RightClick

கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடக ராசியினருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!!!
சனிக்கிழமையும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாட்கள் மிக அபூர்வமானது ஆகும்.இந்த வருடம் 1.12.12 சனிக்கிழமை அன்று நம்மை இயக்கும் சனிபகவானின் கிழமையும்,சிவபெருமானின் அவதார நட்சத்திரமான திருவாதிரையும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடக ராசியினர் சனியின் தாக்கத்தால் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.எந்த ஒருவேலையை எடுத்தாலும் அதை உடனே முடிக்கமுடியாமலும்,தான்  உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும் வீணாக பிறர் சந்தேகப்படுதலும்,அவமானப் படுதலும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.எனவே,இந்த ராசிக்காரர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சனியின் தாக்கத்திலிருந்து விடுபட்டுக்கொள்ளலாம்.


சனிக்கிழமை வரும் இராகு கால நேரமான காலை 9 மணி முதல் 10.30க்குள் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் செல்வோம்;போகும்போது அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,பால்,சந்தனம்,வில்வம்,விபூதி மற்றும் செவ்வரளிமாலை,உதிரி செவ்வரளி போன்றவைகளை வாங்கிக் கொண்டு சென்று பூசாரியிடம் கொடுத்து சனிக்கிழமை ராகுகால நேரத்துக்குள் ஸ்ரீகாலபைரவருக்கு அபிஷேகம் செய்து விட வேண்டும்.அபிஷேகம் செய்யும் போது நாம் பின்வரும் ஸ்ரீகாலபைரவர் மந்திரத்தை ஜபிக்கலாம்.இந்த மந்திரத்தை நமக்கு அருளியவர் யுகங்கள் கடந்து வாழும் சித்தரான திரு.காகபுஜண்டர் ஆவார்.எனவே,மந்திரம் ஜபிக்க ஆரம்பிக்கும்போது நமது குலதெய்வத்தை ஒருமுறை நினைத்துக் கொள்ள வேண்டும்;(உதாரணமாக ஓம் முனீஸ்வராய நமஹ என்று)பிறகு,ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறையும்,அடுத்தபடியாக இந்த மந்திரத்தை நமக்கு அருளிய சித்தரை நன்றியோடு நினைத்து, ஓம் காகபுஜண்டர் பெருமானே வாழ்க என்றும்,பிறகு ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய போற்றி என்று ஜபிக்கத் துவங்க வேண்டும்.
ஒருவேளை காலையில் இவ்வாறு ஸ்ரீகாலபைரவருக்கு பூஜை செய்ய இயலாதவர்கள் மாலை 4.30முதல் ஆறு மணிக்குள் இதே போன்ற பூஜையைச் செய்யலாம்.இந்தப் பூஜையை முடித்துவிட்டு,நேராக அவரவர் வீட்டுக்குச் செல்லவேண்டும்.


ஒருவேளை பணக் கஷ்டத்தினால் இந்த பொருட்களை வாங்கி பூஜை செய்ய இயலாதவர்கள்,ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரையிலும் மேலே கூறியவாறு ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு நேராக கிழக்கு நோக்கி ஒரு மஞ்சள் துண்டின்மீது அமர்ந்து ஜபிக்கலாம்;இப்படி டிசம்பர் 2014 வரையிலும் ஜபிப்பது நல்லது;அப்படி ஜபிக்க ஆரம்பிக்க ஏற்ற நாள் நாளை!!!ஸ்ரீகால பைரவரின்பிறந்த நாளானது கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்த தினம் ஆகும்.இந்த மாதம் 6.12.12 வியாழக்கிழமை அன்று வருகிறது.அன்றும் இதே போல ஸ்ரீகால பைரவர் அபிஷேகம் செய்வது மிக மிக மிக நல்லது.இதன்மூலமாக சனியின் அன்பைப் பெறலாம்;ஏனெனில்,சனிபகவானின் குருவாக ஸ்ரீகால பைரவராக இருப்பதால்,ஸ்ரீகாலபைரவரை விடாமல் வழிபட்டு நிம்மதியோடும்,நல்ல தொழில் வளர்ச்சியோடும் இருக்கலாம்.
மேற்கூறிய ராசியினரைத்தவிர,எல்லா ராசிக்காரர்களும் இந்த வழிமுறையைப் பின்பற்றலாம்.


ஓம்சிவசிவஓம்

தம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் நோய்களை குணப்படுத்தவும் செய்யும் அம்மன் வழிபாடு!!!
மெகாத் தொடர்களும்,நெடுந்தொடர்களும் ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை எப்படி பிரிப்பது? பிரிந்தவர்களை எப்படி நோகடிப்பது? என்று சொல்லிக்கொடுக்கின்றன.இதன்விளைவாகவும்,தமிழ்நாட்டில் பல தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க விரும்பியும்(சுயமாக சிந்திக்கத் தெரியாமல்/சிந்திக்கத் தெரிந்தும் தெளிவான முடிவெடுக்க முடியாமல்) தனித்து வாழ்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள்.கணவன் மனைவியின் வார்த்தைக்கு கட்டுப்பட வேண்டும்;மனைவி கணவனின் பேச்சை மீறக்கூடாது;புரிந்து கொள்வதும்,விட்டுக்கொடுப்பதுமே ஒரு தம்பதியைச் சேர்ந்து வாழ வைக்கும்!


அரசியல்வாதிகள் அரசாங்கத்தைக் கெடுக்கிறார்களோ இல்லையோ அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகள் அரசு இயந்திரத்தை கெடுத்து நாசமாக்கிவிட்டார்கள்.மக்கள் நலத்தை விடவும்,எப்படி தனது அதிகாரத்தையும்,தனது துறை மந்திரியின் அதிகாரத்தையும் பயன்படுத்தி பணம் பண்ணலாம்? என்ற நோக்கத்தில் செயல்படுவதால் தான் இன்று சராசரி மக்களின் தினசரி வாழ்க்கை மிகுந்த கஷ்டமும்,சோகமும்,விரக்தியும் நிரம்பியுள்ளதாக இருக்கிறது.

அதே போல,தொலைக்காட்சி ஓளிபரப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அரசியல் மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்ச்சியை உருவாக்குவதற்குப் பதிலாக வெறுப்பையும்,காம உணர்ச்சியைத் தூண்டி காமவெறியாகவும் மாற்றும் விதமாக நிகழ்ச்சிகள் தயாரிப்பதால் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகி தள்ளாடிக்கொண்டிருக்கிறது இந்து தர்மம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி ஒற்றுமையாக  இருந்தால் மட்டுமே எதிர்கால சந்ததி சிறப்பாக வளரும்;எதிர்கால சந்ததியான குழந்தைகள் சிறந்த ஆளுமைத்திறன்களோடு வளர பெற்றோர்களின் அன்பும்,அரவணைப்பும் மிக அவசியம்.
எனவே,கணவன் மனைவி ஒற்றுமை வளரவும்,அவர்களின் கருத்து வேறுபாடு நீங்கவும் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் தாயுள்ளத்தோடு ஒரு எளிய அதே சமயம் சக்திவாய்ந்த சுயபரிகாரத்தை நமக்கு அருளியிருக்கிறார்.இந்த சுயபரிகாரத்தை பின்பற்றுவதால்,கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கி,மாங்கல்ய பலம் அதிகரிக்கும்;பல குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்கள் இருக்கும்;எத்தனையோ பரிகாரம் செய்து நோய்கள் சிறிதுகூட குணமாகாமல் இருக்கும்.


இந்த சுயபரிகாரத்தை காளியம்மன்கோவில்,மாரியம்மன் கோவில்,அம்மச்சியார் அம்மன்கோவில்,கோட்டை மாரியம்மன்கோவில்,செல்லியம்மன்கோவில்,அங்காளபரமேஸ்வரியம்மன் கோவில்,தண்டுமாரியம்மன்கோவில்,பட்டத்தரச்சி அம்மன்கோவில்,தங்கத்துரைச்சியம்மன் கோவில்,துர்கையம்மன் கோவில்,பெரிய நாயகி அம்மன்கோவில்,மஞ்சள் மாரியம்மன் கோவில்,செவ்வாடைக்காரியம்மன் கோவில்,முத்துமாரியம்மன் கோவில்,சக்தி மாரியம்மன் கோவில்,பூவாடைக்காரியம்மன்கோவில்,வனத்தாயி கோவில்,பேச்சியம்மன்கோவில்,வனபத்திரகாளியம்மன்கோவில்,ஆனந்தவல்லியம்மன்கோவில், பெரிய மாரியாத்தா கோவில்,சின்னத்தாயி கோவில்,ராஜேஸ்வரியம்மன்கோவில்,வேட்டுவம்மன் கோவில்,பண்ணாரியம்மன் கோவில்,பூங்கா காளியத்தா கோவில்,விஜயராஜேஸ்வரியம்மன் கோவில்,செங்கோட்டுவேலம்மன்கோவில்,செங்கோட்டையம்மாள் கோவில்,சங்கரேஸ்வரி கோவில்,புத்து மாரியம்மன் கோவில்,புற்றுக்காளியாத்தா கோவில்,பத்திரகாளியம்மன்கோவில் என்று எந்த உக்கிரமான அல்லது சாந்தமான அம்மன்கோவிலிலும் செய்யலாம்.

இதைச் செய்வதற்கு தேவையான ஒரே தகுதி:அசைவம் சாப்பிடக் கூடாது;தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளுக்கு மட்டும் இந்த சுயபரிகாரத்தைச் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்து முடித்தப்பின்னர் நூறு நாட்களுக்குள் இந்த வழிபாட்டின் பலன்கள் நிச்சயமாக உங்களைத் தேடி வரும்.

 எலுமிச்சை சாதமும் சாம்பாரையும் வீட்டில் சமைத்து வைத்துக் கொண்டு,குறைந்தது கால் கிலோ விரலிமஞ்சள் வாங்கிக்  கொண்டு அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் செல்லுங்கள்;கோவில் பூசாரியிடம் இந்த விரலிமஞ்சளை காணிக்கையாகக் கொடுங்கள்;படையலாக வீட்டில் சமைத்த எலுமிச்சைச் சாதம்+சாம்பாரை அம்மன் பாதத்தில் கொஞ்சநேரம் வைக்கச் செய்யுங்கள்.அந்த நேரத்தில் நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும்(திருமணமாகி தனிக்குடும்பமாக வாழ்ந்து வந்தாலும்,அவர்களின் பெயர்களையும் சேர்த்துக்கொண்டு) சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு ரூ.108/-தட்சிணை தர வேண்டும்.ஏனெனில்,பூசாரி மனம் மகிழ்ந்தால் தான் நமது கோரிக்கைக்கு அம்மன் நிறைவேற்றித்தருவாள்;

பிறகு,படையலை திரும்பப்பெற்றுக் கொண்டு அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்.இப்படி எட்டு செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும்.எட்டாவது செவ்வாய்க்கிழமையன்று இத்துடன்,ரூ.1/-வீதம் 150 நாணயங்களையும் கொண்டு வர வேண்டும்.இந்த நாணயங்களால் பூசாரியிடம் சொல்லி அம்மனுக்கு சொர்ண அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகத்தின்  முடிவில்  அந்த ஒரு ரூபாய் நாணயங்களில் 140ஐ படையலை பகிர்ந்து கொடுக்கும்போது அனைவருக்கும் தர வேண்டும்;மீதி 10 ஐ நமது வீட்டுப்பூஜையறையில் பத்திரப்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்வதால் நமது செல்வச் செழிப்பும் பலமடங்கு அதிகரிக்கும்.

சில கோவில்களில் நமது வழிபாடு நிறைவடையும்போது பக்தர்கள் வராமலிருக்க சந்தர்ப்பம் உண்டு;அந்த சமயத்தில் நமது படையலை நமது வீட்டுக்கு கொண்டு சென்று நமது ரத்த உறவினர்கள்,நண்பர்கள்,அண்டைவீட்டார்களுக்கும் தரலாம்.நாமும் சாப்பிடலாம்.ஆனால்,இந்த பரிகாரம் செய்வது பற்றி ,செய்யும்போதோ செய்தப்பின்னரோ பிறரிடம் ஒருபோதும் சொல்லக்கூடாது;சொன்னால் இது பலிக்காது;

ஓம் ஆதிபராசக்தியே போற்றி!

ஓம்சிவசிவஓம்

வீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்!!!எனக்குத் தெரிந்த ஒருவர் அரசுப்பணியில் இருந்தார்;அவரது வேலையில் அவர் செய்த ஒரு சிறு கவனக்குறைவால் அவர் மீது வழக்குப் பதிவாகி,நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது.அந்த சிறு கவனக்குறைவை அவரது உயர் அதிகாரி மட்டத்திலேயே சரி செய்திருக்கலாம்;வீண்பழி போட்டு தன்னையும்,தனது பதவி உயர்வையும் பழுதில்லாமல் பாதுகாப்பது அரசுப்பணியில் இருப்பவர்களின் கைவந்தக் கலை!!!


நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் சூழ்நிலையில் அவரது சக ஊழியர்கள் அவரை பயம் காட்டிவிட்டனர்;வேலையே போய் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று எல்லோரும் பயம் காட்டிவிட்டனர்;அவரோ அரசுப்பணியில் இருந்தாலும்,நேர்மை,நீதி என்று மட்டும் வாழ்பவர்;எதையாவது காரணம் காட்டி அடிக்கடி காவி உடுத்திக்கொண்டு விரதமிருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்;இதன் மூலமாக லஞ்சம் வாங்காமலேயே தனது அரசுப்பணியை நிறைவு செய்தவர்;இந்த வழக்கு வரும்போது அவருக்கு இன்னும் இரண்டு வருடங்களே பணிக்காலம் இருந்தது;


மன உளைச்சலினால் இவர் குடிக்க ஆரம்பித்திருக்கிறார்;அப்போதெல்லாம் கள் தான் கிடைக்கும்;அவர் கள் குடிக்கப்போன இடத்தில் இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் இவருக்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார்.

மார்கழி மாதம் முழுவதும் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும்;அதுவும் கோவில் திறக்கும் முன்பே கோவிலுக்குச் சென்றுவிட வேண்டும்;சென்று மூலவராகிய சிவபெருமானை முதன் முதலில் தரிசிக்க வேண்டும்;இப்படி மார்கழி மாதம் முழுவதும் அதாவது 29 நாட்களும் இப்படி முதல் ஆளாக சிவனை தரிசித்தால் உன் மீது இருக்கும் வீண்பழி நீங்கிவிடும் என்பதே அந்த ஐடியா!!

உடனே,குடிக்க இருந்த கள்ளை கீழே ஊற்றிவிட்டு புறப்பட்டுவிட்டார்;மறுநாள் மார்கழி முதல் நாள்!  தொடர்ந்து 29 நாட்களும் காலை 2மணிக்கே எழுந்து 3 மணிக்கே தனது ஊரில் இருக்கும் மடவார்வளாகம் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவிலுக்கு வந்து முதல் ஆளாக வைத்தியநாதசுவாமியைத் தரிசித்து விட்டார்;30 நாள் தை முதல் நாள் அன்றும் மூலவரை தரிசித்துவிட்டார்.தை மாதம் முதல் வாரத்தில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது;தை மாதத்தின் இறுதி வாரத்தில் இவர் மீதான வழக்கு தீர்ப்பு வந்தது;அதிகாரிகள் மட்டத்திலேயே தீர்க்க வேண்டிய இந்த சிறு விஷயத்தை நீதிமன்றத்துக்குக்கொண்டு வந்து,நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று தீர்ப்பில் இருந்தது.
இன்று அந்தப் பெரியவர் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இந்த சம்பவம் நிகழ்ந்து தற்போது இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன;வீண் பழியோ,அவமரியாதையோ வரும் சூழ்நிலையில் இருப்பவர்கள் மார்கழி மாதத்தில் வரும் 29 நாட்களும் உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் சென்று,முதல் ஆளாக மூலவராகிய சிவபெருமானைத் தரிசியுங்கள்.வீண் பழியிலிருந்து விலகிவிடுங்கள்.

இந்த நந்தன வருடத்தில் மார்கழி மாதம் 16.12.12 அன்று பிறக்கிறது.

ஓம்சிவசிவஓம்

நவராத்திரி அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாள்!!!27.11.2012 அன்று அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது


திருவண்ணாமலை: லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். கடந்த 24ம் தேதி, பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேரில் எழுந்தருளிய தேரோட்டம் நடந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர் சமேத வள்ளி தெய்வானை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அதிகாலை காலை 4மணி அளவில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீராஜா குருக்கள் பரணி தீபத்தை கையிலேந்தி கோயில் முதல் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு இந்த பரணி தீபத்தை கொண்டு, சிவ- சக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதனை காட்டுவதற்காக, அம்மன் கோயில் கருவறையில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றப்பபட்டன. பின்னர் கோயிலில் உள்ள விநாயகர் சந்நதி உள்ளிட்ட அனைத்து சந்நதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டது. பரணி தீபம் ஏற்றப்படுவதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பின் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். அப்போது அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடி காட்சியளித்தார். காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர். பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது. அப்போது மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதைக் கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டும் வண்ணம் இருந்தது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கோயில் முதல் பிரகாரம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நன்றி:தினமலர் டாட் காம்

கார்த்திகை பவுர்ணமிபூஜையில் ஸ்ரீவி.பத்திரகாளியம்மன்!!!
நந்தன வருடத்தின் பெரிய கார்த்திகை என்று அழைக்கப்படும் கார்த்திகை மாதத்து பவுர்ணமி பூஜை 27.11.12 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பத்திரகாளியம்மன்  கோவிலில் கொண்டாடப்பட்டது.அப்போது எடுக்கப்பட்ட படங்கள்  இவை;

திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ராகு மஹாதிசை நடைபெற்றுக்கொண்டிருக்கும் அன்பர்கள்,குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையை நினைத்து ஏங்குபவர்கள்,தன்னலம் கருதாத பொதுநலவாதிகளில் நிம்மதியை இழந்து தவிப்பவர்கள் ஒரே ஒரு முறை இந்த பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டாலே அடுத்த பவுர்ணமி நாளுக்குள் அவர்களுடைய சிக்கல்கள் தீரத் துவங்குவதை உணரலாம்;

மேலும் தமது மகளுக்கு குறித்த வயதில் திருமணம் கைகூடவில்லையே என்று ஏங்குபவர்கள் குடும்பத்தோடு இங்கே வர வேண்டும்.வந்து இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.(கலந்து கொள்ள எந்த ஒரு நேரடி மற்றும் மறைமுகக் கட்டணமும் கிடையாது!)தொடர்ந்து  ஆறு பவுர்ணமி பூஜைகளில் கலந்து கொண்டால், பொருத்தமான வரன் அமைந்துவிடும் என்பது கடந்த பத்து வருட அனுபவ உண்மைகள் ஆகும்.

மனதில் தனிமை உணர்ச்சியால் வேதனைப்படுபவர்கள்,வாழ்க்கைத் துணை கொடுக்கும் தொல்லையால் தற்கொலை எண்ணத்தோடு வாழ்பவர்கள்(ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி) இந்த பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி பூஜைகளில் தொடர்ந்து 12 முறை(மாதம் ஒருமுறை வீதம் ஓராண்டுக்கு!!!) கலந்து கொள்ள அவர்களுடைய தற்கொலை எண்ணம் விலகிவிடும்;வாழ்க்கைத் துணையோடு இருந்து வந்த கருத்துவேறுபாடு முழுமையாக விலகிவிடும்.முதல் மாத பவுர்ணமிபூஜையில் கலந்து கொண்டுவிட்டு,அவரவர் வீட்டுக்குச் சென்றதுமே அவர்களின் மன உளைச்சல் தீரத் துவங்கும்;அவர்களுக்கு புதிய ஆதரவு கிடைக்கும்;அவர்களின் விரக்தி மனப்பான்மை நீங்கிவிடும்;ஒவ்வொரு பவுர்ணமி பூஜையும் எந்த நாளில் நடைபெறுகிறது? என்பதை அறிய இந்த கோவிலின் பூசாரி சுந்தரமஹாலிங்கம் செல் எண்:9003353286 இல் விசாரித்துவிட்டு வருக!!!(செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பேச இயலாது;மற்ற நாட்களில் பேச ஏற்ற நேரம் மதியம் 1.30 முதல் 4.30 வரை)


விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சிவகாசி சாலையில்(ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தூரத்தில்) முதலியார்பட்டித் தெரு என்ற தெற்குப்பட்டியில் நெசவாளர்கள் வீடுகளுக்கு மத்தியில்  அமைந்திருக்கிறது அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில்.ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு 10 மணிக்கு பவுர்ணமி பூஜை ஆரம்பமாகி,நள்ளிரவு 1 மணிக்கு நிறைவடையும்.பவுர்ணமி பூஜையின் நிறைவாக அன்னதானம் வழங்கப்படுகிறது.யாரிடமும் ஒருபோதும் அன்பளிப்பு கேட்கப்படுவதில்லை என்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பு.சுமார் 2000  சாலியர்(நெசவாளர்) குடும்பங்களின் குலதெய்வமாகத் திகழ்ந்தாலும்,விருதுநகர் மாவட்டத்தில் “பணியாரப் பத்திரகாளி” என்ற பெயரில் மிகவும் பிரபலமான கோவில் இது;


ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி என்று அழைக்கப்படும் மாசி மாதம் வரும் சிவராத்திரி நாளில் இந்த கோவிலில் ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் கரண்டி இல்லாமல் கையாலேயே அப்பங்களைச் சுட்டு எடுப்பார்;அவைகள் அனைத்தும் அருள்மிகு பத்திரகாளியம்மனுக்கு படையலாக வைக்கப்படும்;சிவராத்திரி பூஜைகள் நிறைவடைந்தப்பிறகு,பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த அற்புத ஆன்மீக அதிசயம் கடந்த 200 ஆண்டுகளாகவே இங்கே நிகழ்ந்து வருகிறது.

(வெகு தொலைவில் இருப்பவர்கள் இங்கே வர இயலாதவர்கள் இந்த பத்திரகாளியம்மன் போட்டோவை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் வைத்து தினமும் அரை மணி நேரம் வரை நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்;அதுவும் இயலாதவர்கள் தமது கணிப்பொறியில் வால்பேப்பராக வைத்து தினமும் சிலநிமிடங்கள் வேண்டிக் கொண்டு வர அடுத்த சில வாரங்கள்/மாதங்களில் நெருக்கடியான மனநிலை மாறத்துவங்கும் என்பதும் அனுபவ உண்மை!!!)

நமது வேதனைகள் தீர்ந்து நிம்மதியாகவும்,நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வருவோம்;அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்வோம்;அவள் அருள் பெறுவோம்;யூ ட்யூப் இணைப்பில் பவுர்ணமிபூஜையை தரிசிக்க இங்கே சொடுக்கவும்.

ஓம்சிவசிவஓம்

நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .உலக அழகிப் பட்டம் பெற்று,இந்தித் திரையுலகில் தனி இடத்தைப் பிடித்தவர் ஐஸ்வர்யாராய்.இவர் 1.11.1973 அன்று மங்களூரில் பிறந்தார்.இணையத்தில் இவரது பிறந்த விபரத்தை இப்படி வெளியிட்டிருக்கின்றனர்.சரி,இதே 1.11.1973 அன்று சென்னையிலும்,மதுரையிலும்,மும்பையிலும்,வைசாக்கிலும் பெண் குழந்தைகள் ஏராளமானவர்கள் பிறந்திருக்கிறார்கள்.இருந்தும்,ஏன் ஒரே ஒரு ஐஸ்வர்யாராய் உலக அழகிப்போட்டியில் கலந்து கொண்டு பட்டம் பெற்றார்?

இங்கே தான் இந்த கேள்விக்கு ஜோதிட அறிவியல் தேவைப்படுகிறது.புதிதாக வாங்கிய டீ.ஷர்ட் அல்லது சுடிதாரை அணிந்த அன்று முழுவதும் நமது மனநிலை எப்படி இருந்தது? கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?

கெட்டுப்போன உணவை ஒரு நாள் நமது வீட்டில் வேறு வழியில்லாமல் சாப்பிட்டிருப்போம்;அப்படிச் சாப்பிட்ட 24 மணி நேரத்திற்கு நமது மனநிலை என்ன?

நம்மை,நமது மனநிலையை,நமது ஆளுமைத்திறனை நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையும்,நாம் அணியும் ஆடையும்,நாம் சாப்பிடும் உணவும் பாதிக்கும்போது எத்தனையோ கோடிக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கிரகங்கள் பாதிக்காதா?


விண்வெளி முழுவதும் பலவிதமான கதிர்வீச்சுக்கள் இருக்கின்றன என்று விண்வெளி விஞ்ஞானம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
விண்வெளியிலிருந்து பலவிதமான சக்திகள் சூட்சுமமாக பூமியை நோக்கி பாய்ந்து கொண்டே இருக்கின்றன என்பதை ஜோதிடமும்,ரெய்கியும் கண்டறிந்துள்ளன.அந்த கண்டுபிடிப்பில் பலவிதமான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
நாம் நமது துறையில் ஓரளவு சாதித்திருப்போம்;அந்த சாதனையை நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் பெருமையாகச் சொல்லி சொல்லி மாய்ந்து போவோம்;அப்படிச் சொன்ன மறு நாள் அல்ல; சில நிமிடங்களிலிருந்தே நமது வழக்கமான நடவடிக்கைகளில் பல விதமான தடைகள் தோன்றத் துவங்கும்;ஆனால், ‘சாதித்த’ உற்சாகத்தில் அந்தத் தடைகளை நாம் கூர்ந்து கவனிக்க மாட்டோம்;

ஒரு மகத்தான வெற்றியைப் பெறும் வரையிலும் நாம் நமது சிறு சிறு சாதனைகளை தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மிகவும் நல்லது;அப்படி ஒன்றும் பிறரின் பாராட்டுக்காக நாம் ஏங்க வேண்டுமா?

அப்படி ஏங்கி,ஏங்கி நமது சிறு சாதனைகளை எல்லோரிடமும் சொல்லித் தான் நமது அடுத்த கட்ட முன்னேற்றத்தைத் தொடக் கூட முடியாமல் தவிக்கிறோம்.இந்தியர்களாகிய நமக்கும்,தமிழர்களாகிய நமக்கு பொறாமை உயிர்மூச்சாகவே இருக்கிறது.போட்டி மனப்பான்மைக்கும்,பொறாமைக்கும் ஒரு சிறு வித்தியாசமே இருக்கிறது.அதை நாம் எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்?

ஓம்சிவசிவஓம்

2012 இல் உலகம் அழியுமா? ஒரு போதும் அழியாது!!!
நீதிக்கிரகமான சனிபகவான் துலாம் ராசிக்குள் நுழைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.10.11.12 முதல் சனிபகவான் உச்சமாகத் துவங்கிவிட்டார்.இந்த உச்சநிலையானது பொதுவாக 100 நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும்.இந்த முறை 220 நாட்கள் இருக்கப் போகிறது.இதே கால கட்டத்தில் கலியுகத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இராகு பகவான் 2.12.12 அன்று துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
ராகு பகவான் நிழல் கிரகமாக இருந்தாலும்,அவருடன் யார் சேருகிறார்களோ அவரது சுபாவத்தை வாங்கி,பல மடங்கு பூமியில் மனிதர்களிடையே வெளிப்படுத்துவது அவரது வழக்கம்.யுத்தகிரகமான செவ்வாயுடன் சேரும்போது,திடீர் கலகங்களும்,போராட்டங்களும் அதிகரிக்கும்;சுக்கிரனுடன் சேரும் போது உலகெங்கும் முறையற்ற உறவுகள் பெருகும்;வக்கிரமான உறவுகள் பிரபலமடையும்.புதனுடன் சேரும் போது வர்த்தகத்தில் புதுப்புது குற்றங்கள் நடைபெறும்.சந்திரனுடன் சேரும்போது நம் அனைவருக்குமே விபரீதமான எண்ணங்கள் உருவாகும்.குருவுடன் சேரும் போது காவி உடுத்திய போலிகள் அவமானப்படுவார்கள்;போலி நிதிநிறுவனங்கள் இழுத்து மூடப்படும்;ஊழல் செய்த நிதித்துறை அதிகாரிகள் சற்றும் எதிர்பாராமல் சிக்கி சிறைக்குச் செல்வார்கள்.

அதே போல,நீதி நேர்மை நியாயம் இவைகளைப் பாதுகாப்பது சனிபகவானே! நம் ஒவ்வொருவருக்கும் ஆயுளையும்,தொழிலையும் தருபவரும் அவரே! அவர் உச்சமாகும்போது ராகு இணைவது என்பது சுமார் 300 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும்.கடந்த 300 ஆண்டுகளில் நிகழ்ந்த அநீதிகளுக்கு உரிய நீதி இந்த ஒன்றரை ஆண்டுகளில் கிடைக்க இருக்கிறது.(சனிபகவான் 16.12.2014 வரையிலும்,ராகு பகவான் 21.6.2014 வரையிலும் துலாம் ராசியில் பயணிக்கிறார்கள்)

தீவிரவாதம்,ஒழுங்கீனம்,முறையற்ற உறவுகள்,வதந்தி,மல்டி லெவல் மார்கெட்டிங்,குறைந்த உழைப்பின் மூலமாக மித மிஞ்சிய வருமானம் பார்த்தல்,கமிஷன் தரக்  கூடிய தொழில்கள்,பிறப்பு உறுப்பு,அளவற்ற காம இச்சை,இன்றைய ஆங்கில மருத்துவம்,விதவை,சர்ப்பங்கள்,விஷப் பொருட்கள்,அதிரடி முன்னேற்றம்,உளவுத் துறை,கணிப்பொறி,செல்போன், நெட்வொர்க்குகள்,குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகள் போன்றவைகளுக்கு ராகு பகவான் மட்டுமே காரகத்துவமாகிறார்.
தொழில்,நீதி நியாயம்,ஆயுள்,மனித எலும்பு,இரும்புத்தொழில்,அடிமைத் தொழில்,அடிமைகள் வாழுமிடம், தொழிலாளர்கள் தங்குமிடம்,கீழ்ஜாதி மக்கள் இவைகளுக்கு காரகத்துவம் சனிபகவான் ஆவார்.


ராகு  தனித்து இருக்கும்போது ஒருவிதமாகச் செயல்படுகிறார்;அவரே ஒரு கிரகத்துடன் சேரும் போது அந்த கிரகத்தின் காரகத்துவத்தை வாங்கி பூமியிலிருப்பவர்களுக்கு வழங்குகிறார்.எனவே, அதர்மப்பாதையில் தர்மம் காக்கப்பட இருக்கிறது.


அதே சமயத்தில்,15.12.2012 சனிக்கிழமையன்று யுத்தக்கிரகமான செவ்வாய் தனது  உச்சராசியான மகர ராசிக்குள் நுழைகிறார்.நுழைந்து 23.1.2013 வரை மகரராசியைக் கடக்கிறார்.இந்த சூழ்நிலையில் உச்ச செவ்வாய் முழுப்பார்வையாக கடகராசியைப் பார்க்கிறார்.ஏற்கனவே,உச்சமாகிவிட்ட நீதிக்கிரகமான சனிபகவானும் தனது முழுப்பார்வையான பத்தாம் பார்வையால் அதே கடகராசியைப் பார்வையிடுகிறார்.கடகராசியில் நாம் வாழும் பூமி பிறந்தது(???!!).நாம் வாழும் இந்தியாவும் கடகராசியில் சுதந்திரமடைந்திருக்கிறது.

உச்சச் செவ்வாயானவர் தனது நான்காம் பார்வையால் மேஷராசியை இதே 45 நாட்களுக்கு பார்க்கிறார்;உச்ச சனியானனவர் தனது ஏழாம் பார்வையால் மேஷராசியை ஏற்கனவே பார்த்து வருகிறார்.இதெல்லாம் ஜோதிட ஆர்வலர்களுக்கும்,ஜோதிடர்களுக்கும் புரியும் விஷயம்.எனது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்காக விளக்கியிருக்கிறேன்.


இந்த 45 நாட்களில் நாம் வாழும் பூமியும், இந்தியாவும் போரால்,கலகத்தால்,அன்னிய நாட்டு உளவுத்துறைகளின் குரங்குச் சேஷ்டைகளால் கடுமையாக பாதிக்கப்படும்;நயவஞ்சகத்தால் கோடிகளைச் சுருட்டியவர்கள் மாட்டிக்கொள்வார்கள்;தண்டனைக்குள்ளாவார்கள்;அல்லது அவமானப்படுவார்கள்;அவர்கள் அரசியலில் மீண்டும் தலையெடுக்கவேமுடியாது;


தமிழ்நாடு மற்றும் இந்தியா மட்டுமல்ல;உலகம்முழுவதுமே பண மோசடி செய்த அயோக்கியர்கள் வகையாகச் சிக்கிச் சீரழிவார்கள்;கறுப்புப் பணம் மொத்தமும் அரசாங்கத்தை வந்து சேரும்.
கடகம் மற்றும் மேஷ ராசியினர்தான் அதிகமாக இந்த காலகட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணாதீர்கள்;அனைத்து ராசியினரும் கடுமையாகவே பாதிக்கப்படுவார்கள்;தனுசு ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வாகனப்பயணத்தின் போதும்,சாலையைக் கடக்கும்போதும்,ரயில் பாதையைக்கடக்கும் போதும் மிக  நிதானமாக இருக்க வேண்டும்.கடகராசியினர் கடந்த ஓராண்டில் செய்த தப்புக்களின் விளைவுகள் கர்மவினையாக திரும்பவரும்;மிதுனராசியினர் பேசும் பேச்சுக்கள் குடும்பத்திலும்,அலுவலகத்திலும்  குழப்பத்தை உருவாக்கும்;


 கன்னிராசியினர் அளவுக்கு மீறி பொறுத்துப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது; துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் பயண நேரம் தவிர மற்ற நேரங்களில் காலபைரவ மந்திரத்தையோ,அவர்களுடைய இஷ்ட தெய்வ மந்திரத்தையோ விடாமல் ஜபித்து வருவது அவசியம்.கும்ப ராசியினர் மற்றும் கும்ப லக்னத்தில்  பிறந்தவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகும்.

கடந்த ஒரு வருடம் வரையிலும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள் அல்லது தினமும் ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வருபவர்கள் அல்லது ஏதாவது ஒரு தெய்வத்தை வழிபட்டு வருபவர்களுக்கு பெரிய அளவில் பிரச்னைகள் வராது;ஏழரைச்சனி நடைபெறும் கன்னி,துலாம்,விருச்சிகம் ராசியினரும்,அஷ்டமச்சனி நடைபெறும் மீன ராசியினரும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்கும் சூழல் உருவாகும்.எனவே,இன்றிலிருந்தாவது ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்.


முனீஸ்வரரைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள்,முனி என்ற பெயரைக் கொண்டவர்கள் தினமும் ஏதாவது ஒரு மிருகம் அல்லது பறவைக்கு உணவு தானம் செய்வது நல்லது;ஜோதிடர்கள் கண்டிப்பாக ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்;ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஒருபோதும் அசைவம் சாப்பிடக்கூடாது;மது அருந்தக் கூடாது;முறையற்ற உறவில் ஈடுபடவே கூடாது.


பூமியின் புவியியல் அமைப்பில் மகத்தான மாற்றங்கள் நிகழும் காலம் இந்த 45 நாட்கள் ஆகும்.அல்லது மகத்தான மாற்றங்கள் நிகழ்வதற்கான அடையாளங்கள் வெளிப்படும்;இதே போன்ற சூழ்நிலை 10.4.2013 புதன் முதல் 21.5.2013 செவ்வாய் வரையிலும்;
19.8.2013 திங்கள் முதல் 8.10.2013 செவ்வாய் வரையிலும்; ஏற்பட இருக்கிறது.


இந்தக் கால கட்டத்தில் நாம் செய்ய வேண்டியது அடிக்கடி அண்ணாமலைக்கு கிரிவலம் செல்வது தான்;அப்படிச் சென்று குறைந்தது 5 கிலோ நவதானியங்களையும்,குறைந்தது 1 கிலோ டயமண்டு கல்கண்டுகளையும் கிரிவலப்பாதையில் தூவ வேண்டும்.ஒவ்வொரு முறையும் கிரிவலம் வரும்போதும் மஞ்சள் நிற ஆடை அணிந்து ,இரு கைகளிலும் ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக்  கொண்டு மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமாக மனித உயிர்ச் சேதம் நிகழாது.இனி ஒரு போதும் அரசுகளை நம்பமுடியாத சூழ்நிலை இருப்பதால்,நாம் வாழும் பூமியை நாமே பாதுகாத்திட ஆன்மீக முயற்சிகளை எடுப்போம்;

ஓம்சிவசிவஓம்

ஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012 !!!

நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்காக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்கள் தலைமையில் 26.10.2012 வெள்ளிக்கிழமையன்று ராமேஸ்வரத்தில் ஒரு யாகம் நடத்தினோம்;இந்த யாகத்தின் முடிவில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமிகளுக்கு ஆன்மீகக்கடல் குடும்ப அர்ச்சனை செய்தோம்;(இந்த யாகம் சீரான மழை வேண்டி நடத்தப்பட்டது)
சஷ்டி நாளான 18.11.2012 ஞாயிறு அன்று திருச்செந்தூரில் நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் சார்பாக  நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த அன்னதானம் 301 சாதுக்களுக்கு வழங்கப்பட்டது.அன்னதானத்தின் முடிவில் திருச்செந்தூர் முருகன் சன்னதியில் ஆன்மீகக்கடல் குடும்ப அர்ச்சனை செய்யப்பட்டது.
23.11.2012 வெள்ளிக்கிழமை அன்று புளியங்குடி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கும் அருள்நிறை சுயம்பு புற்றுநாதர் திருக்கோவிலில் நமது ஆன்மீகக்கடல் குடும்பம் சார்பாக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்கள் தலைமையில் வன அன்னதானம் செய்யப்பட்டது.
ஒருங்கிணைந்த அன்னதானம் என்பது நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தாமாகவே மனமுவந்து அன்னதானம் செய்வதற்கு அன்பளிப்புகள் அனுப்புவது ஆகும்.அப்படி அனுப்பும்போது அவர்களுடைய ஜாதக நகல்களையும் அனுப்பி வைப்பார்கள்.
நமது ஆன்மீகக்கடல் குடும்ப அர்ச்சனை செய்தோம் என்று கூறியிருந்தோம் அல்லவா? அந்த குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இதோ:
1.திரு.பா.சாரதி அவர்கள் மற்றும் அவர்களின்  குடும்பத்தார்,சிங்கப்பூர்.
2.திரு.ரவீந்திரன் குடும்பத்தார்,பாரிஸ்,ப்ரான்ஸ்
3.திருமதி.யோகலதா குடும்பத்தார் மற்றும் சகோதரிகள்,கனடா
4.திரு.அருண்முருகன் குடும்பத்தார்,வளைகுடா நாடு.
5.திரு.வேல்முருகன் குடும்பத்தார்,இங்கிலாந்து
6.திரு.அறிவரசன் குடும்பத்தார்,இந்தோனேஷியா
7.திரு.ஸ்ரீதரன் மற்றும் அவரது  குடும்பத்தார்,சென்னை
8.திரு.பழனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தார்,சென்னை
9.திரு.ரகுபதி மற்றும் அவரது குடும்பத்தார்,பெங்களூர்
10.திரு.தனகோடி மற்றும் அவரது குடும்பத்தார்,அகமதாபாத்
11.திருமதி.பவானி மற்றும் அவரது குடும்பத்தார்,புதுடெல்லி
12.திரு.குமரேசன் மற்றும் அவரது குடும்பத்தார்,அருணாச்சலப் பிரதேசம்
13.திரு.வெங்கட்ராமன் மற்றும் அவரது குடும்பத்தார்,ஸ்ரீவில்லிபுத்தூர்
14.திரு.பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தார்,சென்னை
15.திரு.க்ருஷ்ணக் குமார் மற்றும் அவரது குடும்பத்தார்,சியாட்டல்,அமெரிக்கா
16.திரு.சுதர்ஸன் மற்றும் அவரது குடும்பத்தார்,சிகாகோ,அமெரிக்கா

17.திரு.பார்த்தசாரதி,மெக்ஸிகோ
18.திரு.பத்மநாபப் பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தார்,இஸ்ரேல்
19.திருமதி.லலிதா மற்றும் அவரது குடும்பத்தார்,மலேஷியா
20.திரு.வணங்காமுடி மற்றும் அவரது குடும்பத்தார்,நார்வே
21.திரு.ஜோதிலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தார்,காங்கோ
22.திருமதி.லதா மற்றும் அவர்களின் குடும்பத்தார்,கனடா
23.திருமதி.கவிதா மற்றும் அவர்கள் குடும்பத்தார்,அமெரிக்கா
24.திரு.ராதாவினோத பால் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்,கோட்டயம்,கேரளா.
மற்றும் சில பெயர் வெளியிட விருப்பமில்லாத நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளும் அவர்களின் குடும்பத்தாரும்!!!இவர்களின் அன்னதான சிந்தனைக்கு ஆன்மீகக்கடல் மனமார நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
வெகுவிரைவில் தென் மாவட்ட நகரம் ஒன்றில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் ஆலயம் சித்தர்களின் முறைப்படி எழுப்பப்பட இருக்கிறோம்.மேலும்,பைரவ சஷ்டிக்கு ஆன்மீககடல் குடும்ப அபிஷேகம் செய்ய இருக்கிறோம்;என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஓம்சிவசிவஓம்

திருக்கார்த்திகை(27.11.12)யன்று அண்ணாமலை கிரிவலத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?
கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியே பெரிய கார்த்திகை எனப்படும்.(ஓவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளன்று முருகக் கடவுளை வழிபடும் பழக்கம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்களிடையே இருக்கிறது)இந்த பெரிய கார்த்திகை அன்று திரு அண்ணாமலை கிரிவலம் மிகச் சிறப்பான திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.

எந்த ஒரு பக்தி உணர்வுமின்றி ,திரு அண்ணாமலையில் அமைந்திருக்கும் கிரிவலப் பாதையான 14 கி.மீ.தூரத்தை  நடந்தே சென்றால்,அப்படி பயணிப்பவர்களின் கர்மவினைகள் பெருமளவு கரைந்துவிடும்.ஏனெனில்,அண்ணாமலையே சிவபெருமானாக காட்சியளிக்கிறார்.இப்படி ஒரு சாதாரண நாளில் கிரிவலம் சென்றாலே இப்படிப்பட்ட புண்ணியம் கிடைத்துவிடும்.ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சித்தர்கள் கிரிவலம் வருவார்கள்;துறவி வடிவில் அல்ல;நம்மைப் போலவே ஜீன்ஸ் அணிந்து!!! நாமும் பவுர்ணமிக்கு கிரிவலம் சென்றால் நமது முன்னோர்களில் யார் சித்தராக இருக்கிறாரோ அவரது அருட்பார்வை நம் மீது படும்;அப்படி பட்டாலே நமது அனைத்து பாவங்கள் மட்டுமல்ல;நமது முந்தைய அனைத்து மனித பிறவிகளிலும் செய்த பாவ வினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்;

அதுவும் கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமியன்று பிரபஞ்சம் முழுவதும் இருந்து அனைத்து சித்தர்களும் அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் வருகிறார்கள்.சித்தர்களோடு அருட்பெரும் ஜோதி வள்ளலாரும்,ரமணமகரிஷியும்,வேதாத்திரி மகரிஷியும்,ஷீர்டி சாய்பாபாவும்,விசிறிச்சாமிகளும்,காஞ்சி சங்கராச்சாரியார்களாக முன்பு இருந்தவர்களும்,ரஜினியின் குரு பாபாவும் கிரிவலம் வருவது வழக்கம்.இப்படி கிரிவலம் வரும்போது சிலருக்கு காட்சியளிப்பதுண்டு;பலருக்கு தீட்சையளிப்பதும் உண்டு;பலரிடம் பேசுவதும் உண்டு;ஒரு நாளுக்கு ஒருமணி நேரம் வீதம் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வரவேண்டும்;மாதம் ஒரு முறை(திருவாதிரை நட்சத்திரம் எனில் மிகவும் சிறப்பு) அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்ல வேண்டும்;அவ்வாறு கிரிவலம் செல்லும் போது கிரிவலப் பயணம் முழுவதும் ஓம்சிவசிவஓம் என்று  ஜபிக்க வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் செய்தால்,நாம் விரும்பும் சித்தரை நேரில் தரிசிக்கும் சந்தர்ப்பம் அமையும்;அந்த சித்தரிடம் தீட்சையும் கிடைக்கும் என்பது சித்த ரகசியம் ஆகும்.


இந்த நந்தன வருடத்தின் கார்த்திகை மாத பவுர்ணமியானது 27.11.12 செவ்வாய்க்கிழமை இரவில் தான்  கார்த்திகை மாதத்து பவுர்ணமி அமைந்திருக்கிறது.எனவே,இந்த நாளில் அண்ணாமலை  கிரிவலம் செல்பவர்கள் பின்வரும் ஆன்மீக வழிமுறையைப் பின்பற்றினால்,சித்தர்களின் அருட் பார்வையும்,அண்ணாமலையின் ஆசியும் கிடைக்கும் என்பது சர்வநிச்சயம்.
இன்று 27.11.12 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் நாளை 28.11.12 புதன் கிழமை இரவு 9.40 வரையிலும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;அவ்வாறு செல்லும்போது மஞ்சள் வேட்டி மட்டும் (பெண்கள் எனில்,மஞ்சள் நிறம் மட்டும் இருக்கும் ஆடைகள் அணிந்து) உடுத்தி,ரூ.1/-நாணயம் அல்லது ரூ.5/-நாணயம் குறைந்தது 150 சேகரித்துக் கொண்டு செல்ல வேண்டும்.அதே போல 150 பழங்கள் (எந்தப் பழங்களாக இருந்தாலும் சரி) சேகரித்துக் கொண்டு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலப்பாதையில் நாம் எதிர்கொள்ளும் துறவிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு நாணயத்தையும்,ஒரு பழத்தையும் தானமாக வழங்க வேண்டும்;அந்த துறவி நம்மிடமிருந்து வாங்கியதும்,நாம் அவரை கையெடுத்துக் கும்பிட வேண்டும்;முடிந்தால் அவரது கால்களில் விழுந்து கும்பிடவும் செய்யலாம்;
வசதியுள்ளவர்கள் பழங்களுக்குப் பதிலாக உணவுப் பொட்டலங்கள் வழங்கலாம்; மனமுள்ளவர்கள் ரூபாய் நாணயம் ஒன்று,ஏதாவது ஒரு பழம்,ஒரு உணவுப்பொட்டலம்,காவிநிற ஆடை மற்றும் குடிநீர்பாட்டில் என்று ஒரு பேக்கேஜாகவும் தானம் செய்யலாம்.
இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஆவார்.அவருக்கு கோடி அண்ணாமலை நன்றிகள்!!!
வசதி குறைந்தவர்கள் ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும் வாங்கி கிரிவலப் பாதையின் ஓரத்தில் மனித காலடி படாத இடங்களில் தூவலாம்;அடுத்த கார்த்திகை மாத பவுர்ணமிக்கு(17.11.2013 ஞாயிறு) இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள ஆன்மீக வழிகாட்டுதலைச் செயல்படுத்திட நமது ரிமைண்டரில் சேமித்தும் வைக்கலாம்.
மின் வெட்டினால் முன் கூட்டியே இந்தப் பதிவினை வெளியிட இயலவில்லை;ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் மன்னிப்பார்களாக!!!
ஓம்சிவசிவஓம்

திருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!
நந்தன வருடத்தின் கார்த்திகை மாதத்து பவுர்ணமி 28.11.12 புதன் கிழமை இரவு 10.16 மணிக்குத் துவங்கி 29.11.12 வியாழன் இரவு 10.16 வரை அமைந்திருக்கிறது.அதே சமயம்,கார்த்திகை நட்சத்திரமானது 27.11.12 செவ்வாய்க்கிழமை மதியம் 12.48க்கு உதயமாகி,மறுநாள்=28.11.12 புதன் கிழமை மாலை 3.17 வரை இருக்கிறது.ஆக,நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற நாள் புதன் கிழமை இரவும்,வியாழக்கிழமை காலையும் ஆகும்.(இந்த நேரம் பஞ்சாங்க அடிப்படையில் கணித்து தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது;நட்சத்திரமும்,பவுர்ணமியும் தனித்தனியே வருவதால் இப்படிப்பட்ட சூழ்நிலை !!!)

ஒவ்வொரு மனிதனுக்கும் ரத்தமும்,சுக்கிலமும் ஆரோக்கியமாக இருக்கும் வரையிலும் அவனது வாழ்க்கை நோய் நொடியின்றி இருக்கும்.ரத்தக்காரகனாகிய செவ்வாயின் முதல் ராசி மேஷம்;சுக்கிலக்காரகனாகிய(காதல்,வாகனவசதி,சுகபோகங்கள்) சுக்கிரனின் முதல் ராசி ரிஷபம் ஆகும்.இந்த இரண்டு ராசிகளிலும் இருக்கும் நட்சத்திரமே கார்த்திகை மாதம் ஆகும்.கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபக் காரர்களாக இருப்பார்கள்;அதே சமயம் தன்னிடம் பழகுபவர்களிடமும்,தனது ரத்த உறவுகளிடமும் அளவற்ற பாசத்தோடு இருப்பார்கள்;

கார்த்திகை உள்ளிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் ஆர்பாட்டமில்லாமலும்,படு ரகசியமாகவும் செய்வதில் சமர்த்தர்கள்;இந்த நாளில் பவுர்ணமி ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது;கார்த்திகை நட்சத்திரமானது சூரியன் உச்சமாகும் நட்சத்திரமாக இருப்பதால் இவர்கள் சிறந்த நிர்வாகத்திறமையும்,முன்கோபமும் உள்ளவர்களாகத் திகழுகிறார்கள்.இந்த கார்த்திகை நட்சத்திரம் பவுர்ணமியாக பரிணமிக்கும் இந்த நாளில் தான் அடிமுடி தேடிய திருமாலுக்கும்,அயன் என்ற பிரம்மாவுக்கும் ஜோதி வடிவாக சிவபெருமான் காட்சியளித்தார்.


பெரிய கார்த்திகை என்று தென் தமிழ்நாட்டு இந்துக்களால் புகழப்படும் இந்த கார்த்திகை பவுர்ணமியன்று திரு அண்ணாமலையை ஐந்து முறை கிரிவலம் சுற்றி வருபவர்களுக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கிறது.கலியுகத்தில் இப்போதெல்லாம் ஒருமுறை கிரிவலம் முடிக்கவே குறைந்தது நான்கு மணி நேரமும்,அதிகபட்சம் ஆறுமணி நேரமும் ஆகிறது.நமது ஆத்மபலம் அதிகமாக இருந்தால் ஆறுமுறை கிரிவலம் செல்ல முடியும்.
27.11.12 செவ்வாய்க்கிழமை இரவு 7 முதல் 8 மணிவரை குரு ஓரை வருகிறது;28.11.12 புதன்  கிழமை காலை 9 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 5 மணி வரையிலும் குரு ஓரை வருகிறது;இந்த நேரங்களில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;28.11.12 புதன்கிழமை காலை 4.30 முதல் 6 மணி வரையிலான கால கட்டமான பிரம்ம முகூர்த்தத்திலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;


இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபிக்காதவர்கள் இந்த அரிய மற்றும் அற்புதமான நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;


இதுவரை சில பல வாரங்கள்/மாதங்கள் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு,இடையில் ஜபிக்க இயலாமல் தடங்கல்களைச் சந்தித்தவர்கள் மேற்கூறிய நேரங்களில் உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் ஓம்சிவசிவஓம் மீண்டும் ஜபிக்கத் துவங்கலாம்;


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து பத்து வருடங்கள் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;18 சித்தர்களின் ஆசியையும் ஒரே நேரத்தில் பெறுவோம்;மறுபிறவியில்லாத முக்தியை ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாகவே பெறுவோம்;


ஓம்சிவசிவஓம்

சபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு!!!ஒரு மண்டலம் (48 நாட்கள்) அளவுக்கு ஹரிஹர சுதன் என்று போற்றப்படும் ஐயப்பசுவாமிகளை உங்கள் மனதிலும்,உடலிலும் தாங்கி வலம் வரும் ஐயப்ப பக்தர்களின் விரதத்துக்கு தலைவணங்கி வாழ்த்துகிறோம்.

நமது ஆன்மீக குரு.திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு என்று பிரத்யேகமாக சில ஆன்மீக வழிகாட்டுதல்களை கூறியிருக்கிறார்.அவைகளை உங்களுக்கு அறிவிப்பதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.
இந்த 48 நாட்களும் ஐயப்ப பக்தர்களாகிய தாங்கள் உடல் ஊனமுற்றோர்களுக்கு அன்னதானம் செய்வது சபரிமலையானை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்;வீடு வாசல் இல்லாத மாற்றுத்திறனாளிகள்(உடல் ஊனமுற்றோர்களின் இன்றைய பெயர்) எங்கும் இருக்கிறார்கள்.அவர்களுக்குத் தேவைப்படும் மாற்றுத்திறன் கருவிகள் அல்லது ஆடைகள் மற்றும் சிறு சிறு உதவிகளை தாங்கள் செய்வதன் மூலமாக அவர்கள் அளவற்ற மகிழ்ச்சியடைவார்கள்;அந்த மகிழ்ச்சியானது உங்களுடைய நீண்டகால சிக்கல்களைத் தீர்க்க உதவும்.(இந்த தானங்களைச் செய்வது நீங்கள் அல்ல;ஐயப்பசுவாமியே செய்வதாக அர்த்தம்!!!)

மேலும் சபரி மலை செல்லும்போதும்,சபரிமலைக்குச் செல்லும் முன்பாகவும்(இந்த 48 நாட்களில்) தாங்கள் காட்டுப்பகுதியிலும்,மலைப்பகுதியிலும் இருக்கும் கோவில்களுக்கு வழிபடவோ,திருவிழாவில் கலந்து கொள்ளவோ செல்ல வேண்டியிருக்கும்.அப்படிச் செல்லும் போது குறைந்தது ஐந்துகிலோ நவதானியங்களை(நவதானியங்கள் அனைத்தும் கலந்தது எனில் ரூ.ஆயிரத்துக்குள் வரும்;தனித்தனியாக எனில் ரூ.மூன்று ஆயிரங்களை எட்டும்)அனைத்தும் கலந்தவைகளை வாங்கி,அந்த காட்டுப்பகுதியிலும்,மலைப்பகுதியிலும் தங்கள் கரங்களால் மனித காலடி படாத இடங்களில் தூவ வேண்டும்.அதோடு குறைந்தது ஒரு கிலோ  டயமண்டு கல்கண்டு வாங்கியும் தூவ வேண்டும்.இப்படி தாங்கள் செய்வது ஐயப்பசுவாமியின் மனதில் அளவற்ற மகிழ்ச்சியைத் தர வைக்கும்;தங்களின் பணப்பிரச்னைகளும்,நவக்கிரகங்களில் ஏதாவது ஓரிரு கிரகங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் எதிராகச் (அவரவர் பூர்வ ஜன்ம கர்மாக்களின் படி)செயல்பட்டுக் கொண்டிருக்கும்.அந்த செயல்பாடு பெருமளவு குறைந்துவிடும்.

ஹரி என்றால் மஹாவிஷ்ணு,ஹரன் என்றால் சிவன்;இருவரும் இணைந்து உருவாக்கியவரே ஹரிஹரன் என்ற ஐயன் என்ற ஐயப்பசுவாமி ஆவார்.தாங்கள் ஐயப்பசுவாமிகளை தரிசித்து வர விரதம் இருக்கும் இந்த காலகட்டத்தில் இவ்வாறு செய்து வந்தால்,தங்களின் விரதபலம் சில கோடி மடங்கு அதிகரிக்கும் என்பது குரு வாக்கு.

சாமியே சரணம் ஐயப்பா!

ஓம்சிவசிவஓம்

சிவகாசியில் ஈடில்லா இயற்கை உணவு


விடிந்தும், விடியாத அந்த அதிகாலை வேளையிலே ஒரு சின்னஞ்சிறிய கடைமுன் கூட்டம் நிரம்பிவழிகிறது. கூட்டத்திற்கு காரணம் அங்கு வழங்கப்படும் இயற்கை உணவுகள்தான்.
சிவகாசி தபால்நிலையம் பக்கத்தில் உள்ள தாய்வழி இயற்கை உணவகத்தில் நிலவேம்பு கஷாயம், ஆடாதொடை ரசம், கத்தாழை சூப், அடுப்பில் வைக்காமல் உருவாக்கப்பட்ட பேரீச்சை அவல், பலவித பயறுவகைகள், நெல்லிக்காய் சாலட், வெந்தயக்களி, சின்ன வெங்காயம் போட்ட கம்மங்கூழ் என்று எப்போதோ, எங்கோயோ கேட்ட பழமையான பராம்பரியமான உணவு வகைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார் கடையின் உரிமையாளரும் இயற்கை ஆர்வலருமான சிவகாசி மாறன்ஜி.

நமது பழமையான உணவு என்பதை மறந்ததால்தான் இன்றைக்கு இவ்வளவு நோய் நொடிகள், எப்போதும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எந்நாளும் தொல்லை இல்லை என்று சொல்லும் மாறன்ஜி கடையில் வழங்கப்படும் பொருட்களின் விலையோ இரண்டு ரூபாயில் இருந்து ஏழு ரூபாய்க்குள் அடங்கிவிடும். ஒரு வரியில் சொல்வதானால் விலை குறைவு ஆரோக்கியம் அதிகம்.
நிலவேம்பு கஷாயம் குடித்தால் போதும் டெங்கு காய்ச்சல் பக்கத்திலேயே வராது, வந்தாலும் பயந்து ஒடிவிடும், இப்படி இங்குள்ள ஒவ்வொரு உணவு பொருளுக்கும் பின்னணியில் நிறைய ஆரோக்கியமும், மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளன.

அடுப்பில் வைக்காமல் நூற்றுக்கணக்கான அறுசுவை உணவுகளை தயார் செய்யமுடியும், அதற்கு பெண்கள் முன்வர வேண்டும், வாரத்தில் ஒரு நாள் அடுப்பு பற்ற வைக்காமல் சமைத்தாலே நாட்டிற்கும் வீட்டிற்கும் எவ்வளவோ பலன்கள் உண்டு என்று சொல்லும் மாறன் இயற்கை உணவை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக நிறையவே உழைத்து வருகிறார்.
இதை இளைஞர்கள் கையில் சேர்த்துவிட்டால் அது அற்புதமான ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுத்துவிடும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் இது தொடர்பாக பள்ளி, கல்லூரியில் பொருட்காட்சி நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது என்று எப்போதும் பிசியாக இருக்கிறார். இயற்கை உணவு பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக அவரது போன் எண்:9367421787.

நட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்!!!இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு ஏற்ப இருபத்தேழு பைரவர்களும்,அந்த பைரவரின் கோவில்களும் நமது தமிழ்நாட்டில் இருக்கின்றன.நமது வாழ்க்கை வளமாகவும்,நலமாகவும்,நிம்மதியாகவும் இருக்க நாம் விநாயகர் வழிபாடு,குல தெய்வ வழிபாடு இவைகளுடன் நமது நட்சத்திரத்துக்குரிய பைரவர் வழிபாடு போன்றவைகளை பின்பற்றினாலே போதுமானது.இதற்கு நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்;


எப்படிச் செய்ய வேண்டும்?


ஒவ்வொரு தமிழ் மாதமும் நமது ஜன்ம நட்சத்திரம் ஒரு நாளன்று வரும்;சில சமயம் இரண்டு நாட்களுக்கும் வரும்;அந்த நாளில் மாலை ஐந்து மணிக்கு மேல் ஏழு மணிக்குள் இந்த அபிஷேகத்தைச் செய்து முடிக்க வேண்டும்.அந்த நாளில் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகாலபைரவருக்கு பின்வரும் பொருட்களுடன் அபிஷேகம் செய்ய வேண்டும்.செய்துவிட்டு,நைவேத்தியத்தை முழுமையாக அங்கே வரும் பக்தர்கள்,பக்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து எட்டு முறை செய்ய வேண்டும்.ஒரு தமிழ் மாதத்திற்கு ஒரு ஜன்ம நட்சத்திர நாள் வீதம் தொடர்ந்து எட்டு மாதங்கள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.எட்டாவது(சில சமயம் ஏழாவது) மாதத்தில் வரும் ஜன்ம நட்சத்திர நாளில் இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் நட்சத்திரத்துக்குரிய பைரவர் ஆலயத்துக்குச் சென்று மேற்கூறியவாறு அபிஷேகம் செய்து,நைவேத்தியத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு எட்டு தடவை செய்து முடித்த நூறு நாட்களுக்குள் நமது ஜாதகப்படி இருக்கும் எந்த ஒரு பிரச்னை/கர்மவினை/துயரங்கள்/கஷ்டங்களும் விலகி ஒரு மகத்தான சுபிட்சத்தை அடைந்துவிடுவோம்.


ஸ்ரீகால பைரவருக்குரிய அபிஷேகப் பொருட்கள்:


அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,பால்,விபூதி,மஞ்சள் பொடி,அரிசிப்பொடி என்ற மாப்பொடி,நல்லெண்ணெய்,வில்வம் இவைகளுடன் நைவேத்தியமாக ஒரு கிலோ வரையிலான டயமண்டு கல்கண்டு,வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட தயிர்ச்சாதம்,வீட்டிலேயே சமைக்கப்பட்ட மிளகுவடை போன்றவைகள்;


27 நட்சத்திர பைரவர்களையும்,அவர்கள் அருளும் ஆலயங்களின் பட்டியலையும் இங்கே பார்க்கலாம்:


1.அசுபதி/அஸ்வினி=ஞான பைரவர்=பேரூர்
2.பரணி=மஹாபைரவர்=பெரிச்சியூர்
3.கார்த்திகை=அண்ணாமலை பைரவர்
4.ரோகிணி=பிரம்ம சிரகண்டீஸ்வரர்=திருக்கண்டியூர்
5.மிருகசீரிடம்=க்ஷேத்ர பாலர்=க்ஷேத்ரபாலபுரம்
6.திருவாதிரை=வடுக பைரவர்=வடுகூர்
7.புனர்பூசம்=விஜயபைரவர்=பழனி
8.பூசம்=ஆஸினபைரவர்=ஸ்ரீவாஞ்சியம்
9.ஆயில்யம்=பாதாள பைரவர்=காளஹஸ்தி
10.மகம்=நர்த்தன பைரவர்=வேலூர்
11.பூரம்=பைரவர்=பட்டீஸ்வரம்
12.உத்திரம்=ஜடாமண்டல பைரவர்=சேரன்மகாதேவி
13.அஸ்தம்=யோகாசன பைரவர்=திருப்பத்தூர்
14.சித்திரை=சக்கர பைரவர்=தருமபுரி
15.சுவாதி=ஜடாமுனி பைரவர்=பொற்பனைக் கோட்டை
16.விசாகம்=கோட்டை பைரவர்=திருமயம்
17.அனுஷம்=சொர்ண பைரவர்=சிதம்பரம்
18.கேட்டை=கதாயுத பைரவர்=சூரக்குடி,டி.வயிரவன்பட்டி,திருவாடுதுறை
19.மூலம்=சட்டைநாதர்=சீர்காழி
20.பூராடம்=வீரபைரவர்=அவிநாசி,ஒழுகமங்கலம்
21.உத்திராடம்=முத்தலைவேல் வடுகர்=கரூர்
22.திருவோணம்=மார்த்தாண்டபைரவர்=வயிரவன் பட்டி
23.அவிட்டம்=பலிபீடமூர்த்தி=சீர்காழி,ஆறகழூர்(அஷ்டபைரவ பலிபீடம்)
24.சதயம்=சர்ப்ப பைரவர்=சங்கரன்கோவில்
25.பூரட்டாதி=அஷ்டபுஜபைரவர்=கொக்கராயன்பேட்டை,தஞ்சை
26.உத்திரட்டாதி=வெண்கலஓசை பைரவர்=சேஞ்ஞலூர்
27.ரேவதி=சம்ஹார பைரவர்=தாத்தையங்கார் பேட்டை


குறிப்பு: ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு தாராளமாகச் செய்யலாம்.ஒரே நட்சத்திரத்தில் பிறந்த கணவன்மனைவி/ சகோதரர்கள்/ ரத்த உறவுகள் சேர்ந்து கூட்டு அபிஷேகம் செய்து வழிபாடும் செய்யலாம்.காலத்தை இயக்குபவராக ஸ்ரீகால பைரவர் இருப்பதால் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு ஒன்றே போதும்.நமது அனைத்து வித தோஷங்கள் நீங்கிட!!!இந்த ரகசியத்தினை நமக்கு அருளிய நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கோடி நன்றிகள்!!!


ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ


ஓம்சிவசிவஓம்

28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிறார்கள்!!!


1500 ஆண்டுகளுக்கு  ஒருமுறை சித்தர்களில் முதன்மையானவர்களான 18 சித்தர்களும் ஒரே நேரத்தில் சூட்சுமமாக கழுகுமலைக்கு வர இருக்கிறார்கள்.இப்படி தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு இவர்களின் வருகை இருக்கும்.சென்ற ஆண்டு 24.12.11 பவுர்ணமியன்று இதே போல 18 சித்தர்களும் வருகை புரிந்தார்கள்.இந்த நிகழ்ச்சியை நாம் ஆன்மீகக்கடலில் வெளியிட்டோம்;நமது வாசக,வாசகிகள் சுமார் 500 பேர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து கழுகுமலைக்கு வந்தார்கள்:அவ்வாறு வருகை தந்து முறைப்படி கழுகாசல மூர்த்தியை வழிபட்டு,கிரிவலம் சென்றார்கள்.பலருக்கு கிரிவலம் செல்லும்போதே அவரவரின் முன்னோர்களாகிய சித்தர்களின் ஆசியும்,தரிசனமும் கிடைத்தன.


அதே போல இந்த வருடமும்,டிசம்பர் 2012 ஆம் ஆண்டின் பவுர்ணமியாகிய 28.12.12 வெள்ளிக்கிழமை அன்று 18 சித்தர்களும் கழுகுமலைக்கு வந்து,கழுகாசலமூர்த்தியை சூட்சுமமாக பூஜித்து வழிபட இருக்கிறார்கள்.நாம் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களின் தலைமையில் இந்த அரிய ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம்;


நாம் செய்ய வேண்டியது:28.12.12 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்குள் கழுகுமலைக்கு வந்துவிடுவோம்;மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் பயணித்து,கோவில்பட்டியை வந்தடைய வேண்டும்.அங்கிருந்து சங்கரன்கோவிலுக்குச் செல்லும் பேருந்தில் பயணித்தால் கழுகுமலையை வந்தடைந்துவிடலாம்;வரும்போது,குறைந்தது ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும் வாங்கி வர வேண்டும்;(கிரிவலப் பாதையில் தூவுவதற்காக);கழுகாசலமூர்த்தி(முருகக்கடவுள்)க்கு அபிஷேகம் செய்யத் தேவையான பொருட்களையும் வாங்கி வரலாம்;

காலை 10.30க்குள் கழுகுமலையில் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்கள் தலைமையில் கழுகாசலமூர்த்தியை வழிபட்டுவிட்டு,கிரிவலம் செல்வோம்;கிரிவலப்பாதையின் சுற்று தூரம் மூன்று கி.மீ.கள்;இந்த கிரிவலப்பாதையில் நாம் வாங்கி வந்த நவதானியங்களை நமது கைகளால் தூவ வேண்டும்;டயமண்டு கல்கண்டுகளையும் தான்! தற்போது மழைக்காலமாக இருப்பதால் இவை அனைத்தும் வெகுவிரைவில் செடிகளாக வளரத் துவங்கிவிடும்;கல்கண்டுகளை எறும்புகள் உணவாக எடுக்கத் துவங்கும்.


ஒரே ஒரு எறும்புக்கு நாம் ஒரே ஒருவேளை உணவளித்தால், நூறு அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த பலன் நம்மைத் தேடி வரும்;எறும்பு தனது உணவின் மீது உமிழ்நீரை உமிழ்ந்துவிட்டால் அது மூன்று ஆண்டுகளுக்குக் கெடாது;நாம் தூவும் டயமண்டுகல்கண்டு ஒன்றை 2012 இல் ஒரு எறும்பு எடுத்துச் சென்றால்,அதை 2015 இல் தான் சாப்பிடும்.ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு சனி பெயர்ச்சியாகிட இரண்டரை ஆண்டுகள் தான் ஆகும்.நாம் தானம் செய்யும் உணவு மூன்று ஆண்டுகள் வரை சேமிப்பாக இருந்தால் அது நூறு அந்தணர்களுக்கான உணவைச் சேமித்ததாக அர்த்தம்.இதன் மூலமாக சனிபகவானால் ஏற்படும் சோகங்கள் நம்மை ஒரு போதும் தாக்காது.

அதே போல,குறைந்தது ஐந்து கிலோ நவதானியங்களை தூவுவதன் மூலமாக அவை ஒரு லேசான மழையிலேயே முளைத்துவிடும்.அப்படி முளைப்பதன் மூலமாக,நவக்கிரகங்களின் கதிர்வீச்சு அதன் மூலம் பூமியில் பரவும்.அதே சமயம்,யார் அந்த நவதானியங்களை தமது கைகளால் தூவினார்களோ, அவர்களுக்கு பிறந்த ஜாதகப்படி தடை செய்து வந்த கிரகங்கள்,இந்த நவதானியங்கள் முளைத்தன் மூலமாக எந்த கிரகம் அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடை செய்து கொண்டு இருந்ததோ,அந்த தடை அடியோடு விலகிவிடும்.இந்த இரண்டு ஆன்மீக ரகசியங்களையும் நமக்கு அருளியவர் திரு.சகஸ்ரவடுகர் ஆவார்.
இந்த ஆண்டும் கழுகுமலைக்கு வருவோம்;நமது முன்னோர்களாகிய சித்தர்களின் அருளாசியைப் பெறுவோம்;


இந்த படத்தில் இருப்பது கழுகுமலையில் சென்ற ஆண்டு நமது ஆன்மீக குரு செய்த உபதேசம்!!! பூர்வபுண்ணியம் உள்ளவர்களுக்கு இந்த புகைப்படத்தில் சிலபல ரகசியங்கள்  தெரியும்.


ஓம்சிவசிவஓம்