RightClick

கழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-1
கலியுகத்தில் வாழ்ந்து வரும் நாம் ஒருவிதத்தில் புண்ணிய ஆத்மாக்களே! எப்படியெனில்,வேறு எந்த யுகமாக இருந்தாலும்,ஒரு கோரிக்கை/ஆசை நிறைவேற பல ஆண்டுகளுக்கு இறைவழிபாடு அல்லது தவம் அல்லது யாகம் நடத்த வேண்டும்.அதுவும் முறையாகவும்,முழுமையாகவும் செய்தால் மட்டுமே நமது கோரிக்கை அல்லது ஆசை அல்லது லட்சியம் நிறைவேறும்.ஆனால்,நாம் வாழும் கலியுகத்தில் அப்படியில்லை;
உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைப் பார்ப்போமே:நம் ஒவ்வொருவருக்குமே பணத்தேவை நிறைய இருக்கிறது.நாம் வாங்கும் சம்பளம் அல்லது ஒரு மாதத்தில் சம்பாதிக்கும் அளவை விட அதிகமான தேவைகள் இருக்கத்தான் செய்கின்றன.தொழில்நுட்பவளர்ச்சியால் நமது தேவைகள் பெருகிக்கொண்டே செல்கின்றன.ஆனால்,வருமானம்?ஒரு குறுகிய வட்டத்தினுள் தான் இருக்கிறது.அந்த வட்டமும் மெதுவாகக் கூட வளர்வதில்லை;இந்த சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.அசைவம் சாப்பிடுவதை முழுமையாக நிறுத்திவிட்டு,ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமிக்கு நமது ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபட வேண்டும்;வழிபட்டுவிட்டு,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும் நேராக நமது வீட்டிற்கு வந்தடைவது தான்.இப்படிச் செய்தாலே போதும்.அடுத்த தேய்பிறை அஷ்டமி வரும் நாளுக்குள் நமக்கு திடீரென பணவரவு நேர்மையான வழியில் வந்துவிடும்;அல்லது நமது நீண்டகாலக் கடன்களில் ஏதாவது ஒன்று திடீரெனத் தீர்ந்துவிடும்.யார் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திவிட்டு,இவ்வாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.


குறிப்பாக,பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிகளுக்குச் சென்றால் மட்டுமே நமக்கு பெருமளவு பணம் வர ஆரம்பிக்கிறது.பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர்கள் திண்டுக்கல் தாடிக்கொம்பு,சிதம்பரம்,சீர்காழி,காரைக்குடி அருகில் வையிரவன்பட்டி மற்றும் இலுப்பைக்குடி,அண்ணாமலைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீகாகா ஆஸ்ரமம்(சித்தர்களால் ஸ்தாபிக்கப்பட்டது); போன்ற இடங்களில் மட்டுமே அமைந்திருக்கின்றன.


அதுபோல,1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு வரும் மார்கழி மாதத்து பவுர்ணமிகளில் பதினெட்டு சித்தர்களும் கழுகுமலைக்கு சூட்சுமமாக வருகிறார்கள்.24.12.2011 இல் வந்தார்கள்;28.12.2012 இல் வந்தார்கள்;இந்த வருடம் 2013 இல் 16 & 17.12.2013 வர இருக்கிறார்கள்.


இந்த வருடம் 2012 இல் ஏராளமான ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் கழுகுமலைக்கு வருகை தந்தார்கள்;அவர்களில் பலரது பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன; நியாயமான நோக்கங்கள் நிறைவேறியிருக்கின்றன;அதிர்ச்சியூட்டும் ஆச்சரிய ஆசிர்வாதங்கள் பலருக்குக் கிடைத்திருக்கின்றன;அவைகளின் தொகுப்பே இந்த தொடர் ஆகும்.


ஒரு தம்பதி! கணவர் தனியார் நிறுவனத்தில் ஒரு ஊரிலும்,மனைவி அரசுப்பணியில் கடைநிலை ஊழியராக இன்னொரு ஊரிலும் பணிபுரிந்து வருகின்றனர்.இந்தத் தம்பதியினர் தமது வாழ்நாளின் ஒவ்வொரு செயலிலும் நேர்மையாகவும்,நீதிப்படியும்,யாருக்கும் தீங்குதராமலும் வாழ்ந்து வந்தனர்;நேர்மையாக இருப்பவர்களுக்கு ஒரு சுபாவம் உண்டு;நமது நேர்மையே நம்மை வாழ்க்கையில் உச்சாணிக்கொம்புக்குக் கொண்டு சென்று விடும் என்று! இந்த சுபாவத்தினால்,இவர்கள் தம்மோடு பழகும் அனைவரையும் நம்பிவிடுவார்கள்;எந்த விஷயத்திலும் வெளிப்படையாகப் பேசவும்,பழகவும் செய்வார்கள்:விளைவு? இவர்களுக்கு இவர்களோடு பழகுபவர்களே அனுகூல சத்ருக்களாக இருப்பார்கள்:இது அவர்களுக்குப்புரியாது.இவர்களின் நேர்மையால் இவர்களுக்கு அடிக்கடி பணநெருக்கடி உண்டானாலும்,சமாளித்து வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு வந்தார்கள்;அரசுப்பணியில் சேர்ந்து இருபது ஆண்டுகளாக இந்தப் பெண்மணிக்கு வர வேண்டிய பதவி உயர்வு வரவில்லை;இந்த சூழ்நிலையில்,நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவை வாசித்துவிட்டு,28.12.2012 அன்று கழுகுமலை அபூர்வ கிரிவலத்தில் கலந்து கொண்டனர்.அப்போது நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகரை(செல் எண்:9677696967) தனிப்பட்டு சந்தித்து தமது நியாயமான கோரிக்கை நிறைவேறிட ஆன்மிக ஆலோசனை கேட்டார்கள்.அவர் கூறியபடி,கழுகாச்சல மூர்த்தியாகிய முருகக்கடவுளை சில குறிப்பிட்ட பொருட்களுடன்  குறிப்பிட்ட நாளில்,குறிப்பிட்ட நேரத்தில் பூஜை செய்தார்கள்;


அவ்வாறு பூஜை செய்த ஒன்பதே ஒன்பது நாட்களில் அந்த பெண்மணியின் அலுவலகத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.இவரது அலுவலகத்திற்கு திடீரென உயரதிகாரிகள் விசிட் செய்தனர்;இவரது அலுவலகத்தின் செயல்பாடுகளை மதிப்பிட்டனர்;அப்போதுதான் இந்தப் பெண்மணியின் நேர்மையான பணித்திறனை அறிந்து வியந்தனர்;பாராட்டினர்;இவருக்கு கடந்த இருபது ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த பதவி உயர்வை உரிய இன்க்ரீமெண்டுடன் கிடைக்க உடனடி உத்தரவு இட்டனர்.அந்தப் பெண்மணியின் ஆனந்தக் கண்ணீருக்கு அளவே இல்லை;சுமாராக ஒரு மாதம் வரையிலும் இந்தப் பெருமிதத்திலிருந்து மீளவே இல்லை;(இது போன்ற ஒரு நெருக்கடியை அனுபவித்து மீண்டவர்களுக்குத்தான் இந்த உணர்வு புரியும்!!!)


மேலும்,கடந்த இருபது ஆண்டுகளாக இவருக்கு பதவி உயர்வு கிடைக்காமல் இருந்தமைக்கான காரணமும் அடுத்த சில வாரங்களில் தெரிய வந்தது;இவர் வெளிப்படையாகவும்,நேர்மையாகவும் செயல்பட்டதால்,இவரோடு உடன் பணிபுரிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இவருக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய பதவி உயர்வை தடுத்துவிட்டனர்;யாரால் இவருக்குப் பதவி உயர்வு கிடைக்குமோ அந்த உயரதிகாரிகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி தனது பதவி உயர்வை உறுதி செய்து கொண்டனர்;இப்படி ஒவ்வொரு ஆண்டும் இவரது சக ஊழியர்களும்,ஊழியைகளும் தனது ‘தனித் திறமை’யால் பதவி உயர்வினை எட்டிட இவரோ தனது நேர்மை மட்டுமே தம்மை உயர்த்தும் என்று நம்பி இருபது ஆண்டுகளாக கடைநிலை ஊழியராக வாழ்ந்துவிட்டார்.(இந்தக் கணத்தில் நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட நீங்களும் முதல்வராகலாம் என்ற புத்தகத்தில் வரும் “எப்போதும் ஒரே மாதிரியாக இராதீர்கள்” என்ற அத்தியாயமே நினைவுக்கு வருகிறது) இந்தப்பெண்மணியைப் போன்ற நேர்மையும் அப்பாவித்தனமும் நிறைந்தவர்கள் தமிழ்நாட்டில் எல்லாத் துறையிலும் இருக்கிறார்கள்;அரசுப்பணி,தனியார்ப் பணி,தொழில்துறை எங்கும் இருக்கிறார்கள்;அவர்களின் நேர்மையான செயல்திறன் கூட யார்யாரையோ பதவி உயர்வுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது;அமைந்தும் வருகிறது.இப்படிப்பட்டவர்களுக்கு நமது ஆன்மீககுருவைப் போன்றவர்களின் ஆன்மீக அரவணைப்பு இருந்தால் மட்டுமே அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.இன்று ஆன்மீகம் என்ற பெயரில் ‘உணர்வுபூர்வமான வணிகம்’(Emotional Trade) நடைபெற்று வருகிறது.ஆனால்,ஆன்மீகத்தை பணநோக்கமற்ற சேவை நோக்குடன் செய்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ