RightClick

காய்கறிகளும் நமது உடல் உறுப்புக்களும்


காயும் காயமும்: ஆச்சரிய ஒற்று​மை


கேரட்டும் கண்ணும்

carrot-eyes.jpg
கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.
வால்நட் பருப்பும் மனித மூளையும்
wallnut-brain.jpg
வால் நட் பருப்பின் உள்கட்டமைப்பைக் கண்டால் நம் மூளையைப் போலுள்ளது. நம் நினைவுத்திறனை அதிகப்படுத்த உதவும் ஒமேகா-3 வால்நட்டில் அதிகமுள்ளது. வால்நட்டில் உள்ள புரதச்சத்து அல்சீமர் நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. வயதானாலும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவேண்டுமானால் வால்நட் பருப்பின் துணை நமக்கு  வேண்டும்.

தக்காளியும் இதயமும்
tomato-heart.jpg
தக்காளியில் இதயத்துக்கு இதமானது என்பது எல்லாருக்கும் தெரிந்த சங்கதி. தக்காளியை இரண்டாக வகுந்தால் அதில் நான்கு  அறைகள் இருப்பது தெரியும். நம் இதயமும் நான்கு அறைகள் கொண்டதுதான். தக்காளியில் உள்ள லைக்கோபெனி என்ற சத்து இதய நோய் வராமல் இருக்க உதவுகிறது. கேன்சரை தடுப்பதிலும் இந்த சத்துக்கு பங்கு உண்டு. அமெரிக்க பெண்கள் 40 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட சோதனையில் ரத்தத்தில் லைக்கோபெனி சத்து அதிகமிருந்த பெண்களுக்கு அச்சத்து குறைவாகக் காணப்பட்ட பெண்களைவிட  இதயநோய் வருவதற்கான சாத்தியக்கூறு 30 சதவிகிதம் குறைவு எனத்தெரிய வந்திருக்கிறது.
திராட்சையும் நுரையீரலும்
grapes-lungs.jpg
நம்முடைய நுரையீரல் சின்ன சின்ன காற்றறைகள் கொண்டது. இவை குறிப்பிட்ட தசைகளோடு ஒன்றிணைபவை.. இது ‘அல்வியோலி’ எனப்படுகிறது. இவற்றின் வழியாகத்தான் ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இதேபோன்ற அமைப்பில் தான் திராட்சையும் தோற்றமளிக்கிறது. குறைபிரசவ குழந்தைகளுக்கு சுவாசப்பிரச்னைகள் ஏற்படும். காரணம் அல்வியோலி அறைகள் உருவாக 23 ல் இருந்து 24 வாரங்கள் பிடிக்கும். திராட்சை மற்றும் பழங்களை நாம் அதிகம் சேர்த்துக்கொண்டால் நுரையீரல் புற்றுநோய் மற்று்ம் எப்ஸிமா நோய் வராமல் தடுக்கலாம். அலர்ஜியால் ஏற்படும ஆஸ்துமாவின் தீவிரத்தை திராட்சைக்கொட்டையில் உள்ள ‘ப்ரோந்தோசைனடின்’ என்ற அமிலம் குறைக்கிறது.
சீஸ் கட்டியும் எலும்பும்
cheese-bones.jpg
சீஸ் நம்முடைய எலும்பு உறுதியாக இருக்க உதவும். சீஸ்ஸின் அமைப்பு நம் எலும்பின் உள் அமைப்பை போலிருப்பது ஆச்சரியமான உண்மை. உறுதியான எலும்பிற்கு தேவையான கால்ஷியம் சத்து சீஸ்ஸில் நிறைய இருக்கிறது. மேலும் இதிலுள்ள பாஸ்பேட் சத்தும் நம்முடைய எலும்பின் உறுதிக்கு உறுதுணையாக இருக்கிறது. அத்துடன் எலும்பைச் சார்ந்த தசையின் உறுதிக்கும் இது உதவுகிறது. கால்ஷியம் சத்து நிறைந்த சீஸ்ஸை அவ்வப்போது நம் உணவில சேர்த்துக் கொள்வது உறுதியான எலும்புக்கு உத்தரவாதம் தரும்.

இஞ்சியும் வயிறும்
ginger-stomach.jpg
இஞ்சி யின் அமைப்பு நம் வயிற்றின் உள்பகுதியை ஒத்திருக்கிறது. இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் இஞ்சி வயிற்றோடு சம்பந்தப்பட்ட அஜீரணத்தை ஒழிக்கும் அருமருந்தாகவும் இருக்கிறது என்பது. வயிற்றுக்கோளாறு மற்றும் தூக்கமின்மையைத்  தீர்க்கும் வல்லமைமிக்க இஞ்சியை சீனர்கள் 2 ஆயிரம் வருடங்களுக்கு மேலாகப் பயன்படுத்தி வருகின்றனர். இஞ்சி மலச்சிக்கலையும் தீர்த்து வைக்கும். வயிற்றில் கட்டிகள் உருவாகாமல் இருக்கவும் இஞ்சி உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழமும் மனஅழுத்தமும்
banana-teeth.jpg
வாழைப்பழத்தை வாயில் வைத்து சுவைத்தபடி சந்தோஷமாக ஒரு சிரிப்பு சிரியுங்கள் பார்க்கலாம். வாழைப்பழம் மனஅழுத்தத்தை தீர்த்து வைக்கும் மாமருந்தாம். இதில் உள்ள ட்ரைப்டோபான் என்ற புரதச்சத்து செரோடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த செரோடோன் தான் நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவில் முக்கிய பங்காற்றுகிறது. மனநிலையை மாற்றுவதில் உதவும் முக்கிய அமிலங்களில் இது ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மன நலத்திற்கு அளிக்கப்படும மருந்துகளில் செரோடோனின் உற்பத்தியை கூட்டும், குறைக்கும் அமிலங்கள் தான் உள்ளன. எப்போதும் அமைதியாக, சந்தோஷமாக இருக்கவேண்டுமானால் வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள்.
காளானும் காதும்
mushroom-ear.jpg
காளானை பாதியாக வெட்டினால் கிடைக்கும் பகுதி நம் காதை போல் இருக்கும். நம்முடைய உணவில் காளானின் பங்கை அதிகமாக்கினால், நம்முடைய கேட்கும் திறனும் அதிகரிப்பது நிச்சயம். அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள வைட்டமின் ‘டி’ சத்து காளானில் அதிகமிருக்கிறது. வைட்டமின் ‘டி’ யின் உதவியில்லாவிட்டால் நம்முடைய காதுக்கு சங்கு ஊத வேண்டியதுதான்.

ப்ரோக்கோலியும் புற்றுநோயும்
brocolli-cancer.jpg
ப்ரோக்கோலி கிட்டத்தட்ட காலிஃப்ளவர் போல் இருக்கும். இதன் மேற்பகுதியை உற்று நோக்கினால் நூற்றுக்கணக்கான புற்றுநோய் செல்கள் கூடி கும்மாளவிடுவதுப் போல் இருக்கும். என்ன ஆச்சரியம் ஆளை அமுக்கும் புற்றுநோயை அமுக்குவதில் இந்த ப்ரோக்கோலி முக்கியப் பங்காற்றுகிறதாம். பிரிட்டனில், ப்ரோக்கோளி பயன்பாட்டால் புற்றுநோய் வருவது 45 சதவிகிதம் குறைகிறதாம்.