மடவார் என்ற வார்த்தைக்கு பெண் என்னும் அர்த்தம் உண்டு;வளாகம் என்றால்
மொத்தமாக இருக்கும் இடம்(காம்ப்ளக்ஸ்) என்று பெயர்.மடவார் வளாகத்தில் முற்காலத்தில்
பெண்கள் ஏராளமானவர்கள் இருந்திருக்கிறார்கள்;இறைவன் முன்பாக பாடி,ஆடி,தொழுது பலர் இங்கே(ஸ்ரீவில்லிபுத்தூர்
மடவார்வளாகத்தில்) முக்தியும் பெற்றிருக்கிறார்கள்.
சூரியன்,சந்திரன்,துர்வாசர்,அகத்தியர்,சூதகமுனிவர்,சனகாதிமுனிகள் போன்றவர்களின்
சாபம் நீங்கிய இடம் இந்த புதுவைத்தலம் ஆகும்.
சித்தர்களின் ஆதி சித்தரான காகபுஜண்டர் சித்தர் தமது பாடல்களில் மடவார்வளாகத்தின்
பெருமைகளை பாடியிருக்கிறார் எனில்,இந்த ஆலயத்தின் தொன்மையானது சில ஆயிரம் ஆண்டுகள் மட்டுமல்ல;அதையும்
விட பழமையான ஆலயம் என்றுதான் அர்த்தம்.காகபுஜண்டர் ஸ்ரீவில்லிபுத்தூர் புதுவைநாதர்
என்ற வைத்தியநாத சுவாமிகள் ஆலயத்தை வடவனம்
என்றும்,வன்னிவனம் என்றும் குறிப்பிடுகிறார்.
மேலும்,திருக்கற்றளீசுவரம் உடைய நாயனார் என்றும்,திருக்கற்றளி மகாதேவர் என்றும் பாடல்களில் பாடியிருக்கிறார்.புரட்டாசி1
மற்றும் பங்குனி 1 ஆம் நாளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் இங்கே அருள்மிகு வைத்தியநாத
சுவாமி திருக்கோவிலில் மூலவர் மீது விழுகிறது;ஜோதிடப்படி,புரட்டாசி முதல்நாளில் சூரியன்
கன்னிராசிக்குள் நுழைகிறார்;பங்குனி முதல்நாளில் சூரியன் மீனராசிக்குள் நுழைகிறார்.இந்த
கருத்தினை மனதில் வைத்து ஆராய்ந்து பார்த்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தின்
தொன்மையும்,பெருமையும் புரிந்துகொள்ளலாம்.கன்னிராசியில் சூரியன் நுழைந்ததும்,நாம் நமது முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம்
செய்யத் துவங்குகிறோம்;பங்குனியில் பங்குனி உத்திரம் வருகிறது;
இந்த ஆலயத்தின் எதிரே அமைந்திருக்கும் தாமரைக்குளமானது பல தெய்வீக ரகசியங்களையும்,ஆத்ம
சக்திகளையும் உள்ளடக்கியிருக்கிறது. உள்ளூர் சிவபக்தர்கள் 16
9 2004 அன்று திருப்பணியைத் துவக்கினார்கள்;புதுப்பிக்கப்பட்ட இந்த தாமரைக்குளத்தில்
நீர் விட்டது 20.3.2006 அன்று!! தாமரைக்குளத்தில் நீர் நிரம்பிய நாள் 2.5.2006 ஆகும்.
இந்த தாமரைக்குளத்தில் வருடாவருடம் தொப்போற்சவம் முற்காலத்தில் நிகழ்ந்துள்ளது;அவ்வாறு
தெப்போற்சம் நிகழ்ந்த காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரும்,ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றியிருக்கும்
கிராமங்களும் சுபிட்சத்தை எட்டியிருக்கின்றன;அதே போல மீண்டும் தாமரைக்குளத்தில் தொப்ப
உற்சவம் ஏற்பாடு செய்து நடத்தினால்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்,ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றி
அறுபது சதுர கி.மீ.தூரத்திற்குள் இருக்கும் அனைத்து கிராமங்களும்,நகரங்களும் பொருளாதாரத்
தன்னிறைவை எட்டும் என்ற தெய்வீக ரகசியத்தை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் என்ற
சிவமாரியப்பன் (செல் எண்:9677696967) தெரிவித்தார்.
மேலும்,சிவாலய வழிபாடு குறைந்தால்,நாட்டில் தண்ணீர்ப்பஞ்சம் உண்டாகும்.நதிகள்
வற்றும் என்பதையும் அதற்குரிய ஆதாரங்களை தேவாரம் மற்றும் திருவாசகத்திலிருந்து பாடல்களாக
குறிப்பிட்டு கூறினார்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ