RightClick

அதென்ன தொலைநோக்குத் திட்டம் என்பது. . .தொலை நோக்குத் திட்டம் என்பது அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தாற்போல இப்போதிருந்தே சில பல செயல்களைச் செய்து வருவதே தொலை நோக்குத் திட்டம் ஆகும்.

உதாரணமாக,16.12.2014 முதல் விருச்சிகராசிக்காரர்களுக்கு ஜன்மச்சனி ஆரம்பமாகிறது;மேஷ ராசிக்கு அஷ்டமச்சனியும்,சிம்மராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டமச்சனியும் ஆரம்பமாக இருக்கிறது.இந்த சனியானது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு செயல்படும்;இதை  இப்போதே ஆன்மீகக்கடல் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டோமோனால்,நாம் செய்ய வேண்டியது என்ன?
விருச்சிகம்,மேஷம்,தனுசு,சிம்ம ராசியினர் இப்போதிருந்து 16.12.2014 வரையிலும் தினமும் ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டுமுறையைப் பின்பற்றி வர வேண்டும்.அப்படி  பின்பற்றிட அசைவம்,முறையற்ற உறவுகளை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;முடிந்தால்,ஸ்ரீகாலபைரவ மந்திரத்தை ஒரு நாளுக்கு நூற்றிஎட்டு முறைவீதம் தினமும் ஜபித்து வர வேண்டும்;தினமும் முடியாவிட்டால்,சனிக்கிழமை தோறும் வரும் இராகு காலத்தில் இவ்வாறு ஸ்ரீகாலபைரவர் மந்திரத்தை நமது வீட்டுப் பூஜை அறையில் அல்லது ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் ஜபித்து வர வேண்டும்;ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமிக்கும் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் இராகு காலத்தில் அபிஷேகம் செய்ய வைத்து,அபிஷேக நேரத்தில் ஸ்ரீகாலபைரவர் மந்திரத்தை/ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியை/ஸ்ரீகாலபைரவர் சதநாமாவளியை மனதுக்குள் மஞ்சள் துண்டு மீது அமர்ந்து ஜபிக்க வேண்டும்;அவ்வாறு இரண்டரை ஆண்டுகளுக்குச் செபித்து வந்தால்,அடுத்த இரண்டரை ஆண்டுகளான 2015,2016,2017 இன் முதல் ஆறு மாதங்களுக்கு சனிபகவானின் தாக்கம் அவ்வளவாக இராது;

ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிமிடமும்,ஒவ்வொரு நொடியும் பணம்,பணம் என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்;அதே போல வாரம் ஒரு நாளாவது புண்ணியம்,புண்ணியம் என்று ஏன் சேமிக்காமல் இருக்கிறோம்?
கலியுகத்தில் பிறந்தாலே நாம் கடுமையான கர்மங்களோடு பிறந்திருக்கிறோம் என்று தானே அர்த்தம்!!! நமது கர்மவினைகளை நாமே தீர்க்காமல்  வேறு யார் தீர்த்து வைப்பார்கள்?
சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் நமக்கு உபதேசிப்பது போல,ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நூல்கள்,சீனாவின் புராதன அரசியல்நூல்கள் உபதேசித்ததே இல்லை;அநேகமாக இந்த அரசியல் நூல்களுக்கு மூலபுத்தகமே அர்த்த சாஸ்திரமாகத் தான் இருக்க முடியும்.
நாம் இந்த பூமியில் பிறக்கும்போதே நமது கல்வி,புகழ்,சுகங்கள்,செல்வாக்கு,அவமானம்,இழப்புகள்,ஏமாற்றங்கள்,    செல்வவளம் என்று அனைத்தையும் நவக்கிரகங்கள் நிர்ணயித்து அனுப்புகின்றன;அப்படி அனுப்பும்போது நமது  பூர்வபுண்ணியமும்,மன உறுதியும் இந்த அளவை மாற்றும்விதமாக தயார் செய்யப்பட்டே நாம் ஜனிக்கிறோம்.அந்த பூர்வபுண்ணியத்தையும்,மன உறுதியையும் நாம் முறையாகவும்,முழுமையாகவும் பயன்படுத்தவே தினமும் ஓம்சிவசிவஓம் அல்லது ஸ்ரீகால பைரவர் /ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டைப் பின்பற்றச் சொல்லி  வலியுறுத்துகிறோம்;நாம் வாழும் கலியுகத்தில் இதை விடவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த சுயபரிகாரம் & வழிபாடு இருக்கப்போவதில்லை !!!

25.12.2012 முதல் 5.2.2013 வரையிலும் யுத்தக் கிரகங்களான சனியும்,செவ்வாயும் கடகராசியை முழுப்பார்வை பார்க்க இருப்பதால்,பனிரெண்டு ராசிகளும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்புக்கு உள்ளாக இருக்கின்றன;இந்தியாவின் சுதந்திர ஜாதகப்படி,இந்தியாவின் ராசி  கடகராசியாக வருகிறது;இந்த பூமியின் உதய நேரப்படி,பூமியின் ராசியும் கடகராசி என்றுதான் வருகிறது(இதை யார் கண்டுபிடித்தார்களோ,எப்படி கண்டுபிடித்தார்களோ தெரியாது;ஆனால்,உண்மைதான்).சந்திரனாகிய மனோக்காரகனின் ராசியாகிய கடகராசியை 30 ஆண்டுகளுக்குப்பிறகு உச்சமாகியிருக்கும் இரண்டு யுத்தக் கிரகங்கள் முழுப்பார்வை பார்க்க இருப்பதால்,நம் அனைவரின் மன வலிமையும் ஒரு சில நாட்கள் அல்லது ஒரு சில வாரங்களுக்காவது  பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட இருக்கிறது;இந்த சூழ்நிலையை மாற்றிட காலத்தையே இயக்கும் ஸ்ரீகாலபைரவரை நாம் ஒவ்வொருவருமே இன்றிலிருந்தாவது வழிபட்டால் மட்டுமே முடியும் என்பதை  மறவாதீர்கள்;ஸ்ரீகால பைரவரின் சுவாசமே வாக்கியப்பஞ்சாங்கம் மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கம் என்று விரிவடைகிறது;
இதே சூழ்நிலை 10.4.2013 முதல் 21.5.2013 வரையிலும்,19.8.2013 முதல் 8.10.2013 வரையிலும் ஏற்பட்டாலும் அவை அவ்வளவுக் கடுமையாக இருக்கப்போவதில்லை;எப்படி இருந்தாலும்,நாம் வாழும் பூமியையும்= இந்தியாவையும்,நமது வாழ்க்கையையும் நமது வழிபாடுகளால் பாதுகாக்க முடியும்.

தொலை நோக்குத் திட்டத்துடன் செயல்படுபவர்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள்;மகத்தான சாதனைகள்  புரிவார்கள்;இந்த பூமியின் தலையெழுத்தையே மாற்றுவார்கள்;தன்னைச் சார்ந்தவர்களையும் சிறப்பாக வழிநடத்துவார்கள்:

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ