RightClick

பன்னிரு திருமுறைகள் இணையத்தில்!!!சைவ சமயத்தின் தொன்மையையும்,பெருமைகளையும் பறைசாற்றும் இலக்கியங்கள் பன்னிருத் திருமுறைகள் ஆகும்.இவைகளைப் பரப்புவதே ஆதீனங்களின் நோக்கம் ஆகும்.

இவ்வாறு பன்னிருத் திருமுறைகளை சைவசமயமக்களிடம் பரப்புவதன் மூலமாக மனித சமுதாயத்திற்கு ஒழுக்கத்தையும்,அதன் மூலம் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதையும்,அவ்வாறு பாதுகாப்பதன் மூலமாக சிவனை அடையும் வழிமுறைகளை யுகம்,யுகமாக உணர்த்துவதையும் புண்ணியம் தரும் கடமையாகவும் செய்துவருகின்றனர்.


எனவே,பன்னிருதிருமுறைகளை வாசித்தும் புரியாதவர்கள் உங்கள் ஊர்களில் செயல்பட்டுவரும் சேக்கிழார் மன்றம் அல்லது பன்னிருதிருமுறை மன்றத்தைத் தொடர்பு கொள்ளவும்.இதில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

கோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்!!!

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. 

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. 

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. 

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த 

சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. 

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே! 

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! 

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். 

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன. 

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" 

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

இசையின் மகத்துவத்துக்கு இருஎடுத்துக்காட்டுக்கள்!!!கேள்வி:பழங்காலத்துப் பாடலுக்கும், இந்தக் காலத்துப் பாடலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? அப்படியானால் அந்த மகத்துவம் என்ன?

இசைஞானி இளையராஜாவின் பதில்:எட்டாம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவம்:ஒரு ஏரிக்கரையில் ஒரு அம்மா அழுது கொண்டிருந்தாள்.அங்கு வந்த திரு.சுந்தரப் பெருமான் என்ன? என்று அந்த அம்மாவைக் கேட்டார்.அந்த ஏரியின் முதலை ஒன்று தன் குழந்தையை விழுங்கிவிட்டது;நான்கு நாட்களாக நான் அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறேன் என்றும் அழுதவாறே பதிலளித்தாள்.
உடனே,திரு.சுந்தரமூர்த்தி ஒரு பதிகம் பாடினார்.அதே முதலை கரைக்கு வந்து பிள்ளையைக் கக்கிச் சென்றது. தின்று ஜீரணித்த பிள்ளை எந்த காயமும் இல்லாமல் உயிரோடு திரும்பி வரச் செய்த பாடலின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது?


அதே போல் இன்றும் ஒரு சம்பவம்
உடுமலைப் பேட்டையில் கேரள மலையை ஒட்டிய ஒரு கிராமம்.ஒரு டூரிங் தியேட்டரில் ஒரு திரைப்படம் ஓடியது.காடுகளில் இருந்த யானைக்கூட்டம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் காட்டை விட்டு கூட்டமாக ஆற்றைக்  கடந்து வந்து,இந்த டூரிங் தியேட்டருக்கு வெளியே அமைதியாக இருந்து ஒரு பாடலை அந்தத் தியேட்டரில் கேட்டுவிட்டு அப்படியே எந்தத் தொந்தரவும் செய்யாமல் தோட்டப்பயிர்களை அழிக்காமல் அமைதியாகச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டன என்று செய்தி அறிந்தேன்.
அந்தப்பாடல் ‘வைதேகிக் காத்திருந்தாள்’ படத்தில் ராசாத்தி உன்னை என்ற பாடலாகும்.


இந்தப்பாடலின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது? மனிதர்களைத் தாண்டி, மிருகங்கள் என்று சொல்லக்கூடிய உயிரினங்களின்  இதயத்தை இழுத்து அவைகளுக்கு ஏதோ ஒன்றைத் தருவது போலல்லவா இருக்கிறது?
இதை மனிதர்களாகிய நாம் எப்படி எந்தக்கணக்கில் புரிந்து கொள்வது? ஆக , பாடலின் மகத்துவம் எந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

நன்றி:குமுதம் வார இதழ்,பக்கம் 86,87;வெளியீடு 20/2/13

வெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே!!!நமது ஆன்மீக  குரு திரு.சகஸ்ரவடுகர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இதுவரை சுமாராக ஐந்தாயிரம் ஆத்மாக்களின் கர்மவினைகள் தீர ஆன்மீக வழிகாட்டுதல் செய்து அனைவருக்கும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து  தொடர்ந்து ஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும்  என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும்? என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆகும்)


இந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)இதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.


20.2.2013 புதன் மாலை 6.37 முதல் இரவு 8.37 வரை
27.2.2013 புதன் மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை
6.3.2013 புதன் மாலை 6.26 முதல் இரவு 8.26 வரை
13.3.2013 புதன் மாலை 6.20 முதல் இரவு 8.20 வரை
20.3.2013 புதன் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை
27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 வரை

நீண்ட நாட்களாக தகுந்த வரன்  கிடைக்கவில்லையே? என்று ஏங்குபவர்கள்,அவர்களின் பெற்றோர்,சகோதர சகோதரிகள்,நட்பு வட்டம் என யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் மேற்கூறிய வழிமுறையில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் நிச்சயம் தகுந்த வரன் விரைவில் அமைந்துவிடும்.


அலுவலகத்தில் நியாயமான பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்காமல் திண்டாடுபவர்களும் இவ்வழிபாடு மூலமாக நிச்சயமாக அவர்கள் மகழ்ச்சியை அடைவார்கள்.


நீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் மனமுருகி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயமாக ஸ்ரீகாலபைரவரின் அருளால் புத்தரபாக்கியத்தைப் பெறுவார்கள்


பிறரின் சதிச்செயல்களால் பிரிந்திருக்கும் கணவன்/மனைவி இருவரில் யாராவது ஒருவர் மட்டும் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவரிடம் முறையிட்டால்,பிரிந்தவர் சேருவர்.(அர்ச்சகர்/பூசாரியிடம் புலம்ப வேண்டாம்.அது புதுச்சிக்கல்களை உருவாக்கிவிடும்)


கடுமையான பண நெருக்கடியில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் வேண்டினால் நிச்சயமாக பணவரவு நிச்சயம்!


தனது திறமையும்,படிப்புக்கும் ஏற்ற வேலை தேடுவோர் அல்லது வேறு சிறந்த சம்பளத்தில் இடமாற்றத்துக்கு விரும்புவோர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்தால் அவர்கள் விரும்பும் வேலை கிட்டிவிடும்.


அன்புக்கு ஏங்கித் தவிப்பவர்கள்,தனிமையில் வாழ்ந்து தன்னையே வெறுத்து தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் அவர்களின் தனிமை போய்விடும்;தகுந்த நட்பு அல்லது வாழ்க்கைத் துணை அல்லது நெருக்கமான சிநேகிதம் உண்டாகும்.


(பலதமிழ்நாட்டுக்குடும்பங்களில் பணம்,பணம் என்று ஏங்குவதால் ரத்த உறவுகளிடம் ஆறுதலாகக்கூட பேச நேரமில்லாமல் இருக்கிறார்கள்;அல்லது வேண்டுமென்றே பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.இதனால் தான் பருவ வயதில் இருக்கும் மகன்/ள் அல்லது மனைவி/கணவன் தடம் மாறிச் செல்கிறார்கள்)

ஏழரைச்சனியால் அவதிப்படும் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிக ராசியினர் மற்றும் அஷ்டமச்சனியால் கஷ்டப்படும் மீனராசிக்காரர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரைச் சரணடைந்தால் அவர்களின் மன உளைச்சல்கள்,பண நெருக்கடிகள்,வர இருக்கும் அவமானங்கள் விலகிச் சென்றுவிடும்.

ப்ளாக் மெயில் அல்லது வீண் பழியால் சிக்கித் தவிப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.

வெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்போர் அல்லது டெபுடேஷனுக்காக காத்திருப்போர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை மனதார வழிபட்டால் நிச்சயமாக அவர்கள் வேண்டியது கிட்டும்.
தொலை தூர நாடுகளில் வசிப்போர் இங்கே இருக்கும் எட்டு பைரவர்களை நோக்கியவாறு அமர்ந்து பைரவ சஷ்டிக்  கவசம் பாடினாலே போதுமானது;

மேற்கூறிய நேரத்தில்,ஸ்ரீகாலபைரவர் சன்னதியின் முன்பாக பைரவ சஷ்டிக்கவசம் பாடலாம்;ஸ்ரீகால பைரவர் மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்கலாம்.
முயன்று பார்ப்போமா!!! ஸ்ரீகால பைரவரின் அருளைப்பெறுவோமா!!!


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்!!!


மழுசூலம் கரத்தேந்தி- மறை வாகனத்தேறி-மாந்தர்
காக்கும் விழுதான தீச்சிகையும்-வெற்றிமிகு புன்னகையும்-
விண்ணோர் வேந்தின் பழுதானபகை நீக்கி-சுரர் சேனை
அழிவித்து-பாரைக்காத்து-தொழுவோர்க்கு துணைசெய்யும்
தோன்றல் எம் பைரவரே-துணைத்தாள் காப்புகாலத்தை வென்றவனே!  காசிக்குச் சென்றவனே! கயிலை
வாழும் மூலத்தை காட்டியவா! சூலத்தை நீட்டியவா!
ஞமலி வேதக்கோலத்தை காட்டியவா! கோபம் கொண்டு
வேழத்தை உரித்தவனே! பைரவா! பணிகின்றோம்
வினைகள் தீர்ப்பாய்

வெண்தலை மாலை வாழி- விலையிலா பணிப்பூண் வாழி-
புண்தலை கருமுள் பாசம் பொருதொடி கபாலம் வாழி-
மண்டு அலை வாரி வாய்பெய் மணி அரிச்சிலம்பு வாழி
கண்டு அலை மொழி மார்பன் தோல்கரிய கஞ்சுகமும் வாழி
வாக்கிய விலாழி வாய்த்து மணியணி மிடற்றது இம்பர் நோக்கிய
கட்டு நீலநொறில் வயப்புரவி வாழி! தூக்கிய துளிர் மென்
தாலுச்சுருண்டவால் சுணங்கன் வாழி பாக்கிய வடுகநாத
பைரவர் வாழி! வாழி!

ஒரு கையில் உடுக்கு மற்றொரு கையில் நாகபாசம்
ஒரு  கையில் முத்தலைச்சூல் ஒரு கையில் கபாலம் கொண்டீர்
ஒரு கையும் குரைப்பாமோத்தை இசைக்கு நாய்சூழ
வில்வம் இருகையும் சூழ்வனத்தில் இயல் வைரவன் தாள்போற்றி!

மதியிருக்கும் சடைமுடியும் மூன்று கண்ணும் மணிமாலை
திருக்கரமும் திருநீற்றுப் பூச்சும் விதியெழுதும் வேதனவன்
கபாலம் சூடும் வியன்கழுத்தும் முப்புரிநூல் விரிந்த மார்பும்
பதிபுகழ் சூலமுடன் விளங்கக் காட்டி-பார்புரக்கும்
பரம்பொருளே,நிதிவழங்கி புதுவாழ்வு தருபவனே-
திருமெய்ஞானபுரிக்கோயில் பைரவனைப் போற்றி வாழ்வோம்
நன்றி:தலபுராணங்கள்
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

பைரவர் வழிபாட்டுப் பாடல்கள்பரமனை மதித்திடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே
யொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு
தண்ட முன் புரிதரு வடுகனைப் போற்றிச் செய்குவோம்(கந்த புராணம்)

தனம் பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்ற
உளம்பொலி காசிமேவும் உயிர்கள் செய்பாவமெல்லாம்
களம் பொலியாது தண்டங்கண்டற வொழிந்து முக்தி
வளம்பொலி வகைசெய் காலவயிரவற் கன்பு செய்வோம்(மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்)

சீரார் மதி சடையும் திருநீரும் திருமுகமும் கூரார்ந்த
முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில் மிகும் காராரிந்த மேனி
பிறவியிலேயே வருமுன் காட்சி வாரார்
வளர் தெட்சிணகைலாச வடுக பைரவமே


வஞ்சகர் அஞ்சத்தக்க வாள் நகை வதனம் வாழி
வெஞ்சமத்து அசுரர் செற்ற வீர அட்டகாசம் வாழி
புஞ்சவல் இருள்வெல்லோதி பொறியினை அடக்கு நல்லார்
நெஞ்சகம் கவரா நிர்வாணக் கோலம் வாழி


விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர்  கோல காலபைரவனாகி வேழம் உரித்து உமை
அஞ்சக்கண்டு ஒண்திருமேனி மணிவாய்விள்ள சிரித்தருள்
செய்தார் சேறைச் செந்நெறி செல்வனாரே(அப்பர் சுவாமிகள்)
 ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகுதிநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்!!!
வடுகபுரி என்னும் ஊரில் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவர் இருந்தார்.அவர் கணிப்பது நிச்சயம் நடந்தே தீரும் என்பதே அவருக்கு அந்த ஊரில் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் அவருக்கான புகழைப்பரவச் செய்திருந்தது.அந்த ஜோதிடர் ஸ்ரீகால பைரவரை தினமும் வழிபடும் பைரவ உபாசகராக இருந்ததால்,இந்தப்புகழைப்  பெற்றிருந்தார்.ஒரு நாள் மாலை நேரத்தில் அந்த ஜோதிடரைக் காண ஒரு விவசாயி வந்தார்.

ஏழை விவசாயியான அவர் தனது ஜாதகத்தை, ஜோதிடரிடம் கொடுத்து, ‘எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறது.என் வாழ்வு சிறப்பாக அமைய என் ஜாதகத்தில் ஏதாவது வழியிருக்கிறதா? என்று பார்த்துக்கூறுங்கள்’என்று கேட்டுக் கொண்டார்.ஜோதிடரும் அந்த விவசாயியின் ஜாதகத்தைக் கணிக்கத் தொடங்கினார்.

ஜாதகத்தை கணித்துக் கொண்டிருந்த ஜோதிடரின் முகம் சுருங்கியது.அதற்குக் காரணம் அந்த விவசாயியின் வாழ்வு அன்று இரவு 8 மணியுடன் முடிவடைவதாக ஜாதகம் கூறிற்று.இரவு 8 மணிக்கு அவருக்கு ஏற்படும் கண்டமானது அவரது உயிரைப் பறிக்கும் என்று அந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்து கொண்ட ஜோதிடர், அதனை அந்த விவசாயியிடம் எப்படி கூறுவது என்று மனக்கஷ்டம் அடைந்தார்.
பின்னர் விவசாயியிடம் நேரடியாக எதுவும் கூறாமல், “ஐயா,எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது;அந்த நினைவு இல்லாமல் உங்களுக்கு ஜாதகம் பார்க்க உட்கார்ந்துவிட்டேன்.இன்று விட்டால் அந்த வேலை தேங்கிவிடும்.எனவே,உங்கள் ஜாதகம் என்னிடம் இருக்கட்டும்.நீங்கள் இப்போது சென்றுவிட்டு, நாளைக் காலையில் வாருங்கள்.நான் உங்களுக்குப் பதில் கூறுகிறேன்”என்று மழுப்பலான பதிலைக் கூறினார்.
ஜோதிடர் கூறுவது உண்மை எனறு நம்பிய விவசாயியும்,நாளைக் காலை தங்களை வந்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.அப்போது அங்கு வந்த ஜோதிடரின் மனைவி, ‘உங்களுக்கு எந்த வேலையும் இல்லை என்று சொன்னீர்களே! பிறகு ஏன் அவரிடம் பொய் சொல்லி அனுப்பினீர்கள்?’என்று கேட்டாள்.


‘இங்கிருந்து புறப்பட்டுப் போகிறாரே’ அவரது ஆயுள் காலம் இன்று இரவோடு முடியப் போகிறது.அதை அவரிடம் தெரிவிக்க எனக்கு மனமில்லை;அதனால் தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்.அவர் உயிரோடு இருந்தால் தானே நாளை என்னை வந்து பார்க்க முடியும்? என்று கூறினார் ஜோதிடர்.


இதற்கிடையே ஜோதிடரின் வீட்டில் இருந்து  புறப்பட்டுச் சென்ற விவசாயி,தனது ஊருக்கு காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அவர் சென்று கொண்டிருந்த நேரத்தில் வானம் மேக மூட்டமாகி இருள் சூழ்ந்தது.சிறிது நேரத்தில், மழைத் தூறல் ஆரம்பித்து,வலுப்பெற்றது. இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது.இதனால் விவசாயியால் மேற்கொண்டு தனது பயணத்தைத் தொடர முடியவில்லை;

அப்போது அந்தப் பகுதியில் பாழடைந்த சிவன் கோவில் ஒன்று தென்பட்டது.அங்கு சென்று மழைக்கு ஒதுங்கினார்.கோவிலின் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த அந்த விவசாயி,பாழடைந்து கிடக்கும் கோவிலின் நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார்.மேலும் அவரது மனதில் சில எண்ணங்கள் ஓடின. “கோவிலின் கருவறையும்,முன் மண்டபமும் இந்த அளவுக்கு கேட்பாரற்றுக் கிடக்கிறதே! மண்டபத்தின் உறுதித்தன்மையை அதில் வளர்ந்துள்ள ஆலமரமும்,அரசமரமும் அசைத்துப்பார்க்கும் வகையில் முளைத்திருக்கின்றதே! நான் மட்டும் ஏழையாக இல்லாமல்,போதுமான பணத்துடன் இருந்தால்,இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்” என்று நினைத்துக் கொண்டார்.
அத்துடன் அவர் மன ஓட்டம் நிற்காமல் தொடர்ந்தது.சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்  கொண்டார்.கோபுரம்,ராஜகோபுரம்,பிரகாரங்கள்,மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார்.கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி,வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து,கும்பாபிஷேகம் நடத்தி,கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓட விட்டார்.

அந்த சிந்தனையின் ஊடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியை பார்த்த போது,அங்கே அவரது தலைக்கு  மேல் கருநாகம் ஒன்று படமெடுத்து நின்று,அவரைக் கடிக்கத் தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.ஒரு நொடியும் தாமதிக்காமல் மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.மண்டபத்தில் இருந்து அவர் 200 அடி தள்ளிப்போன மறுநொடியே அந்த மண்டபம் அப்படியே நொறுங்கி விழுந்ததைக் கண்டு விவசாயி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

அப்போது மணி சரியாக இரவு 8 ஐக் காட்டியது.மழை ஓய்ந்து போனது.அங்கிருந்து விவசாயி தனது வீடு திரும்பினார்.மறுநாள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஜோதிடரை சந்திக்கச்சென்றார். விவசாயியைப் பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை;ஒருவேளை தான் ஜாதகத்தை சரியாக கணிக்கவில்லையா? என்ற சந்தேகமும் கூட அவருக்குத் தோன்றியது.

தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ஜோதிட நூல்களை ஆராய்ந்தார்.கணக்கு சரியாகவே இருந்தது.அவர் நேற்று இரவே இறந்திருக்க வேண்டும் என்றுதான் ஜோதிட நூல்களின் ஜோதிட விதிகள் வலியுறுத்துகின்றன.இது போன்ற கண்டத்தில் இருந்து ஒருவன் தப்பிக்க வேண்டுமானால்,அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்க வேண்டும் என்றும் ஜோதிட பரிகார சம்ஹிதைகள் தெரிவித்தன.


ஆனால்,இவரோ ஏழை விவசாயி! இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடியும்? அதுவும் ஒரு இரவுக்குள் என்று நினைத்தபடியே, ‘நேற்று இரவு நடந்தது என்ன?’ என்பதை அந்த விவசாயியிடம் கேட்டார் ஜோதிடர்.அவரும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினார்.ஜோதிடருக்கு ஈசனாகிய ஸ்ரீகாலபைரவரின் அருளாற்றல் புரிந்துவிட்டது.அவர் அந்த விவசாயிக்கு மேற்கொண்டு கூற வேண்டிய பலன்களை கூறி அனுப்பினார்.


அந்த விவசாயி புறப்பட்டுச் சென்றதும்,தனது தெய்வத் தந்தையாகிய ஸ்ரீகாலபைரவரை நினைத்து தியானத்தில் அமர்ந்தார் அந்த ஜோதிடர்.அந்த ஜோதிடரின் ஜோதிட சந்தேகங்களை தீர்த்து வைத்தார் ஸ்ரீகால பைரவர். 

ஒருவன் மானசீகமாக ஒரு காரியம் செய்வதாக நினைத்தாலே,அதை அவன் நிஜத்தில் செய்து முடித்ததாகவே அர்த்தம்;அந்த விவசாயியின் பிறந்த ஜாதகத்தில் பூர்வபுண்ணியத்தில் இருந்த சனிபகவானே இந்த எண்ணங்களை உருவாக்கிடக் காரணமாக இருந்தார்’ என்பதை ஸ்ரீகால பைரவர் தெரிவித்தார்.மன திருப்தியோடு ஸ்ரீகால பைரவருக்கு நன்றிகளைத் தெரிவித்து விட்டு,ஜோதிடர் அன்றைய கடமைகளைச் செய்யத் துவங்கினார்.


நமது எண்ணங்கள் வலுவாகவும்,உயர்வாகவும் இருந்தால் நமது விதியையே மாற்றிவிட முடியும் என்பதை இந்த உண்மைச் சம்பவம் தெரிவிக்கிறது.


இப்படிக்கு ஜோதிட முனி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஞானசத்சங்கத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள்!!!

பாம்புக்கோவில்சந்தையில் மாதவானந்த சுவாமிகளின் ஜீவ ஐக்கியம் அமைந்திருக்கிறது.தமிழ்நாட்டில் மறைந்து வாழ்ந்து காக்கும் மகான்களில் மிதமிஞ்சிய சக்திவாய்ந்த மகான் மாதவானந்தசுவாமிகள் ஆவார்.இதை நமது பகுத்தறிவால் உணரவே முடியாது;இங்கே ஒருமுறை வந்து ஓரிரவு தங்கி தியானம் செய்தால் தான் ஓரளவு உணரமுடியும்.பூர்வபுண்ணியங்கள் அதிகமாக இருப்பவர்கள்,ஒரே இரவிலும்,ஆர்வக்கோளாறு உள்ளவர்கள் மாதம் ஒரு நாள்வீதம் பத்துநாட்கள் வரையிலும் வந்து,தியானம் செய்தப்பின்னரே உணர முடியும்.

23.2.13 சனிக்கிழமை இரவு நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல ஆன்மீகக்கடல் வாசகர்கள் வருகை புரிந்தார்கள்.இதுவரை எந்த ஒரு ஆன்மீக அமைப்பும்,ஆன்மீகத் தலைவரும் உபதேசம் செய்யாத பல அரிய ஆன்மீக முன்னேற்ற வழிமுறைகளை இலவசமாக மிக எளிய தமிழில் போதித்தார் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!!!

அந்த போதனையை அபிஜித் நேரத்தில் செயல்வடிவில் டெமோ செய்து காட்டி,ஒவ்வொருக்கும் அவரவர் ஆத்ம சக்தியின் அளவைப் பொறுத்து தீட்சைகள்  வழங்கப்பட்டன.இந்த செயல்வடிவினை தொடர்ந்து பின்பற்றுவோர்களுக்கு அடுத்த நூறு நாட்களுக்குள் அவர்களைச் சுற்றி இருக்கும் சூட்சும உலகத்துடன் தொடர்பு ஏற்படும்;அதுமட்டுமல்ல;பிறரை விடவும் அதிகமான அளவில் ஆத்ம சக்தி அதிகரிக்கும்;தபோ பலமும் உயரும்;வில் பவரும் பலமடங்கு அதிகரித்துவிடும்;சிலர் தமதுமுற்பிறவி குருவாகிய சித்தர் ஒருவரது தொடர்பு நிரந்தரமாக உண்டாகிவிடும்;இவ்வளவு கிடைத்தாலும்,அவர்களின் இல்லற வாழ்க்கை சிறிதும் பாதிக்காது;

ஒவ்வொருவரும் தமது தீட்சையைப்  பாதுகாப்பது எப்படி? தீட்சையை தொடர்ந்து செயல்படுத்தும்போது எந்தவிதமான முன்னேற்றங்களை உணருவார்கள்? தீட்சையின் அடுத்தடுத்த கட்டங்களில் நாம் விரும்பும் சித்தரை/கடவுளை/மகானை/குலதெய்வத்தை/ஜீவசமாதியினுள் வாழ்ந்து வரும் துறவியை எப்படி தொடர்பு கொள்வது?அந்தத் தொடர்பைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி? அந்த சித்தர் தொடர்பின் மூலமாக நமது தேவைகளை நிறைவு செய்வது எவ்வாறு?என்பது பற்றி விரிவான விளக்கங்களை விரித்துரைத்தார்;


பின்னர் அனைவரும் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்;அன்னதானத்தின் நிறைவாக,பொதுவான ஆன்மீக சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன;


முடிவில் வர இருக்கும் அழிவுகளிலிருந்து பூமியைப் பாதுகாத்திட கூட்டு தியானம் செய்தோம்;


நிறைவாக ஈஸ்வரபட்டரின் புகைப்படம் தீட்சையுடன் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன.இந்த அரிய ஞான சத்சங்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,திருநெல்வேலி,மதுரை,கோயம்புத்தூர்,    திருப்பூர்,திருச்சி,தஞ்சாவூர்,சென்னை,திருப்பத்தூர்,ராமநாதபுரம்,       மயிலாடுதுறை,பரமக்குடி,சேலம்,பாண்டிச்சேரி போன்ற நகரங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

வெயிலோடு விளையாடு!!!


வெயிலோடு விளையாடும் வேளை வந்துவிட்டது. சேனல்கள், எஃப்.எம்-கள், விளம்பர ஹோர்டிங்குகள் என எங்கெங்கும், 'தாகம் எடுத்தால் தண்ணீரைத் தேடக் கூடாது... எங்கள் நிறுவன குளிர்பானத்தைத்தான் தேட வேண்டும்!’ என்ற விளம்பர வெள்ளம் நுரை ததும்பப் பாயும். இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 12 லிட்டர் கோலா பானம்தான் அருந்துகிறார்களாம். ஆனால், இதுவே அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1,665 லிட்டர். இந்தியாவிலும் கோலா உறிஞ்சலை அந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சினிமா பாட்ஷா முதல் கிரிக்கெட் கேப்டன் வரை அந்த குளிர்பானங்களைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த பானங்கள் உண்டாக்கும் கேடுகளைப் பற்றி அவர்கள் மறந்தும் வாய் திறக்கமாட்டார்கள்.
 சமீபத்தில் 'தி சன்’ பத்திரிகை இது போன்ற குளிர்பானங்களை அருந்துவதால் உண்டாகும் கேடுகளைப் பட்டியலிட்டு இருந்தது. ஒரு பாட்டில் கோலாவில் குறைந்தபட்சம் 67 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கப்படுவதால் மிக விரைவிலேயே தாக்கும் சர்க்கரை நோய், புளித்த சுவை தரும் பாஸ்பேட் உப்பு உண்டாக் கும் சருமப் பாதிப்பு, எலும்புகளை அரிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் சிக்கல், பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கன்னாபின்னா எனச் சிதைக்கும் சினைப்பை நீர்க்கட்டித் தொல்லை, கணையப் புற்று என மிரட்டலாக நீள்கிறது அந்தப் பட்டியல். இவை அனைத் துக்கும் மேலாக, இது போன்ற கோலா பானங் களை அருந்தும் நபருக்கு, பிறரைக் காட்டிலும் 61 சதவிகிதம் இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.
விஷயம் தெரிந்த பலர் இப்போது இந்த 'ஃபிஸ்ஸி’ பானத்தை (உடல் நலத் துக்கு உலைவைக்கும் இது போன்ற குளிர்பானங்களின் செல்லப் பெயர்!) விட்டு விலகி, பழச்சாறே ஆரோக்கியம் என்று முடிவு எடுத்துச் செயல்படுவதை உணர்ந்துகொண்ட கோலா நிறுவனங்கள், தற்போது அதற்கு ஏற்பத் தங்கள் சந்தைத் திட்டங்களையும் மாற்றிக்கொண்டு உள்ளன. இப்போது அந்த நிறுவனங்கள் பழச்சாறையே விதவிதமாக சந்தைப்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.
'தோட்டத்தில் இருந்து நேராக’ என்ற விளம்பரத்துடன், டெட்ராபேக்கில் 'கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் இல்லவே இல்லை. அப்படியே பழத்தைப் பிழிந்து உருவாக்கிய பழச்சாறுபோலவே’ என அறிவிக்கும் இந்தப் பழச் சாறு சமாசாரம் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. 'அவர்கள் சொல்வதுபோல பழச் சாறில் செயற்கை சமாசாரம் எதுவுமே சேர்க்கப்படவில்லையா?’ என்றால் அதன் தொழில்நுட்பம் இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்பமே 'மர்மப் பின்னணி’யுடன் செயல்படும் ரகசியம்.
பழத்தைக் கழுவி(washing), சாறு பிழிந்து (extracting) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து (blending), பழத்தின் எண்ணெய்த் தன்மையை நீக்கி (de-oiling) விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க ஆக்சிஜனை வெளியேற்றி (deaerating), பால் பதப்படுத்துவதுபோலப் பதப்படுத்தி (paste urize), கசப்பு நீக்கி (debittering)  அமிலத்தன்மையைக் குறைத்து அல்லது கூட்டி (acid stabilization), ஆடை அல்லது மேகம் போல் படர்வதைச் சீராக்கி (cloud stabilization), கொதிக்கவைத்து (evaporating) பிறகு குளிர்வித்து ( freezing)  திடப்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் பல இயந்திரங்களில் இந்தப் பழங்களைப் படுத்தி எடுத்து, கடைசியாக பழச் சாறின் அடர்வை (concentrate)  பெறுகின்றனர். இந்தப் பழ கான்சன்ட்ரேட்டைத்தான் நம் ஊரின் பழ குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில நேரத்தில் அமிலச் சீராக்கிகளும் சேர்த்து, டெட்ராபேக்கில் அடைத்து கடையில் விற்கிறார்கள். பிரேசில், பெரு, ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்ரேட் சத்துக்கள் பெரும் குளிர்க்கிடங்கு வசதிகொண்ட கப்பல்களில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டு, இறுதியாக இந்தியத் தண்ணி தெளிக்கப்பட்டு, 'இது இயற்கை பானம்’ என்ற அடைமொழியுடன் விற்பனைக்கு வருகிறது.
இப்படித் துவைத்து, பிழிந்து, காயப்போட்டு வரும் பழச்சாற்றினை விட, பழத்தை அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமாகும்.  பழங்களில் பொதிந்திருக்கும் உயிர்ச் சத்துக்களில் பலவும் சில ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகளும் இந்த உழவாரப்பணியில் ஊக்கம் இழந்துவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எப்போதேனும் அவசரத்துக்கு அந்தப் பானங்களால் தாகம் தணித்துக்கொள்வது சரி. ஆனால், பெட்டி பெட்டியாக வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் புதைத்து அதை உறிஞ்சிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. சீஸனுக்கு சீஸன் மாறுபடும் பழத்தின் அமிலத் தன்மையையும், இனிப்புச் சுவையையும் ஈடுகட்ட இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்திகள் உங்கள் உடம்புக்கு நல்லதும் இல்லை. பழத் துண்டுகளை அப்படியே சாப்பிடுவதால் அதில் உள்ள கரையும், கரையாத நார்ப் பொருட்கள் கொழுப்பைக் குறைப்பது முதல், மலச்சிக்கல் தீர்ப்பது வரையில் கொடுக்கும் பலன்கள் காம்போ ஆஃபர்! பதப்படுத்துதல், பத்திரப்படுத்துதல், பயணித்தல், பாதுகாத்தல் என வரிசையாகச் சூழலைச் சிதைக்கும் நடவடிக்களை மேற்கொண்டு பளபளப்பான பாட்டிலில் வரும் திரவத்தைக் காட்டிலும் சந்தைத் திடலில் வாசலில் கூவிக் கூவி விற்கப்படும் கொய்யாவை வாங்கிக் கழுவிச் சாப்பிடுவது சூழலுக்கும் சேர்த்து சுகம் தரும்.
மோரும், இளநீரும், பதநீரும் மேலே குறிப்பிடப்பட்ட எந்தப் பிரச்னையும் இல்லாதவை. கூடுதல் மருத்துவ மகத்துவம்கொண்டவை. சூழல் சிதைக்காதவை. பலர் நினைப்பதுபோல இளநீர் வெறும் இனிப்பும் உப்பும் தரும் உடனடி பானம் மட்டும் அல்ல; சமீபத்திய ஆராய்ச்சிகள், இளநீரில் உள்ள அற்புதமான நொதிகளின் ஆற்றலைக் கண்டு வியப்புத் தெரிவித்துள்ளன. இளநீரில் உள்ள 'சைட்டோகைனின்’ வயதாவதைத் தடுத்து, புற்று வளர்ச்சியையும் தடுக்கிறதாம். பதநீர், நரம்பை உரமாக்கும் வைட்டமின் சத்து நிரம்பிய அற்புதமான பானம்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒன்று புரியும்... எப்போதும் பாரம்பரியம் கரிசனத்துடன்தான் பரிமாறப்படும் என்பது!
- பரிமாறுவேன்...நன்றி:ஆனந்தவிகடன்,பக்கங்கள் 36,37; வெளியீடு:27/2/13

பைரவ சஷ்டி கவசம்!!!

வணங்குவோர்க்கு வாழ்வு தரும்
வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
போற்றுவோர்க்கு புகழ் தரும்
தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்

நினைத்தாலே நிம்மதி தரும்
நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!
பக்தர் பரவசமுற பலன் தரும்
பைரவர் திருவடியே கதி

சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்
திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
அகிலம் போற்றும் அஷ்ட பைரவர்
அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்

சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்
சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்
சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்

வருக வருக வடுகபைரவா வருக
வளம்தர வருக வஜ்ரபைரவா வருக
வருக வருக உக்கிரபைரவா வருக
உவகைதர வருக உலகபைரவா வருக

பைரவி போற்றும் பைரவா வருக
ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக
ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக
ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக

காலத்தின் நாயகா கால பைரவா வருக
கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக
நலம் தரும் நரசிங்க பைரவா வருக
நாளும்காக்கும் நாக பைரவா வருக

கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக
ஞாலம் போற்றும் ஞானபைரவா வருக
தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக
மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக

அவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக
குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக
உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக
திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக

சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக
ருசியான  உணவுதரும் ருருபைரவா வருக
சந்தோஷம் தரும் சம்கார  பைரவா வருக
பித்தம் போக்கும் பீஷணபைரவா வருக

வருகவருக வரமருளும் வரதபைரவா வருக
தருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக
பருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக
பெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக

நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக
சதிராடும் சர்ப்ப பைரவா வருக
ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக
பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக

சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்
முப்புரமெரி செய் முக்கண்ணும்
முகவழகு கூட்டும் நாசியும்
சீற்றம் காட்டும் சிங்க பல்லும்

இடது செவியில் பொன்னாபரணமும்
இன்பமூட்டும் இள நகையும்
அழகிய தோளும் அற்புத அழகும்
மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்

எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்
இளமை காட்டும் வாலிபமும்
மணி ஓசை தரும் கிண்கிணியும்
கையிலே கபாலமும் சூலமும்

தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்
ஏற்றம் தரும் தோற்றமாய்
பத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்
பரவசம் தர வருகவே வருகவே

மெய் உணவு கேட்ட மெய்யடியாரே
உய்ய வழிகாட்டும் உத்தமரே
பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே
சேய் மகிழ விரைந்து வருவீரே

ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க
அன்னை பார்வதி மனம் நொந்திடவே
ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி
அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்

தலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்
தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்
கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே
பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே

கற்றவர் போற்றும் காசியாம்
பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்
எங்கும் திரிந்தான் பரமன்
காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே

மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே
ஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே
பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்
கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை

வீடு தேடியொரு வேளையிலே
பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே
ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்
தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே

எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்
அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்
அழிந்திடத் தான் வேண்டுமென்றே
பிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே

பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்
காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்
கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்
மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்

எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்
முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்
அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி
ஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே

இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்
இடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்
விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்
கபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு

கண்ணான கணவன் மயங்கிவிழவே
கதறி அழுதிட்டாள் மகாலட்சுமி
கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்
மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ

மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ
மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்
பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே
இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.

அந்தகாசுரனென்னும் புதல்வனும் அசுரனானான்
அகிலத்தையே ஆட்டி படைத்தான்
அன்னையுருவு கண்டு ஆசைப்பட்டான்
அவனை அழித்து அல்லல் அகற்றினார்

மணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்
இனியொரு விதி செய்தே மக்களை காக்க
கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே
மதிகெட்டவர்களை அழித்திட்டார்.

முண்டகன் என்றொரு கொடியவன்
கண்டபடி தந்தான் துன்பங்களை
அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்
பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே

எண்ணங்களிலே மாற்றம் தரும்
இதயத்திலே எழுச்சி தரும்
அடியவருக்கு அருள்புரியும்
பைரவ புராணத்தை பாடிடுவோம்

காலத்தின் நாயகன் கால பைரவனென்றே
ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே
விதியும் அவனே வெற்றியும் அவனே
வேதமும் அவனே வேதநாயகனும் அவனே

அட்டவீரட்ட தலங்கள் அற்புதத்தலங்கள்
ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்
அம்பலவாணன் பைரவரூபமான இடங்கள்
அகிலத்தோரை காத்திட தலங்கள்

தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்
ஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்
எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்
அத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே

எங்கும் பைரவர் எதிலும் பைரவர்
என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க
ஐந்து தலையரசே ஆகாசபைரவரே
அல்லல் நீங்கிட வருவீரே

தலைதனை தராபாலன பைரவர் காக்க
கேசந்தனை கேசர பைரவர் காக்க
நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க
கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க

செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க
நாசிதனை நர்த்தன பைரவர் காக்க
வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க
நாக்கினை நானாரூப பைரவர் காக்க

கழுத்தினை கராள பைரவர் காக்க
தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க
கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க
மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க

விலாவினை விருபாச பைரவர் காக்க
வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க
இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க
மறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க

தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க
முழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க
பாதமிரண்டும் பரம பைரவர் காக்க
விரல்களைத்தும் விஜய பைரவர் காக்க

இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி
சங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி
சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி
உயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி

உன்மத்தம் போக்குவாய் போற்றி
குருட்டை நீக்குவாய் போற்றி
கர்ப்பதோஷம் போக்குவாய் போற்றி
உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி

ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி
இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி
சளித்தொல்லை போக்குவாய் போற்றி
சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி

விஷபயம் போக்குவாய் போற்றி
பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி
விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி
பகைமையை அழிப்பாய் போற்றி

உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி
அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி
தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி
முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி

நல்லதொரு துணைதருவாய் போற்றி
துணையின் துன்பம் களைவாய் போற்றி
சந்தானபாக்கியம் தருவாய் போற்றி
புத்திரதோஷம் போக்குவாய் போற்றி

கடன் தொல்லை நீக்குவாய் போற்றி
களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி
என்றும் புகழ் தருவாய் போற்றி
ஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி

பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி
பில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி
கெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி
பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி

சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக
பாசமிகு பைரவமூர்த்தியே வருக
காலனைவிரட்டும் கால பைரவா வருக
ஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக

கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக
பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக
சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக
சந்ததிதரும் சந்தான பைரவா வருக
ஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக

சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக
வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக
நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக
சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக

தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக
விசாலமனம் தரும் விசாலாக்ஷ பைரவா வருக
ஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக
குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக

கல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக
மேன்மை தரும் மேகநாத பைரவா வருக
சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக
கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக

அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக
சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக
பூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக
தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக

காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக
லாபம் தரும் லோகபால பைரவா வருக
பூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக
ஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக

கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக
அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக
தட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக
வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக

அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக
பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக
குலம் காக்கும் குல பைரவா வருக
சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக

ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக
சிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக
சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக
கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக

குற்றம் களையும் குலபால பைரவா வருக
சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக
கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக
புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக

லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக
நிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக
சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக
கஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக

பிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக
மண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக
விருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக
சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக

கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக
பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக
எதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக
சோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக

பீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக
பூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக
ரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக
பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக

வினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக
நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக
சக்திக்கும்  பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவா வருக
அட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக

பைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக
பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக
ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக
முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக

பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்
பக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்
சண்முகசுந்தரம் பாடிய கவசம்
நவபைரவர் அருளும் நற்கவசம்

பைரவ சஷ்டி கவசம் இதனை
செப்பிடுவோர் ஜெகமாள்வர்
ஓதுவோர் ஓங்குபுகழ் பெறுவர்
கூறுவோர் கூற்றனை வெல்வர்

வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்
பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்
சொல்வோர் சொத்துக்களை பெறுவர்
கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்

சரணம் சரணம் பைரவா சரணம்
சரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்
சரணம் சரணம் திருவடி சரணம்

இயற்றியவர்:பண்ணாரிதாசன் என்ற சோம.சண்முகசுந்தரம்,சேலம்