RightClick

ராசிக்காரர்களின் நிலையும்,ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டுப் பலன்களும்!!!
ரிஷபம்,மிதுனம்,மகரம்,தனுசு ராசிக்காரர்களின் வேலை முறையானது கடந்த மூன்று வருடங்களில் படுவேகமாக செயல்படும்.ஆனால்,சிம்மம்,கன்னி,துலாம்,கும்பம் ராசியினருக்கு கடந்த மூன்று வருடங்களில் வாழ்க்கை மிக மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும்;கடுப்படிக்கும் வாழ்க்கையிலிருந்து ஆயாசமாகும் வாழ்க்கையை நோக்கி நகர ஆரம்பித்திருப்பார்கள்.

உதாரணமாக,வங்கியில் பணம் செலுத்த இன்று(19.10.12 வெள்ளி) ரிஷபம்,மிதுனம்,மகரம்,தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் சென்றால் சில நிமிடங்களில் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுவார்கள்;ஆனால்,அதே வேலையை கன்னி,துலாம்,மீனம் ராசியினரால்  குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க முடியாமல் திண்டாடுவார்கள்;இதனால்,  இவர்கள் மனது பெரும்பாடு படும்;ஏனெனில்,வங்கிவேலை முடியும் முன்பே அடுத்த வேலை செய்ய வேண்டிய நெருக்கடியில் இருப்பார்கள்.
இந்த சூழ்நிலையை உருவாக்குவது சனிபகவானே! 


மனிதனாகப்பிறந்த ஓவ்வொருவருக்கும் ஆயுளையும்,தொழிலையும் நிர்ணயிக்கும்  உரிமை சனிபகவானுக்கு மட்டுமே உண்டு;அவரவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் இடத்து அதிபதி,பத்தாமிடத்து அதிபதி,நடப்பு திசை இவைகளுக்கு ஏற்றாற்போல சனியின் ஒத்துழைப்போடு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வேலை/தொழில்/பணி/கர்மாவைச் செய்துவருகிறான்.பல லட்சம் ஆண்டுகளாக இப்படி நடைபெற்றுவருகிறது.இந்த சூழ்நிலையில் 2009 முதல் 2011 வரை கன்னி ராசிக்காரர்கள் என்னவிதமான கஷ்டங்கள்,வேதனைகளைப்பட்டார்களோ அதே வேதனைகள்,கஷ்டங்களை தற்போது 21.12.2011 முதல் 14.12.2014 வரை துலாம் ராசிக்காரர்களும்,மீன ராசிக்காரர்களும் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,ஒவ்வொருவரின் வயது,திசாபுக்தி போன்றவைகளுக்கேற்ப வெவ்வேறு விதமான கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.அடிக்கடி நேரில் சொல்வது போல ஏழரைச்சனியில் ஜன்மச்சனி நடைபெறுபவர்களுக்கும்,அஷ்டமச்சனி நடைபெறுபவர்களுக்கும் ஒரு நாள் ஒரு வருடத்தை விடவும் நீளமாக இருக்கும்.ஒரு நாள் பொழுதை ஓட்டுவதற்குள் போதும்,போதும் என்றாகிவிடும்.
இந்தக்கஷ்டங்களெல்லாம் அவர்களுக்கு எப்படி வருகின்றன? அவர்களின் பூர்வ புண்ணியத்தைப் போல,பூர்வ பாவத்தைப் பார்த்தால் கண்டறிந்து விவரிக்கலாம்;அப்படி விவரித்து அவர்களின் மனதை நோகடிப்பதற்குப்பதிலாக, சனியின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு வழிகாட்டவே ஸ்ரீகால பைரவர் வழிபாட்டை தொடர்ந்து பின்பற்றச் சொல்கிறோம்.
சனியின்குருவாக ஸ்ரீகால பைரவர் இருப்பதாலும்,யார் தொடர்ந்து ஸ்ரீகால பைரவரை வழிபட்டுக்கொண்டு வருகிறார்களோ,அவர்களை சனி எதுவும் செய்யக் கூடாது என்று சனிபகவானிடம் ஸ்ரீகாலபைரவர் சத்தியம் வாங்கியிருக்கிறார்.அப்படி சத்தியம் வாங்கியப்பின்னரே, சனிபகவானை நவக்கிரகங்களில் ஒருவராக செயல்பட அனுமதித்திருக்கிறார்!
மீன ராசியினருக்கு மேலே இருக்கும் நோட்டீஸில் இருப்பதைப்போல ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்ய அடிக்கடி வலியுறுத்துகிறோம்;எந்த மீன ராசிக்காரர்களெல்லாம் மேற்கூறியவாறு வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு அஷ்டமச்சனியின் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்டது;கடந்த சில மாதங்களாக மீனராசியினர் மேலே கூறியுள்ளபடி வாரம் ஒருமுறை ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்து நெருக்கடி இல்லாத வாழ்க்கை வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்.நேரிலும்,போனிலும் பலர் மனதார வாழ்த்திச் சொன்ன தகவல்களின் தொகுப்பே இந்த பதிவு!

அதே போல யாரெல்லாம் துலாம் ராசியினரோ அவர்கள்,மேலே நோட்டீஸில் குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலமாக ஜன்மச்சனியின் துயரம் பெரும்பான்மையாக சுருங்கிவிட்டது.இந்த வழிபாட்டுமுறையை நமக்குப் போதித்த ருத்ராட்சத் தெரபிஸ்ட் அவர்களுக்கும்,எனக்கு போதித்த எனது ஆன்மீக குரு புளியங்குடி சிவமாரியப்பன் அவர்களுக்கும் கூகுள் நன்றிகள்!!!

முக்கியமான குறிப்பு: இந்த வழிபாட்டுமுறையை பின்பற்றுவதோடு இரண்டு முக்கியமான காரியங்களை உரிய ராசிக்காரர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.


1)அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.
2)நேர்மையாக வாழப் பழக வேண்டும்.


இந்த இரண்டையும் ஏழரைச்சனி வருவதற்கு முன்பாகவும்,அஷ்டமச்சனி வருவதற்கு முன்பாகவும் பின்பற்றுபவர்களுக்கு ஒருபோதும் சனியின் தாக்கம் ஏற்படாது.

டிசம்பர் 2014 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜன்மச்சனியும்,மேஷ ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனியும் வர இருக்கிறது.அவர்கள் இப்பொழுதிலிருந்தே தினமும் ஸ்ரீகால பைரவர் 108 போற்றி ஜபிப்பது அல்லது வாரம் ஒருமுறை(மேலே நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளபடி) ஸ்ரீகால பைரவரை கோவிலில் சென்று வழிபாடு செய்யத் துவங்கினால்,சனியின் தாக்கம் இராது.(ஏற்கனவே ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களும்,ஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்பவர்களும் இதை வேறு நேரத்தில் செயல்படுத்தத் துவங்கலாம்)


ஓம்சிவசிவஓம்