பெண்கள் தமது மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும்,செவ்வாய் தோஷத்தினால் திருமணத்
தடை ஏற்பட்டிருக்கும் கன்னிப்பெண்களும் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் இங்கே வர
வேண்டும்;அவ்வாறு வருகை தந்து குறைந்தது கால் கிலோ விரலி மஞ்சள் வாங்கி,சிவகாமி அம்பாளுக்கு
அர்ச்சனை செய்ய இந்த விரலிமஞ்சளைக் கொடுக்க வேண்டும்.அர்ச்சனை செய்த கையோடு வேறு எந்த ஊருக்கும்/கோவிலுக்கும்/வீட்டிற்கும்
செல்லாமல் நேராக தமது வீடுகளுக்குச் சென்றால்,செவ்வாய் தோஷம் நீங்கும்.ஆனால்,இந்த சுயபரிகாரத்தைச்
செய்யத் துவங்கியதும்,அசைவம் சாப்பிடுவதை அந்தக் குடும்பமே கைவிட்டால் தான் முழுப்பலன்
கிட்டும்;இல்லாவிடில்,முழுப்பலன் கிடைக்க மிகவும் தாமதம் ஆகும்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ