2.12.12 காலை 10.53க்கு ரிஷபராசியிலிருந்து காலச்சக்கரத்தின் முதல் ராசியான
மேஷத்திற்கு கேது பகவானும்,அதே நேரத்தில் விருச்சிகராசியிலிருந்து துலாம் ராசிக்கு
ராகுபகவானும் பெயர்ச்சி ஆகியிருக்கிறார்கள்.
400 ஆண்டுகளுக்கு முன்பு ப்ரான்ஸ் நாட்டு ஜோதிடர் நார்ஸ்டர்டாமஸ் தனது
வேத ஜோதிடப்பயிற்சியின் மூலமாக தான் ஆராய்ந்து கண்டுபிடித்தவைகளை நூற்றாண்டுகள் என்ற
பெயரில் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்;அவர் வேத ஜோதிடத்தைப் பயின்றது நமது பாரத
நாட்டில் தான்.அவரது கணிப்புகளில் மிக முக்கியமான கணிப்பு நிகழப்போகும் காலம் இன்று
2.12.12 முதல் துவங்குகிறது;வானில் சனியும் ராகுவும் மாறும்போது(சேரும்போது) உலகில்
மிக முக்கிய சமய,புவியியல் மாற்றங்கள் நிகழும் என்று எழுதியிருக்கிறார்.உலகில் பெரும்பாலான
மக்களின் மனநிலையில் பொறாமை,வக்கிரம்,அளவற்ற காமம்,வீம்பு போன்றவைகள் புகுந்திருப்பதால்
இந்த மாற்றங்கள் வர இருக்கின்றன.
2.12.12 ஞாயிறு புனர்பூசம் நட்சத்திரத்தில் ராகு கேது பெயர்ச்சி ஆகியிருப்பதால்
இன்று முதல் 11.12.12 செவ்வாய்க்கிழமை விசாகம் நட்சத்திரம் வரும் நாளுக்குள் பின்வரும்
வழிபாட்டு பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
மேஷ ராசிக்காரர்கள் இன்று முதல் டிசம்பர் 2014 வரை தினமும் விநாயகர்
வழிபாடு செய்வது நல்லது;துலாம் ராசிக்காரர்கள் ஜன்மச்சனியின் தாக்கத்தை நிறுத்தி,மனநிம்மதியோடு
வாழ ஏற்கனவே ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்ய வழிகாட்டியிருந்தோம்;அத்துடன் இன்று முதல்
தினமும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு 18 மாதங்களுக்குச் செல்வது அவசியம்.
கன்னி ராசிக்காரர்கள் 2.12.12 முதல் டிசம்பர் 2014 வரை காவல் நிலையம் செல்லும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.பிறரது
காதல் மற்றும் குடும்ப விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது;கூடவே இன்று முதல்
தினமும் ஏதாவது ஒரு உக்கிரப் பெண்தெய்வத்தை வழிபட்டு வருவதும் அவசியம்.இவ்வாறு செய்வதால்
காவல் நிலையம் செல்லும் சூழ்நிலை உருவாகாமல்
போய்விடும்;
மேஷம் மற்றும் துலாம் ராசியினர் இன்று முதல் இரண்டு காரியங்களை மறக்காமல்
பின்பற்றியே ஆகவேண்டும்;அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்;நள்ளிரவில் தனியாக எங்கும்
செல்லாமல் இருப்பதும் அவசியம்.2.12.12 முதல் 18 மாதங்களுக்கு இந்த இரண்டு ராசியினரைச்
சேர்ந்தவர்களுக்கு மாந்திரீக ஏவல் பாதிப்பு உருவாக வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன;சுடுகாடு
மற்றும் இடுகாட்டின் வழியே நள்ளிரவு நேரத்தில் தனியாக வராமல் இருந்தே ஆக வேண்டும்.இல்லாவிட்டால்,ஆவிகள்
உடலுக்குள் புகுந்து கொள்ளக்கூடிய கிரகநிலை அமைந்திருக்கிறது.குறிப்பாக துலாம் ராசியில்
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு இதற்கான சாத்தியக்கூறுகள் 200% அதிகமாக இருக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநயினார் கோமதியம்மாள் திருக்கோவிலில்
ஸர்ப்ப பைரவர் அருளாட்சி புரிந்து வருகிறார்.இங்கே 6.12.12 தேய்பிறை அஷ்டமியன்றோ அல்லது
அவரவர் ஜன்ம நட்சத்திர நாளன்றோ வருகை தந்து ஒரு முறை ஸ்ரீகாலபைரவ அபிஷேகம் செய்து கொள்வது
மிகுந்த நன்மை பயக்கும்;அப்படி அபிஷேகம் செய்யும் முன்பாக,இங்கே கோவிலின் வாசலிலிருக்கும்
விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து ஒரு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்;பிறகே,ஸர்ப்ப
பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.இந்த 6.12.12 வியாழக்கிழமையன்றுதான் =கார்த்திகை
மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியன்றுதான் ஸ்ரீபைரவர் சதாசிவனது நெற்றிக்கண்ணிலிருந்து
உதயமானார்;உருவமே இல்லாத சதாசிவனின் முதல் அவதாரமான ஸ்ரீகால பைரவரை இந்த நன்னாளில்
வழிபடுவது மிகுந்த நன்மையைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை;
விருச்சிகம்,ரிஷபம்,தனுசு,மகரம்,கும்பம்,சிம்மம்,மிதுனம் ராசிக்காரர்களுக்கு
இந்த ராகு கேதுப் பெயர்ச்சியால் நன்மைகளே பெரும்பாலும் ஏற்படும்.கடகராசியினர் வாகனப்
பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்;படிக்கும் கடகராசியினர் படிக்கும் வேலையை மட்டும் செய்தால்
நன்று;பிறரின் காதல் விவகாரங்களில் தலையிட்டால் அவமானம் காத்திருக்கிறது.
சங்கரன்கோவிலுக்கு வர இயலாதவர்கள் அவரவர் ஊர்களில் இருக்கும் ஸ்ரீகாலபைரவரை
6.12.12 அன்று வழிபடுவது நன்று.
திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில்/லக்னத்தில்
பிறந்தவர்கள்,தற்போது இராகு மஹாதிசை நடைபெற்றுக்கொண்டிருப்பவர்கள் ஒருமுறையாவது சங்கரன்கோவில்
ஸர்ப்ப பைரவரை தேய்பிறை அஷ்டமி அபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபடுவது மிகுந்த நன்மைகளைத்
தருவதோடு,தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து விலக வைக்கும் என்பது அனுபவ உண்மை.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ