RightClick

விஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்த நாட்களின் பட்டியல் !!!கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.


நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா! அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா! எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.
இந்த குடுப்பினை நம்  அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.  “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.


2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு இலங்கை நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.


இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.


நந்தன & விஜய ஆண்டின் மைத்ர முகூர்த்தப் பட்டியல்:

19.1.13 சனி மதியம் 12.55 முதல்  2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;

23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை;  இரவு 9.30 முதல் 11.30 வரை;

9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;
27.4.2013 சனி இரவு 7.05 முதல் 9.05 வரை;

8.5.2013 புதன் விடிகாலை 5.51 முதல் 6.21 வரை;

9.5.2013 வியாழன் விடிகாலை 4.25 முதல் 6.25 வரை;

25.5.2013 சனி மாலை 6.44 முதல் 8.44 வரை;

21.6.2013 வெள்ளி மதியம் 4.21 முதல் 6.21 வரை;

18.7.2013 வியாழன் மதியம் 3.30 முதல் 4.00 வரை;

20.7.2013 சனி காலை 6.12 முதல் 8.12 வரை;மதியம் 12.12 முதல் 2.12 வரை;மாலை 6.12 முதல் இரவு 8.12 வரை;

29.7.2013 திங்கள் இரவு 11.44 முதல் நள்ளிரவு 1.44 வரை;

15.8.2013 வியாழன் மதியம் 12.12 முதல் 2.12 வரை;

25.8.2013 ஞாயிறு இரவு 10.36 முதல் 12.36 வரை;

11.9.2013 புதன் காலை 10.20 முதல் 12.20 வரை;

21.9.2013 சனி இரவு 8.16 முதல் 10.16 வரை;

22.9.2013 ஞாயிறு இரவு 8.20 முதல் 8.27 வரை;(ஏழே நிமிடங்கள் தான்!)

9.10.2013 புதன் காலை 8.36 முதல் 10.36 வரை;

19.10.2013 சனி மாலை 6 முதல் 8 வரை;

4.11.2013 திங்கள் காலை 7.08 முதல் 9.08 வரை;

15.11.2013 வெள்ளி மாலை 4.04 முதல் 6.04 வரை;

30.11.2013 சனி காலை 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;இரவு 9 முதல் 11 வரை;

13.12.2013 வெள்ளி மதியம் 2.34 முதல் 4.34 வரை;

14.12.2013 சனி காலை மற்றும் இரவு 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;

30.12.2013 திங்கள் காலை 4.34 முதல் 6.34 வரை;

9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;

6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;

22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;


5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;

21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;

1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;

12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
மதியம் 12.08 முதல் 2.08 வரை;

இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்; ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ