RightClick

அனைவரையும் தடுமாற வைக்கும் காலம் நிறைவடைகிறது!
11.12.2012 முதல் 19.1.2013 வரையிலான கால கட்டத்தில் யுத்தக்கிரகங்கள் எனப்படும் செவ்வாயும்,சனியும் உச்சமடைந்திருக்கின்றன.அப்படி  உச்சமடைந்திருப்பதால்,சனியின் ராசிக்காரர்களான மகரம்,கும்பராசியினரும்;செவ்வாயின் ராசியினராகிய மேஷம் மற்றும் விருச்சிக ராசியினரும் மகத்தான சாதனைகள் படைப்பார்கள்;அதே சமயம்,இந்த கிரகங்களின் பார்வையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்;அதன்படி,சனி தனது முழுப்பார்வையான பத்தாம் பார்வையாக கடகராசியைப் பார்வையிட்டுவருகிறார்;இந்த பார்வையானது டிசம்பர்,2014 வரை தொடரும்;அதே சமயம்11.12.2012 முதல் 19.1.2013 வரை செவ்வாயும் தனது முழுப்பார்வையான ஏழாம் பார்வை மூலமாக அதே கடகராசியைப்பார்ப்பதால்,இந்த நாட்களில் கடகம்,தனுசு ராசியினர் படாத பாடு பட்டு வந்தார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.மற்ற பத்து ராசியினரும் தன்னையறியாமலேயே திடீரென முன்கோபத்தில் சண்டையிட்டிருப்பார்கள்;சிறுசிறு விபத்தில் சிக்கியிருப்பார்கள்:


இந்த சூழ்நிலையானது அடுத்து,10.4.2013 முதல் 21.5.2013 வரையிலும்,19.8.2013 முதல் 8.10.2013 வரையிலும் ஏற்பட இருக்கிறது;இதனால்,கடகராசி,தனுசுராசி மட்டுமல்ல;அனைத்து ராசியினரும் பாதிப்புக்குள்ளாக இருக்கிறார்கள்.21.12.2012 அன்று உலக அழிவு வராமல் இருந்தமைக்குக்காரணம் என்ன தெரியுமா? காரணத்தைச் சொன்னால் நம்பமாட்டீர்கள்;ஆனால் அதுதான் நிஜம்.அது பற்றி பாம்புக்கோவில்சந்தையில் ஏற்பாடாகியிருக்கும் ஞான சத்சங்கத்தில் அறிந்து கொள்ளலாம்;


இந்த அழிவுக்கு மனிதர்களாகிய நாமே காரணம் ஆகும்.வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் மனிதநேயம்,பூமியின் நலம் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல் தனது நாட்டின் சுயநலப்போக்கோடு செயல்பட்டு வந்தது முதல் காரணம் ஆகும்.உலக மயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்கமயமாக்கலை இந்தியா முழுக்க மட்டுமல்ல;இந்த உலகம் முழுக்க பரப்பியதால் கோடிக்கணக்கான அப்பாவி மனிதர்கள் மூன்றுவேளை  சாப்பாடு சாப்பிடுவதற்காக பணம்,பணம்,பணம் என்று வெறிபிடித்து ஒவ்வொரு நாளும் ஓடும்விதமாக கார்பரேட் நிறுவனங்கள் தமது மார்க்கெட்டிங் டெக்னிக்குகளை உலகமயமாக்கிவிட்டன;உணவுக்கு செலழித்துக்கொண்டிருந்த சாதாரண மனிதர்களை (செல்போனில்)பேசுவதற்கும்,ஆரோக்கியம் என்ற நம்பவைத்து சுத்தமான குடிநீருக்கும்(மினரல் வாட்டர்) செலவழிக்கும் விதமாக தினசரி வாழ்க்கையை நாசமாக்கியதுதான் பிரதான காரணம் ஆகும்.உலகின் முதல் இளைஞர்ப் பட்டாளம் இருக்கும்  இந்தியாவில் தண்ணீருக்கும் விலை வைக்கத் துவங்கியிருக்கின்றனர்;ஆற்று நீராக இருந்தாலும்,கிணற்றுநீராக இருந்தாலும்,குளத்து நீராக இருந்தாலும் செல்போன் ரீசார்ஜ் செய்தால்தான் வீட்டிற்கு தண்ணீர் தரப்படுமாம்;தனக்குப் பிறகு,எந்த நாடும் உலகவல்லரசாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக ஒழுக்கக் கேட்டை இணையத்தின் மூலமாக உலகமயமாக்கியதும் அடுத்த காரணங்கள் ஆகும்.


அடுத்து வர இருக்கும் இந்த யுத்தக் கிரகங்களின்பார்வையால் நமது பூமியானது சிலபல மாற்றங்களை சந்திக்க இருக்கிறது;கடல் பரப்பு அதிகரித்து,நிலப்பரப்பு சுருங்கப் போகிறது.இதை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக இதன் கோரத்தை குறைக்க நாம் ஒவ்வொருவரும் பின்வரும் ஏதாவது ஒன்றை தினமும் பின்பற்றுவோம்;நம்மை நவக்கிரகங்களின் பாதிப்பிலிருந்தும் உலக அழிவிருந்தும் பாதுகாப்போம்;


தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்தல்;

தினமும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று வழிபாடு செய்தல்;

தினமும் 131 சித்தர்கள் மந்திரங்கள் ஜபித்தல்;

இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் விடாமல் தினமும் பின்பற்றிவந்தால்,சிக்கல்கள் நிறைந்த நமது காலத்தில் நமது தினசரி வாழ்க்கை எந்த ஒருகுறையுமின்றி சீராகும்;அதேசமயத்தில்,நமது சுற்றுப்புறத்தில் அழிவு வராது;நாம் வாழும் பூமியில் வர இருக்கும் அழிவுகள் மனித சஞ்சாரமில்லாத இடங்களுக்கு மாறிவிடும்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ