புதுவை என்ற பெயரில் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் அருள்மிகு வைத்தியநாத
சுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவிலில் நந்தன வருடம்,மார்கழி மாதத்து அமாவாசையான
11.1.2013 அன்று காலை பத்து மணி முதல் ஒரு மணிவரை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்
என்ற சிவமாரியப்பன் அவர்கள் தலைமையில் சத்சங்கம் நடைபெற்றது.
கோவிலின் மூலருக்கு நேராக இருக்கும் நந்திக்கு அருகே ஏம தீர்த்தம் என்ற
கிணறு இருக்கிறது.முற்காலத்தில் தியானகாட்டன்,மாத்யந்தன் என்னும் முனிவர்கள் இங்கே
வருகை தந்தனர்;அவர்கள் வைத்தியநாத சுவாமிகளை வணங்கி, “சுவாமி,உம்மை அபிஷேகம் செய்ய
இதுவரை யாரும் நீராடாத புனித தீர்த்தம் வேண்டும்” என்று மன்றாடிக் கேட்டனர்.அவர்களுடைய
வேண்டுகோளை ஏற்று,இறைவன் நந்திதேவருக்கு அருகே கிணறு வெட்டப் பணித்தார்;அதுவே இன்று
ஏமதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் ஏமதீர்த்தத்தில்
இருந்து எடுக்கப்படுகிறது.இவ்வாறு எடுக்கப்படும் நீரால் அபிஷேகம் செய்ததும்,அபிஷேக
நீர் வெளியேறும்;அப்படி வெளியேறும் நீரை நமது தலையில் தெளித்தாலும்,அருந்தினாலும்,பிடித்துக்
கொண்டு நமது வீட்டுக்கொண்டு சென்று பூஜையறையில் வைத்தாலும் அன்றிலிருந்து நமது எல்லாவிதமான
பிரச்னைகளும் படிப்படியாகத் தீர்ந்துவிடும்;
கோவிலில் முறைப்படி அனுமதி பெற்று,இந்த ஏமதீர்த்ததில் நீர் எடுத்து மூலவருக்கு
நாம் சிறப்பு அபிஷேகம் செய்ய வேண்டும்;அவ்வாறு அபிஷேகம் செய்த நீரை கொஞ்சம் பூசாரியிடம் சொல்லிவைத்து வாங்கிக் கொண்டு
நமது வீடுகளுக்குக் கொண்டு சென்றாலும்,நமது தொழில் நிறுவனத்தில் பணம் வைக்கும் இடத்தில்
வைத்தாலும் நமது வளர்ச்சி விறுவிறுப்படையும்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ