RightClick

நம் வாழ்க்கையை ஆன்மீகரீதியாக வழிநடத்தும் ஆன்மீக அரசு!!!

www.aanmigaarasoo.com
www.aanmigaarasoo.in

மஹாசிவ ராத்திரி விரதம் ஏன் இருக்க வேண்டும்?

சதாசிவன் என்ற ஆதி சிவன் ஓய்வெடுக்கும் ஒரு முகூர்த்த நேரத்தை(90 நிமிடங்கள்) சிவராத்திரி என்பார்கள்;அந்த நேரத்தில் சதாசிவன் என்ற ஆதி சிவன் தியான நிலையில் இருந்து சமாதி நிலைக்குச் செல்கிறார்;அவ்வாறு செல்லும் போது தமோ குண அதிர்வலைகள் ஈஸ்வர தத்துவத்தை ஏற்றுக் கொள்ளாததால் அதிகமாக பரவிக்கொண்டிருக்கும்;
அந்த தமோ குணம் நம்மைப் பாதிக்காமல் இருக்க,மஹாசிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்;இதன் மூலமாக சதாசிவதத்துவத்தை நமது ஆன்மாவும்,உடலும்,மனமும் அதிகமாக கிரகிக்கும்;

சிவராத்திரியில் மாதாந்திர சிவராத்திரி,மஹாசிவராத்திரி என்று இருவகைகள் உள்ளன.மாதாந்திர சிவராத்திரி வரும் நாளில் இரவில் அண்ணாமலை கிரிவலம் செல்வதால் ஏராளமான புண்ணியங்களைப் பெறலாம்;வெகுவிரைவாக நமது கர்மவினைகள் அழித்துவிட முடியும்;இப்பிறவியோடு சித்தராக விரும்புவோர்/முக்தியடைய விரும்புவோர்/சிவ கணமாக விரும்புவோர் குறைந்தது 36 சிவராத்திரிகளுக்கு அண்ணாமலையில் கிரிவலம் செல்வது அவசியம்.
இனிமேல் இப்படி ஒரு மனிதப்பிறவி எடுத்து,படாத பாடு படவேண்டுமா? என்ற எண்ணம் அடிக்கடி மேலோங்கினால் சிவராத்திரி கிரிவலம் செல்வது அவசியம்.

மஞ்சள் நிற வேட்டி அணிந்து,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்துக் கொண்டு மனதிற்குள் ஓம் அருணாச்சலாய நமஹ என்றும்,ஓம் அண்ணாமலையே போற்றி என்றும் ஜபித்தவாறு அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.தனியாக கிரிவலம் செல்வது அவசியம்.

இரட்டைப்பிள்ளையார் கோவிலில் இருந்து மாதசிவராத்திரி அன்று இரவு 10 மணிக்குப் புறப்பட்டு,தேரடி முனீஸ்வரரை வழித்துணைக்கு அழைத்துக் கொண்டு,கிழக்குக்கோபுர வாசலில் நின்று கொண்டு அண்ணாமலையாரிடம் நமது கோரிக்கைகளை வேண்டிக் கொண்டு கிரிவலப் பயணம் செல்ல வேண்டும்.ஒவ்வொரு லிங்கத்திடமும் மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு,ஒவ்வொரு நொடியும் ஓம் அருணாச்சலாய நமஹ என்றும்,ஓம் அண்ணாமலையே போற்றி என்றும் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலத்தை பூதநாராயணர் கோவிலில் மறுநாள் காலை 4.30 முதல் 6 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.பிறகு,கோவிலுக்குள் சென்று அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்.இந்த நாளில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;இக்காலத்தில் மூளை சார்ந்த உழைப்பே பலரது வேலையாக இருக்கிறது;அதனால்,அவர்களும்,பிறரும் சாப்பிட்டப்பின்னரே அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

தாயின் அரவணைப்பு அறிவியல்பூர்வமானது!!!

ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நமது உடலில் பிட்யூட்டரி சுரப்பியால் உருவாக்கப்படும் ஹார்மோனாகிய ஆக்சிடாக்சினை பரிசோதித்து வந்தனர்.
அதில் தாய்,தந்தை,சகோதரர்கள்,உறவினர்கள்,தம்பதிகள்,நண்பர்கள் என நம்மை நேசிக்கும் அன்பானவர்களை நாம் கட்டிப்பிடித்தால் ஆக்சிடாக்சின் வெளிப்பட்டு  ரத்தக் கொதிப்பு குறைகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
மேலும் இதன் மூலம் நினைவாற்றல் மேம்படுவதும் தெரியவந்துள்ளது.

ஆனால்,நமக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்,நம்மை நேசிக்காதவர்கள் கட்டிப்பிடிக்கும் போது இந்த ஹார்மோன் சுரக்காமல் எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர்,குழந்தைகளை,கணவன் மனைவியை கட்டி அணைக்கும் போது அதிக அளவு ஆக்சிடாக்சின் சுரப்பதும் தெரியவந்துள்ளது.

இதனை கவிஞர், “. . .தவிக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பி தானடா!” என்று பாடினாரோ?!?!!
நன்றி:பசுத்தாய்,பக்கம் 19,மார்ச் 2013

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

இந்து தர்மத்தை உலகெங்கும் பரப்பும் பிரேசில் பாதிரியார்!!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஜேண்டர் பெர்ணாண்டஸ் டி ஒலிவியரா.இவரது வயது 48.பாதிரியாருக்குரிய பயிற்சிகளை கற்ற இவர்,கீழை நாட்டு மதங்கள் பற்றிய படிப்பையும் பிரேசில் நாட்டில் பயின்றார்;(கடந்த 20 ஆண்டுகளாக இண்டாலஜி என்ற பெயரில் மேல்நாடுகள் ஒரு டிகிரியை தனது பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.இண்டாலஜி என்றால் இந்துவியல் என்று பெயர்!)

அவர் படித்த இண்டாலஜியில் இந்து தர்மத்தின் கொள்கைகள் அவரை ஈர்த்துள்ளன;எனவே,அவர் ரிஷிகேஷில் வாழ்ந்து வரும் ஹன்ஸ்ராஜ் மஹாராஜ் அவர்களை 1999 இல் சந்தித்தார்;அவரது துறவு ஆளுமைத்திறனால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தார்.
தனது பெயரை தற்போது ஸ்ரீபிரேம்பாபா என்று மாற்றிக்கொண்டார்.உலகம் முழுவதும் இந்து தர்மத்தின் பெருமைகளைப்பரப்பி வருகிறார்.சமீபத்தில் நிகழ்ந்த கும்பமேளாவில் கலந்து கொண்டார்.

ஆதாரம்:பசுத்தாய்,பக்கம் 14,மார்ச் 2013

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

எதையும் சுலபமாக கற்கும் வயது பள்ளிப்பருவ வயது!!!

கனடாவில் இருக்கும் கான்கார்டியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுஇது:

இளம் வயதில் இசையைக் கற்றவர்களும்,இளம் வயதைக் கடந்தவர்கள் இசையைக் கற்கத் துவங்கியவர்களும்,இசையே கற்காதவர்களும் சேர்த்து ஒரு பங்கேற்க வைத்தனர்.

இளம் வயதில் இசையைக் கற்றவர்கள் தனித் திறமையோடு இசைக்கருவிகளை வாசித்தனர்;மற்றவர்களின் மூளையில் மாற்றம் ஏற்படாததையும் ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்துள்ளனர்.
இளம் வயதில் இசை கற்றால் மூளையின் செயல்பாடு சிறப்பாக அமையும் என்பது தெரியவந்துள்ளது.
நன்றி:பசுத்தாய்,பக்கம் 16,மார்ச் 2013

ஆன்மீகக்கடலின் கருத்து: குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்போம் என்ற கருத்து மேல்நாடுகளின் மறைமுக வற்புறுத்தலால் இந்தியாவில் சட்டமாக்கப்பட்டிருக்கிறது.இது உண்மையெனில்,எதிர்காலத்தில் திறமை நிரம்பிய தொழிலாளர்கள்,சாமர்த்தியம் நிரம்பிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தியர்களாக இருக்க முடியாதோ?

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

தினசரி செய்தித்தாள்களில் வெளிவந்த நமது ஆன்மீக நிகழ்ச்சிகள்!!!சிதம்பர ரகசியம் என்பது மட்டுமல்ல;சிதம்பரமே பரம ரகசியம் !!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். 

 

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

 

 (2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். 

 

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. 

 

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). 

 

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

 

 (6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

 

 (7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது, 

 

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. 

 

 (9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

 

 (10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 25.12.13புதன்கிழமை) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு!!!

நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;
பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
                                                        26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
                                                28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.


30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை புறநகர். 

33.அகத்தியர் பிரதிட்டை செய்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவப் பெருமான் சன்னதி, அருள்நிறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் வளாகம்,ஆடுதுறை,தஞ்சாவூர் மாவட்டம். 

34.அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் வளாகம்,திருவண்ணாமலை ரோடு,ஆற்றுமணல்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம்.(இங்கே சிறு வடிவில் வழக்கத்துக்கு மாறாக தெற்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்) 

35.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்=உற்சவராக!!! அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோவில்,அந்தியூர்,ஈரோடு மாவட்டம்.(அமைவிடம்:அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் செல்ல வேண்டும்; இதற்கு இடதுபுறம் திரும்பி அரை கி.மீ.தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)
36.சீர்காழியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவர் ஆலயம் தனியாக இருக்கிறது.மிகவும் புராதனமான ஆலங்களில் இதுவும் ஒன்று!!! 

37.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வளாகம்,பெருமா நல்லூர் சாலை,மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்,மேட்டுப்பாளையம்,திருப்பூர்.


38.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
39.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.

  மார்கழி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=25.12.13 புதன்கிழமை அன்று அமைந்திருக்கிறது.புதன்கிழமை ராகு காலம் மதியம் 12 மணி முதல் 1.30 வரை வருகிறது. ;.உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.பெரும்பாலான (மாநகரங்களில் இருக்கும்)கோவில்களில்  மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெற இருக்கிறது.கோவில்களுக்குச் செல்ல இயலாமல் தவிப்பவர்கள் நமது ஆன்மீகக்கடல் மற்றும் அஷ்டபைரவா வலைப்பூக்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் 108  போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிப்பது மிகுந்த பலன்களைத் தரும்;கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கவேண்டும்;


அடுத்த தேய்பிறை அஷ்டமி :தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=23.1.2014 வியாழக்கிழமை மாலை 5.55க்குத் துவங்கி, 24.1.2014 வெள்ளிக்கிழமை மாலை5.09 வரை  வருகிறது.எனவே,வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி வருகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்;வெள்ளிக்கிழமை காலை மணி10.30 முதல் 12 மணி வரை  இராகு காலம் அமைந்திருக்கிறது.

$ இந்தப் பதிவினைப் பின்பற்றி பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஒரு மாத பணப்பிரச்னைகளில் இருந்து மீண்டு கொண்டே வருகிறார்கள்.எனவே,நாமும் இந்த தேய்பிறை அஷ்டமிக்கு நமது ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்வோம்;பண நெருக்கடிகளிலிருந்தும்,கர்மவினைகளிலிருந்தும் மீளத் துவங்குவோம்!!!


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ