RightClick

ஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டுத் துவக்கவிழா!!!ஜோ என்றால் மனம் என்று பொருள்! திடம் என்றால் திடப்படுத்துதல் என்று அர்த்தம்!! ஜோதிடம் என்றால் மனத்தைத் திடப்படுத்துதல் என்ற விளக்கத்தை தன்னுள் வைத்தே இந்த தெய்வீகக்கலை தோன்றியது.கடந்த சில பிறவிகளில் மனிதப் பிறவி எடுத்து,பிறருக்கு எந்த விதத்திலும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து வருபவர்களே இந்தப் பிறவியில் பிறருக்கு ஆன்மீகரீதியாக வழிகாட்டுவார்கள்;அப்படி வழிகாட்டுவதற்காக இறைவனாகிய ஸ்ரீகால பைரவர் அருளால் பிறப்பவர்களே ஜோதிடர்கள் ஆவர்.

ஸ்ரீகால பைரவரின் சுவாசமே வாக்கியக் கணிதம்,திருக்கணிதம் என்று காலக் கணக்காக விரிவடைகிறது.ஸ்ரீகால பைரவரைச் சரணடையாத வரை எந்த ஒரு மனிதனுக்கும் கதி மோட்சமில்லை;உயர்ந்த பிறப்புமில்லை;


ஜோதிடம் தெரிந்த நாமே இவ்வளவு கஷ்டப்படுகிறோமே? இந்த கலியுகத்தில் இதைப் பற்றி அடிப்படை ஞானம் கூட இல்லாத கோடிக்கணக்கான தமிழ் சகோதரர்களும்,சகோதரிகளும் என்ன பாடுபடுவார்கள்? என்ற எண்ணத்தில் உருவானதே ஆன்மீகக்கடல் ஆகும்.


கடந்த ஓராண்டில் ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீகக்கடல் அறக்கட்டளை மூலமாக மூன்று ஆன்மீகப் பயிற்சி வகுப்புகளை தமிழ்நாட்டில்  நடத்தினோம்;இதில் ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் கலந்து கொண்டார்கள்.   இதன்மூலமாக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களின் தீட்சைகளால் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசிய வழிமுறைகள் அறிந்தனர்;(உதாரணமாக,நமது குல தெய்வத்திடம் நாம் நேரடியாகப் பேசும் முறை,கடுமையான கர்மவினைகளைத் தீர்க்கும் வழிமுறை,முன்னோர்களின் சாபங்களைத் தீர்க்கும் சுயபரிகாரங்கள்)சராசரி மனிதர்களாகிய நாம் சித்தராக மாறுவதற்குரிய ரகசியங்கள் இந்த ஆன்மீகப்பயிற்சி வகுப்பில் வெளிப்படுத்தப்பட்டன;அடுத்த மூன்று ஆண்டுகளில் 24 ஆன்மீகப்பயிற்சி வகுப்புகள் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு நகரங்களில் நடத்திட திட்டமிட்டிருக்கிறோம்.1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை 18 சித்தர்களும் ஒரே நேரத்தில் கழுகுமலைக்கு(தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு டிசம்பர் மாத பவுர்ணமியன்று) வருகை தருகிறார்கள்;அப்படி வருகை தந்து கழுகாசலமூர்த்தியாகிய முருகக் கடவுளை வழிபடுகிறார்கள்;வழிபட்டு கழுகுமலையை கிரிவலம் வருகிறார்கள்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு 2011 ஆம் ஆண்டில் அறிவித்தார் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்!


24.12.2011 அன்று நமது ஆன்மீக குரு அவர்களின் தலைமையில் கழுகுமலை கிரிவலம் சென்றோம்;இந்த தெய்வீக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்குமே சித்தர்களின் தரிசனம் கிடைத்தன;அவரவர்களின் முன்னோர்களாக எந்த சித்தர் இருக்கிறாரோ அந்த சித்தரின் தரிசனம் கிடைத்தது என்பது ஆச்சரியமூட்டும் உண்மை ஆகும்.எதேச்சையாக கேள்விப்பட்டு இந்த கிரிவலத்தில் கலந்து கொண்ட கழுகுமலை அம்மையார் ஒருவருக்கும் போகர் மகரிஷியின் தரிசனமும் ஆசியும் கிடைத்தது.(இந்த வருடமும்,அடுத்த வருடமான 2013 லும் டிசம்பர் மாதம் வரும் பவுர்ணமியன்று இந்த 18 சித்தர்களின் வருகை இருக்கிறது.அனைவரும் வருக!!! நமது முன்னோர்களாகிய சித்தர்களின் ஆசியைப் பெறுக!!!)20.2.12 அன்று சிவராத்திரி நாள் அமைந்தது;இந்த நாளில் தமிழ்நாட்டில் இருக்கும் ஜீவசமாதிகளிலேயே அளவற்ற அருளாற்றல் தரும் பாம்புக்கோவில்சந்தை மாதவானந்த சுவாமிகளின் ஜீவ ஐக்கியத்தில் அடுத்த பொது நிகழ்ச்சி ஏற்பாடானது;எதிர்வரும் பேரழிவுகள்,பூகம்பங்களிலிருந்து மனிதகுலத்தை  பாதுகாத்திட கூட்டுப்பிரார்த்தனையும்,அன்னதானமும் ஏற்பாடாகியிருந்தது.இந்த பொது நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைத்து ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கும் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் ஸ்பரிச தீட்சை அளித்தார்.இந்த தீட்சையைப் பெற்றவர்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவதன் மூலமாக இவர்களின் ஆன்மீக பலம் அதிகரித்தது.அடுத்து வந்த மாதங்களில் இந்த தீட்சை பெற்றவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது இதை உணர முடிந்தது.சித்திரை மாதத்து பவுர்ணமி 6.5.12 ஞாயிற்றுக்கிழமையன்று வந்தது.இந்த நாளில் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களின் தலைமையில் சதுரகிரிக்கு பயணம் செய்தோம்.சதுரகிரி மலைப்பயணத்தின் போது 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் மட்டும் காட்சியளிக்கும் ஒரு சித்தரின் தரிசனம்,நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளில் ஒருசிலருக்கு மட்டும் கிடைத்தது.சதுரகிரி மலைப்பாதையில் நவதானியங்களும்,டயமண்டு கல்கண்டுகளும் சுமார் நூறு கிலோ அளவுக்குத் தூவப்பட்டன.25.3.12 அன்று திரு அண்ணாமலையில் தெய்வீக விபூதி தயாரிக்கும் பயிற்சி என்ற தலைப்பில் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்கள் பல ஆன்மீக ரகசியங்களைப் போதித்தார்.இந்த வகுப்பில் வெளிப்படுத்தப்பட்ட எளிய தெய்வீக ரகசியங்களால் பலருக்கு முன்னோர்களுடைய சாபங்கள் தீர்ந்தன;சில இல்லத்தரசிகள் தமது குலதெய்வத்துடன் வெள்ளிக்கிழமை தோறும் நேரடியாகப் பேசத் துவங்கினர்.பலருடைய கடன்கள்,கர்மவினைகள் தீர்ந்தன.இலவசமாக புருவ அஞ்சனம் அனைவருக்கும் இந்த வகுப்பின் மூலமாக வழங்கப்பட்டது.ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் வேண்டுகோளுக்கிணங்க, தெய்வீக விபூதி தயாரிக்கும் பயிற்சி வகுப்பு கோயம்புத்தூரில் மே மாதம் நடத்தப்பட்டது.


1.7.12 அன்று நமது ஆத்ம பலத்தை அதிகரிக்கும் பயிற்சி வகுப்பு இராஜபாளையத்தில் நடத்தப்பட்டது.இந்த பயிற்சி வகுப்பில் 14 விதமான தெய்வீக வழிபாட்டு மற்றும் முன்னோர்கள் அருளைப் பெறும் டெக்னிக்குகள் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகரால் போதிக்கப்பட்டது.


தவிர,தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் ஜீவசமாதிகளின் முகவரிகள்,அபூர்வமான நவக்கிரக வழிபாட்டுமுறைகள்,திருநங்கைகளுக்கான பரிகார முறைகள்,ஸ்ரீகால பைரவர் வழிபாடு நடைபெறும் தமிழ்நாட்டு ஆலயங்கள்,ஸ்ரீசொர்ண பைரவர் கோவில்கள்/சன்னதிகள் இருக்கும் தமிழ்நாட்டு நகரங்கள்,மறைக்கப்பட்டிருந்த பல சிவ மற்றும் பைரவ ரகசியங்கள் அனைத்தும் நமது தமிழ்பேசும் மக்களின் நலன்களுக்காக வெளிப்படுத்தியிருக்கிறார் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் என்ற சிவமாரியப்பன் அவர்கள்!!!


இந்த ஆண்டில் இதுவரையிலும் சுமார் 30 சிவாலயங்களில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் வழிமுறைகள் துண்டறிக்கைகளாக விநியோகித்திருக்கிறோம்.இந்த தெய்வீகச் சேவையில் ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் பங்கேற்றுள்ளனர்.கோவை,சென்னை,சேலம்,திருப்பூர்,ஈரோடு,       தஞ்சாவூர்,மதுரை,சதுரகிரி,நாமக்கல்,கரூர்,திருச்சி மற்றும் சில வெளிநாடுகளிலும் இதற்கு ஆதரவு அளிக்கத் துவங்கியுள்ளனர்.ஓம்சிவசிவஓம் ஜபித்து அதனால் கிடைத்த அருளாசிகளைப் பற்றி வந்திருக்கும் மின் அஞ்சல்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 400 இருக்கிறது.


அதே போல,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டினையும்,ஸ்ரீகால பைரவர் வழிபாட்டினையும் மிகப் பரந்த அளவில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது.ஸ்ரீசொர்ண  பைரவர் வழிபாட்டினாலும்,ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டினாலும் பலருடைய கடன்கள் தீர்ந்திருக்கின்றன;நிரந்தரமான வேலை கிடைத்திருக்கிறது;பல இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு திருமணம் அமைந்திருக்கிறது.பலருக்கு புத்திர தோஷம் நீங்கி,மழலைச் செல்வம் கிடைத்திருக்கின்றன.ஜீவசமாதி வழிபாடு செய்ததன் மூலமாக பலருடைய பொருளாதார நெருக்கடி நீங்கியிருக்கிறது.சாதாரண வேலை பார்த்து வருபவர்களுக்குக் கூட சேமிக்கும் அளவுக்கு பண வருவாய் அதிகரித்திருக்கிறது.இதனால்,மேலும் ஜீவசமாதி வழிபாடு தொடர்புடைய ஆராய்ச்சிகளைச் செய்யத் துவங்கியிருக்கிறோம்.


மின் அஞ்சல் மூலமாகவும்,நேரடியாகவும் ஜோதிட கட்டணம் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிவருகிறோம்.இந்த ஜோதிடக் கட்டணத்தின் பெரும்பகுதியை ஆன்மீகக்கடல் அறக்கட்டளை மூலமாக ஒரு நிரந்தரமான அமைப்பு உருவாக்கிட பூர்வாங்க வேலைகளுக்கு செலவழிக்கத் துவங்கியிருக்கிறோம்.தமிழ்நாட்டில் திண்டுக்கல் அருகே இருக்கும் தாடிக்கொம்பு கிராமத்தில் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி அமைந்திருக்கிறது.இதுதான் தமிழ்நாட்டின் தெற்குக் கடைசியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி ஆகும்.ஆனால்,இதற்குத் தெற்கே சுமார் மூன்று கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.எனவே,தென் தமிழ்நாட்டில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் ஆலயம் கட்டும் திட்டம் பரிசீலினையில் இருக்கிறது.


தவிர,நமது வழக்கமான இலக்குகளான ஒரு கோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைக்க வேண்டும்;அந்த ஒரு கோடிப் பேர்களும் தலா ஒரு  லட்சம் தடவைக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்திருக்க வேண்டும்.


ஒரு கோடித் தமிழர்கள் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினை தத்தம் வீடுகளில் பின்பற்ற வேண்டும்.இந்த இரண்டு இலக்குகளை நோக்கி நமது ஆன்மீகக்கடல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இதனால்,வெகு விரைவில் சித்தர்களின் அருளாட்சி நமது இந்தியாவில் துவங்கிவிடும்;இந்தியா செல்வச் செழிப்பு மிக்க நாடாக உயர்ந்துவிடும்;வறுமை அடியோடு நீங்கி,ஒவ்வொருவருமே கடன் இல்லாதவர்களாக மாறவிடுவார்கள்.வருகிறீர்களா இந்த உன்னத லட்சியத்தில் தோள் கொடுக்க???!!!


ஓம்சிவசிவஓம்