தமிழ்நாட்டில் சென்னையை விடவும் செல்வந்தர்களும்,தொழிலதிபர்களும் மிகுதியாக
வாழ்ந்து வரும் ஊர் அது.தொடர்ந்து சில மாதங்களாக ஆன்மீகக்கடல் வலைப்பூவை வாசித்து வரும்
அவர்,ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தை கடந்த
பத்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்;இந்த
சூழ்நிலையில் கடந்த சில மாதங்களில் தொழிலில் பெருத்த மந்தம் ஏற்பட்டு ஊழியர்களுக்கு
சம்பளம் கொடுக்க முடியாத நெருக்கடி உண்டாகியிருக்கிறது.நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவை
வாசித்துவிட்டு,கழுகுமலையில் நடைபெற்ற 18 சித்தர்களும் சூட்சுமமாக வருகை தந்த
28.12.12 கழுகுமலை அபூர்வ கிரிவலத்துக்கு வந்து கலந்து கொண்டனர்;தொழிலில் இழந்த சுறுசுறுப்பை
திரும்பவும் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு கழுகுமலைக்கு வந்தார்கள்;வந்து,கழுகாச்சல
மூர்த்தியை வழிபட்டு,கொண்டு வந்திருந்த ஐந்து கிலோ நவதானியங்களை கிரிவலப்பாதை முழுவதும்
தூவினார்.வேறு எந்தக்கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும் நேராக
சொந்த ஊருக்குத் திரும்பினார்.
ஊருக்குச் சென்ற மூன்று வாரங்களில் வராக்கடன் பட்டியலில் இருந்தவர்கள்
ஒவ்வொருவராக இவரை வந்து சந்தித்தனர்;இவ்வளவு நாட்களாக பணம் தரமுடியாமைக்கு வருத்தம்
தெரிவித்த கையோடு மொத்தப் பணத்தையும் திருப்பித் தந்தனர்;கூடவே,ஒரு பழைய நட்பு மூலமாக
ஒரு பெரிய ஆர்டர் கிடைத்தது;இவ்வளவு கழுகுமலைக்கு வருகை தந்த 21 நாட்களில் நடைபெற்றதை
நினைத்துப்பார்த்து நெகிழ்ந்தே போய்விட்டார்;தற்போது தனது தொழிலை விரிவு படுத்தும் நிலைக்கு உயர்ந்துவிட்டார்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ