மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் விநாயகர் கோவில் எழுப்புவது நமது
இந்து மரபு.இந்த சூழ்நிலையில் போன மாதம் எனது நண்பரோடு தஞ்சாவூரில் பைக்கில் இன்னொருவரை
சந்திக்கச் சென்றிருந்தேன்.ஒரு முச்சந்தியில்(மூன்று சாலைகள் சந்திக்கும் இடம்) காத்துக்கொண்டிருக்கும்போது,மேலே
காட்டப்பட்டிருக்கும் போட்டோவை எடுத்தேன்.
முச்சந்தியில் விநாயகர் கோவிலை மிகச் சிறிய அளவிலாவது வைத்திருப்பார்கள்.இங்கே
பைரவரின் சின்னமான சூலாயுதத்தை கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்களே! ஒருவேளை விநாயகர்
கோவிலை நிறுவும் பழக்கம் பிற்காலத்தில் வந்திருக்குமோ? என்று சந்தேகம் ஏற்பட்டது.கையோடு
கொண்டுவந்திருந்த கேமிராவால் இந்த படத்தை எடுத்துவிட்டு,அடுத்த முறையில் நமது ஆன்மீககுரு
திரு.சிவமாரியப்பன் அவர்களை சந்திக்கும்போது இந்த சந்தேகத்தைக் கேட்கலாம் என்று அந்த
போட்டோவை பத்திரப்படுத்திக்கொண்டேன்.
இவ்வாறு முச்சந்தியில் பைரவரது சின்னமான சூலாயுதத்தை நிறுவலாம் என்று
அவர் கூறினால், பல சந்தேகங்களை கேட்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன்.உலகத்தையும்,நவக்கிரகங்களையும்
நிர்வகித்து வரும் பைரவரது சின்னமான சூலாயுதத்தை முச்சந்தியில் வைப்பது சரி எனில்,அதற்குள்
பொதிந்திருக்கும் ஆன்மீக ரகசியம் என்ன?அப்படி முச்சந்தியில் வைப்பதால்,அந்தப்பகுதி
மக்களுக்கு என்னவிதமான நன்மைகள் ஏற்படும்? என்றெல்லாம் மிக நீண்ட சந்தேகக்கணைகளை தயார்
செய்து வைத்திருந்தேன்.
ஒரு வாரத்துக்குப் பின்னர்,எனது(நமது) ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன்
அவர்களிடம், “ஐயா,இந்த படத்தை தஞ்சாவூரில் எடுத்தேன்.இப்படி மூன்று சாலைகள் சந்திப்பில்
இப்படி பைரவரின் சின்னமான சூலாயுதத்தை வைக்கலாமா? வைத்து தினமும் இதே போல கோலம் போட்டு
வழிபாடு செய்யலாமா?” என்றேன்.
அந்த படத்தை உற்று நோக்கியவர், “இப்படிச் செய்வது மாபெரும் தவறு” என்றார்.அதன்பிறகு
அந்த நேரத்தில் தோன்றிய வேறு சில சந்தேகங்களை கேட்டு தெளிந்தேன்.இப்படிச் செய்தவர்களின்
வாழ்க்கையில் என்ன விதமான பிரச்னைகள் வரும்? அதை நிவர்த்தி செய்ய என்ன செய்யவேண்டும்?
என்பது மாதிரியான கேள்விகளுக்கு விடை அறிந்தேன்.
இதுதான் ஆன்மீக ஆராய்ச்சி என்பது! சில நேரம் நாம் ஒருகுறிப்பிட்ட நேரத்தில்
குறிப்பிட்ட கோவிலில் வழிபாடு மற்றும் மந்திர ஜபம் செய்தால் நமது கோரிக்கைகள் விரைவில்
தீரும்.
ஓம்சிவசிவஓம்
பின்குறிப்பு:=சுமார் 800 வருட இஸ்லாமியப் படையெடுப்பாலும்,சுமார்
300 வருட கிறிஸ்தவ படையெடுப்பாலும் நமது பாரதநாட்டில் இது போன்ற ஆன்மீக ஆராய்ச்சிகள் செய்வது முற்றிலும் வழக்கொழிந்து
போய்விட்டன.இன்றைய கால கட்டத்தில் பணம் சம்பாதிக்கவே ஒரு ஆயுள் போதவில்லை;இந்த சூழ்நிலையில்
தான் பலவிதமான ஆன்மீக மற்றும் ஜோதிட ஆராய்ச்சிகள் செய்து அதன் பலாபலன்களை சீர்தூக்கி
ஆராய்ந்து அறிந்து அதன் பிறகு ஆன்மீகக்கடலில் வெளியிட்டு வருகிறோம்