RightClick

28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிறார்கள்!!! அனைவரும் வருக!! சித்தர்களின் அருளைப்பெறுக!!!புதிய பதிவுகள் கீழே


1500 ஆண்டுகளுக்கு  ஒருமுறை சித்தர்களில் முதன்மையானவர்களான 18 சித்தர்களும் ஒரே நேரத்தில் சூட்சுமமாக கழுகுமலைக்கு வர இருக்கிறார்கள்.இப்படி தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு இவர்களின் வருகை இருக்கும்.சென்ற ஆண்டு 24.12.11 பவுர்ணமியன்று இதே போல 18 சித்தர்களும் வருகை புரிந்தார்கள்.இந்த நிகழ்ச்சியை நாம் ஆன்மீகக்கடலில் வெளியிட்டோம்;நமது வாசக,வாசகிகள் சுமார் 500 பேர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து கழுகுமலைக்கு வந்தார்கள்:அவ்வாறு வருகை தந்து முறைப்படி கழுகாசல மூர்த்தியை வழிபட்டு,கிரிவலம் சென்றார்கள்.பலருக்கு கிரிவலம் செல்லும்போதே அவரவரின் முன்னோர்களாகிய சித்தர்களின் ஆசியும்,தரிசனமும் கிடைத்தன.அவ்வாறு சித்தர்களின் தரிசனம் கிடைத்தவர்களுக்கு அடுத்த சில வாரங்களிலேயே அவரவர்களின் குறைகள் நீங்கின;வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைத்தது;பண நெருக்கடியில் இருந்தவர்களுக்கு பணப் புழக்கம் அதிகரித்தது;வீடு கட்டி கடன்களில் அவதிப்பட்டவர்கள் கடன்களை அடைக்க முடிந்தது;பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்ந்தனர்;வீடு கட்ட ஆசைப்பட்டவர்களால் வீடு அல்லது சொந்த மனை வாங்க முடிந்தது;ஆன்மீக முன்னேற்றத்தில் முயற்சி செய்தவர்களுக்கு அந்த முயற்சிகள் வெற்றி பெற்றன;தீராத நோய்களில் கஷ்டப்பட்டவர்கள் வெகுவிரைவாக குணமடைந்தனர்;தனித் தனி தீவாக இருந்த குடும்பத்தினர் ஒன்று சேர்ந்தனர்;நீண்டகால வழக்குகள் சாதகமாகத் தீர்ந்தன;பலருக்கு தகுந்த ஆன்மீக குரு கிடைத்தார்;இவையெல்லாம் கடந்த ஒரு மாதத்தில்(போன முறை வந்தவர்களால்) எம்மிடம் தினமும் போன் மூலமாகவும்,மின் அஞ்சல் மூலமாகவும் மகிழ்ச்சியோடு சொல்லப்பட்ட அனுபவ உண்மைகள்!!!


அதே போல இந்த வருடமும்,டிசம்பர் 2012 ஆம் ஆண்டின் பவுர்ணமியாகிய 28.12.12 வெள்ளிக்கிழமை அன்று 18 சித்தர்களும் கழுகுமலைக்கு வந்து,கழுகாசலமூர்த்தியை சூட்சுமமாக பூஜித்து வழிபட இருக்கிறார்கள்.நாம் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களின் தலைமையில் இந்த அரிய ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம்;


நாம் செய்ய வேண்டியது:28.12.12 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்குள் கழுகுமலைக்கு வந்துவிடுவோம்;மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் பயணித்து,கோவில்பட்டியை வந்தடைய வேண்டும்.அங்கிருந்து சங்கரன்கோவிலுக்குச் செல்லும் பேருந்தில் பயணித்தால் கழுகுமலையை வந்தடைந்துவிடலாம்;வரும்போது,குறைந்தது ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும் வாங்கி வர வேண்டும்;(கிரிவலப் பாதையில் தூவுவதற்காக);கழுகாசலமூர்த்தி(முருகக்கடவுள்)க்கு அபிஷேகம் செய்யத் தேவையான பொருட்களையும் வாங்கி வரலாம்;

காலை 10.30க்குள் கழுகுமலையில் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்கள் தலைமையில் கழுகாசலமூர்த்தியை வழிபட்டுவிட்டு,கிரிவலம் செல்வோம்;கிரிவலப்பாதையின் சுற்று தூரம் மூன்று கி.மீ.கள்;இந்த கிரிவலப்பாதையில் நாம் வாங்கி வந்த நவதானியங்களை நமது கைகளால் தூவ வேண்டும்;டயமண்டு கல்கண்டுகளையும் தான்! தற்போது மழைக்காலமாக இருப்பதால் இவை அனைத்தும் வெகுவிரைவில் செடிகளாக வளரத் துவங்கிவிடும்;கல்கண்டுகளை எறும்புகள் உணவாக எடுக்கத் துவங்கும்.


ஒரே ஒரு எறும்புக்கு நாம் ஒரே ஒருவேளை உணவளித்தால், நூறு அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த பலன் நம்மைத் தேடி வரும்;எறும்பு தனது உணவின் மீது உமிழ்நீரை உமிழ்ந்துவிட்டால் அது மூன்று ஆண்டுகளுக்குக் கெடாது;நாம் தூவும் டயமண்டுகல்கண்டு ஒன்றை 2012 இல் ஒரு எறும்பு எடுத்துச் சென்றால்,அதை 2015 இல் தான் சாப்பிடும்.ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு சனி பெயர்ச்சியாகிட இரண்டரை ஆண்டுகள் தான் ஆகும்.நாம் தானம் செய்யும் உணவு மூன்று ஆண்டுகள் வரை சேமிப்பாக இருந்தால் அது நூறு அந்தணர்களுக்கான உணவைச் சேமித்ததாக அர்த்தம்.இதன் மூலமாக சனிபகவானால் ஏற்படும் சோகங்கள் நம்மை ஒரு போதும் தாக்காது.

அதே போல,குறைந்தது ஐந்து கிலோ நவதானியங்களை தூவுவதன் மூலமாக அவை ஒரு லேசான மழையிலேயே முளைத்துவிடும்.அப்படி முளைப்பதன் மூலமாக,நவக்கிரகங்களின் கதிர்வீச்சு அதன் மூலம் பூமியில் பரவும்.அதே சமயம்,யார் அந்த நவதானியங்களை தமது கைகளால் தூவினார்களோ, அவர்களுக்கு பிறந்த ஜாதகப்படி தடை செய்து வந்த கிரகங்கள்,இந்த நவதானியங்கள் முளைத்தன் மூலமாக எந்த கிரகம் அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடை செய்து கொண்டு இருந்ததோ,அந்த தடை அடியோடு விலகிவிடும்.இந்த இரண்டு ஆன்மீக ரகசியங்களையும் நமக்கு அருளியவர் திரு.சகஸ்ரவடுகர் ஆவார்.
இந்த ஆண்டும் கழுகுமலைக்கு வருவோம்;நமது முன்னோர்களாகிய சித்தர்களின் அருளாசியைப் பெறுவோம்;நமது அனைத்துத் துயரங்களிலிருந்தும் மீண்டு நிம்மதியான வாழ்க்கையை நமது முன்னோர்களின் தரிசனத்தால் உருவாக்குவோம்!!!


இந்த படத்தில் இருப்பது கழுகுமலையில் சென்ற ஆண்டு நமது ஆன்மீக குரு செய்த உபதேசம்!!!