ஸ்ரீகாலபைரவரை வழிபடச் சென்ற போது,பலருக்கு பல்வேறு விதங்களில் ஸ்ரீகால பைரவர் காட்சியளித்திருக்கிறார்;பலருக்கு அவர்களுடைய கடன்கள் தீர சந்தர்ப்பம் அமைந்துவிட்டது;                                              யாரெல்லாம் அடுத்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்களோ அவர்களுக்கு அந்த பிரார்த்தனை உடனே நிறைவேறியிருக்கிறது.உங்களில் யாருக்கெல்லாம் இது போன்ற அனுபவங்கள் கிடைத்தனவோ அவைகளை எமது மின் அஞ்சல் முகவரிக்கு aanmigakkadal@gmail.com அனுப்பினால் அதற்கான விளக்கங்கள் பதிலாக அனுப்பி வைக்கப்படும்;                       

மாறுதலில் மறையும் மாண்பு: உரத்த சிந்தனை, ஆண்டாள் பிரியதர்ஷினி(ஆன்மீகக்கடலின் தலைப்பு:உலகமயமாக்கலா? இந்தியத் தன்மையை சிதைத்து இந்தியர்களை நோயாளிகளாக்கும் அமெரிக்கமயமாக்கலா?)


எல்லாமே வித்தியாசமானதாக இருக்கிறது இன்றைய தலைமுறைக்கு. பேனாவால் எழுதுவது, கடிதம் அனுப்புவது, வானொலியின் முதல் அலைவரிசை கேட்பது, தொலைக்காட்சியில் தகவல் சார்ந்த வேளாண் நிகழ்ச்சிகள் பார்ப்பது, பாரம்பரியமான சோறு, சாம்பார், குழம்பு, ரசம் சாப்பிடுவது, கை கூப்பி வணக்கம் சொல்வது, கையால் உண்பது, கிராமியக் கலைநிகழ்ச்சிகள் பார்ப்பது, மனதை அமைதிப்படுத்தும் இசை கேட்பது, வீட்டிலுள்ள தொலைபேசியில் பேசுவது, தொலைக்காட்சியோ, கணினியோ இல்லாமல் அரை மணிநேரமாவது உயிர் வாழ்வது என, எல்லாமே வித்தியாசமானதாக இருக்கிறது. வித்தியாசமானது என்பது, சற்றே நாகரிகமான வார்த்தைப் பிரயோகம். பைத்தியகாரத்தனமாக அல்லது முட்டாள்தனமாக என்பது தான் சரியான வார்த்தை வெளிப்பாடு.
இணையதளத்தில் தட்டச்சு செய்தே பழகிய நாம், குறுஞ்செய்தி அனுப்பிப் பழகி, மின்கடிதம் அனுப்பிப் பழகி, முகநூல் அறிமுகத்தோடு, முகம் தெரியாத யாரோ ஒரு அன்னியரோடு நட்பு பழகி, மின் நூல்கள் படிக்கப் பழகி, இணைய உலகிலேயே இருப்பதால், பேனா உலகில் இணைய மறுக்கின்றனர் இவர்கள். கடிதம் எழுதும் போது இருக்கும் ஆர்வம், கடிதத்தைப் பிரிக்கும் போது இருக்கும் பரபரப்பு, கடிதத்துக்காகக் காத்திருக்கும் படபடப்பு, பழைய கடிதங்கள் தரும் சுவாரஸ்யம், புடவைக்குள் கடிதத்தை பொதிந்து வைப்பது, அதன் வாசனையை நுகர்வது, அதை மார்போடு அணைத்து நெக்குறுவது... என, எதுவுமே அறிமுகமாகாத ஒரு தலைமுறை உருவாகி விட்டது. பண்பலை வரிசைப் பாடல் வரிசையும், விரைவு வண்டி மாதிரி தட தட அறிவிப்புகளும், அர்த்தமே இல்லாத டெடிகேஷனும், காதலை,நேசத்தை, அந்தரங்கத்தைப் பறைசாற்றுவதும் தான், இவர்களுக்கு பழக்கமானது. அறிவார்ந்த நிகழ்ச்சிகள் அவர்களுக்கு ருசிக்காது; ரசிக்காது. முப்பது வினாடிக்கு மேல் எதையும் கேட்கவோ, பார்க்கவோ, படிக்கவோ கொஞ்சமும் பொறுமை அவர்களுக்குக் கிடையாது, அவர்களுடையது முப்பது வினாடி வாழ்க்கை. வேட்டி அணிந்து வரும் இளைஞர்கள் என்பது, கனவிலும் காண முடியாத காட்சி. பெண்களை ஜீன்ஸ், டீ - ஷர்ட், பேன்ட், சுடிதார், சல்வார், ஸ்கர்ட் என, பலவிதமாகப் பார்க்க நேருகிறது. ஆனால், புடவை எப்போதாவது கட்டப்படுகிறது. தாவணி திரைக் கதாநாயகிகள் தவிர, கிராமத்துப் பெண் கூட அணியாத உடையாகி விட்டது. நமது தட்பவெட்பத்துக்கும், சீதோஷ்ணத்துக்கும் பொருத்தமே இல்லாத எருமை மாட்டுதோலை விடக் கடினமான, ஜீன்ஸ் கலாசாரத்துக்கு நம்மையே காவு கொடுத்து விட்டோம்.


உணவும் கூட மாறி விட்டது. பாரம்பரிய உணவு வகைகள், எந்தையும் தாயும் மகிழ்ந்து, குலாவ பகிர்ந்துண்ட உணவுகள், பண்டிகைக் கால பட்சணங்கள், பிரசவ காலக் கை வைத்திய லேகியங்கள் எதுவுமே காணோம்; எங்கேயும் காணோம்.

நம் மண்ணிலேயே விளையும் பரம்பரை உணவுகள், வள்ளுவனையும், கம்பனையும், பாரதியையும் உருவாக்கிய தமிழ்மண் சார்ந்த உணவுகள் எதுவுமே தெரியாது, இன்றைய இளைய சமூகத்துக்கு. நெல் மரத்தில் காய்க்கிறது, கத்தரிக்காய் கொடியில் முளைக்கிறது, பால் - பாக்கெட்டில் உருவாகிறது என்று தான், சரியாக, துல்லியமாக, தப்பாகத் தெரியும். பதநீர், இளநீர், நுங்கு இதைப் பார்த்திருப்பரா என்பதும் கேள்விக்குறி தான். காலையில் பிரெட், மதியம் பீட்சா, பர்கர், இரவு நூடுல்ஸ் என்று, மேலை நாட்டு உணவு வகைகளே, நம் உணவு மேஜைகளில் குடியிருக்கிறது. கூடவே, அருந்துவதற்கு கோக், பெப்சி போன்ற வஸ்துகள். நழுவிக் கீழே விழுந்து விடாமல், பீட்சாவைப் பிய்ப்பது எப்படி என, வகுப்புகள் வைத்துத் தான் சொல்லித் தரவேண்டும். மூக்குச் சளியில் ஜவ்வு மாதிரி பிய்த்துக் கொண்டு, நூலாய்ப் போகும் பீட்சா; சாணி வரட்டி மாதிரி பர்கர்; மூத்திரத்தை குடிப்பது மாதிரி, கோக். எல்லா உணவுப் பானமும், நம் மண்ணுக்குச் சம்பந்தமே இல்லாதவை. உடல்நலனுக்கு ஒவ்வாதவை. பெரிதும் கலப்படத்துக்கு வழிவகுப்பவை என்பதை, கொஞ்சமாவது நின்று நிதானமாக, யோசனை செய்வரா, நம் இளைய தலைமுறையினர்?

பல்லாங்குழி, கல்லாங்கால், பாண்டி, கண்ணாமூச்சி, கபடி என்றால் என்னவென்றே இவர்கள் தெரிந்து கொள்ள மாட்டார்கள். கணினியில், "விர்ச்சுவல் ரியாலிட்டி' விளையாட்டும், வீடியோ சென்டரில் விளையாடுவதுமான, சோம்பேறி வாழ்க்கை வாய்த்திருப்பவர்களுக்கு, வியர்க்க, விறு விறுக்க ஓடியாடி விளையாடுவதன் சுகம் புரியுமா? அந்த வியர்வை உப்பின் இனிமை புரியுமா? அந்த களைப்பின் உற்சாகம் புரியுமா? முன்பு, நம் பெண்கள் பூசிக் குளித்த மஞ்சள் தான், இப்போது கிருமிநாசினி என்ற பெயரில், மேலைநாட்டு அலங்காரப் பூச்சுகளில் கலந்து வருகிறது. நம் பாரம்பரியம் எனில், முகம் சுளிப்பதும், மேலை நாட்டு முலாம் பூசினால், முகம் மலர்வதுமான, முகமூடி வேஷம் நம்மிடையே அதிகம். யோகா - மதம் சார்ந்தது என, நாம் வீண் விவாதம் செய்து கொண்டு சீரழிந்திருக்க, அது உடல் நலமும், உற்சாகமும் சார்ந்தது என, மேல்நாட்டவர் கற்று, நமக்கே கற்றுத் தரும் போது, வெட்கம் சிறிதும் இன்றி, வாரி அணைத்துக் கொள்கிறோம். நல்லனவெல்லாம் அங்கீகரிக்கலாம் தவறே இல்லை. ஆனால், நம்மைக் காவு கொடுத்தே, அனைத்தையும் ஏற்க வேண்டும் என்பது தவறில்லையா? நம் கறுப்பு நிறம் தான், நம் மண்ணுக்கான சிறப்பு என்பதை மறந்து போய், மூளைச் சலவை செய்யப்பட்டு, ஒரே நாளில் வெளுப்பாக்கும் கிரீம் பூசினால் தான், கல்யாண மார்க்கெட்டில் விலைபோக முடியும் என்ற நிர்பந்தத்துக்கு, கிராமத்துப் பெண்களும் உடன்படுவது நியாயமா?

போலியான மாயவலையே, இவர்களின் வாழ்க்கையாகி விட்டது. உடலை, உடல்நலத்தை, மனசை, வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்களை, பாரம்பரியத்தை, கலாசாரத்தை, வேர்களை, விழுதுகள் குணத்தை, முன்னோடிகளை, முன்னோர்களை, வருங்கால சந்ததியினரை, நம் பரம்பரையைப் பலிகடாவாக்கும் பழக்க வழக்கங்களை மேற்கொள்பவர்களே முன்னேறியவர்கள், முற்போக்கானவர்கள், நாகரிகமானவர்கள், பண்பட்டவர்கள். மற்றவர்களெல்லாம் பிற்போக்கானவர்கள், நாகரிகமற்றவர்கள், பண்பாடு தெரியாதவர்கள் என்பதான, நம் பொதுப்புத்தி சமூக மனோபாவம், மேம்போக்கான பார்வை எல்லாமே மாறினால் தான், வேர்களோடு இருப்பதும், வேர்கள் மண்ணோடு இருப்பதும் இகழத்தக்கது அல்ல என்பது புரியும். நிலத்தை இழப்பவர்கள் மட்டுமா அகதிகள்? நம் அடையாளம், வேர், முகம், முகவரி, உணவு, உடை, கலாசாரம், மொழி, இலக்கியம் எல்லாமே இழப்பவர்களுக்கு, வேறென்ன பெயர் இருக்கக்கூடும்? அப்படிப் பார்த்தால், நம்மை எப்படி அழைப்பது? சொந்த தேசத்து அகதிகள் நாம்...

இ-மெயில்: aandalpriyadarshini@yahoo.co.in

ஆண்டாள் பிரியதர்ஷினி, சமூக சிந்தனையாளர்                                                                                                                                    ஆன்மீகக்கடலின் கருத்து: நம்மை ஏன் அமெரிக்கா இன்னும் வல்லரசாக ஏற்றுக்கொள்ளவில்லை தெரியுமா? அவர்களைப் போல நாம் இன்னும் டாய்லெட் பேப்பரைப் பயன்படுத்த ஆரம்பிக்க வில்லை;அதனால் தான்!!! அதைத் தவிர,அமெரிக்கர்கள் செய்யும்,செய்துவரும் அனைத்தையும் செய்யத் துவங்கிவிட்டோம்.(எப்போதுதான் இந்த அடிமைப்புத்தி நம்மவர்களுக்குப் போகுமோ?)

திருவதிகை வீரட்டானத்தில் சோடேச வலம்!!!


பண்ருட்டி:பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வரும் 26ம் தேதி பவுர்ணமியையொட்டி 16 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.பண்ருட்டி திருவதிகையில் 2000ம் ஆண்டு கால பழமை வாய்ந்த அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த பங்குனி மாதம் பவுர்ணமியன்று நான்கு மாட வீதிகளை பக்தர்கள் 16 முறை வலம் வந்து வணங்குதல் துவங்கியது. இதனையடுத்து 2ம் ஆண்டு பங்குனி மாத பவுர்ணமி வலம் வருதல் துவக்கம் வரும் 26ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி அன்று மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்து, மூலவர் நாகபரணத்திலும், அம்பாள் வெள்ளி கவசத்திலும் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர். இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது.நன்றி:தினமலர் 24.3.13

காகபுஜண்டர் ஒரு சித்த சரிதம்!!!Temple images
பக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர். அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த அன்னப்பறவைகளும் ரசித்துப் பார்த்து, அவையும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடின. சிவனும் பார்வதியும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த வேளையில், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலை ஒன்று காகமாக வடிவெடுத்தது. அந்த காகம் அங்கிருந்த அன்னப்பறவைகளின் அழகில் லயித்தது. ஏதாவது, ஒரு அன்னத்துடன் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணியது, நினைத்தது போலவே ஒரு அன்னத்தை அழைக்க, அதுவும் காகத்துடன் உறவு கொண்டது. அந்த அன்னம் அப்போதே கர்ப்பமடைந்து 21 முட்டைகளை இட்டது. அதில் இருந்து 20 அன்னங்களும், ஒரு காகமும் உருவாயின. அந்த காகமே மனித ரூபம் பெற்று காக புஜண்டர் என்னும் சித்தராக மாறியது. நினைத்த நேரத்தில் காகமாக மாறிவிடும் சக்தியும் இந்த சித்தருக்கு இருந்தது.வாரிஷி என்னும் முனிவர் மீது, கணவனை இழந்த பெண் ஒருத்தி காதல் கொண்டாள்.முனிவர் அவளைச் சபித்து விட்டார். கணவனை இழந்த நிலையில் இன்னொருவன் மீது நாட்டம் கொண்டதால் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறப்பதாக! என சொல்லி விட்டார். இதன்படி அந்தப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்த குழந்தை சந்திர வம்சத்தை சேர்ந்தது. அதுவே காகபுஜண்டர் என்னும் சித்தராக மாறியது என்றும் புஜண்டரின் பிறப்பு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
 அவர் சென்ற உலகங் களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சதுரகிரி மலைக்குச் சென்ற காகபுஜண்டர், போகரின் சீடர்கள் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். சூரசேனன் என்ற சீடன், காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு விஷக்கனியை தவறுதலாக சாப்பிட்டு இறந்தான். அவனை, நாக தாலி என்ற மூலிகையைக் கொண்டு உயிர்பெறச் செய்தார். இப்படி பல அற்புதங்களைச் செய்தார்.உலகம் பலமுறை அழிந்தபோது அதை உச்சியில் இருந்து பார்த்தவர் காகபுஜண்டர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் விதத்தையும், தட்பவெப்ப நிலை மாறுதல் களையும் பற்றி அவர் சில நூல்களில் சொல்லியிருக்கிறார். பங்குனி மாதம் வரும் ஆயில்யம் நட்சத்திரத்தில் காகபுஜண்டர் பிறந்தார்;சித்தர்களில் அழிவில்லாத சித்தர் இவரே!இவரது ஜீவசமாதி பூமியில் இல்லை என்று ஒரு கருத்து உண்டு;கொல்லிமலையில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.மற்ற இடங்களில் இவரது ஜீவசமாதி இல்லை;என்பது நமது ஆன்மீக குருவின் ஆராய்ச்சி முடிவு ஆகும்.
தியானச் செய்யுள்:
காலச்சக்கரம் மேல்
ஞானச்சக்கரம் ஏந்திய
மகா ஞானியே
யுகங்களைக் கணங்களாக்கி
கவனித்திடும் காக்கை ஸ்வாமியே
மும்மூர்த்திகள் போற்றும்- புஜண்டரே உமது
கால் பற்றிய எம்மைக் காப்பாய்
காக புஜண்ட சுவாமியே

தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்!!!

ஒவ்வொருவரும்  தினமும் ஏழுமணி நேரம் தூங்க வேண்டும்;இதை விடவும் குறைவான மணிநேரம் தூங்கினால் மனமும்,உடலும் விரைவில் களைத்துப்போகும்;அதைவிடவும் அதிகமான நேரம் தூங்கினால்,சோம்பேறித்தனத்தை நாம் வரவேற்கிறோம் என்று பொருள்.(நோயாளிகளுக்கும்,குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் இது பொருந்தாது)/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அடுத்தவரை மனம் நோக வைத்தோ,அழ வைத்தோ,நமது அறிவாற்றலால் ஏமாற்றியோ அல்லது அதிகாரத்தைக் கொண்டு மிரட்டியோ பணம் சம்பாதிக்கக் கூடாது;அப்படி சம்பாதிக்கும் பணம் பெருமளவு சேர்ந்ததும்,பதினைந்து ஆண்டுகளுக்குள் மொத்தமாக காணாமல் போய்விடும்;நாம் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டோம் என்று முதுமையை வரவேற்கும்போது,இவ்வாறு சம்பாதித்தவர்களை வறுமை இறுக அணைத்துக் கொள்ளும்.
சட்டத்துக்குப்புறம்பாகவோ,தர்மத்துக்குப் புறம்பாகவோ பணம் குவித்தாலும்,அத்துடன் தீராத கர்ம நோயும் வந்துவிடும்;இப்படிப்பட்டவர்களுக்கு மிக நெருங்கிய நட்புவட்டாரத்தில் இவர்களின் கர்மநோயை குணப்படுத்தும் மருத்துவர்,முலிகை மருத்துவம் அல்லது மருந்துகள் இருக்கும்;ஆனால்,அதை ஒருபோதும் நாம் அறிய முடியாது;அல்லது நம்பமாட்டோம்;

ராகு மஹாதிசையில் அபூர்வமான ராகு மஹாதிசையும்,தர்மகர்மாதிபதி திசையும்,யோகம் தரும் கிரகத்தின் திசையும் ஒருவரது பிறந்த ஜாதகப்படி அல்லது அவரது மகன்/ள் பிறந்த ஜாதகப்படியோ வந்தால் அவர்கள் குறுகிய காலத்தில் பெரும் செல்வச் செழிப்பை அடைந்துவிடுவார்கள்.அப்படிப்பட்ட செல்வச் செழிப்பு மட்டுமே நிலைக்கும்.யோகம் தரும் சனி மஹாதிசை வந்தால்,நிரந்தரமான சொத்துக்களை வாங்க வைக்கும்;அந்த சொத்துக்களை மூன்று தலைமுறைகள் வரை அடமானம் கூட வைக்கமுடியாது;இதையெல்லாம் அனுபவம் மிக்க ஜோதிடர்கள் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நமது குழந்தையின் ஏழு வயதுக்குள் அடிக்கடி கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;சனி,ஞாயிறு,அரசு விடுமுறைகள்,உள்ளூர் விடுமுறைகளில் தொடர்ந்து நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்;ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளின் வரலாற்றையும்,வழிபடும் முறையையும் சொல்லித் தர வேண்டும்;இப்படிச் சொல்வதை எப்படி ஏழுக்குட்பட்ட வயதுடைய குழந்தை புரிந்துகொள்ளும்? நமது புரிந்துகொள்ளும் திறனை விடவும் அதற்கு புரிந்து கொள்ளும் திறன் அதிகம்;(அது புரிந்து கொண்டதை நம்மால் அதன் டீன் ஏஜில் தான் அறிந்து கொள்ளவே முடியும்)முடிந்தவரையிலும் எளிய தமிழில் சொல்லி விளக்கினால் போதும்;அது கேட்கும் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொல்லிப் பழக வேண்டும்;அது கேட்கும் கேள்விகள் நமது ஆன்மீக அறிவை விசாலமாக்கிவிடும்!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நம்மில் பலர் தொடர்ந்து கோவில்,சித்தர்வழிபாடு,தியானம்,அன்னதானம் என்றெல்லாம் தொடர்ந்து ஏதாவது மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ பின்பற்றிக்கொண்டே இருப்பார்கள்;ஆனால்,அவர்களின் வாழ்வில் ஒருசிறு முன்னேற்றமும் இராது;இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களின் பிறந்த ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கும்;அல்லது முன்னோர்களின் சாபம் இருக்கும்;அதைக் கண்டறிந்து அதற்குரிய பூஜைகளையும்,பரிகாரங்களையும் செய்யாதவரையில் ஒரு இஞ்ச் கூட வாழ்வில் உயர முடியாது;இப்படிப்பட்டவர்கள் ஒரே ஒரு சித்தர் அல்லது ஒரே ஒரு தெய்வ வழிபாட்டில் அளவுகடந்த வெறியுடன்/ஈடுபாட்டை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தபோது உணர முடிந்தது;

அல்லது

தனது வாழ்க்கைத் துணையைத் தவிர,வேறு ஒரு துணையோடும் வாழ்ந்து வருவார்கள்:அல்லது பணம் கொடுத்து சுகம் வாங்கும் சுபாவம் இவர்களுக்கு இருக்கும்;இப்படிப்பட்டவர்களுக்கு இறைவழிபாட்டுக்கான பலன்கள் வந்து சேரும்;ஆனால்,நிலைக்காது;ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் உறுதியாக இல்லாத வரை இந்த துரதிஷ்டம் தொடரத் தான் செய்யும்.. . . .. ###############################################################

நாம் செய்யும் பரிகாரபூஜைகளைப் பற்றியும்,செய்ய இருக்கும் தானங்களைப்பற்றியும் எவரிடமும்,எப்போதும் தம்பட்டம் அடிக்கக்கூடாது;இவைகளைச் செய்தப்பின்னரும்,வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தால் தான் முழுப்பலன்களும் நம்மை வந்து சேரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@தூங்கி எழுந்திருக்கும் வேளையில் கண்விழித்த உடனே நமது வலது கையை நோக்க வேண்டும்;அவ்வாறு நோக்கும்போது ஏதாவது ஒரு இறைவனை நினைக்க வேண்டும்;எல்லோருக்கும் ஏற்ற இறைவன் அருணாச்சலேஸ்வரரே!
 ஓம் அருணாச்சலாய நமஹ;ஓம் அஷ்டபைரவப் பெருமான்களே நமஹ என்று மூன்று முறை நினைத்துவிட்டு,படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.படுக்கையை விட்டு எழுந்ததும்,நமது வீட்டின் சுவற்றை உற்று நோக்க வேண்டும்;அப்படி உற்று நோக்குமிடத்தில் ஓடும் குதிரைகள் படத்தை ஒட்டியிருக்க வேண்டும்;குறிப்பாக கும்பலாக ஓடும் வெள்ளைக்குதிரைகள் படம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்;இப்படி ஒருநிமிடம் வரை உற்று நோக்கிக் கொண்டே வந்தால்,நம்மைப் போல சுறுசுறுப்பாக வேறு யாரும் அன்று தினசரிக்கடமைகளைச் செய்ய முடியாது;

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
பல் துலக்கிட இன்று பலவிதமான பற்பசைகள் சந்தையில் கிடைக்கின்றன;அவை அனைத்தும் நமக்குத் தொண்டைப்புற்றுநோயை உருவாக்குபவை;சில இனிப்பு பற்பசைகளும் கிடைக்கின்றன;அவை நமது பற்களின் வலிமையை வெகுசீக்கிரமே நிர்மூலமாக்குபவை;எனவே,பற்பசைகளை ஒதுக்கிவிட்டு பற்பொடிகளைப் பயன்படுத்துவதே நமது நீண்டகால ஆரோக்கியத்துக்கு உகந்தது;கிராமங்களில் இருப்பவர்கள் அடுப்புக்கரி(இருக்குமா?) அல்லது வேப்பங்குச்சி,ஆலங்குச்சி,அரசங்குச்சியைப் பயன்படுத்துவது நல்லது;உள்ளூர் தயாரிப்புகள் நமது பற்களை பத்திரமாக பாதுகாப்பவை;நாமோ அதிகவிலையுள்ளவையே ஆரோக்கியம் தரும் என்ற மேல்நாட்டு மாயையில் இருக்கிறோம்;டிவி விளம்பரங்களும் நம்மை அடிமுட்டாளாக்குகின்றன;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பிறந்தது முதல் இறக்கும் நாள் வரையிலும் இடுப்பில் அரைஞாண் கயிறு ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் கட்டியிருக்க வேண்டும்;இது குடலிறக்க நோயை வராமல் தடுக்கக் கூடியது;அரைஞாண் கயிறு கட்டாமல் இருந்து,ஆவேசமாக தாம்பத்தியம் செய்வதால் தான் குடலிறக்க நோய் உண்டாகிறது;எத்தனை முறை இந்த அரைஞாண் கயிறு அறுந்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்குள் புதிதாகக் கட்டுவது அவசியம்;ஒருபோதும் இது இல்லாமல் இருக்கக் கூடாது;அரைஞாண்  கயிறு சிகப்பு நிறத்தில் இருப்பது மிகவும் அவசியம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இதே போலத்தான் ருத்ராட்சமும்! பள்ளி/கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவியர் மட்டும் ஆறுமுக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வது அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்;மற்ற அனைவரும் ஐந்துமுக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது அவசியம்;கழுத்தில் கட்டப்படும் ருத்ராட்சம் நமது(ஆண்கள்) தொண்டைக்குழியில் இருக்குமாறு சிகப்புக் கயிற்றில் மட்டும் கட்ட வேண்டும்;இறக்கும் நாள் வரையிலும் ஒருபோதும் இதைக் கழற்றிவிடக் கூடாது;கயிறு நைந்து போனாலோ,அறுந்து போனாலோ அதிகபட்சமாக ஏழு நாட்களுக்குள் புதுக்கயிற்றில் கட்டிவிட வேண்டும்;நீங்கள் ருத்ராட்சம் கட்டினால் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைக் கேலி செய்யத்தான் செய்வார்கள்;பிறகு,அட்வைஸ் செய்வார்கள்;பல பிறவிகளாக சிவவழிபாடு செய்தால் மட்டுமே இப்பிறவியில் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்;பெண்களும் அணியலாம்;மணமானவர்கள்,தாலிக்கொடியோடு சேர்த்துக் கொள்ளலாம்;மாதவிலக்கிற்கும் இதை அணிவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை;தாம்பத்தியத்திற்கும் இதை அணிந்திருப்பதற்கும் தீட்டு கிடையாது;
ருத்ராட்சங்களைக் கொண்ட மாலைகள் இருக்கின்றன;ஒரு ருத்ராட்ச மாலையில் 12,21,51,108 என்ற எண்ணிக்கையில் இருக்கும் ருத்ராட்சமாலைகளில் ஏதாவது ஒன்று அணியவே பலவிதமான சிவநெறிகளை நாம் பின்பற்ற வேண்டும்;குளிக்கும்போதும்,டாய்லெட் போகும்போதும்,தாம்பத்தியத்தின் போதும்,மது சிகரெட் பழக்கத்தின்போதும் கழற்றி வைக்கவே நேரம் போதாது;

ருத்ராட்சம் அணிந்தப்பின்னர்,அசைவம் சாப்பிடக்கூடாது;ருத்ராட்சம் அணிந்தவரை நோக்கி மாந்திரீக ஏவல் ஏவினால் அது செயலிழந்து போகும்;பேய் ,பிசாசு அண்டாது;துர்தேவதைகள் நெருங்காது;
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒருபோதும் நிர்வாணமாகக் குளிக்கக் கூடாது;தூங்கக்கூடாது;நிர்வாணமாகப் படுத்துக் கொண்டு போர்வையை போர்த்திக் கொண்டும் தூங்கக் கூடாது;வெட்டவெளியில் பகலிலோ/இரவிலோ தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக் கூடாது;அவ்வாறு செய்தால் நிச்சயம் துஷ்டசக்திகள் நமது உடலுக்குள் புகுந்துவிடும்;அப்படிப் புகுந்ததை நம்மால் உணர முடியாது;தாம்பத்திய உறவு முடிந்ததும்,கண்டிப்பாக(குறைந்தது பதினைந்து நிமிடம் கழித்து) குளிக்க வேண்டும்;

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பெண்கள் தொப்புளிலும் மருதாணி என்ற மெஹந்தியை இட்டுக் கொள்வது அவசியம்;இதனால்,துர் ஆவிகள் உடலுக்குள் புகாமல் தடுக்கப்படும்;ஒட்டியாணம் அணிவதும் ஆவிகள் தொப்புள் வழியாக உடலுக்குள் தடுக்கவே!!!


உடல் அதிகப்படியான உஷ்ணம் இருந்தால்,தொப்புள் மீது சிறிது விளக்கெண்ணையைத் தடவினால்,சிறிது நேரத்திலேயே உடல் குளிர்ந்துவிடும்;இதெல்லாம் பாட்டி வைத்தியம் என்பதை அறியக்கூட நமக்கு நேரமில்லை;எதை நோக்கி ஓடுகிறோம் என்றே தெரியவில்லை;
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
நாம் ஒவ்வொருவருமே குளிக்கச் சென்றதும்,நமது உடலின் முன்பக்கத்தில் இருக்கும் மஹாலட்சுமியும்,பின்பக்கத்தில் இருக்கும் மூதேவியும் நம்மை விட்டு வெளியேறுகிறார்கள்;எனவே,குளித்து முடித்ததும்,நாம் முதலில் துவட்ட வேண்டிய உடல்பாகம் முதுகு! இவ்வாறு செய்யாமல் உடலில் வேறு எதாவது ஒருபகுதியை துவட்டினால் அங்கே மூதேவி புகுந்துகொள்வாள்;இதனாலும்,நம்மில் பலருக்கு பலவிதமான உடல் சோர்வுகள்,மனப்பதட்டங்கள் உருவாகின்றன;பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இதை நமது முன்னோர்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சகுன சாஸ்திரம் தமிழர்களுக்கே உரியது;ஒரு நல்ல காரியத்துக்கு நமது இருப்பிடத்திலிருந்து புறப்படுகிறோம்;அப்போது விதவை,ஒற்றைப் பிராமணன்,விறகு,விறகு மூட்டை,பூனை போன்றவை எதிர்ப்பட்டால் அதை கெட்ட சகுனமாகக் கருதுகிறோம்;நாம் புறப்படும் இடத்தில் இருந்து நூறு மீட்டர்களுக்குள் இவைகளில் ஏதாவது ஒன்று எதிர்ப்பட்டால் மட்டுமே சகுனத்தடை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்;அதற்குப் பிறகு,வந்தால் அது சகுனத்தடை அல்ல;கன்னிப்பெண்,கர்ப்பிணிப்பெண்,ஒன்றுக்கும் மேற்பட்ட பிராமணர்கள்,இல்லத்தரசி,நித்தியசுமங்கலி,ஒரே ஒரு ஆசிரியர்/ஆசிரியை, வங்கியில் பணிபுரிவோர்,ஒரு பூசாரி,ஒரு ஜோதிடர்,ஒரு அருள்வாக்கு சொல்பவர்,ஒரு குறி சொல்பவர்,சாமியாடிகளில் ஒரே ஒருவர், பணத்தைப் பொருளாகக் கொண்ட நிறுவனத்தில் பணிபுரிவோர் எதிர்ப்பட்டால் அது சகுன லாபம் என்று எடுத்துக் கொள்ளலாம்;இதுவும் அதே நூறு மீட்டர்களுக்குள் வந்தால் மட்டுமே சகுன லாபம் என்று கருத வேண்டும்;
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வீடு ஒரே ஒரு அறையாக இருந்தாலும் சரி;ஒன்றுக்கும் மேற்பட்ட அறைகளுடன் இருந்தாலும் சரி! வீட்டிற்குள் நுழையும் போது நறுமணம் கமழ வேண்டும்;துர்நாற்றம் வீசக் கூடாது;வீட்டிற்குள் ஆடைகள்,புத்தகங்கள்,பொருட்கள் அலங்கோலமாக சிதறிக்கிடக்கக்  கூடாது;அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்;அவ்வாறு இந்தால் மட்டுமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் அருள் நமக்குக் கிட்டும்;
துணிதுவைப்பதற்காக ஆடைகளை ஊற வைத்தால் அதிகபட்சமாக இரண்டு நாட்களுக்குள் துவைத்து காயப்போட்டுவிட வேண்டும்;இல்லாவிட்டால்,ஒருபோதும் வீட்டில் பணம் தங்காது;தினசரிச் செலவுக்கே திண்டாட வேண்டியிருக்கும்;

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

தினமும் ஒவ்வொருவரும் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆரோக்கியக்குறிப்புகளில் ஒன்று.இரவு மட்டுமல்ல;மூன்று வேளைகளும் சாப்பாடு சாப்பிடும் முன்பு ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு சாப்பிடுவது நன்று;மதிய உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்;டிவி விளம்பரங்கள் மூலமாக பிரபலமாகிவரும் பன்னாட்டு குளிர்பானங்களை & உணவுவகைகளை ஒருபோதும் அருந்தாதீர்கள்;அமெரிக்க உணவு வகைகள்,எம்.எல்.எம்மில் பிரபலமடையும் உணவு/மூலிகை உணவுகளை விடவும் சக்தி வாய்ந்த உணவு & மூலிகை உணவுகள் நமது நாட்டில் கிடைக்கின்றன;
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிறு நகரங்களிலும் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசி,காய்கறிகள்,தானியங்கள்,பயிறுவகைகள் பிரபலமாகி வருகின்றன;இவைகள் சாப்பிடும்போது ருசியின்றி இருக்கலாம்;இருந்தாலும் இந்த உணவுகளைச் சாப்பிடப் பழகிக்கொள்வதன் மூலமாக ஆரம்ப நிலையில் இருக்கும் நோய்கள் நிரந்தரமாக குணமாகிவிடும்;முற்றிய நிலையில் இருக்கும் நோய்கள் தனது வலிமையை இழந்து ஆரோக்கியத்தைப் பெறலாம்;இவைகளின் விலை கொஞ்சம் அதிகம் தான்;இருப்பினும்,டாக்டருக்குச் செல்வழிப்பதற்குப் பதிலாக உணவுக்குச் செலவழிக்கலாம்;இணையத்தில் ஆர்கானிக் ஃபுட்(Organic Food in your City) என்று தேடிப்பார்த்தால் முகவரிகள் கிடைக்கும்;கடைகள் வைக்காத தனி மனிதர்களை தீர விசாரித்து முன்பணம் தருவது நல்லது;
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எப்போதும் சாப்பிடும்போது போனிலோ/நேரிலோ பேசவேக் கூடாது;அது நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கவிடாமல் செய்து விடும்;சாப்பிடும் போதும்,சாப்பிட்ட உடனேயும் தண்ணீர் அருந்தவேக்  கூடாது;அசைவ உணவுகளில் சகிக்க முடியாத கெட்டுப்போன அசைவங்கள் (ஒரு ஆட்டின் கறி அளவுக்கு ஒரு குதிரையின் கறி அளவு அல்லது இறந்த எல்லா மிருகங்களின் . . .உவ்வே!?!?!??)சேர்ப்பது எங்கும் நடக்கிறது;எனவே,அதை நிரந்தரமாகக் கைவிடுவது அவசியம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நாம் குருவாக ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு நம் மேல் திருப்தி வராத வரைக்கும் தெய்வத்தின் கடாட்சம் கிடையவே கிடையாது;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பணத்தை நோக்கமாகக் கொண்டு வேலை செய்தால்(பன்னாட்டு நிறுவனங்களின் பேராசையைப் போல) மனம் உலக விவகாரங்களில் ஆழ்ந்துவிடுகிறது;ஆகவே,உலகியல் காரியங்களை மிகவும் கவனத்துடன் பகவானுடைய ப்ரீதிக்காகவே செய்ய வேண்டும்;இவ்விதமான செயல்களையும் கூட அதிக அளவில் செய்யக் கூடாது;ஏனெனில்,வேலைகள் அதிகமாவதால் நோக்கத்திலும் மாறுதல் ஏற்பட்டுவிடுகிறது.உலகமயமாக்கலினால் ஜி.8 நாடுகள் வெகுவிரைவில் அழிவுகளை சந்திக்க இருக்கின்றன;

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்றைய பெண்கள் தோடு,மூக்குத்தி,மோதிரம்,வளையல்,திருமாங்கல்யம் தவிர இதர நகைகள் அணியும் முறையே மறைந்துவிட்டது;இதனால்,குடும்ப அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவருகிறது.இனி, யாரும் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள்;இன்னும் 300 ஆண்டுகளில் நவக்கிரகங்களின் செயல்பாடுகள் நின்றுவிடும் என்று வீரப்பிரம்மம் அவர்கள் கணித்துள்ளார்;அதை நோக்கியே கலியுகம் நகர்கின்றது;இன்னும் 500 ஆண்டுகளுக்குள்ளேயே கலியுகம் (அரிதாக) நிறைவடைந்துவிடும்;ஒவ்வொரு நூறு ஆண்டுகளிலும் மனித இனத்தில் உருவாக வேண்டிய மாற்றம் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் மாறி வருவதை அவரது தீர்க்கதரிசனங்கள் உணர்த்துகின்றன;
#################################################################################
கும்கி படத்தில் ஐயய்யய்யோ ஆனந்தமே என்று ஒரு பாடலை வைத்துள்ளார்கள்;இந்த பாடல் பிரபலமாகிவிட்டது;பலர் இதை தனது செல் போனில் ரிங்டோனாக வேறு வைத்துள்ளார்கள்;மனிதர்களின் ஆயுளை முடித்து,அவர்களின் உயிரை எடுப்பவர் எமதர்ம ராஜா.இவர் சனிபகவானின் சகோதரர் ஆவர்.இந்த எமதர்ம ராஜாவின் மனைவியின் பெயர் ஐயோ! அடிக்கடி ஐயய்யய்யோ என்ற பாடலை செல்போனிலும்,டிவி சானல்களிலும் ஒலி/ஒளிபரப்பிக் கொண்டே இருக்க எமதர்மராஜாவின் மனைவி பூமிக்கு வந்துவிடப்போகிறாள்;எமதர்மராஜாவின் மனைவி வந்தால் கூடவே எமதர்மராஜாவும் வந்துவிடுவார்;இது போன்ற அசுபமான வார்த்தைகளில் பாடல்கள் எழுதாமல் இருப்பார்களா?


இந்தப் பாடலை ரிங்டோனாக வைத்திருப்பவர்கள் நிறைய்ய கஷ்டங்களையும்,காரியத்தடைகளையும் அனுபவித்து வருகிறார்கள்;வேண்டுமெனில்,இதை ரிங்டோனாக வைத்து டெஸ்ட் செய்து பாருங்களேன்!(இதை வைத்திருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,கடக ராசியினர் அதிகம் கஷ்டப்படுவதை உணரமுடிந்திருக்கிறது)

********************************************************************************
நெருங்கிய உறவுகள் மரணமடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்;அப்போது அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நமது வழிபாடு தடைபடும்.அப்போது நாம் பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்கள்:-


நம்மை உருவாக்கியவர்கள் நம்மை விட்டு மறைந்தால்,ஒரு மாதம் வரையிலும் மந்திரஜபம்,இறைவழிபாடு,வீட்டில் இறைவழிபாடு செய்யக் கூடாது;31 ஆம் நாளன்று அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்று ஒரு அருகம்புல் மாலை வாங்கி,அவருக்கு அணிவிக்க வேண்டும்;அவரை ஒன்பது சுற்று சுற்றி வந்துவிட்டு,ஒன்பதுமுறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு,நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்;இதைச் செய்தப் பின்னர்,நமது வழக்கமான வழிபாடுகளைச் செய்யலாம்;


இவர்களைத் தவிர,மற்றவர்கள் மறைந்து,அந்த துக்கத்தில் கலந்து கொண்டால்,இரண்டுவிதமான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது;இறந்தவரை அவரது இருப்பிடத்திலிருந்து அகற்றும் முன்பே கலந்து  கொண்டால் பதினாறு நாட்கள் வரையிலும்,அகற்றியப் பின்னர் கலந்து கொண்டால்(அன்றே கலந்துகொண்டாலும்) ஐந்து நாட்கள் வரையிலும் இறைவழிபாட்டை விலக்க வேண்டும்;இதுவே ஒரு புதிய ஜனனம் நிகழ்ந்து அந்த ஜனனத்தை அன்றே சென்று பார்த்தால் ஐந்து நாட்கள் இறைவழிபாட்டிற்கு விடுப்பு விட வேண்டும்;ஜனித்ததில் இருந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு  சென்று பார்த்தால் இரண்டு நாட்கள் மட்டும் விடுப்பு விட்டால் போதும்;ருதுவான வீட்டிற்கு அன்றே சென்றால் மூன்று வாரங்கள் இறைவழிபாட்டைத் தவிர்க்க வேண்டும்;ஒரு மாதம் கழித்துச் சென்று கலந்து கொண்டால்,அதற்கு எந்தவித இறைவழிபாட்டு விடுமுறையும் இல்லை;

ஓம்சிவசிவஓம்

குடிக்கும் தண்ணீரைக் கூட விற்றால் அது கலிகாலம் தானே?


உலகம் இயங்குவதற்கு, தண்ணீர் என்ற சக்கரம் அவசியமானது. இது ஐம்பூதங்களில் ஒன்று. இயற்கையுடன் தொடர்புடையது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அன்றாட வாழ்வின் பெரும்பாலான பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும்ற மார்ச் 22ம் தேதி, உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. இப்போது நிலைமையே வேறு. மக்கள்தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சியால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைகிறது. மூன்றாம் உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காகதான் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். குடிநீர், சுகாதாரம், விவசாயம், கால்நடைகளுக்கு என பல வழிகளில் தண்ணீரின் பயன்பாடு அவசியம்.

வறட்சி ஏன்: பெருகும் மக்கள் தொகை, காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம், பூமி சூடாவது ஆகியவை தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம். சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. அப்படி இருக்கும் போது, உலகின் தண்ணீர் தேவையை எப்படி ஈடு கட்ட முடியும். இதையும் செயற்கையாக தயாரிக்கலாம் என்றால், செலவு பன்மடங்கு அதிகம். எனவே, இயற்கையாக கிடைக்கும் நீருக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.

என்ன செய்யலாம்: தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். ஏனெனில், இந்தியாவில் மூன்றில் ஒரு தெருக்குழாய் பழுதடைந்ததாகவே உள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது. சிலரே பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் உற்பத்தியை குறைத்துக் கொள்ளலாம். அவசியமில்லாத பணிகளுக்கு, தண்ணீரை பயன்படுத்துவதை நிறுத்தலாம். உணவுப் பொருள் வீணாவதை தடுக்க வேண்டும். மழை நீரை ஏரிகளில் சேமித்து வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மரம் வளர்ப்பது, மழைப்பொழிவை அதிகரிக்கும் என்பதால், அதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

அதிர்ச்சியளிக்கும் ஆய்வு: தண்ணீர் தொடர்பான ஐ.நா., ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.

* உலகில் 85 சதவீத மக்கள் வறட்சியான பகுதியில் வாழ்கின்றனர். 78 கோடி பேருக்கு குடி தண்ணீர் வசதி இல்லை. 250 கோடி பேருக்கு, அடிப்படை தேவைகளுக்கான தண்ணீர், போதுமானதாக இல்லை. ஆண்டுதோறும் 60 - 80 லட்சம் பேர், தண்ணீர் தொடர்பான நோயினால் இறக்கின்றனர். 

* தற்போதிருக்கும் தண்ணீர் தேவைக்கான அளவு, 2050ம் ஆண்டுக்குள், 19 சதவீதம் அதிகரிக்கும். 

* உலகிலுள்ள ஆறுகளில் 276 ஆறுகள் (ஆப்ரிக்காவில் 64, ஆசியா 60, ஐரோப்பியா 68, வட அமெரிக்கா 46, தென் அமெரிக்கா 38), ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பாலும் செல்கிறது. இதில் 185 ஆறுகளை இரண்டு நாடுகளும், 20 ஆறுகளை 5 நாடுகளும் பங்கிடுகின்றன. அதிகபட்சமாக மத்திய ஐரோப்பாவில் "தன்யூப்' என்ற ஆறு, 18 நாடுகளால் பங்கிடப்படுகிறது. உலகில் 46 சதவீத நிலப்பரப்பு, எல்லை கடந்த ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. 

* அரேபிய நாடுகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. கடல்நீரைத் தான் சுத்திகரித்து பயன்படுத்துகின்றனர். அரேபிய நாடுகளில் 66 சதவீதம், வேறு நாடுகளில் இருந்து தண்ணீரை பெறுகின்றன. 

* வளர்ந்த நாடுகள், அதிகளவில் தண்ணீரை மறுசுழற்சி செய்கின்றன. ஆனால் வளரும் நாடுகளில் பயன்படுத்திய தண்ணீர், 90 சதவீதம் அப்படியே வீணாக ஏரி, கடலில் கலக்கிறது. இதனாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

ஒருமுறை மழை... ஓராண்டு தண்ணீர்!

மழைநீரை சேமித்தால் குடிநீருக்கு மற்றவர்களை எதிர்பார்க்காமல் ஆண்டுமுழுவதும் பயன்படுத்தலாம் என்கிறார், பொதுப் பணித்துறை சிறப்பு முதன்மை பொறியாளர் (ஓய்வு) அருணாச்சலம். மதுரை ஒத்தகடை, புதுப்பட்டியில் உள்ள தனது வீட்டில் ஏழாண்டுகளுக்கு முன், மழைநீர் சேகரிப்பை அமைத்துள்ளார். அவர் கூறியதாவது:

வீடு கட்டும் போதே கட்டட வரைபடத்தில் திட்டமிட்டு கட்ட வேண்டும். முதல் மாடியில் மழைநீர் வடிகட்டிக்காக தனியாக தொட்டி அமைத்துள்ளேன். மொட்டை மாடியில் ஓரடி ஆழத்தில் பள்ளம் அமைத்து, அதிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் ஐந்து குழாய்களை அமைத்துள்ளேன். பள்ளம் அருகிலேயே இரண்டு வால்வுகள் இருக்கும். ஒரு வால்வைத் திறந்தால் மொட்டை மாடியை சுத்தம் செய்யலாம். மற்றொரு வால்வு வழியாக, மிகுதியாக தேங்கும் மழைநீரை வெளியேற்றலாம். ஐந்து குழாய்களின் மேலே சல்லடை மூடியை மூடவேண்டும். பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, சல்லடை துளைகள் வழியாக, வடிகட்டி தொட்டிக்குச் சென்று சுத்திகரிக்கப்படும். இந்த தண்ணீர் கீழ்ப்பகுதியில் உள்ள பாதாளத் தொட்டியில் சேகரமாகும். "கார் பார்க்கிங்' பகுதியில் சுரங்கத் தொட்டி அமைத்து, அதன் மேலே காரை நிறுத்திக் கொள்ளலாம். 12 அடி நீள, அகலத்தில் எட்டடி ஆழத்தொட்டியில் தண்ணீரை தேக்கி வைக்கலாம். திறந்திருக்கும் குழாய் பகுதிகளில் துணியால் மூடி, செம்புக் கம்பியால் கட்ட வேண்டும். இதன் மூலம் பல்லி, கரப்பான்பூச்சி வராமல் பாதுகாக்கலாம். மழை அதிகம் பெய்யும் போது, கீழ்நிலைத் தொட்டியில் தண்ணீர் நிரம்பும். அங்கிருந்து மின்மோட்டார் மூலம் மொட்டை மாடியில் உள்ள ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மூன்று தண்ணீர் தொட்டிகளில் ஏற்றி விடுவேன். தண்ணீர்த் தொட்டிகளை தாங்கும் அளவுக்கு "சிலாப்' அமைப்பது முக்கியம். இதுமட்டுமல்ல... அனைத்திலும் தண்ணீர் நிரம்பி விட்டாலும், தோட்டத்தில் மழைநீர் சேகரிப்புப் பள்ளம் அமைத்துள்ளேன். அதில் நிரம்பி, நிலத்தடி நீர் பெருகும். எந்த விதத்திலும் மழைநீரை வீணாக்குவதில்லை. தண்ணீரை கண்டிப்பாக கொதிக்க வைத்து தான் பருக வேண்டும். இதுவரை குடிக்க, சமைப்பதற்காக வெளியில் காசு செலவழித்ததில்லை. கட்டிய வீட்டிலும் சிறு மாற்றங்கள் செய்து, மழைநீரை சேமிக்கலாம்.

தண்ணீர் வடிகட்டும் தொட்டி: நான்கடி ஆழத் தொட்டியின் அடியில் கூழாங்கற்கள், அடுப்புக்கரி, சலித்த ஆற்றுமணல், கடைசியாக ஆற்றுமணல், கரித்தூளை ஒன்றாக்கி கொட்ட வேண்டும். தொட்டியின் மேல்பகுதி காலியாக விட வேண்டும். கரித்தூள் கிருமிகளைக் கொல்லும். ஏழாண்டுகளாக தொட்டியை சுத்தம் செய்யவில்லை. தண்ணீரின் தரத்தை பொதுப்பணித் துறையில் அவ்வப்போது பரிசோதிக்கிறேன். சுத்தமாக இருக்கிறது.

மழையெல்லாம்... சுகமே...: ஒருநபருக்கு குடிக்க, சமைக்க ஆறுலிட்டர் தண்ணீர் வேண்டும். நான்குபேர் உள்ள குடும்பத்திற்கு ஒருநாளைக்கு 25 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் எனில், ஆண்டுக்கு குறைந்தது 9000 லிட்டர் தண்ணீர் வேண்டும். ஆயிரம் சதுரடி உள்ள வீட்டில், ஒரு செ.மீ., மழை பெய்தால் ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். சராசரியாக ஒன்பது செ.மீ., மழை பெய்தால், ஓராண்டுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்து விடும்.
நன்றி:தினமலர்
ஆன்மீகக்கடலின் கருத்து:எப்போதெல்லாம் உலகில் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதோ அப்போதெல்லாம் உலக அளவில் குடிக்கும் தண்ணீர் மட்டுமல்ல;பொதுப் பயன்பாட்டு தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்படும்.ஆதாரம்:சைவ சித்தாந்தப் பாடல்கள்.                                                   ஆன்மீகக்கடலின் கருத்து:பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்கா அரசின் மூலமாக ஐ.நா.சபையில் திருத்தம் கொண்டு வந்து,தண்ணீரையும் வர்த்தகப்பொருளாக்கிவிட்டன;விளைவு? இன்று கோடிக்கணக்கான உலக மக்கள் குடிதண்ணீரை விலைகொடுத்து வாங்கும் இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டன;இதற்கான பின்விளைவாக ஜி.8 நாடுகள் உலக அரசியலில் தமது செல்வாக்கை பரிபூரணமாக இழந்துவிடும்;வறுமைநாடுகளாக மாறிவிடும்.இன்று உலகத் தண்ணீர் தினமாம்;22/3/13இல்லை இல்லை தண்ணீரை வியாபாரப் பொருளாக்கியதால் உலகக் கண்ணீர் தினம்!!!

கற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்!..

நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்கிறோம். கற்றல் செயல்பாடானது 24x7 என்ற தொடர்ந்த செயல்பாடாக நம் வாழ்வில் இடம்பெற்ற ஒன்று என்பதை புரிந்துகொள்பவரே புத்திசாலி.
ஒரு மனிதனுக்கு கற்றல் என்பது அவன் கருவறையில் இருக்கையிலேயே தொடங்கி விடுகிறது. அவனின் மரணம் வரையில் அது நீடிக்கிறது.
படித்தல் என்பது புத்தகப் படிப்பில் மட்டுமே அடங்கியது என்று நாம் நினைத்தால், உண்மையிலேயே சோர்ந்து விடுவோம். ஆனால், கற்றல் என்பது பரந்த அளவிலானது மற்றும் அது வெறும் புத்தகத்திற்குள் மட்டும் அடங்கியதன்று.
நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைப் பார்க்கிறோம். உதாரணமாக, புதிய புத்தகம், புதிய திரைப்படம், புதிய பணி அனுபவம் மற்றும் புதிய பயணம் போன்ற அனைத்துமே கற்றல் செயல்பாடுகள்தான். நாம் இதற்கு முன்பு அறிந்திராத ஒன்றை, தற்போது புதிதாக அறிந்து கொள்வதே கற்றல் எனப்படும். ஆனால், விஷயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த விஷயம் வாழ்வுக்கும், சிந்தனைக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
தங்கள் குழந்தையின் கற்றல் செயல்பாட்டை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற கவலை அனைவருக்குமே இருக்கும். அதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றைப் பற்றி இங்கே காண்போம்.
கவலையின்றி படித்தல்
ஒரு குழந்தை ஒரு புத்தகத்தைப் படிக்கிறதென்றால், அதை மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற கவலையின்றி படித்தல் வேண்டும். ஒரு விஷயத்தை புதிதாக அறிந்துகொள்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே அந்தக் குழந்தைக்கு இருக்க வேண்டும். மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற நெருக்கடியானது, ஒரு குழந்தைக்கு கவலையை உண்டாக்கி, அந்த விஷயத்தை அது அனுபவித்துப் படிப்பதை தடை செய்துவிடும்.
மேலும், ஒரு விஷயத்தை அனுபவித்துப் படிக்கும்போது, இயல்பாகவே, அந்த விஷயத்தின் பெரும்பகுதி நினைவில் பதிந்துவிடும். எனவே, மனப்பாடம் என்ற ஒரு செயல்பாட்டை குழந்தையிடம் திணிக்கக்கூடாது.
சுந்திரமான மனம்
"கலங்கிய நீரை தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருந்தால், அது எப்போதுமே தெளியாது. ஆனால், அதை அப்படியே தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால், படிப்படியாக தெளிந்துவிடும்" என்பது புகழ்பெற்ற தாவோயிச தத்துவம். அதுபோல்தான் நமது மனமும். அதற்கு தொந்தரவும், நெருக்கடியும் தராதவரை, அது சிறப்பாக செயல்படும். எனவே, உங்கள் குழந்தையை தொந்தரவு செய்யாமல், எந்த செயலையும், சுதந்திரமாக செய்யவிடுங்கள்.
அந்த வகையில் உங்கள் குழந்தை ஒன்றை படித்துமுடித்தப் பிறகு, அதை திரும்பவும் அதனிடம் கேட்கவும். அப்போது, தான் படித்த விஷயத்தை, அதனுடன் தொடர்புடைய அம்சங்களுடன் இணைத்து சொல்லும் திறனை உங்கள் குழந்தைப் பெறும். உதாரணமாக, ஒரு கதையைப் படித்திருந்தால், அதனோடு தொடர்புடைய கதாப்பாத்திரங்கள் மற்றும் பிற கருத்தாக்கங்களுடன் இணைத்து சொல்லும். இதன்மூலம், அந்த கதையானது, குழந்தையின் நினைவில் நீண்டகாலம் மறக்காமல் பசுமையாக நிலைத்திருக்கும்.
மூளையிலுள்ள சைனாப்டிக் இணைப்புகள் தூண்டப்படுகையில் அல்லது இருக்கும் இணைப்புகள் வலுப்படுத்தப்படுகையில், நினைவுகள் உருவாகின்றன. இந்த வகையில், ஒரு குழந்தை, தான் படித்ததை ஒவ்வொரு முறை நினைவுகூறும்போதும், அந்த இணைப்புகள் வலுவடைகின்றன.
எனவே, அழுத்தமற்ற சூழலில், ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து படிக்கையில், அது நல்ல முறையில் நினைவில் நிற்கிறது. ஆனால், இந்த செயல்பாடானது, தேர்வு நெருங்கும் சமயத்தில் பின்பற்றத்தக்கதல்ல. ஒரு புதிய கற்றல் செயல்பாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை.
இலக்கு மதிப்பெண் அல்ல...
மூளையின் இயல்பான செயல்பாட்டு அடிப்படையில் ஒரு விஷயத்தை கற்பதானது, மகிழ்ச்சியைத் தரும். அந்த செயல்பாட்டின் அடிப்படையிலேயே, உங்கள் குழந்தைக்கு பயிற்சியளிக்க வேண்டும். இதன்மூலம், வெறும் பள்ளி பாடப்புத்தகத்தோடு உங்கள் குழந்தை முடங்கிவிடாது.
வெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பழக்கப்படுத்தப்பட்ட மற்றும் மதிப்பிடப்படும் குழந்தைகள், தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதித்ததில்லை. அவர்களால் சாதிக்கவும் முடியாது. ஆனால், அறிவின் உண்மையான ஆழத்தைத் தேடி, படிப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில அதிகமாக சாதிப்பார்கள்.
இதுபோன்ற பயிற்சிகளால், ஒரு குழந்தை அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறாமலும் போகலாம். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைவார்கள். ஏனெனில், இந்திய கல்வித்திட்டமானது, முழு அறிவுத்திறனை பரிசோதிக்கும் செயல்பாடாக இல்லை. இயல்பான மற்றும் ஆர்வத்துடன் கூடிய கற்றலே, குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது.

வெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே!!!


நமது ஆன்மீக  குரு திரு.சகஸ்ரவடுகர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இதுவரை சுமாராக ஆயிரம் ஆத்மாக்களின் கர்மவினைகள் தீர ஆன்மீக வழிகாட்டுதல் செய்து அனைவருக்கும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து  தொடர்ந்து ஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும்  என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும்? என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆகும்)


இந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)இதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.
20.3.2013 புதன் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை
27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 வரை (அந்தந்த நாடுகளில் இதே நேரத்தைப் பின்பற்றுங்கள்;அதுதான் சரி)

நீண்ட நாட்களாக தகுந்த வரன்  கிடைக்கவில்லையே? என்று ஏங்குபவர்கள்,அவர்களின் பெற்றோர்,சகோதர சகோதரிகள்,நட்பு வட்டம் என யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் மேற்கூறிய வழிமுறையில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் நிச்சயம் தகுந்த வரன் விரைவில் அமைந்துவிடும்.


அலுவலகத்தில் நியாயமான பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்காமல் திண்டாடுபவர்களும் இவ்வழிபாடு மூலமாக நிச்சயமாக அவர்கள் மகழ்ச்சியை அடைவார்கள்.


நீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் மனமுருகி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயமாக ஸ்ரீகாலபைரவரின் அருளால் புத்தரபாக்கியத்தைப் பெறுவார்கள்


பிறரின் சதிச்செயல்களால் பிரிந்திருக்கும் கணவன்/மனைவி இருவரில் யாராவது ஒருவர் மட்டும் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவரிடம் முறையிட்டால்,பிரிந்தவர் சேருவர்.(அர்ச்சகர்/பூசாரியிடம் புலம்ப வேண்டாம்.அது புதுச்சிக்கல்களை உருவாக்கிவிடும்)


கடுமையான பண நெருக்கடியில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் வேண்டினால் நிச்சயமாக பணவரவு நிச்சயம்!


தனது திறமையும்,படிப்புக்கும் ஏற்ற வேலை தேடுவோர் அல்லது வேறு சிறந்த சம்பளத்தில் இடமாற்றத்துக்கு விரும்புவோர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்தால் அவர்கள் விரும்பும் வேலை கிட்டிவிடும்.


அன்புக்கு ஏங்கித் தவிப்பவர்கள்,தனிமையில் வாழ்ந்து தன்னையே வெறுத்து தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் அவர்களின் தனிமை போய்விடும்;தகுந்த நட்பு அல்லது வாழ்க்கைத் துணை அல்லது நெருக்கமான சிநேகிதம் உண்டாகும்.


(பலதமிழ்நாட்டுக்குடும்பங்களில் பணம்,பணம் என்று ஏங்குவதால் ரத்த உறவுகளிடம் ஆறுதலாகக்கூட பேச நேரமில்லாமல் இருக்கிறார்கள்;அல்லது வேண்டுமென்றே பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.இதனால் தான் பருவ வயதில் இருக்கும் மகன்/ள் அல்லது மனைவி/கணவன் தடம் மாறிச் செல்கிறார்கள்)

ஏழரைச்சனியால் அவதிப்படும் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிக ராசியினர் மற்றும் அஷ்டமச்சனியால் கஷ்டப்படும் மீனராசிக்காரர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரைச் சரணடைந்தால் அவர்களின் மன உளைச்சல்கள்,பண நெருக்கடிகள்,வர இருக்கும் அவமானங்கள் விலகிச் சென்றுவிடும்.

ப்ளாக் மெயில் அல்லது வீண் பழியால் சிக்கித் தவிப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.

வெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்போர் அல்லது டெபுடேஷனுக்காக காத்திருப்போர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை மனதார வழிபட்டால் நிச்சயமாக அவர்கள் வேண்டியது கிட்டும்.
தொலை தூர நாடுகளில் வசிப்போர் இங்கே இருக்கும் எட்டு பைரவர்களை நோக்கியவாறு அமர்ந்து பைரவ சஷ்டிக்  கவசம் பாடினாலே போதுமானது;

மேற்கூறிய நேரத்தில்,ஸ்ரீகாலபைரவர் சன்னதியின் முன்பாக பைரவ சஷ்டிக்கவசம் பாடலாம்;ஸ்ரீகால பைரவர் மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்கலாம்.
முயன்று பார்ப்போமா!!! ஸ்ரீகால பைரவரின் அருளைப்பெறுவோமா!!!


ஓம்சிவசிவஓம்