RightClick

இந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும்?


ஏன் இந்தியர்களுக்கு மட்டும் தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும்? ஏனெனில், இந்து தர்மம் தான் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும், நாட்டு மக்களுக்கும் எப்படி வாழ வேண்டும்? என்பதை மனித யுகம் நாகரீகமடைந்ததிலிருந்து இன்று வரையிலும் போதித்திருக்கிறது; போதித்துக் கொண்டேஇருக்கிறது,
இந்த போதனைகளின் தொகுப்பே உலக வரலாறு என்பதே சத்தியம் ஆகும். நாம் ஒவ்வொருவரும் இந்து என்ற உணர்வு ஏற்படும்போது மட்டுமே இந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மனம் வரும்.

தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், அவன் பணிபுரியும் நிறுவனத்தின் நிலை உயரும், அவனைச் சுற்றி வாழும் மனிதர்களிடம் சிறந்த தாக்கத்தை அவன் உருவாக்குவான் . இந்த தாக்கம் அப்படியே அவனைச் சார்ந்திருக்கும் தெரு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என்று பரவி ஒரு முன்னுதாரணமான உலகத்தை உருவாக்கிட முடியும்.

800 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட இஸ்லாமியர்களால் இந்து தர்மத்தின் வேரைக் கண்டறிய முடியவில்லை; ஆனால்,வெறும் 250 ஆண்டுகள் சுரண்டிய ஆங்கிலேயன், இந்துதர்மத்தின் வேர், ஆத்மா இரண்டையும் சிதைக்கத் திட்டமிட்டான். அதற்கான உலகளவில் ஒருங்கிணைந்தும் செயல்படத் துவங்கினான். அதனாலேயே மகத்தான வெற்றியும் பெற்றான். இந்த அழிவுப்பணி இன்றும் தொடர்கிறது. இதை எதிர்கொள்ளுமளவுக்கு நாம் இன்னும் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. நமது மக்கள் தொகையில் ஒரு சதவீதம்கூட இந்த விழிப்புணர்வைப் பெறவில்லை.

தேசபக்தி இல்லாத தெய்வபக்தியின் விளைவால் தான் கி.பி.1000 முதல் இன்று வரையிலும் நாம் நமது இந்துப் பண்பாட்டின் முக்கியத்துவமான இடங்களை இழந்தோம். மஹாபாரதத்தில் அரசியாக இருந்த காந்தாரி பிறந்த காந்தாரம் இன்று ஆப்கானிஸ்தானாக நமது பக்கத்து நாட்டின் நாடாக போய்விட்டது. சமஸ்க்ருதத்தை நமது நாட்டில் பரப்பிய பாணினி என்ற துறவியின்பிறந்த நாடான பாகிஸ்தானை ( பிரிட்டனின் நயவஞ்சகத்தால்) பிரித்துக் கொடுத்தோம். நமது நாட்டில் பிறந்த மாமனிதர் புத்தர். அவர் உருவாக்கிய அன்பு மதம் புத்தம்! !புத்த மதத்தை தமது தேசியமாக கொண்டிருக்கும் திபத்தின் சுயமரியாதையை இழப்பதற்கு நாம் (தொலைநோக்கு சிந்தனை இல்லாத நமது தலைவர்களால்) காரணமாக இருந்தோம். அதன்விளைவாக, நமது பாதுகாப்புக்கவசத்தையும் இழந்தோம். திபத் என்ற அற்புதமான நண்பனையும் இழந்தோம். உலகத்தின் ஒரே இந்து நாடாக இருந்து வந்த நேபாளத்தில் டிராகனின் வால் பதிவதற்கும் நாம் காரணமானோம்.

எந்த மாநிலப் பகுதிகளில் இருந்து அளவற்ற தேசபக்தர்கள் உண்டானார்களோ அந்தப் பகுதியை ஆங்கிலேயன் . நம்மை நமது ஆத்ம செல்வங்களை, நமது அறிவுக் களஞ்சியங்களை முற்ற முழுக்கத் திருடியப்பின்னர், நமக்கு சுதந்திரம் தரும்போது அந்த மாநிலப்பகுதிகளை இரண்டு பகுதிகளாக பிரித்தே தந்தான்.ஆமாம்!

பஞ்சாப் பகுதியிலிருந்து அளவற்ற தேசபக்தர்கள் பிறந்தார்கள். அதே போல வங்காளத்தில் அந்தக் காலத்தில் படித்தவர்கள் மிக அதிகம்; அதனால் அங்கேயிருந்தும் ஏராளமானவர்களிடமிருந்து தேசபக்தி கனலாகப் பரவிக்கொண்டே இருந்தது. (எப்போதெல்லாம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வருமோ, அப்போதெல்லாம் தேசபக்தி நிறைந்த பாகிஸ்தான் சீக்கியர்களும், இந்திய சீக்கியர்களும் தத்தமது நாடுகளுக்காக கடுமையாகப் போராடுவார்கள்.சகோதரராக இருந்தாலும்,அவர்களுக்குள் தீராப்பகையை உருவாக்கியது நாம் அல்ல. நமது இந்து தர்மம் சார்ந்த விழிப்புணர்வு இன்மையே!!!) நமது சுதந்திரப்போராட்ட வரலாற்றை முழுக்க வாசித்தால் புரிந்து கொள்ள முடியும்.

இந்து தர்மத்தின் வேர்களாக பசுக்கள், விவசாயம், பெண்கள், கோவில் போன்றவை இருந்தன; 1900 வரையிலும் இந்த ஐந்தும் மிகவும் மரியாதைக் குரியவையாக போற்றப்பட்டன. இந்த நான்குமே இந்து தர்மத்தின் வேர்கள் என்று மட்டும் நாம் நினைப்பது தவறு. எந்த ஒரு நாடாக இருந்தாலும் அந்த நாடு சுபிட்சமாகவும், குறையேதுமின்றியும் இருக்க வேண்டுமெனில்,அந்த நாட்டின் விவசாயம் செழிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த நாடு உணவுக்காக எந்த ஒரு நாட்டையும் சார்ந்திருக்காது. (சோமலியாவை நினைத்துப்பாருங்கள்). விவசாயி மன நிம்மதியோடு விவசாயம் செய்தால் தான் விளைச்சல் கொட்டோ கொட்டு என்று கொட்டும். சுதந்திரம் வாங்கியது முதல் இன்று வரையிலும் வந்த அரசுகள் (ஒன்றிரண்டைத்தவிர) விவசாயி, விவசாயத்தை விட்டே ஒடும் விதமாகவே செயல்பட்டு வந்திருக்கின்றன . எந்த ஒரு மத்திய திட்டக்கமிஷனும், அதன் அதிகாரிகளும், ஆள்பவர்களும் இந்தியாவின் ஆத்மா விவசாயம் என்பதை உணர்ந்துகொள்ளவே இல்லை;(ஏனெனில், அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல்நாட்டுப் பல்கலைக் கழகங்களான ஆக்ஸ்போர்டு அல்லது ஹார்வேர்டில் படித்ததால் நமது விவசாயத்தின் பெருமைகள் புரிவதில்லை ) இதன்  விவசாயத்தின் பெருமைகள் விளைவாக சுதந்திரம் வாங்கியபோது நமது நாட்டில் ஆறு லட்சம் கிராமங்கள் இருந்தன . தற்போது இரண்டரை லட்சம் கிராமங்களே இருக்கின்றன. இதனால்,உணவு உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. அதனால் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது . மேலும் பல அரிய உணவுப் பொருட்களின் விளைச்சல் காணாமல் போய்விட்டன.

ஒருவேளை இந்தியாவில் இனி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால், உலகத்தில் இருக்கும் 240 நாடுகளும் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டாலும், இந்தியாவின் பசியைத் தீர்க்க முடியாது. உலகத்து பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போய்விடும். இந்த உண்மை , ஆக்ஸ்போர்டில் & ஹார்வேர்டில் படித்த அறிவு ஜீவிகளுக்குப் புரிவதே இல்லை;

ஒரு பசுவை ஒருவன் கொன்றுவிட்டால் அடுத்த 12 ஆண்டுகளுக்கு அந்த பசு கொல்லப்பட்ட பகுதியிலிருந்து ஐந்து சதுரகி.மீ. தூரத்தில் இருக்கும் கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அவமானம் வரும். இதற்கான காரணங்கள் ஆன்மீக ரகசியமாக இருப்பதால் வெளிப்படுத்த குருமுகமாக அனுமதியில்லை. இதை தெரிந்துகொண்ட ஆங்கிலேயன் பசுவதைக் கூடங்களை இந்தியாவில் தனது அரசியல் திமிர்த்தனத்தால் நிறுவத் துவங்கினான். கி.பி.1800களில் இந்தியாவின் மக்கள் தொகை 20 கோடியாக இருந்தது. ஆனால் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கை 60கோடிகளாக இருந்தன. இதன் மூலமாக இயற்கைச் சமநிலையும். நீர்நிலைகளில் பயோ வித் கவ் டைவர்சிட்டியும் பாதுகாக்கப்பட்டு வந்தது;

மக்களிடையே ஆங்கிலேயன் பரப்பிய பொய் என்ன தெரியுமா? உயிருள்ள ஜீவன்கள் மனிதனுக்கு உணவாகப் படைக்கப்பட்டிருக்கின்றன . அந்த ஜீவன் இந்தியாவில் பசு என்பதை ஆழமாக பதியச் செய்தான். இதற்கென்றே நாடு  நெடுக ஆங்கிலேய அதிகாரிகளை நியமித்தான். இதன்விளைவாக இன்று 2012 இல் நமது நாட்டில் இருக்கும் பசு வதைக் கூடங்களின் எண்ணிக்கை 30,000!!!

இவைகளால் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பசுக்களை உயிரோடு கொன்று தேவை(?)யானவைகளை பிரித்து பதப்படுத்த முடியும். இந்த ஒரு கருத்திலிருந்துதான் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் பிரிவினை விதையை ஆங்கிலேயன் விதைத்தான். அது பெரிய விருட்சமாக வளர்ந்து இன்று பாகிஸ்தானாகி விட்டது. ஆன்மீகத்தை எப்படி கிரிமினல்தனமாக பயன்படுத்தி நமது இந்து தர்மத்தின் நடுமண்டையில் அரசியல் அடித்திருக்கிறான் ஆங்கிலேயன்!!!

ஆங்கிலேயன் 1900களில் மதுரையில் (சுதந்திர)தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்பெண்களை நிர்வாணப்படுத்தி ஓட வைத்தான். உதட்டுச்சாயம் என்ற லிப்ஸ்டிக் இந்தியாவில் விற்பனை செய்வதற்காகவே சினிமாவை அறிமுகப்படுத்தினான். சுத ந்திரம் வாங்கியப்பின்னரும்,இன்று வரையிலும் பெண் இனத்தை போகப்பொருளாக பார்க்குமளவுக்கு சினிமா, டிவி, டிவி விளம்பரங்கள் நம்மிடையே பரவிக்கொண்டே இருக்கின்றன.சினிமாவிலும் இவையெல்லாம் மேல்நாட்டு நாகரீகமே சிறந்தது என்று நமது நாட்டுப் பெண்கள் ஏற்றுக்கொள்ள வைக்கும் விதமாக நமது கல்வித்திட்டம் இன்னும் இருக்கிறது.அந்தக் கல்வித்திட்டத்தின் பெயரே மெக்காலே கல்வித்திட்டம்!!

மெக்காலே கல்வித்திட்டம் நமது சந்ததியினரின் மனப்பாடத்திறனை சோதிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது;நமது குருகுல கல்வித்திட்டம் நமது சந்ததியினரின் சிந்திக்கும் திறனையும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்திக்கொண்டே செல்கிறது.மெக்காலே கல்வித்திட்டத்தால் நான் என்ற அகங்காரம் பிடித்த சமுதாயத்தை கடந்த 200 ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.அதே சமயம், குருகுலக் கல்வித்திட்டம் கடந்த 20 நூற்றாண்டுகளாக உலகத்திலேயே தலைசிறந்த சமுதாயத்தை நமது நாட்டில் தான் உருவாக்கிவந்தது;
மெக்காலே கல்வித்திட்டத்தால் மனிதர்கள் மனிதத்தன்மையோடு உருவாகவில்லை. ஈகோ பிடித்த பிடிவாதம் நிறைந்த மனிதர்களை மட்டுமே உருவாக்க முடிகிறது. அதுதான் இன்று இந்தியா முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இப்போது இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணமே மெக்காலே கல்வித்திட்டமே! இன்று குருகுலக் கல்வித்திட்டத்தை இங்கிலாந்து பின்பற்றிவருகிறது. அவர்களின் உதவாக்கரைத்திட்டமான மெக்காலே கல்வித்திட்டத்தை பின்பற்றி நமது நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த எதிர்கால சந்ததியினரிடம் இருப்பது நான் என்ற அகங்காரமும், சுயநலமும் தான்! இதுபோக ஆங்கிலவழிக்கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்து அறிமுகப்படுத்தி சுமார் 40 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதன் பின்விளைவு என்ன தெரியுமா?

தோலால் மட்டும் இந்தியர்கள்! ஆனால்,சிந்தனையால் செயல்பாடுகளால் மேல்நாடுகளுக்கு ஒரு அடிமைக் கூட்டத்தை உருவாக்கிவிட்டோம். அவர்களுக்கு நமது பண்பாட்டின் பெருமைகள் புரியாது. குடும்ப அமைப்பின் அமைப்பு ரகசியமும் தெரியாது. இதன் விளைவுகளே இன்று திருமணமான ஒரே வருடத்தில் மணவிலக்கு கோரி நீதிமன்றங்களில் கூடும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டம்!!! இந்தக் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.பள்ளி ஆசிரியர்கள் தம்மிடம் கல்வி பயில வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்குமளவுக்கு சமுதாயச் சீரழிவு உருவாகிவிட்டது.மாதா,பிதா,குரு என்ற வரிசையெல்லாம் மெக்காலே கல்வித்திட்டத்தினால் அழிந்து வரும் மரபாக மாறிவருகிறது.

ஒரு சர்வே எடுக்கவேண்டும்: ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் நீதிமன்றங்களிலும் ஒரு வருடத்தில் பதிவாகும் மணவிலக்கு வழக்குகளின் பட்டியலை எடுக்க வேண்டும்;அந்த பிரிந்திருக்கும் தம்பதியரின் வாழ்க்கைப்பின்னணி, அவர்களின் பெற்றோர்களின் வாழ்க்கை முறை, அந்த பிரிந்த தம்பதியரின் கல்வி கற்ற விதம் போன்றவைகளை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் ஆங்கில வழிக்கல்வியை பயின்றவர்களே அ திகமானவர்கள் இருப்பார்கள் என்பது புலனாகும்.

உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் ஒரு சித்தாந்தம் அல்லது தத்துவம் உண்டானாலும், அந்த தத்துவம் அல்லது மதம் எந்த விதமான எதிர்ப்பும் இன்றி வாழும் இடம் நமது பாரதம் மட்டுமே! சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுத்தலுமே இந்து தர்மத்தின் அடையாளங்கள்!இந்த சகிப்புத்தன்மையால் நாம் இன்று நமது நிலப்பரப்பை இழந்து வருகிறோம்;பெருமைகளை இழந்து வருகிறோம்;சுயமரியாதையை இழந்து வருகிறோம்;வெகு விரைவில் நமது தேசியத்தையும்,சுய கவுரவத்தையும்,இந்து தர்மத்தின் வேர்களையும் இழக்க இருக்கிறோம்.நாம் ஒவ்வொருவரும் இந்து உணர்வு என்ற தேசபக்தியைப் பெறாவிட்டால் என்ன நடக்கும்? அடுத்த பாராவை வாசிக்கவும்:

இதோ ஒரு நேரடி ஆதாரமும் நமக்கு குமுதம் ரிப்போர்ட்டர் என்ற அரசியல் வார இதழ் 1.11.2012 ஆம் வெளியீட்டில் கிடைத்திருக்கிறது.இதுபோல,அடிக்கடி ஏராளமான நேரடி ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தாலும், நாம் அதன் பின்னணியின் கோர முகத்தை உணர்வதே இல்லை;அது என்ன அந்த நேரடி ஆதாரம்? பார்ப்போமா:-

தலைப்பு: ஐயா வைகுண்டரை சீண்டினால் . . .கட்டுரை: "சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக 18 ஆம் நூற்றாண்டிலேயே புரட்சிகளைச் செய்தவர் அய்யா வைகுண்டர்.ஆனால்,மத்திய அரசின் சி.பி.எஸ்.சி.பாடத்திட்டத்தில் அவரைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கிலேயர்களுக்குத் துதி பாடியிருப்பது என்ன நியாயம்? எனக்கொதிக்கிறார்கள்,தமிழகமெங்கும் உள்ள அய்யா வழி பக்தர்கள்!!!

இந்த விவாதத்தைக் கிளப்பிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் நம்மிடம், 'மெட்ரிக் பாடத்திட்டங்களில் பல மாநிலங்களில் இப்போது குழப்பம் நிலவுவதால், மத்திய அரசின் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திற்கு ஏராளமானோர் மாறிக் கொண்டிருக்கின்றனர்.இந்தச் சூழலைப் பயன்படுத்தி பள்ளிக் குழந்தைகளின் மத்தியில் விஷத்தை விதைத்து வருகிறது மத்திய அரசின் கல்வித் துறை. அம்பேத்கர் குறித்து ஆட்சேபகரமான வகையில் கார்ட்டூன் வெளியிட்டது. பாலகங்காதர திலகரை தீவிரவாதியாகச் சித்தரித்தது எல்லாம் இந்த ரகம் தான். இப்போது அதே வரிசையில் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அய்யா வைகுண்டரை அவமானப்படுத்தியிருக்கிறது ஒரு பாடம்.

ஜாதிக்கொடுமையும் ஆடை மாற்றமும் என தலைப்பிட்டுள்ள அந்தப் பாடத்தில், 'திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் சாணார்(தற்போது நாடார்) பெண்கள் மேலாடை அணிய மாட்டார்கள். நாயர் நிலப்பிரபுக்களின் நிலங்களில் வடிப்புத்(கள் இறக்கும்)தொழில் செய்வதற்காக வந்து குடியேறியவர்கள் அவர்கள்.செருப்புப் போடக் கூடாது நகைகள் அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் இருந்தன.1820 இல்கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகைக்குப் பின்னர் மதம் மாறிய பெண்கள்,மேல்சாதியினரைப் போல் தைக்கப்பட்ட ரவிக்கைகள் அணிந்தனர்.இதனால் மேல்சாதியினர், நாடார் பெண்களின் மேலாடைகளைக் கிழித்து எறிந்தார்கள் ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடார் சமூகத்தினரை 'வந்தேறிகள்'எனக் குறிப்பிட்டிருப்பது மகா அக்கிரமம். அதே போல, சாதிய ஒடுக்குமுறைகளை கிறிஸ்துவ மிஷனரிகள் தான் தகர்த்தது போல இதில் வரலாற்றைத் திரித்திருக்கிறார்கள். அதே கால கட்டத்தில் அங்கு சாதி ஒழிப்புக்கும், சமத்துவத்துக்கும் போராடிய அய்யா வைகுண்டரை அந்தப்பாடத்தில் கண்டுகொள்ளவே இல்லை. 'தாழக் கிடப்பாரை தற்காத்துக் கொள்வதே தர்மம்' என்கிற உயரிய தத்துவத்தை விதைத்து, மொத்த தமிழ் சமூகத்திற்காக தென் தமிழகத்தில் போராடியவர் வைகுண்டர். கூடவே, அந்தப் பகுதியில் மதமாற்றத்தையும் தடுத்து நிறுத்தி லண்டன் மிஷனரிகளின் கோபத்திற்கு ஆளானவர்.

இதனால் அவரைப் புறக்கணித்திருப்பதை திட்டமிட்டு நடைபெற்ற ஒரு நிகழ்வாகவே கருத வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக அய்யாவழி மக்களின் தலைவரான சாமித்தோப்பு பால பிரஜாபதி அடிகளாரைச் சந்தித்தேன்.

அய்யாவை இருட்டடிப்புச் செய்ததையும், நாடார் சமூகத்தினரை இழிவு செய்திருப்பதையும் கண்டித்து விரைவில் போராட்டத்தில் குதிப்போம் என்றார்.

சாமித்தோப்பு பால பிரஜாபதி அடிகளார் நம்மிடம், "ஒரு பாடத்திட்டம் தயாரிக்கும் போது சம்பந்தப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும். நாடார் சமுதாயப் பெண்கள் மட்டுமல்லாது பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண்கள் யாருமே இடுப்புக்கு மேலே ஆடை அணியக் கூடாது என அந்தக் காலத்தில் ஆதிக்க சாதியினர் கெடுபிடி செய்தனர்.அய்யா வைகுண்டர், தன்னை சந்திக்க வரும் பெண்கள் கட்டாயம் தோள் சீலை அணிந்து வர கட்டளையிட்டார். பல இடங்களில் தடையை மீறி, 'தோள்சீலைப் போராட்டங்களை' நடத்தினார். அதே போல சாதிக்கு ஒரு கிணறு என இருந்த நிலையை மாற்ற, 'முந்திரிக் கிணறு' எனப்படும் பொதுக்கிணறு முறையை அறிமுகப்படுத்தினார்.அனைத்து சமுதாயத்தினரும் ஒரே இடத்தில் சாப்பாடு தயார் செய்து, 'துவையல் பந்தி'களை நடத்தினார்.இன்றளவும் சாமித் தோப்பில் அந்த பொது பந்தித் திட்டம் செயல்படுகிறது.

பிற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக ஆண்கள் இடுப்பில் துண்டு கட்ட வேண்டும் என விதிக்கப்பட்ட தடையை மீறி, அந்தக் காலகட்டத்திலேயே அனைவரையும் தலைப்பாகை அணிய வைத்தார். பிற்காலத்தில் கன்னியா குமரியில் தியானம் செய்த விவேகானந்தர், சாமித்தோப்பு கோவிலுக்கு வந்தப்பிறகு தான் தலைப்பாகை அணியத் துவங்கினார் என்பது வரலாறு. எனவே இந்தப் பாடத்திட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.' என்று சீறினார்.

எனவே நாம் ஒவ்வொருவரும் நமது குழந்தைகளுடன் வாரம் ஒரு நாள் அருகில் இருக்கும் பழமையான கோவில்களுக்கு அழைத்துச் சென்று,அந்தக் கோவிலின் பெருமைகளையும், உருவான வரலாற்றையும் சொல்லுவோம்; ஏழு வயதுக்குள் நாம் நமது குழந்தைகளுக்கு பக்தி உணர்வினை ஊட்டாவிட்டால், அதன்பிறகு ஒருபோதும் அவர்கள் மனதில் "பக்தி உணர்வை" ஊட்டவே முடியாது.நமது குழந்தைகளை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன், ஸ்ரீசின்மயாமிஷன், ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கம், ராஷ்டீரிய சேவிகா சமிதி, சேவாபாரதி விவேகானந்தா கேந்திரம், ஸ்ரீசாரதா பீடம், மாதா அம்ருதானந்தமயி பீடம், மனவளக்கலை மன்றம் போன்ற அமைப்புக்கள் அடிக்கடி நடத்தும் ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள், பயிற்சி முகாம்களில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு கலந்து கொள்ள வைக்க வேண்டும்.இதன் மூலமாக முழுமையான இந்து உணர்வு நமது அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படும்.இது நாம் ஒவ்வொருவருமே கண்டிப்பாகச் செய்ய வேண்டிய கடமை ஆகும்.இவ்வாறு செய்யாமல் நம்மால் சுயச்சார்புள்ள நாடாகவும்,வல்லரசாகவும் உயர முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.