RightClick

11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் சத்சங்கம்!!!

கோதை பிறந்த ஊர்;கோவிந்தன் வாழும் ஊர்;நீதி நெறி வழுவா நல்லோர்கள் வாழும் ஊர் என்ற பெயருக்கு உரியதாக இருக்கும் ஊர் விருதுநகர் மாவட்டத்தின் கல்வி நகரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்தின் தெற்கு எல்லையில்,மதுரை டூ செங்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்திருப்பது அருள்மிகு மடவார்வளாகம் திருக்கோவில் ஆகும். இங்கே அருள்நிறை வைத்தியநாத சுவாமி சிவகாமி அம்பாள் தம்பதி சமேதராக சதாசிவன் வீற்றிருக்கிறார்;வீற்றிருந்து தமது அருள்மழையால் விருதுநகர் மாவட்டத்தையே காத்து வருகிறார்;


மனிதர்களாகிய நம்மை நவக்கிரகங்கள் இயக்குகின்றன;நவக்கிரகங்களை பஞ்சபூதங்கள் கட்டுப்படுத்துகின்றன;பஞ்சபூதங்களுக்கு அந்த வரங்களை வழங்கியது மும்மூர்த்திகளான பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆவர்.இந்த மும்மூர்த்திகளையும் தமது காலச் சக்கரத்தால் வழிகாட்டி இயக்குபவரே ஸ்ரீகால பைரவர் ஆவார்.இவர் சதாசிவனின் அவதாரம் ஆவார்.சதாசிவனை தோற்றுவித்து இந்த பிரபஞ்சம்,மனிதர்களாகிய நாம்,நமது பூமி,அனைத்து கடவுள்கள்,தேவர்கள்,பூதகணங்கள்,சித்தர்கள்,ரிஷிகள் என்று அனைவரையும் காத்து ரட்சிப்பவளே வாலை என்ற மனோன்மணி என்ற திரிபுரசுந்தரி ஆவாள்.இந்தக் காலத்தில் பத்து வயது சிறுமியின் தோற்றத்தில் இருக்கும் இந்த அன்னையை தரிசிக்கும் முறையை வார்த்தைகளால் எவரும் எழுதியதில்லை;எழுத முடியாது;உணர்வினால் தீட்சை பெற்று,மனதுக்குள் வழிபாடு செய்து மட்டுமே தரிசிக்க முடியும்;அப்பேர்ப்பட்ட வாலை என்ற மனோன்மணி சூட்சுமமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் ஆலயத்தில் அருள்பாலித்துவருகிறார்;மூலவராகிய அருள்நிறை வைத்தியநாதசுவாமிகள் சன்னதிக்குள்ளேயே இருப்பதாக பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப் பட்ட உண்மை ஆகும்.
அப்பேர்ப்பட்ட இந்த சிவாலயத்தில் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் என்ற சிவமாரியப்பன் அவர்கள்,எதிர்வரும் நந்தன வருடம்,மார்கழி மாதம் வரும் அமாவாசை அன்று( 11.1.2013 வெள்ளி) காலை 8.30 மணிக்கு சத்சங்கம் நிகழ்த்த உள்ளார்கள்;

இந்த சத்சங்கத்தின் நிறைவாக உங்களது தனிப்பட்ட பிரச்னைகளுக்கு இலவசமாக வழிகாட்டப்படும்.எனவே,ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் அனைவரையும் ஆன்மீகக்கடல் அறக்கட்டளை வருக,வருக,வருக என்று வரவேற்கிறது.வரும் போது நோட்டு/டைரி,பேனாவுடன் வரவும்.முதன் முதலில் நமது ஆன்மீக குருவை சந்திக்க இருப்பதால்,பழங்களுடன் வருக!!! வழித்தடம்:மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பேருந்தில் பயணிக்க வேண்டும்;கல்லுப்பட்டி,திருமங்கலம் வழியாக வந்தால்,ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடையலாம்;இங்கே தங்கும் விடுதிகள் ஓரளவுக்கே இருக்கின்றன;இங்கிருந்து 12 கி.மீ.தூரத்தில் இருக்கும் ராஜபாளையத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் இருக்கின்றன.

திருநெல்வேலி,தென்காசி பகுதியிலிருந்து வர இருப்போர் ராஜபாளையம் வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரலாம்.

சென்னையிலிருந்து வருவோர்  பொதிகை புகைவண்டியில் வரலாம்;ராஜபாளையமே சிறந்த தங்கும் விடுதிகளைக் கொண்டிருக்கிறது;ராஜபாளையம் ரயில் நிலையம் ஊருக்கு உள்ளேயே அமைந்திருக்கிறது;ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து மூன்று கி.மீ.தூரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அமைந்திருக்கிறது.