RightClick

ஞானசத்சங்கத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள்!!!

பாம்புக்கோவில்சந்தையில் மாதவானந்த சுவாமிகளின் ஜீவ ஐக்கியம் அமைந்திருக்கிறது.தமிழ்நாட்டில் மறைந்து வாழ்ந்து காக்கும் மகான்களில் மிதமிஞ்சிய சக்திவாய்ந்த மகான் மாதவானந்தசுவாமிகள் ஆவார்.இதை நமது பகுத்தறிவால் உணரவே முடியாது;இங்கே ஒருமுறை வந்து ஓரிரவு தங்கி தியானம் செய்தால் தான் ஓரளவு உணரமுடியும்.பூர்வபுண்ணியங்கள் அதிகமாக இருப்பவர்கள்,ஒரே இரவிலும்,ஆர்வக்கோளாறு உள்ளவர்கள் மாதம் ஒரு நாள்வீதம் பத்துநாட்கள் வரையிலும் வந்து,தியானம் செய்தப்பின்னரே உணர முடியும்.

23.2.13 சனிக்கிழமை இரவு நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல ஆன்மீகக்கடல் வாசகர்கள் வருகை புரிந்தார்கள்.இதுவரை எந்த ஒரு ஆன்மீக அமைப்பும்,ஆன்மீகத் தலைவரும் உபதேசம் செய்யாத பல அரிய ஆன்மீக முன்னேற்ற வழிமுறைகளை இலவசமாக மிக எளிய தமிழில் போதித்தார் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!!!

அந்த போதனையை அபிஜித் நேரத்தில் செயல்வடிவில் டெமோ செய்து காட்டி,ஒவ்வொருக்கும் அவரவர் ஆத்ம சக்தியின் அளவைப் பொறுத்து தீட்சைகள்  வழங்கப்பட்டன.இந்த செயல்வடிவினை தொடர்ந்து பின்பற்றுவோர்களுக்கு அடுத்த நூறு நாட்களுக்குள் அவர்களைச் சுற்றி இருக்கும் சூட்சும உலகத்துடன் தொடர்பு ஏற்படும்;அதுமட்டுமல்ல;பிறரை விடவும் அதிகமான அளவில் ஆத்ம சக்தி அதிகரிக்கும்;தபோ பலமும் உயரும்;வில் பவரும் பலமடங்கு அதிகரித்துவிடும்;சிலர் தமதுமுற்பிறவி குருவாகிய சித்தர் ஒருவரது தொடர்பு நிரந்தரமாக உண்டாகிவிடும்;இவ்வளவு கிடைத்தாலும்,அவர்களின் இல்லற வாழ்க்கை சிறிதும் பாதிக்காது;

ஒவ்வொருவரும் தமது தீட்சையைப்  பாதுகாப்பது எப்படி? தீட்சையை தொடர்ந்து செயல்படுத்தும்போது எந்தவிதமான முன்னேற்றங்களை உணருவார்கள்? தீட்சையின் அடுத்தடுத்த கட்டங்களில் நாம் விரும்பும் சித்தரை/கடவுளை/மகானை/குலதெய்வத்தை/ஜீவசமாதியினுள் வாழ்ந்து வரும் துறவியை எப்படி தொடர்பு கொள்வது?அந்தத் தொடர்பைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி? அந்த சித்தர் தொடர்பின் மூலமாக நமது தேவைகளை நிறைவு செய்வது எவ்வாறு?என்பது பற்றி விரிவான விளக்கங்களை விரித்துரைத்தார்;


பின்னர் அனைவரும் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்;அன்னதானத்தின் நிறைவாக,பொதுவான ஆன்மீக சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன;


முடிவில் வர இருக்கும் அழிவுகளிலிருந்து பூமியைப் பாதுகாத்திட கூட்டு தியானம் செய்தோம்;


நிறைவாக ஈஸ்வரபட்டரின் புகைப்படம் தீட்சையுடன் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன.இந்த அரிய ஞான சத்சங்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,திருநெல்வேலி,மதுரை,கோயம்புத்தூர்,    திருப்பூர்,திருச்சி,தஞ்சாவூர்,சென்னை,திருப்பத்தூர்,ராமநாதபுரம்,       மயிலாடுதுறை,பரமக்குடி,சேலம்,பாண்டிச்சேரி போன்ற நகரங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ