RightClick

மது மற்றும் போதை அடிமைகளை மீட்கும் வழிபாடு!!!விளையாட்டுக்கு என்றோ,ஜாலிக்காக என்றோ,நண்பனுக்காக என்றோ டீன் ஏஜ் வயதில் ஆரம்பிக்கும் பீர் பழக்கம் சில வருடங்களில் பிராந்தி நிறைய குடித்தாலும் போதையில்லை;என்று பந்தா பண்ண வைக்கிறது;கூடவே,இரண்டு தலைமுறையை சீர்குலைக்கிறது;

மதுபான தயாரிப்பாளர்களுக்கும்,விநியோகஸ்தர்களுக்கும் புதிய, மிகப் பிரம்மாண்டமான சந்தை உருவாகியிருக்கிறது.அப்படி உருவான சந்தையோ விரிவடைந்துகொண்டே செல்கிறது.அவர்களின் லாபமும் பெருகிக் கொண்டே செல்கிறது.மேலும் மேலும்புதிய மதுபான தொழிற்சாலைகளை துவக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

யார் தான் குடிக்காமல் இருக்காங்க? உன் கையில் தான் இருக்கு என்று சம்மதிக்க வைத்து பெற்று வளர்த்த மகளை திருமணம் என்ற பெயரில் தள்ளுவது,இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி வால்மார்ட்டை வரவழைப்பதற்குச் சமமாக இருக்கிறது.ஏனெனில்,நிம்மதியாக வாழ விரும்பும் ஒரு புதிய மனைவியும்,இந்திய மக்களின் சகிப்புத் தன்மையும் ஒன்றுதான்.முடிவில் அல்ல;ஆரம்பத்தில் இருந்தே குடிக்கும் கணவனை மணம்புரிந்த பெண்ணின் நிலை என்ன தெரியுமா? இந்தியாவை நேசிக்கத் தெரியாதவர்கள்,இந்தியாவை தொடர்ந்து ஆட்சி செய்தால் என்ன ஆகுமோ அந்த நிலைதான்!

இந்த சூழ்நிலையில் குடியினால் நாசமாகும்  குடும்பங்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொடத் துவங்கியிருக்கிறது.மாநகரங்களில் பிறந்தும்,வளர்ந்தும்,படித்தும் வரும் மாணவ மாணவிகளில் பலர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிவருவதும் சகஜமாகிவருகிறது.இதை தீர்க்க நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் எனப்படும் சிவமாரியப்பன் அவர்கள்  நமக்கு ஓர் அரிய உபதேசத்தை  விஜயதசமியன்று அளித்திருக்கிறார்.


உங்களின் மகன் அல்லது கணவர் குடிகாரராகி,அதற்கு அடிமையாகிவிட்டாரா?

அந்தக் குடி/போதையிலிருந்து மீள வேண்டும் என்பது உங்களின் விருப்பமா?


அதற்காக தாங்கள் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடத் தயாரா?

ஆம் எனில்,

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:

ரோஜாப்பூக்களால் மட்டுமே கட்டப்பட்ட ஒரு மாலை,ஒரு கிலோ டயமண்டுகல்கண்டு, அரைக்கிலோ விதையில்லாத கறுப்புதிராட்சைப்பழங்கள்,விதை நீக்கப்பட்ட பேரீட்சை பழபாக்கெட் ஒன்று,வெற்றிலைப்பாக்கு,பத்தி பாக்கெட்,    ஆறு நாட்டு வாழைப்பழங்கள்(மஞ்சள் நிற பழங்கள்),பத்தி,தேங்காய் இவைகளுடன் வீட்டில் சமைக்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணி!!!


இந்தப் பொருட்களுடன் உங்கள் ஊரில் இருக்கும் அல்லது ஊருக்கு அருகில் இருக்கும் 18 ஆம் படிக் கருப்பசாமி இருக்கும் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

எப்படி வழிபட வேண்டும்?

சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் மேற்கூறிய பொருட்களுடன் சென்று பூசாரியிடம் கொடுத்து ரோஜா மாலையை 18 ஆம் படி கருப்பசாமிக்கு அணிவிக்க வேண்டும்.நெய்தீபத்தை ஏற்ற வேண்டும்.(அகல் விளக்கு என்பதால் அங்கேயே விட்டுவிடவேண்டும்).கொண்டு வந்திருக்கும் வெற்றிலைப்பாக்கு,ஆறு நாட்டு வாழைப்பழங்களை பரப்பி வைக்க வேண்டும்.ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு பாக்கெட்டையும்,பேரீட்சைபழ பாக்கெட்டையும் கிழித்து வைக்க வேண்டும்.வெஜிடபுள் பிரியாணி பாத்திரத்தை திறந்து வைக்க வேண்டும்.வாழைப்பழத்தில் நாம் வாங்கிக் கொண்டு வந்த பத்தியை மொத்தமாக பொருத்தி வைக்க வேண்டும்;குறைந்தது அரை மணி நேரம் வரையிலும் எனது மகன்/கணவனது குடிப்பழக்கம்/போதைப்பழக்கம் அடியோடு விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.பிரார்த்தனை முடித்தப்பின்னர்,கோவில் பூசாரிக்கு உங்களால் முடிந்த வரையிலான ரூபாய்களை தட்சிணையாகத் தர வேண்டும்.பிறகு,பாதி வெஜிடபிள் பிரியாணி,              மூன்று வாழைப்பழங்கள்,பாதி டையமண்டு கல்கண்டு,பாதி பேரீட்சைப்பழம்,பாதி கறுப்பு திராட்சைப்பழம் போன்றவைகளை எடுத்து நமது பையில் வைக்க வேண்டும்.நாம் எடுத்த பாதியில் பாதியை அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.மீதியை நமது வீட்டிற்குக் கொண்டு சென்று நமது ரத்த உறவுகளுக்கு(நமது வீட்டில் இருக்கும் அனைவருக்கும்) தர வேண்டும்.குடிக்கும் மகன்/கணவருக்கும் தரலாம்.அதை அவர் (ஒருவேளை)சாப்பிடாமல் இருந்தாலும் பாதகமில்லை;


இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி எட்டு சனிக்கிழமைகள் வரை மட்டும் செய்து முடித்த 100 நாட்களுக்குள் ஏதாவது ஒரு அதிசய சம்பவத்தால் குடிப்பழக்கம்/போதைப்பழக்கம் முழுமையாக விலகும்.
தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு ஒரே கோவிலுக்குத் தான் செல்ல வேண்டும்.வேறு வேறு 18 ஆம் படி கருப்பசாமியை வழிபடக்கூடாது.


தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய துவங்கும் போது,நல்லது கெட்டதுகளுக்குச் செல்லக் கூடிய சூழ்நிலை உருவாகும்.அப்படி உருவானால் ஒரு மாதம் வரை எந்த ஒரு இறைவழிபாடும் செய்ய முடியாத சூழ்நிலை வரத்தான் செய்யும்.அப்படி குறுக்கீடு வந்தாலும்,மீதி சனிக்கிழமைகளுக்கு வழிபாட்டை முடித்துவிடவேண்டும்.உதாரணமாக,தொடர்ந்து 5 சனிக்கிழமைகளுக்கு இவ்வாறு வழிபாடு முடித்ததும்,ஏதாவது ஒரு துக்கத்துக்கோ,தீட்டுக்கோ கலந்து கொள்ளும் சூழ்நிலை வரத்தான் செய்யும்.அப்படி கலந்து கொண்டப்பின்னர்,ஒரு மாதம் வரை இறைவழிபாடு செய்ய முடியாது.ஒரு மாதத்திற்குப்பின்னர், மீதி 3 சனிக்கிழமைகளுக்கு வழிபாட்டை முடித்துவிட வேண்டும்.


குடி குடியை மட்டுமல்ல;தலைமுறையையும் கெடுக்கும்.இறைவழிபாட்டின் மூலமாக,18 ஆம் படி கருப்பசாமி வழிபாட்டின் மூலமாக குடிப்பழக்கத்தை நிறுத்திவிட முடியும்.


ஓம்சிவசிவஓம்