டிசம்பர் 28,2012 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் இருந்தே தமிழ்நாடு
முழுவதும் இருந்து ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் கழுகுமலையில் திரள ஆரம்பித்தார்கள்;பலர்
முதல் நாளே கோவில்பட்டிக்கும்,ராஜபாளையத்துக்கும் வருகை தந்து அங்கேயே தங்கி தம்மைத்
தயார் செய்து கொண்டனர்;மறுநாள் காலையில் ஏராளமான வாசக,வாசகிகளும் கழுகுமலையில் அமைந்திருக்கும்
கழுகாசலமூர்த்தி ஆலயத்துக்கு வந்துவிட்டனர்.
சரியாக காலை பத்து முப்பதுக்கு நமது ஆன்மீக குரு கழுகுமலையை வந்தடைய,கழுகாசலமூர்த்தி
சன்னதியின் முன்பாக முறையான அறிமுக சத்சங்கம் நடைபெற்றது;1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை(தொடர்ந்து
மூன்று ஆண்டுகள்) நிகழும் இந்த அரிய ஆன்மீக உற்பாதத்தில் கலந்து கொண்ட அனைவருமே அவரவர்களின்
குலதெய்வத்தின் ஆசியால் கலந்து கொண்டார்கள்;சிலபல ஆன்மீக ரகசியங்களை நமது ஆன்மீக குரு
திரு.சகஸ்ரவடுகர் வந்திருந்த அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்;அந்த ரகசியங்கள் கழுகுமலைக்கு
வந்தவர்களுக்கு மட்டுமே சொந்தமானது;
ஓம் க்லீம் என்று துவங்கும் மந்திர ஜபத்தினை தொடர்ந்து
ஐந்து நாட்கள் ஜபித்தமையால் பலருக்கு பலவிதமான சித்தர் தரிசனங்களும்,இறை ஆசியும் கிடைத்தன;இவைகளை
அங்கே வந்தவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்;உங்களது மந்திர ஜபத்தினால் நமது பூமிக்கு வர இருந்த இயற்கை ஆபத்து மொத்தமாக வராமல்
தள்ளிப் போட முடிந்திருக்கிறது என்று தெரிவித்தார்;
சென்ற ஆண்டு கழுகுமலை கிரிவலத்தில் கலந்து கொண்டவர்களின் பிரச்னைகள்
பலருக்குத் தீர்ந்தன;பலரது நியாயமான கோரிக்கைகள் இங்கே வருகை தந்த அடுத்த சில வாரங்களிலேயே
நிறைவேறின;பலரது கடன்கள் அடையுமளவுக்கு சொந்தத் தொழில் அமைந்தன;திருமணத் தடையால் அவதிப்பட்டவர்கள்
அனைவருக்கும் சிறந்த வரன் அமைந்தன;இது தொடர்பான தமது அனுபவங்களை பலர் எம்மிடம் நேரில்
தெரிவித்தனர்;கூட்டத்தில் தெரிவிக்க கூச்சப்பட்டுக் கொண்டு,பெரும்பாலானவர்கள் பேசாமல்
இருந்துவிட்டனர்;இவைகளை கிரிவலப் பயணத்தின் போது தெரிவித்தனர்;
பிறகு,அனைவரும் கொண்டுவந்திருந்த டயமண்டுகல்கண்டுகள் ஒன்றாக சேகரிக்கப்பட்டன;கழுகாச்சலமூர்த்திக்கு
அர்ப்பணிப்பு செய்யப்பட்டு,உலக அழிவு வராமலிருக்க கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது;பிறகு,வந்திருந்த
அனைவருக்கும் டயமண்டுகல்கண்டுகள் பிரசாதமாக பகிர்ந்து அளிக்கப்பட்டன;முன்னதாக,நமது
ஆன்மீககுருவின் மூலமாக அனனவருக்கும் 18 சித்தர்களின் ஆசிகள் கிடைத்தன;
காலை 11.30க்கு கழுகாச்சலமூர்த்தியின் ஆலயத்திலிருந்து நமது ஆன்மீக குருவின்
தலைமையில் கிரிவலம் புறப்பட்டோம்;வழியில் பாம்பன்சுவாமிகளின்(இவர் சென்னையை காப்பாற்றி
அருளி வருகிறார்!!!) சித்த தோழராகிய மிளகாய்ப்பழ சித்தரின் ஜீவசமாதிக்குச் சென்றோம்;மிளகாய்ப்பழ
சித்தரின் ஜீவசமாதி,கழுகுமலை கிரிவலப்பாதையில் அமைந்திருக்கிறது;அங்கே நமது ஆன்மீக
குருவின் அருள்வாக்கு மூலமாக மிளகாய்ப்பழ சித்தர் குறிப்பிட்ட பிரச்னைகளோடு வருகை தந்திருந்தவர்களின்
எண்ணிக்கையைச் சொல்லி உரியவர்களை வரச் சொன்னார்;அனைவருக்கும் மிளகாய்ப்பழ சித்தர் ஆசி
வழங்கினார்;
கிரிவலப் பாதை முழுவதும் நவதானியங்கள் தூவப்பட்டன;ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே
கிரிவலம் நிறைவடைந்தது;கிரிவலம் செல்லும் வழியில் பல ஆண்டுகளாக தியானம் செய்து கொண்டு
இருந்தவருக்கு ஒரு சித்தரின் அருள் கிடைத்தது;அதை நேரில் பார்த்தவர்கள் தான் உணர்ந்தார்கள்;கிரிவலம்
நிறைவடைந்து,மீண்டும் கழுகாச்சல மூர்த்தி கோவிலுக்குள் நுழைந்ததும்,முருகக் கடவுளுக்கு
தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார்கள்.அனைவரும் முருகக்கடவுளின் ஆசிகளைப் பெற்றார்கள்;இறுதியாக,திருச்சி
ஓம்காரக்குடில் அமைப்பினர் அனைவருக்கும் பதினெண் சித்தர்களின் நாட்காட்டி விநியோகம்
செய்தார்கள்;
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ