RightClick

தை மாத தேய்பிறை அஷ்டமி 3.2.2013 ஞாயிறு!!!


நம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர்.இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி,நாம் செய்யும் தொழில்,வேலை,சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர்.இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும்,நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான,செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.


பெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும்,மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம்.இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும்,வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.அதனாலேயே பலரை மனம் நோக வைத்தும்,ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர்.ஆனால்,அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து,தினசரிவாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர்.தர்மத்தை மதித்து,தனது வாழ்க்கையையும்,தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.


ஆம்,நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும்   ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன?

பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்;

அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா? யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:

1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்

2.சென்னை அருகே இருக்கும் வானகரம்

3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும்  திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது. 

 4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.              

5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி(காஞ்சிபுரத்திலிருந்து ஆட்டோவில் 25 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.அடிக்கடி பேருந்து வசதி இல்லை;குண்டும் குழியுமான சாலை வசதி இருக்கிறது.ஆனால்,பழமையான ஸ்ரீசொர்ண பைரவர் ஆவார்)

6.சிதம்பரம் கோவில்

7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்

8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) 
செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்!!!)

9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை

10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்

11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)

12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி

13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி,
   ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,
   ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,
   நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6.


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில்,
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்
வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம்.                   (பூசாரி செல் எண்:92451 69455)

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,     பாண்டிச்சேரி.
நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்
வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில்  இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.


17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.

18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1.                    20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்( பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண மண்டபம்  பஸ் நிறுத்தம்;            1G, 2G எனில் காங்கேயநல்லூர் ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்)                                    21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில்,வாலாஜாபேட்டை.

 23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்   
                                                    24.சென்னையில்,செட்டியார் அகரம் என்னும் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத் தெருவில் இருக்கும் முருகன் கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் இருக்கிறார்.பூசாரி விஜய் குருக்கள் செல் எண்:8754559182(கோயம்பேடு பகுதி மக்களுக்கு இந்த கோவில் மிக அருகில் இருக்கிறது)

***தமிழ்நாட்டின் தெற்கே திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள்  கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவராக இவர் அருள் பாலித்து வருகிறார்.

இந்த தை மாதத்து தேய்பிறை அஷ்டமியானது 3.2.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.ஞாயிற்றுக்கிழமை இராகு காலம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரைவருகிறது.இந்த நேரத்தில் நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண  பைரவர் சன்னதிக்கு வந்து மனதார  நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;இந்த ஒன்றரை மணி நேரத்தில்(அந்தக் காலத்தில் இதை முகூர்த்தம் என்பர்) நாம் வேண்டும் நியாயமான எந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும்.

இந்தக்  கோவில்களில் ஒருசிலவற்றில் இலவச பானங்கள் வழங்குகிறார்கள்.அவைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.கோவிலுக்குள் செல்லும்போதும்,கோவிலில் வழிபட்டுவிட்டு வெளியேறும்போதும் இந்த இலவச பானங்களை ஒருபோதும் அருந்தக் கூடாது.


இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது 16 மாத தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டதால் கிடைத்த அனுபவ உண்மைகள்  ஆகும்.
1.நமக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை  உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3.வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்;
4.சனியின் தாக்கம்(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி) தீரும்;
5.வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்;தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்;
6.அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.அரசியல் சூழ்ச்சிகள் நிர்மூலமாகும்;
7.பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்:

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,தங்களுடைய வீட்டின் தெற்குச் சுவற்றில் எலுமிச்சை பழத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;அந்த சூலாயுதத்தின் மையப்பகுதியை பார்த்தவாறு மேற்கூறிய மூல மந்திரத்தை ஜபிக்கலாம்;

எம்மிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

தினமும்  ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,இன்று 3.2.2013 ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஜபிப்பதை நிறுத்திவிட்டு ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை மேற்கூறிய வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப்பின்பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்யலாம்.

சனியின் பிடியில் இருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரங்களில் மூலமந்திரத்தை   330 முறை ஜபிக்க வேண்டும்;அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி,அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு,நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்.33 என்பது குபேரனுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழங்கிய செல்வ வளச்சின்னம் ஆகும்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

வீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு - முடிவு)


கலியுகத்தில் நாட்டு நடப்பு எவ்வாறு இருக்கும் என்று கோரக்கர் மட்டுமல்லாது, நந்திதேவர், சினேந்திரமாமுனிவர் முதலான பல சித்தர்கள் பாடியிருப்பதாக நாம் அறிகிறோம். இப்பொருள் பற்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள் என்பார், "சாந்திர சிந்து" என்னும் வேதமாகிய "காலக்ஞானம்" என்னும் தீர்க்கதரிசனத்தை 14,000 ஒலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் இயற்றி, அதை அவர் தங்கியிருந்த பனகானபள்ளி என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு, அதில் கண்ட விஷயங்களை மக்களுக்குப் போதித்து வந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெலுங்கு மொழியில் தோன்றிய நூல்களில், அவர் கலியுகத்தின் தன்மை பற்றிக் கூறிய தீர்க்கதரிசனங்கள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு மொழியிலிருந்து திரு. டி.எஸ்.தத்தாத்ரேய சர்மா என்பவர் தமிழாக்கம் செய்து "ஜெகத்குரு வீரபிரம்மேந்திர சுவாமிகள் வாழ்க்கைச் சரித்திர தத்துவம்" என்ற தலைப்பிலும், ஜே.ராவுஜி என்பவர் "காலக்ஞான தத்துவம்" என்ற தலைப்பிலும் வெளியிட்டுள்ளனர். திரு. தத்தாத்ரேய சர்மா என்பவரின் நூலில் பக்கம் 33,41, 67, 68, 100-3 கண்ட தீர்க்கதரிசனங்களைக் காண்போம்.
 1. ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.
 2. ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.
 3. அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.
 4. விதவை மறுமணம் செய்து கொள்வாள்.
 5. பெண்களின் தூய்மை, நாகரிகம் என்னும் மாயவசத்தால் அழிந்துபடும்.
 6. மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.
 7. கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.
 8. பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.
 9. அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.
 10. திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.
 11. உயர்குலப் பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி, நிழற்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.
 12. தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.
 13. தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.
 14. குலத்தொழில்கள் மாறுபடும்.
 15. ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும்.
 16. ஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.
 17. சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.
 18. சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.
 19. வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)
 20. வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.
 21. திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.
 22. அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.
 23. முஸ்லீம்களின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.
 24. புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.
 25. மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.
 26. நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.
 27. குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.
 28. இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.
 29. இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.
 30. உண்மகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.
 31. நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.
 32. பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.
 33. மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.
 34. ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.
 35. சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.
 36. கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.
 37. போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.
 38. உணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.
 39. கண்பார்வை மிகையாக கெடும்.
 40. எண்ணற்ற ரோகங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.
 41. மக்களின் சராசரி வயது குறையும்.
 42. செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க  முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.
 43. முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.
 44. மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.
 45. நமது பாரத தேசம் இரண்டாகப் பிளக்கப்படும்; பிறகு அது மூன்று பாகங்களாகும்.(இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்)
 46. வங்காள தேசம் என்னும் பிரிவு, பல உயிரிழப்பிற்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும் ஆளாகும். மக்களின் சேதம் மிகையாகும்.
 47. பாரத தேசத்தில் மக்களின் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அப்போது ஜனத்தொகையைக் குறைக்க அரசு செயல்படும்.
 48. இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.
 49. இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.
 50. இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.
 51. நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.
 52. கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப்  பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.நன்றி:சித்தர் உலகம்

கோரக்கச்சித்தரின் "சந்திரரேகை" (உலக மாற்றம் கலியின் முடிவு)


82,83 கலியுகத்தில் பலவிதமான சாதிபேதங்கள் உண்டாகும். பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் பிறப்பார்கள்.உறவுமுறை சரியிருக்காது. நல்ல குழந்தைகள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே அரிதாகும். கலி் முற்ற முற்ற மனித ஆயுளும் குறைந்து கொண்டே போகும். அந்த சமயத்தில் சம்பலப்பட்டம் என்ற கிராமத்தில் வைவணவத்தன் என்ற அந்தணருக்குப் பிள்ளையாக புன்னை மரத்தின் கீந் கலிபுருஷன் ஜெனிப்பார்.
கலி ஐயாயிரம் ஆண்டு முடிந்து ஆறாயிரம் நடக்கும் பொழுது சாதிமத பேதங்கள் மறையத்தொடங்கும். சந்திரனின் குளிர்ச்சி குறையாது. அதே சமயம் சூரியனின் தகிப்பு அதிகமாகும். வேதங்களை அறியாத பொய்யான அந்தணர்களின் கொட்டம் ஒழியும். சத்தியம் நிலைக்கும். மனுக்களும், ஞானியும் தோன்றுவார்கள்.
85,88 இதை எனக்கு என் குரு சொன்னார். அதை நான் இங்கு கூறினேன். மேலும் உலகமக்களுக்கு சிவபெருமான் அருள் உண்டாகும். காமம் விலகும். புலியும் பசுவும் ஒரே இடத்தில் வசிக்கும். பகை இருக்காது. மானிடர்கள் நிருவிகற்ப சமாதி கொண்டு வாழ்வார்கள். தத்துவயோகம் பழகுவார்கள். மாந்தர்கள் பலவர்ணமாவார்கள். ஏகசக்கராதிபத்தியம் உண்டாகும். இந்த ஆட்சி 82000 ஆண்டுகள் நடக்கும். நவரத்தினங்கள் அதிகமாக விளையும். எல்லோரும் ககனக்குளிகை செய்து அதைக்கொண்டு ஆகாய சஞ்சாரம் செய்வார்கள். பிற உயிர்களைத் தம் உயிர்போல் எண்ணுவார்கள். சிவபெருமானை வணங்கி ஆயுள்பலம் பெற்று வாழ்வார்கள். பொய்யான வேத கதைகள் ஒழியும். அந்தணர்களின் பெருமை குன்றும். சம்புவர் குலம் தழைத்து ஓங்கும்.
89. சம்புவந்தர் சகல உலகங்களையும் தன் வசப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். தவயோகம் செய்வார்கள். அமிர்தம் உட்கொள்வார்கள். அம்பரத்தின் ஆட்டம் காண்பர். மின்னும்தேகம் உடையவராயிருப்பர். இவர்கள்தான் குருகுலத்தவர்கள் என்ற்றிய வேண்டும்.
90,91 பிரம்மாவின் வலபாகத்தில் சம்புவும் வசிஷ்ட்டரும் உண்டானார்கள். வசிட்டர் அரக்கர் குலத்திற்கு அரசனாகி பிரம்மாவையே இகழ்ந்துபேசி, புராணக் கதைகளை புரட்டி எழுதி காமத்தில் வீழ்ந்து மறையோன் என்ற பட்டமும் பெற்றார். இந்த குலத்தில் பிறந்தவர்களுக்கும் மற்றவர்க்கும் பேதம் உண்டாக்கி உலகத்தை ஏமாற்றி மயக்கி விட்டார். இவருடன் தோன்றிய மற்றொருவரான சம்புவந்தர் தனியே ஓரிடத்தில் வசித்து வந்தார். பொறுமையுடன் இருந்த பிரம்மா கோபம் கொண்டு ஐயாயிரத்து நாற்பதுக்கு அப்பால் (கலியுகம் பிறந்து) வசிட்டர் வழிவந்தவர்களான மறையோர்களின் குலம் பாழாகும் என்று சாபம் அளித்தார்.
92,93 அந்த சமயத்தில் அறிவுடைய சம்புவந்தர் கைலாய மலைக்குச்சென்று சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து கமலாச்சி என்ற பெண்ணை மனம் புரிந்து கொண்டு அதற்குப்பிறகு மீண்டும் தவம் புரிந்து சிவபெருமானிடம் தன் குலமான சம்புவந்தர் குலம் ஐயாயிரத்து நாற்பதுக்கு அப்பால் தழைத்தோங்க வேண்டும் என்ற வரத்தை பெற்றார். பிரம்மாவும், சிவனும் வரமளித்தால் சாதிமத பேதமற்று சம்புவந்தர் குலம் தழைத்தோங்கும் சமயத்தில் அந்தணர் குலம் பாதிப்படையும்.
94,95 அக்காலத்தில் பதவிபெற்று மேல்நிலையிலிருக்கும் அந்தண குலத்தாரிடையே பேதங்கள் அதிகமாகும். ஒருவருக்கொருவர் தாக்கிப் பேசிக்கொண்டு கீழ்மக்களிட்ம் ஊழியம் செய்தும் புலால் உண்டும், மது அருந்தியும் தீய நெறிகளில் உழல்வார்கள். சாதுக்கள் இவர்கள் குற்றங்களைச் சுட்டிக்காட்டி கீழே தள்ளிவிடுவார்கள். அதனால் வறுமை வாய்ப்பட்டு, மேலும் பல தீய பழக்கங்களைக் கைக்கொண்டு, இக்குலப் பெண்கள் இழிகுலத்தாரோடும் விபசாரம் செய்வர். கள்ளும், கஞ்சாவும் அருந்தி நீசஸ்திரிகளுடன் கூடிப் பிள்ளைகள் பெற்றும், தம் குலத்தொழிலைவிட்டு பல இழிவான தொழில்களையும் செய்து பிழைப்பார்கள்.
96, 97 அந்தணர்கள் பல தொழில்களைச் செய்த போதிலும் குலத்தொழிலை செய்பவர்களும் இருப்பார்கள். (ஓதல், ஓதுவித்தல்) சிறுபெண்கள் கணவனை இழப்பார்கள். வேறு சாதியரிடம் சேர்ந்து கருக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அதை அழிப்பார்கள். பல அநியாயங்கள் செய்வார்கள். இவையெல்லாம் தவறாமல் நடக்கும் பொழுது அந்தண குலம் பாழாகும். இதைத்தவிர உலகத்தில் பல கலகங்கள் ஏற்பட்டு மக்கள் எல்லாம் இடம்விடு இடம் பெயர்ந்து செல்வார்கள். இதனால் பலபேர் மாண்டு போவார்கள்.
98, 99 இழிகுலத்தோர் என்று வழங்கப்படும் பறையர்கள் பாக்கியம் பெற்று சொல்ல முடியாத அளவுக்குப் புகழுடன் வாழ்வார்கள். ஒரு முட்டையில் இரண்டு குஞ்சு பொரிக்கும் மிருகங்களில் பல வினோத வகைகள் உண்டாகும். இவை எல்லாம் அந்தணர்களுக்கு கெட்ட அறிகுறிகளாகும். இந்தக் காலம் அந்தணர்களுக்கு ஆகாத காலமாகும்.
உலகமே பின்னப்படும் மக்களெல்லாம் நாகம்போல் சீறிக்கொண்டு பணக்காரன் ஏழை என்று உயர்வு தாழ்வு பேசி ஒருவரை ஒருவர் அழிக்க முயல்வார்கள். அரசியல்வாதிகளுக்கிடையே பல சங்கங்களும், கோஷ்டிகளும் உண்டாகும். ஆயினும் தெயவ நம்பிக்கை அதிகமாகும். தெய்வ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். நல்ல சமயவாதிகளும் வாழ்வார்கள்.
100. என்குரு எனக்குச் சொன்னதை நான் உலகத்திற்குச்சொன்னேன். மேலும் கெட்ட நடவடிக்கை உள்ள அந்தணர்களின் கொட்டம் ஒழியும். பதினெட்டு சித்தர்களின் பரிபூரண அருள்பெற்றவன் தென்திசையில் வியாபித்து (பிறந்து) திடசித்தத்தோடு பாரக்கத் தெரியும், ஒளிபோல் உலகத்திலுள்ளவர்களை திரட்டிச் சேர்த்து பூமியில் மாயாவிவகாரங்களை விலக்கி சத்தியத்தை நிலைநாட்டி மன்னனென ஒருவர் உலகாள்வார். முற்றே.நன்றி:சித்தர் உலகம் 

சென்னையில் ஐந்து நாட்களுக்கு விவேகானந்த வைபவம்!!!
சுவாமி விவேகானந்தர் பற்றிய சம்பவங்களையும்,சாதனைகளையும் திரு.ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உரையாற்ற இருக்கிறார்.இவரது பேச்சு அனைவரது மனதையும் கவரும் விதமாக இருக்கும்;சுவாமி விவேகானந்தரைப் பற்றி முழுமையாக அறிய இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருப்பவர்கள் கலந்து கொள்ளலாம்.

குறிப்பாக உங்கள் குழந்தைகள் பள்ளிப்படிப்பு அல்லது கல்லூரிப் படிப்பு படிப்பவராக இருந்தால்,கண்டிப்பாக இந்த ஆறு நாட்களுக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள்;அவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்;இதன் மூலம் அவர்களின் அவநம்பிக்கை தகர்ந்து,தன்னம்பிக்கை உருவாகத் துவங்கும்;இதுபோல அடிக்கடி சிறந்த நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெறுவது அபூர்வம்.

இந்து தர்மம் பற்றிய அடிப்படை ஞானத்தை அறிய விரும்புவோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது பாரத தேசம்,இந்து தர்மத்தின் சாதனைகளும்,பெருமைகளும் ஒரு தம்ளர் அளவுக்குப்  புரிய ஆரம்பிக்கும்;

உங்களது சிந்தனையை சீராக்கிட விரும்பினாலோ,உங்களுக்குள் இருக்கும் அவநம்பிக்கை,சந்தேக எண்ணங்கள் நீங்கிட விரும்பினால் நிச்சயமாக இந்த ஆறு நாட்கள் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுங்கள்;

இடம்:டி.ஏ.ஜி.அரங்கம்,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பள்ளி,54,பர்கிட் சாலை,(தண்டபாணி தெருமுனையில்), தி.நகர்,சென்னை.17
நாட்கள்;2.2.13 முதல் 6.2.13 வரை தினமும் மாலை 6.30 மணிக்கு(சரியான நேரத்தில் நிகழ்ச்சி துவங்கிவிடும்)

நிகழ்ச்சி நிரல்:

2.2.13 சனி=விவேகானந்தரின் பாரத தரிசனம்
3.2.13 ஞாயிறு= சிகாகோவில் சுவாமி விவேகானந்தர்
4.2.13 திங்கள்=விவேகானந்தரும் தமிழகமும்
5.2.13 செவ்வாய்=விவேகானந்தரும் விடுதலைப் போராட்டமும்
6.2.13 புதன்=இந்து தர்ம எழுச்சிக்கு வித்திட்டவர் விவேகானந்தர்

தலைவி:ஸ்ரீமதி ரமா அவர்கள்
செயலாளர்:மங்கயர்க்கரசி அவர்கள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: விவேகபாரதி,சென்னை-17.


             

நேரு யுவகேந்திரா : இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி


இளைஞர்களின் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வலுப்படுத்துவதோடு, அவர்களின் தற்சார்புள்ள வாழ்வுக்கு வழிகாட்டுவதிலும் அரும்பணியாற்றுகிறது நேரு யுவ கேந்திரா (என்.ஒய்.கே.). 2010-11-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் இளைஞர்கள், பெண்களுக்கு குறுகிய கால தொழிற் பயிற்சி அளிக்கும் (என்.சி.வி.டி.) திட்டத்தை நேரு யுவ கேந்திரா செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து நேரு யுவகேந்திரா நிறுவனத்தின் இயக்குநர் எம். ஷடாட்சரவேலு கூறியதாவது: தமிழகத்தில் விழுப்புரம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் என்.சி.வி.டி. திட்டத்தின் கீழ் 395 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுழற்சி முறையில் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, தொழிற்பயிற்சி அளிக்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களை, இதர மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களும், இளைஞர்களும் அணுகி தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பூர்விகத் தொழிலில் திறன் பெற்றவர்களுக்கும்...
பல்வேறு தொழில் பிரிவுகளில் இளமையிலிருந்தே அனுபவபூர்வமாகவோ அல்லது  முன்னோர் வழியாகப் பரம்பரையாகத் தங்களது பூர்வீகத் தொழில் திறன் பெற்ற ஆயிரக் கணக்கானவர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இவர்கள் குறுகிய கால தொழிற்பயிற்சியில் சேருவதன் மூலம் மத்திய அரசின் சிறு, குறு தொழில் அமைச்சகத்தின் சான்றிதழுடன் தங்களது திறமைக்கு அங்கீகாரம் பெற முடியும்.
360 பிரிவுகளில் தொழிற் பயிற்சி: தேசிய தொழிற்பயிற்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களில் (ஐ.டி.ஐ.) கொத்தனார், தச்சர் உள்ளிட்ட 360 தொழிற் பிரிவுகளுக்கான பயிற்சியில் சேரலாம். இந்த ஆண்டு, ஆண்களுக்கு கணினி, எலக்ட்ரீμயன், ஃபிட்டர், ப்ளம்பர், இரு மற்றும் மூன்று சக்கர வாகன மெக்கானிக் ஆகிய புதிய பிரிவுகளிலும், பெண்களுக்கு கணினி, அழகுக்கலை, தையல், அடிப்படை செவிலியர் ஆகிய பயிற்சிப் பிரிவுகளிலும் பயிற்சி அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி: 5 முதல் 8 வகுப்பு வரை படித்தவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம். பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு: இந்த ஆண்டுக்கான தொழிற் பயிற்சி வகுப்புகளில் சேர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 400 பேர் தேர்வு செய்யப்படுவர். இதுதவிர புதுச்சேரியைச் சேர்ந்த 75 மாணவர்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர அனுமதிக்கப்படுவர். மொத்த தொழிற்பயிற்சி இடங்களில் 50 சதவீ தம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: இந்தப் பயிற்சி வகுப்புகளில் 15 முதல் 40 வயது வரையுள்ளவர்கள் சேரலாம். நேரு யுவகேந்திராவின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இளைஞர் மன்றங்கள், மகளிர் மன்றங்கள், சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஆகியோர் மட்டுமே இந்தப் பயிற்சியில் சேர முடியும்.
இதுகுறித்த விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள நேரு யுவ கேந்திராவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களை அணுக வேண்டும். இலவச விண்ணப்பங்களையும் பெறலாம். உணவு, தங்கும் இடம் இலவசம்: பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பக் கட்டணம், கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்தவிதமான   கட்டணமும் இல்லை. இந்த ஆண்டு ஆகஸ்டு , செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்கள் நடைபெறும் இப்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு தினமும் 3 வேளை தரமான உணவுடன் தங்குமிடமும் இலவசம்.
தொழிற் பிரிவுகளுக்கு ஏற்ப 20 முதல் 90 நாள்கள் வரை இந்த குறுகிய கால தொழிற்பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி நிறைவடைந்த பின் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு... அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இந்தச் சான்றிதழ்களைப் பதிவு செய்யலாம். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் தொழில் பிரிவுகளில் திறன் மிகுந்த பணியாளராக வேலை வாய்ப்பை எளிதில் பெற முடியும். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இதற்கான வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
உள்நாட்டில் தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்கள், தங்களுக்குத் தேவையான தொழிற் கருவிகள், உபகரணங்கள், இயந்திரங்கள், தளவாடங்களை வாங்கவும், சுயவேலைவாய்ப்புக்கும் வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: www.nyks.org.in தொ.பே. எண்கள்: 044-24510215

யோகாசன படிப்புகள்!!!


யோகாசனம் என்பதை மனதை கட்டுப்படுத்துவது, கட்டுவது, சேர்ப்பது என அர்த்தமாகும்.
முனிவர் பதஞ்சலிதான் யோகாவின் தந்தை என கருதப்படுகிறார். அவர்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் யோக சூத்ராவை எழுதினார். அவர் எட்டு விதமான யோக ஒழுங்குகளின் கொள்கைகளை விஷயங்களைச் சூத்திரங்களாக வகுத்துத் தந்தார். யோக சூத்ரா தான் யோகாசனம் பற்றி முக்கியமான மற்றும் அடிப்படை நூல் இத்தத்துவங்களை வைத்து தான் யோகாசனத்தின் செய்தி உலகம் முழுவதும் பரப்பப் படுகிறது.
யோகா இந்தியாவில் உருவாக்கப்பட்டது. உடல் மற்றும் மன ஒழுங்குகளைக் குறிக்கிறது. இந்த ஒழுங்குகளால் எட்டப்படும் இலக்குகளைக் குறிக்கிறது. இந்து சமய தத்துவ மரபின் ஆறு பள்ளிகளில் ஒன்றைக் குறிக்கிறது. யோகத்தின் முக்கிய வழிகள் ராஜ யோகா, கர்ம யோகா, ஞான யோகா, மந்த்ர யோகா, கர்ம யோகா,  ஞான யோகா, மந்த்ர யோகா, பக்தி யோகா, ஹட யோகா முதலியவை. பதஞ்சலியின் யோக சூத்திரங்களில் பதிவு செய்யப்படட ராஜ யோகாதான். இந்து தத்துவ மரபில் யோகா என்றே எளிமையாகக் குறிப்பிடப்படுகிறது.
இது சாம்யக்யா மரபைச் சார்ந்தது. மொத்தம் 196 சூத்திரங்கள் உள்ளன. வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை, ஹத யோக பிரதிபிகா, சிவசம்ஹிதா இன்னும் பல நூல்கள் யோகா அம்சங்களை பற்றி பேசுகின்றன.
படிப்புகள்: பி.எஸ்சி., எம்.எஸ்சி., முதுகலை டிப்ளமோ, எம்.பில் மற்றும் பிஎச்.டி., ஆகிய படிப்புகளாக யோகா கற்பிக்கப்படுகிறது.
பயிற்சியாளர் ஆவதற்கு, யோகாவில் முதுநிலை டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. யோகா படித்தவர்கள் சொந்தமாக யோகா நிலையங்கள் அமைத்து மக்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். இதன் மூலம் மக்களின் வலிமை, சிந்திக்கும் ஆற்றல் உடலளவில் புத்துணர்ச்சி, நல்ல எண்ணம் ஆகியவை வலுப்பெறும். யோகா பயிற்சியாளர் தவிர யோகா ஆசிரியர், யோகா பயிற்சியாளர் தவிர,  யோகா ஆசிரியர், யோகா சிகிச்சை நிபுணர், உடற்பயிற்சி மையத்தில் யோகா பயிற்சியாளர் மற்றும் யோகா பேராசிரியர் ஆகிய பணிகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளில் யோகா படிப்பு முடித்தவர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.
யோகசன படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
1. அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
2. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
3. தீன தயாள் உபத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம், கோரக்பூர்
4. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
5. ராஞ்சி பல்கலைக்கழகம், ராஞ்சி
6. சென்னை பல்கலைக்கழகம், சென்னை
7. ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்

பாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ.இறையன்பு அறிவுரை


ஈரோடு பாடப் புத்தகத்தை தாண்டி பிற புத்தகங்களையும் கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்க வேண்டுமென, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு பேசினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில், மாணவர்களும், சமுதாயமும் என்ற தலைப்பில் அவர் பேசியது:
மாணவர்கள் என்றால் வாசிப்பவர் என்று பொருள். எனவே, மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை எப்போதும் மேற்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இயற்கையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி நடக்க வேண்டும்.
மனித வாழ்க்கைக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்த அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. ஒவ்வொரு மணித்துளிகளையும் புத்தகங்களை வாசித்தல், நண்பர்களுடன் கலந்துரையாடுதல் எனப் பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும்.  அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 90 சதவீத நோய்களுக்குத் தீர்வுகாணக்கூடிய நிலை உள்ளது. நிலநடுக்கம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை கண்டறியக்கூடிய தொழில்நுட்பங்கள் இப்போது உள்ளன.
படித்துப் பட்டம் பெற்று, திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வசதியாக வாழவேண்டும் என்பதற்காக மட்டுமே படிக்கக்கூடாது. சமுதாயத்தில் இருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். அந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது திருப்பிச் செய்வது குறித்து சிந்திக்க வேண்டும்.
சுயநலத்தைக் கைவிட்டு சமுதாயத்துக்காக உழைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தன்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள், பொதுமக்கள், மரம், செடி, கொடி, விலங்குகள் உள்ளிட்டவற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். கற்றல் என்பது தொடர் நிகழ்வு. பாடப் புத்தகத்தை மட்டுமே படிப்பதால் பயனில்லை. கற்பதற்கு எல்லை இல்லையென சாதனையாளர்கள் எண்ணுகின்றனர். நூலகத்துக்குச் செல்லும்போதுதான் சாதனையாளராக மாற முடியும். பள்ளிப்படிப்புக்கும், கல்லூரிப் படிப்புக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.
பள்ளிப் பருவத்தை சந்தோஷமாக கழிக்க வேண்டும். ஆனால், கல்லூரிப் பருவத்தை மிக கவனமுடன் கையாள வேண்டும். பாடப் புத்தகத்தை மட்டுமே படிக்கக் கூடாது. அதையும் தாண்டி பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஒவ்வொரு மணித்துளிகளையும் பயன்படுத்த வேண்டும். வித்தியாசமாக சிந்தித்து கருத்துகளைச் சொல்லும் நபர்களை சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. மார்க்ஸ், அமெரிக்க சிந்தனையாளர் இங்கர்சால், குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற கொள்கையை உருவாக்கிய டார்வின் உள்ளிட்டோரை சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. வாய்ப்புக் கிடைக்குமென மாணவர்கள் காத்திருக்கக் கூடாது; வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.

லட்சியத்தை எட்டுவது எப்படி?


தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்க்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.
ஆடை: உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பல வாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக் கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிகையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.
வேகநடை: வேகநடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டுபிடித்து விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.
நிமிர்ந்த நிலை: எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியாது என பார்ப்பவர் எண்ணி விடுவர். நிமிர்ந்து நிற்பது. தலையை தொங்கப் போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்துப் பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணமாகும்.
கேட்பது: நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 -60 நொடிக்குள் உங்கள் லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக்கையை தூண்ட வேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.
நன்றி: உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும் அவ்வாறு பட்டியல் இடும் போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய விஷயங்கள் நம் வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும்.
மனதார பாராட்டுங்கள்: நம்மை நாமே "நெகட்டிவ்" வாக நினைக்கும் போது மற்றவர்கள் பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவாக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உடல்வாகு: நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும், அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்

உழைப்பே உயர்வு தரும்!!!


அறுபடைவீடும்,கந்தன் வழிபாடும்!!!


பழநி:

தண்டம் ஏந்தி  கோவணம் புனைந்து ஆண்டிக் கோலத்திலே
அருள் தரும் முருகன் அழகாய் நின்றான் ஆவினன் குடியாமே
பழமே வேண்டி பரமனைப் பிரிந்து பதமாய் நின்றிடவே
ஞாலம் எங்கும் ஞானம் நல்கும் பழனித் திருத்தலமே.

திருச்செந்தூர்

சூரன் முதலாய் அசுரரை வென்று தேவரைக் காத்திடவே
சூர சம்ஹாரம் செய்தான் முருகன் கடற்கரை ஓரத்திலே
சேவல் கொடியுடன் மயில்வா கனனன் காணும் திருக்கோலம்
காண்போர் கண்ணில் கண்ணீர் மல்கும் செந்தில் நகராமே.

திருப்பரங்குன்றம்

தெய்வ யானையை கந்தன் மணந்த தெய்வத் திருத்தலம்
பரங்கிரிநாதர் ஆவுடை நாயகி அம்பாள் அருள் கமழும்
தமிழகம் காணும் அறுபடை வீட்டில் முதலாம் படை வீடு
குடவரைக் கோவிலில் குமரன் திகழும் பரங்குன்றம் நகராமே

திருத்தணி

சூரரை வென்ற முருகன் சினமே தணிந்த திருத்தலமே
தணிகை மலையில் அமர்ந்தான் முருகன் தவமே இயற்றிடவே
குறத்தி வள்ளியை குகன் கைப்பிடித்த குன்றம் நகராமே
திருப்படி தோறும் திருநீறு மணக்கும் திருத்தணி  மலையாமே

சுவாமி மலை

பிரணவப் பொருளை முருகன் சிவனுக்கு உணர்த்திய திருத்தலமே
தகப்பன் சாமியாய் அழகன் அருளும் சுவாமி மலையாமே
கோவில் நகராம் கும்பகோணத்தில் திகழும் படைவீடு
திருவே ரகமே என்னும் பெயர் பெற்ற அழகிய திருத்தலமே

பழமுதிர்சோலை

சுந்தரமாக முருகன் நின்ற ஆறாம் படைவீடு
சுடராய் சுப்பிர மணியாய் அருள்வான் சோலை மலைமீது
அன்பாய் அருளாய் திகழும் முகத்தில்  புன்னகை  நீங்கா து   
அழகாய் முருகன் அருளும்  தலமே இதுபோல் வேறேது ...

மதவழிபாட்டில் ஜனநாயகம் இருப்பது நம்மிடம் மட்டுமே!!!


கோவில் திருவிழாக்களில் நாம் செய்யும் சடங்குகள் நம்மில் சிலருக்கு மிகுந்த நம்பிக்கையும் சிலருக்கு நிறைய கேள்விகளையும் எழுப்புவதில் சந்தேகமேயில்லை. உந்தித் தள்ளும் காரண அறிவால் சிந்தனை வேறாய்ப் போவது இயற்கை... அங்கு என்னதான் நடக்கிறது?
FILE

இந்த கலாசாரத்தில் கடவுளுக்கு ஓர் உறுதியான உருவம் கிடையாது. யாருக்கு எப்படித் தேவையோ, அப்படி உருவாக்கிக்கொள்ள முடியும். மனிதன் முழுமையாக விடுதலை ஆக வேண்டும். அதாவது முக்தி ஒன்றுதான் இந்தக் கலாசாரத்தின் நோக்கம். உலகிலேயே இந்தக் கலாசாரம் மட்டுமே இப்படி இருக்கிறது. எப்போது நீங்கள் இந்தக் கலாசாரத்தில் பிறந்தீர்களோ, அப்போதே உங்கள் குடும்பம், உங்கள் தொழில், உங்கள் கடவுள் எல்லாமே சைடு பிசினஸ்தான். மெயின் பிசினஸ் முக்தி மட்டுமே. முக்தியே அடிப்படையான குறிக்கோளாக இருப்பதால், உடல், மனம், சமூகம் போன்ற அனைத்தையும் குறிக்கோள் நிறைவேற உதவும் கருவிகளாகத்தான் முதலில் இருந்தே பயன்படுத்தி வருகிறோம்.

நமக்கு இருக்கக்கூடிய முக்கியத் தடை, உடல் மீதுள்ள அடையாளம்தான். அந்த அடையாளத்தைத் தாண்டுவதற்கு மிகவும் சூட்சுமமான, மென்மையான தியானத்தில் இருந்து மிகவும் கடினமான ஆணிப் படுக்கை மேல் படுப்பது வரை ஆயிரம் விதமான கருவிகள் உருவாக்கினார்கள். ஆன்மிக முன்னேற்றத்துக்காகத் தேவையான கருவியை எடுத்து உபயோகப்படுத்திக்கொள்ளும் சுதந்திரமும் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

நாளடைவில் இந்தக் கருவிகள் மக்களின் விருப்பங்களுக்கேற்ப புதுப்புது வடிவங்கள் எடுத்திருக்கலாம். எல்லாமே இன்றைக்கும் பொருத்தமானவை என்று சொல்ல முடியாது. ஆனால், இது ஒரு கலாசாரமாக இருப்பதால் மக்களின் விருப்பங்களுக்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. இந்த ஒரு கலாசாரத்தில் மட்டும்தான் கடவுள் உங்களுக்கு எது செய்ய வேண்டும், எது செய்ய வேண்டாம் என்று சொல்லித்தரவில்லை.

தற்போது இந்தக் கலாசாரத்தில் வழக்கத்தில் இருக்கும் பழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் காரணம், மனிதர்கள் அவற்றை இன்னும் விரும்புவதால்தான். அவை எல்லாவற்றையும் நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை. ஆனால், மற்றவர்கள் யாருக்கும் பிரச்னை இல்லாமல் அதை அவர்கள் விருப்பத்துடன் செய்யும்போது மற்றவர்கள் ஏன் தடுக்க வேண்டும்? கோவில் தீமிதியில் ஒடும்போது அவர்களுக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது. அந்தக் குதூகலத்தை ஏன் தடுக்க வேண்டும்? இவையெல்லாம்தான் நமது கலாசாரத்துக்கு அழகு சேர்க்கின்றன.

இந்தக் கலாசாரத்தில் ஒவ்வொரு சமூகமும் தனித்தனிப் பழக்கவழக்கங்களைக் கொண்டு இருக்கின்றன. அதனால்தான் இந்தக் கலாசாரம் இவ்வளவு வண்ணமயமாகவும் உற்சாகமானதாகவும் இருக்கிறது. உங்களது இப்போதைய அறிவுஜீவி எண்ணங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கடன் வாங்கப்பட்டது. ஆமாம். உங்கள் கல்வித் திட்டம் அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் இப்படி எண்ணுகிறீர்கள். மற்றபடி உங்களை நீங்கள் அறிவுபூர்வமாகச் சிந்திப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அவர்களை வாழ்க்கையில் உற்சாகமாக இருக்கவிடுங்கள். இவற்றை எல்லாம் அழித்துவிட்டு எல்லாரும் ஒரே மாதிரிதான் நடக்க வேண்டும், ஆட வேண்டும், பாட வேண்டும் என்றால் பிறகு வாழ்க்கையில் எங்கே உற்சாகத்துக்கு இடம் இருக்கும்?

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-5டிசம்பர் 24-ஆம் நாள் 1892. அன்னை கன்னியாகுமரி நித்தம் தவமிருக்கும் பாரதத் திருநாட்டின் தென் கோடி. அவள் திருப் பாதங்களை வணங்கி அதில் மனநிறைவின்றி மீண்டும் மீண்டும் வருவனபோல் துள்ளி விழுந்தெழும் அலைக் கரங்கள். கரையிலிருந்து இருநூறு மீட்டர் தொலைவிலுள்ள கடற்பாறை மீது இருபத்தியொன்பது வயதான ஓர் இளந்துறவி; மூன்று நாள்கள் இடைவிடாத தியானத்தில் மூழ்கி அமர்ந்துள்ளார். சுயநல உணர்வோடு தன்னுடைய ஆன்ம விடுதலைக்கும் முக்திக்குமா அவர் அவ்வாறு செய்தார்?
இல்லை, தாழ்வுற்று வறுமை மிஞ்சிக் கிடக்கின்ற இந்நாட்டுக்காகவும், முன்னைப் பெருமையை மறந்து, மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியைக் காண இயலாதவர்களாக, எந்த எதிர்கால நம்பிக்கையும் இன்றி அடிமைகளாக உறங்கிக் கிடக்கின்ற இந்திய மக்களைத் தட்டி எழுப்புவதற்காகவும், நமது சனாதன மதத்தின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச்சென்று அதன் மூலம் தேசப் பெருமையை உயர்த்துவதற்காகவும் தன்னையே மறந்து தவமிருந்தார் அத்துறவி. யாருமே அறியாத அத்துறவிதான் அமெரிக்கா செல்ல பம்பாயிலிருந்து கப்பல் ஏறும் முன் "விவேகானந்தர்' என்ற துறவுப் பெயரை ஏற்றுக் கொண்டார்.
இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டுத் தேவைகளுக்கும், சமுதாய மாற்றங்களுக்கும் கூட சுவாமிஜியின் வாழ்க்கையும் அறிவுரைகளும்தான் வழிகாட்டிகளாக விளங்குகின்றன. அவரது அறிவுரைகளைப் படிக்கும் முன்பே, அவரது தோற்றப் பொலிவும் வீரத் திருவுருவமும், நமது இளைய தலைமுறையினருக்கு ஒரு நம்பிக்கையையும் புத்துணர்வையும் கொடுக்கின்றன என்றால் அது மிகையில்லை.
காவி உடையிலே, தலைப்பாகையோடு கைகளைக் கட்டிக்கொண்டு, நெஞ்சு நிமிர்த்தி ஒருபுறம் லேசாகத் திரும்பிப்பார்ப்பது போலிருக்கும் சுவாமிஜியின் ஆண்மை நிறைந்த திரு உருவமும், காந்தக் கண்களும், இந்திய நாட்டு இதயங்களை மட்டுமன்றி, உலக மக்களையும் தன்பால் ஈர்த்து இன்றும் வழிநடத்தி வருகின்றன.
இந்த ஆண்மைத் தோற்றம், பிறரை அடங்கச் சொல்லும் ஆண்மையல்ல; நான்தான் தலைவன்; என் சொல்லைக் கேளுங்கள் எனச் சொல்லும் இறுமாப்புப் பார்வையல்ல; எளியோரை ஒடுக்கும் வலிமைப் பார்வையல்ல; இது வள்ளுவன் சொன்ன பேராண்மை; ஆண், பெண், சாதி, மதம், இனம் என்ற பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு ஆன்மிக அனுபவம் பெற்ற அரவணைப்புப் பார்வை; வன்முறைகளாலும், சுயநலங்களாலும் துண்டாடப்பட்டு, காயப்பட்டுக் கிடக்கின்ற சமுதாயத்திற்கு அருமருந்தாய் அமைந்துள்ள அன்புப் பார்வை; அகிலத்தையே பிடிக்குள் கொண்டு வரும் அருட்பார்வை.
செப்டம்பர் 11-ஆம் நாள் 1893. ஒரே வாக்கியம். உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்ட ஒற்றை வரி. இந்தியப் பாரம்பரியத்தையும் இந்துமதப் பெருமையையும் உலகம் கேட்டுணர வழிகோலிய சொற்கள். ஆம் அமெரிக்கச் சிக்காகோவிலே ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்கும் அனைத்து சமய உலக மாநாட்டிலே சுவாமி விவேகானந்தர் முதன்முறையாகத் தன் வாய் திறந்து உதிர்த்த, ""அமெரிக்காவின் சகோதரிகளே சகோதரர்களே'' என்ற ஒற்றை வாக்கியம் பெற்றுவிட்ட வரலாற்றுச் சிறப்பு விந்தைக்குரியது.
அந்தச் சிறிய உரையைக் கேட்டு, தம்மை மறந்த அமெரிக்க மக்கள், அதன் பிறகு பதினேழு நாள்கள் நடந்த அந்த மாநாட்டிலும், கண்காட்சியிலும், பிறகு அமெரிக்காவின் பல பகுதிகளிலும் சுவாமிஜியின் உரையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். பாரதத்தையும், நமது சனாதன மதப் பண்பாடுகளையும் அகிலமே அறிந்து கொண்டது.
இதுவரை யாரும் பயன்படுத்தாதவையா அச் சொற்கள்? இல்லை அம்மாநாட்டிலே வேறு யாரும் இச்சொற்களைப் பயன்படுத்தாமல் இருந்தனரா? அப்படியொன்றும் இல்லை; சுவாமிஜி பேசுவதன் முன், சில பேச்சாளர்கள் இப்படித்தான் அவையோரை விளித்தனர். அப்படி என்றால் பிறரைப் போலவே சுவாமிஜியும் பயன்படுத்திய இந்தச் சொற்களுக்குக் கிடைத்த வேகத்தின் பின்னணி என்ன?
அந்த வேகத்தின் ஆதாரம் சுவாமிஜியின் ஆன்ம சக்தி; கொந்தளிக்கும் குமரிக் கடல் நடுவே கடல் பாறையோடு பாறையாக மூன்று நாள்கள் மோனத் தவமிருந்து பெற்ற வரம்; தக்க்ஷிணேஸ்வர மாமுனிவரான பரமஹம்ஸர் தன் பூத உடல் நீக்கிப் போகுமுன் நீர் தெளித்து தத்தம் செய்து கொடுத்த தவ வலிமை; இமயம் முதல் தென்கோடி வரையில் பரிவிராஜகராக, ஒரு பரதேசியாக, எளிய துறவியாக இம்மண்ணைக் காலால் அளந்த தன் தவப் புதல்வனுக்கு பாரத அன்னை உச்சி முகர்ந்து கொடுத்த அன்புப் பரிசு; ஆம்! சொற்களுக்கென்று தனி வலிமை ஏதுளது? அவை சொல்பவராலும், சொல்லப்படும் இடம் பொருள் ஏவல் ஆகியவற்றாலும் அன்றோ வலிமை பெறுகின்றன!
அதுமட்டுமல்ல. ""எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை அயராது செல்மின்'' என்பன போன்ற சுவாமிஜியின் அரிய உபதேசச் சொற்கள் எல்லாம் நமது வேதத்திலும் உபநிடதங்களிலும் காணப்படுபவைதான். ஆனால், சுவாமிஜி அவற்றைப் பயன்படுத்தும்போது, ஒரு தனியான ஆற்றல் சக்தி அவற்றுள் புகுந்துகொண்டது. சுவாமிஜி இவற்றையெல்லாம் வெறும் மேற்கோள்களாகப் பயன்படுத்தவில்லை. வாழ்க்கை அனுபவத்திலே நாளும் நயந்து பயன்கொள்ளக்கூடிய மந்திரச் சொற்களாகப் பயன்படுத்தினார். சடங்குகளில் முடங்கிக் கிடந்த இந்துமத தத்துவச் செல்வங்களை, எளிய பாமரனும் உணர்ந்து வீறுகொள்ளச் செய்தவர் விவேகானந்தர். மூடப் பழக்கங்கள், சமுதாயப் பிரிவினைகள், பழமைவாதிகளின் திரை மறைத்த பார்வைகள் ஆகியவற்றால் பட்டுப்போய்க் கொண்டிருந்த இந்துமதப் பண்பாடுகளைக் களையெடுத்து, மாசு நீக்கி உண்மையான பார்வையோடும் ஏற்றத்தோடும் கொடுத்தவர் சுவாமிஜி. எனவேதான் அவர் பயன்படுத்தும்போது பழைய சொற்களுக்குள்ளும் ஒரு புதுமை வந்து சேர்ந்தது.
""மாத்ரு தேவோபவ''; ""பித்ரு தேவோ பவ''; ""ஆச்சார்ய தேவோ பவ''; ""அதிதி தேவோ பவ''; என்று அன்னை, தந்தை, ஆசான், விருந்து ஆகியோரைக் கடவுளர்களாக வணங்கு என்ற மறைமொழிகளோடு, இன்னும் இரண்டினை சுவாமிஜி சேர்த்துக் கொண்டார். ""தரித்ர தேவோ பவ''; ""மூர்க்க தேவோ பவ''; கஞ்சியும் கிடைப்பதற்கில்லா வறியவர்களையும், எழுதப்படிக்கத் தெரியாத எளியவர்களையும் வணங்கி அவர்களுக்குச் சேவை செய்'' என்று முழங்கினார்.
சுவாமிஜி, இராமகிருஷ்ண மிஷன் என்ற சேவை அமைப்பினைத் தொடங்கியபோது, பரமஹம்ஸரின் நேரடிச் சீடரான அத்புதானந்தா ""நரேன், நாமெல்லாம் துறவிகள்; இறை அனுபவத்தையும் முக்தியையும் பெறும் வழியிலே நாளும் தியானமும் பிரார்த்தனையும் மேற்கொள்ள வேண்டியவர்கள். சமூக சேவையில் நாம் ஏன் ஈடுபட வேண்டும்'' என்று கேட்டபோது, சுவாமிஜி பொங்கி எழுந்து பதில் சொன்னார்.
""இதுவா நமது பக்தி? இதையா நமது குரு நமக்குச் சொல்லிக் கொடுத்தார்? ஒருவனை சுயநலவாதியாக்குவதா பக்தி? இல்லவே இல்லை; மக்களுக்குச் சேவை செய்வதும், பிறர் நலம் பேணுவதும்தான் உண்மை பக்தி'', என்றார்.
மேலும் ""பிறர் துயர் பொறுக்காத மனம் கொண்டவனே மகாத்மா. பிறரெல்லாம் உயிரின்றித் திரிகின்ற உடற்கூடுகள்'' என்றும், ""துயரத்தில் வாடுகின்றவருக்குச் சேவை செய்வதால் எனக்கு நரகம் கிடைத்தாலும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்'' என்றும் சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்கள் துறவு மனப்பான்மையோடு விளங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
÷நமது தேசத்திலே உள்ள எந்த மாநிலத்தை விடவும் - ஏன், சுவாமிஜி பிறந்த வங்க மாநிலத்தை விடவும் கூட - ஒரு மாநிலம் சுவாமி விவேகானந்தரை இனங்கண்டு உலகுக்குக் காட்டியது என்றால், அது நமது தமிழகம்தான் என்பதை வரலாறு கூறுகின்றது.
அதற்கு முக்கிய காரணம் சுவாமி விவேகாநந்தரின் அருமைச் சீடராக விளங்கிய-பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலே தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த - அளசிங்கப் பெருமாள்.
÷சுவாமி விவேகானந்தரின் பணிகளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டு அளசிங்கரின் தலைமையிலே சேவை செய்த சென்னை இளைஞர்கள் டாக்டர் நஞ்சுண்ட ராவ், "கிடி' என அழைக்கப்பட்ட சிங்காரவேலு முதலியார், பேராசிரியர் எம். ரங்காச்சாரியார், ஆர். பாலாஜிராவ், கே. சுந்தரராம அய்யர், பிலிகிரி ஐயங்கார், ஜி.ஜி. நரசிம்மாச்சாரியார், எழுத்தாளர் ராஜம் ஐயர் ஆகியோர் ஆவர். இவர்கள் ""எனது நண்பர்கள்'' என சுவாமிஜியினாலே அன்போடு அழைக்கப்பட்டவர்கள்.
1893-இல் சிக்காகோவில் நடைபெற உள்ள அனைத்து சமய மாநாட்டிற்கு சுவாமிஜியை அனுப்ப இவர்கள் ஏற்றுக் கொண்ட கடின உழைப்பைப் பாராட்ட வார்த்தைகள் கிடையாது. எனவே சுவாமிஜியின் 150-வது ஜயந்தி ஆண்டினை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய கடமை தமிழகத்திற்குள்ளது.
÷ஜனவரி 1863-இல் பிறந்து ஜூலை 1902-இல் தன் பூத உடல் நீத்து, இவ்வுலகில் 39 ஆண்டுகளே வாழ்ந்த சுவாமிஜி நிறைவேற்றிய பணிகளை நினைத்தால் மனம் வியந்து போகின்றது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் என்னவெல்லாம் சாதித்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
எனினும் ஓர் ஆறுதலை நான் பகிர்ந்து கொள்கின்றேன். நரைத்த தலையோடும், திரைவிழுந்த கண்ணோடும் கையிலே தடி கொண்டு தள்ளாடி நடந்து செல்லும் முதியவராக அவரை நாம் கற்பனை செய்யக்கூட முடியாது. என்றென்றும் இளமையாகவும் வீரப்பார்வையோடும், வலிமை வாய்ந்த உடலோடும்தான் நாம் அவரை நினைக்க முடியும்.
சுவாமிஜியின் 150-ஆவது ஜயந்தி விழா ஆண்டில், பாரதத்தின் "ஞானதீப'மாக ஒளிவீசும் அவரது ஒப்பற்ற மனித நேயக் கருத்துகளைச் செயல்படுத்துவோம் என்று மீண்டும் உறுதி பூணுவோம்.
கட்டுரையாளர்: சென்னை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர்.

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4விவேகானந்தரை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இன்றைய காலக்கட்டத்திலிருந்து நாம் அவரைப் பார்க்கக் கூடாது. அவர் வாழ்ந்த காலத்தில் ஹிந்து மதமும், ஹிந்து தர்மமும் எப்படி இருந்தது, ஹிந்து மதம் உலகத்தின் பார்வையில் எப்படி பார்க்கப்பட்டது, அவர் சந்தித்த சவால்கள் எத்தகையவை என்பதையும் பார்க்க வேண்டும்.
இவற்றை தெரிந்துகொள்ளாவிட்டால் ஹிந்து மதத்துக்கான அவருடைய பங்களிப்பை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டில் நாம் அவரை நினைவுகூருகிறோம். அவருடைய வாழ்விலிருந்து, உரைகளிலிருந்து ஏதாவதை ஒரு தாக்கத்தைப் பெற முடியுமா என்று நாம் பார்க்கிறோம். அவருக்கு முன்னோடிகள் யாரும் கிடையாது.
விவேகானந்தரையும், ராமகிருஷ்ணரையும் புரிந்துகொள்வதற்கு ஆன்மிகத் தேடல் வேண்டும். ஆன்மிகத்தின் வழியாகவே அவரைப் புரிந்துகொள்ள முடியுமே தவிர,  இலக்கியத்தியத்தின் வழியாக அது முடியாது.
இந்தியா முழுவதும் பயணம் செய்து ஹிந்து மதத்தையும், இந்திய கலாசாரத்தையும் அவர் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். ஜூனாகட் சமஸ்தானத்தைச் சேர்ந்த திவான் வெளிநாட்டிற்குச் சென்று நமது மதத்தின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தினார். அதன்பிறகே, சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் பங்கேற்க அவர் சென்றார்.
சிகாகோ மாநாட்டில் அவரது முதல் வாசகம் வெறும் வார்த்தைகளல்ல. இந்தியாவின் ஆன்மாவை, கலாசாரத்தை அங்கு அவர் வெளிப்படுத்தினார்.  சகோதர, சகோதரிகளே என்ற வாசகத்தின் மூலம் அமெரிக்கர்களின் ஆன்மாவை விவேகானந்தர் தொட்டார். எனவேதான், இந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களையும் வசப்படுத்தியது.
பேச்சாளர்கள் கேட்பவர்களின் சிந்தனையை மாற்றலாம். ஆனால், அவர்களது நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவர மதத்தில் ஈடுபாடுள்ள, ஆன்மிகத்தில் ஊறியவர்களால் மட்டுமே முடியும். அவர்களது வார்த்தைகளுக்கு மட்டுமே அடுத்தவர்களின் ஆன்மாவைத் தொடும் ஆற்றல் உண்டு.
அந்த மாநாடு உலகிலேயே உண்மையான ஒரே மதம் கிறிஸ்தவ மதம் என்பதை அறிவிப்பதற்காகத்தான் கூட்டப்பட்டது. ஆனால், சுவாமி விவேகானந்தரின் உரை அதை மாற்றிவிட்டது. விவேகானந்தரின் பேச்சு குறித்து அந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவரான ஹென்றி பரோஸ் தனது நாள்குறிப்பில், சுவாமி விவேகானந்தர் இந்த வார்த்தைகளைப் பேசியவுடன் பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு பல நிமிடங்களுக்கு கை தட்டினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
விவேகானந்தர் 2 நிமிடங்கள் மட்டுமே,  471 வார்த்தைகள் மட்டுமே அவர் அந்தக் கூட்டத்தில் பேசினார். எங்கள் மதத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
ஹிந்து மதம் உலகில் உள்ள அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது. அனைத்து மதங்களையும் உண்மையானது என்று உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது என்றார். அதற்கு அவர் இரண்டு உதாரணங்களையும் குறிப்பிட்டார். தங்களின் தாய்நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பிறகு, முழு சுதந்திரத்தோடு இந்தியாவில் தங்கள் மதத்தையும், கலாசாரத்தையும் பின்பற்றி வந்த யூதர்களையும், பாரசீகர்களையும் குறிப்பிட்டு இந்தியா அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது என்று கூறினார்.
உலகில் எந்தவொரு மதமும் மற்றோரு மதத்தை ஏற்றுக்கொள்ளாது. எந்த மதம் சிறந்தது என்பதை தீர்மானிக்க குத்துச்சண்டைகள் நடைபெற்று வந்ததையும் அப்போது அவர் குறிப்பிட்டார். அவரது உரைக்குப் பிறகு, நம்முடைய மத பிரசாரகர்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு பதில் அங்கிருந்து இங்கு பிரசாரகர்கள் வருவதே பொருத்தமாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன.
அந்த மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் அவரது ஆன்மிக பின்புலம்தான். அவர் துறவி என்பதாலேயே எதிரிகளையும் தம்மை விரும்புபவர்களாக மாற்றினார். சாதாரணப் பேச்சாளர் ஒருவரால் இதைச் செய்ய முடியாது.
வேறு மதத்தைச் சேர்ந்த இறைவனுடன் நமது இறைவனை வேறுபடுத்துவதும், வேறு மதத்தினரை நம்மிடமிருந்து  வேறுபடுத்துவதும் இந்தியாவைப் பொருத்தவரை பாவம் ஆகும். இதையே அவர் உலகிற்கு எடுத்துக் கூறினார். அதுவே அவரது மேதமை.
அவர் இதை எடுத்துரைப்பதற்கு முன்பாக, உலகத்தினரும், மதத் தலைவர்களும், மத அறிஞர்களும் இது குறித்து அறியாமல் இருந்தனர்.
கடந்த 2008-ல் உலக மதத் தலைவர்கள் மாநாட்டில் அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்றும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத்தான் சுவாமி விவேகானந்தர் 115 ஆண்டுகளுக்கு முன்னர் கூறினார். ஏழ்மையைப் பயன்படுத்தி மக்களை மதமாற்றம் செய்யக் கூடாது என்றார். அதை இப்போது அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.