RightClick

பேய்,பிசாசு,பில்லி,சூனியப்பிரச்னைகளை நீக்கும் ஸ்ரீகாலபைரவர்!!!.
தமிழ்நாட்டில் பொறாமை செல்போன் அலைகள் போல நீக்கமற எங்கும் நிரம்பியிருக்கின்றன.குடும்ப உறுப்பினர்களிடையே,ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடையே,வர்த்தகக் கூட்டாளிகளிடையே என்று பொறாமையின் உச்சமாக ஒருவரின் தொழில் வளர்ச்சியை தடுத்து நிறுத்திடவும்,திருமணத்தடையை உருவாக்கிடவும்,குடும்பத்தில் ஒற்றுமையைக் குலைத்திடவும்,குறிப்பிட்ட விவசாயப்பண்ணை வளராமல் இருக்க அல்லது தொழிலில் அபார வளர்ச்சி அடையாமலிருக்கவும் பில்லி,ஏவல்,சூனியம் வைக்கப்படுகிறது.இவர்களில் பெரும்பாலானவர்கள் எளிதில் கோபப்படமாட்டார்கள்;அதே சமயம் நாத்திக வேடம் பூண்டிருப்பார்கள்;பிறர் செய்து வரும் வழிபாடுகளைக் கேள்விப்பட்டால்,அந்த வழிபாட்டுமுறைகளை கேலி கிண்டல் செய்தே அந்த வழிபாட்டை முடிக்கவிடாமல் செய்வதில் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள்;தன்னைத் தவிர,வேறு எவரும் தொழிலில்/புகழில்/பெயரில் வளர்ந்துவிடக்கூடாது என்ற உன்னத லட்சியத்தோடு செயல்படுவார்கள்;தம்மோடு பழகுபவர்களுக்கு அக்கறையான ஆலோசனை கூறும் விதமாக அவர்களின் ஆன்மீகப்பாதுகாப்பைத் தகர்ப்பதில்( தொடர்ந்த இறைவழிபாடு;அன்னதானம்/அண்ணாமலை கிரிவலப்பயணம்,பாதயாத்திரை பக்தர்களுக்குச் செய்ய இருக்கும் தானங்களைத் தடுத்துவிடுதல்) திறமைசாலிகள்!!!

தனது மகன்/மகளின் அபரிதமான சம்பளத்தில் குடும்பம் நடத்தும் பல பெற்றோர்கள் அவர்கள் முதிர்கண்ணன்/முதிர்கன்னியானாலும் அவர்களின் கல்யாணத்தில் அக்கறையில்லாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள்:தனது மகன்/ள் யாரையும் காதலித்து ரகசிய கல்யாணம் செய்யாமல் தடுக்கவும் பில்லி சூனியத்தைப் பயன்படுத்துபவர்களும் தமிழ்நாட்டில் பெருகி வருகிறார்கள்;தன்னை விடவும் தனது மகன்/ள் ஏதாவது ஒரு துறையில் மிகப்பிரபலமாகாமல் தடுக்க மாந்திரீகத்தை நாடும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.இவர்களை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் கடினம்;ஆனால்,இவர்களின் எண்ணிக்கை சதவீதம் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்து வருவது உண்மை.இவைகளுக்கெல்லாம் காரணம்,உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற பெயரில் இந்தியாவை அமெரிக்கமயமாக்கியதன் விளைவுகளே காரணமாகும்;

நமக்கு ஒருவர் பில்லி அல்லது ஏவல் வைத்திருந்தால்,வைத்த சில நாட்களில் நம் மீது யார் பிரியமாக இருக்கிறார்களோ,அவர்களது கனவில் தெரிந்துவிடும்;உதாரணமாக,எனக்கு ஒருவர் பில்லி சூனியம் ஏவல் இவற்றில் ஏதாவது வைத்திருந்தால்,வைத்த மறுநாளிலிருந்து சில நாட்கள்/வாரங்களுக்குள் என் மீது அக்கறையும்,பாசமுமாக இருக்கும் எனது அக்கா/நெருங்கிய நட்பு/அண்ணன்/தம்பிக்கு கனவில் நானும்,என்னைச் சுற்றிலும் எலும்புகள் அல்லது எலும்புக்கூடுகள் அல்லது வெட்டப்பட்ட இறைச்சி தெரியும்.அதுவும் அதிகாலைக் கனவில் தெரிந்துவிடும்.நான் ஒரு ஊரிலும்/தெருவிலும் அவர்கள் வேறு தெரு/ஊரிலும் வாழ்பவர்களுக்குத் தான் தெரியும்.ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு இவ்வாறு தெரியாது.இந்த நிலையை மாற்றிட நாம்  ஸ்ரீகாலபைரவரை வழிபடவேண்டும்.எப்படிப்பட்ட ஸ்ரீகாலபைரவரை வழிபட வேண்டும் என்பதை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் தெரிவித்திருக்கிறார்.


சாதாரணமாக,நாய் வாகனம் ஸ்ரீகாலபைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்;சில ஊர்களில் இருக்கும் சிவாலயங்களில் இடப்பக்கம் நாய் வாகனத்துடன் காட்சியளித்து,அருள் புரிந்து வருகிறார்;மிக,மிக,மிக அரிதாக வெகு சில தமிழ்நாட்டு சிவாலயங்களில் மட்டும் ஸ்ரீகாலபைரவரின் பின்பக்கத்தில் இருபக்கமும் நாய் வாகனங்களுடன் காட்சியளித்துவருகிறார்.ஸ்ரீகாலபைரவர் நான்கு வேதங்களையும் நாய் வடிவில் தம்மோடு வைத்திருக்கிறார் என்று ஸ்ரீபைரவ புராணம் தெரிவிக்கிறது.

இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இருபக்கமும் நாய் வாகனங்களுடன் உள்ள பைரவப்பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்!!! ஏவல்,பில்லிசூனியம்,பேய்,பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய இவ்வாறு வாகனங்கள் உடைய ஸ்ரீகாலபைரவர் அருள்புரிகிறார்.


இப்படிப்பட்ட ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்குச் சென்று அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகம் செய்யத் தேவையான பொருட்கள் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால் மற்றும் சிவனுக்குரிய பூஜைப்பொருட்களளயும் நாமே நமது சொந்த வருவாயில் வாங்கிக் கொள்ள வேண்டும்.தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு கால நேரத்தில் நமது பெயரில் அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்.இப்படி எட்டே எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்குச் செய்துமுடித்த மூன்று மாதங்களில் எப்பேர்ப்பட்ட பில்லி ஏவல் மாந்திரீகமும் சிதைந்துவிடும்.ஆனால்,இந்த வழிபாடு ஆரம்பித்தது முதல் ஒருபோதும் அசைவம் சாப்பிடக்கூடாது.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ராகு கால நேரம் துவங்கும் முன்பு வீட்டிலிருந்து உரிய  சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும்;வழிபாடு முடித்தப்பின்னர்,வேறு எந்தக் கோவிலுக்கும் /பிறரது வீட்டுக்கும் செல்லாமல் அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்;தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலம் முடியும் வரையிலும் ஸ்ரீகாலபைரவர் சன்னதியிலேயே இருக்க வேண்டும்.அட்லீஸ்ட்,அந்த சிவாலயத்திற்குள்ளேயாவது இருக்க வேண்டும்.இப்படிச் செய்தால் தான் பலன் உண்டு.


இந்த வழிபாட்டின் நோக்கத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்;வழிபாட்டை செய்து வரும்போதும்,செய்து முடித்தப்பின்னரும்  வழிபாட்டின் அவசியத்தை பகிர்ந்து கொள்ளாமலிருந்தாலே போதுமானது;
இருபுறமும் நாய் வாகனத்தோடு இருக்கும் ஸ்ரீகால பைரவர் மதுரை மாநகரில் புட்டுத்தோப்பில் இருக்கிறார்.இவரைத் தவிர,தமிழ்நாட்டில் இன்னும் சிலபல ஊர்களில் இருப்பார் என்று நம்புவோம்;இவர் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீகாலபைரவர் ஆவார்.


ஓம்சிவசிவஓம்