RightClick

திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!

அறுகம்புல்லை 
உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க 
வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். 
இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான 
திருநீறாகும். 

இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் 
கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. 
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து 
கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. 
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது.அந்தவகையில் 
உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் 
இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. 

இதைவிட மனித உடலிலே நெற்றி 
முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் 
வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை 
இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் 
அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள். 

தனது உடலிலே சாம்பல் 
சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி 
இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் 
தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் 
மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில்நீர்த்தன்மையை உறிஞ்சவல்லதிருநீற்றை 
அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு 
அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் 
போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு 
மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது. 

இதைவிட இரு புருவங்களுக்கும் 
இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால்அந்த 
இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே 
மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் 
போன்றவைஇடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் 
வெப்பத்தைநீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் 
முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற 
நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் 
சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது. 

சந்தனம் 
இரு புருவங்களுக்கும் இடையில்இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் 
ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு 
ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான 
முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை 
நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் 
காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் 
உண்டு பார்த்தீர்களா! 

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள 
நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும்சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் 
மனதில்ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் 
செய்தால் மனஒருமைப்பாடுதோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் 
புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் 
இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. 

இந்த 
உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா 
வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். 
மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் 
வென்றது விளக்கம் மறைந்தது. 

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்: 
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தைஈர்த்துக் கொள்ளலாம். 
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். 
3.நெஞ்சுக்கூட்டின் 
மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, 
மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் 
பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் 
சூட்சுமம் அங்கு உள்ளது. மேலும் விபரமறிய:ஓஷோ எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள் என்ற புத்தகத்தை வாசிக்கவும்.