RightClick

2வது வீரட்டானம்:திருக்கோவிலூரின் பெருமைகள்


 அவ்வையார் விநாயகரைப்போற்றி விநாயகர் அகவல் பாடியது இங்கேதான்!

இன்றைய ஆசியா(வடக்கே சைபீரியா,மங்கோலியா,சீனா,ஜப்பான்,தாய்லாந்து,திபத்,பர்மா என்ற மியான்மர்,இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,இலங்கை,மாலத்தீவுகள்,அந்தமான் தீவுகள்,மலேஷியா,சிங்கப்பூர்) முழுவதையும்,ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரையிலும் ஆட்சி செய்த தமிழ் மன்னர் ராஜராஜசோழன் பிறந்த ஊர் இந்த ஊரே!


அசுரர்களின் குருவாகிய பார்க்கவன்,சதாசிவனால் ஒருமுறை விழுங்கப்பட்டு ஆயிரம் யுகங்களுக்குப்பிறகு மீண்டும் சிவனது உடலிலிருந்து வெளிப்பட்டதும் இங்கே தான்.அவ்வாறு வெளிப்பட்டபோது சுக்கிரன் என்ற பெயரோடு வெளிப்பட்டு,இங்கே இருக்கும் சதாசிவனை(ஸ்ரீகாலபைரவரை) வழிபட்டு கிரகப்பதவி பெற்றார்.எனவே,இது சிறந்த சுக்கிர பரிகார ஸ்தலமாக இருக்கிறது.யாருக்கெல்லாம் பிறந்த ஜாதகத்தில் கன்னிராசியில் மற்றும் மீன ராசியில் இருக்கிறதோ அவர்களெல்லாம் இங்கே வந்து சுக்கிர தோஷப் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.களத்திர தோஷம் இருப்பவர்களும் இங்கே அவரவர் ஜன்ம நட்சத்திர நாளன்று வருகை தந்து மூலவருக்கும்,ஸ்ரீகாலபைரவருக்கும் அபிஷேகம் செய்தால் ,சிறப்பான திருமண வாழ்க்கை அமைந்துவிடும்.


வாஸ்து புருஷன் இங்கே வந்து ஸ்ரீகாலபைரவரை வழிபட்டதால்,மிகச் சிறந்த வாஸ்து பரிகாரக்கோவிலாகவும் இது அமைந்திருக்கிறது.
அந்தகாசுரன் என்னும் அரக்கனை அழிக்கவே சதாசிவன்,ஸ்ரீகாலபைரவரை தனது நெற்றிக்கண்ணிலிருந்து தோற்றுவித்தார்.அந்தகாசுரனுக்கும் ஸ்ரீகாலபைரவருக்கும் நடந்த யுத்தத்தினால் எட்டு திசைகளிலும் ஸ்ரீகால பைரவரின் ரத்தம் சிந்தியது;அந்த ரத்தத்திலிருந்து எட்டுவிதமான பைரவர்கள் தோன்றினர்;அந்த எட்டு பைரவர்களின் தாக்குதலுக்கும் ஈடுகொடுத்து அந்தகாசுரன் போரிட்டதால்,எட்டு பைரவர்களும் மேலும் எட்டுவிதமான பைரவர்களாக அதாவது 64 விதபைரவர்களாக தோன்றினர்.அந்தகாசுரன் அழிந்தான்;அவனது அழிவால் பிரபஞ்சம் முழுவதற்கும் பரவியிருந்த இருட்டு நீங்கியது.இதனால்,மனம் மகிழ்ச்சியடைந்தார் சதா சிவன்.எனவே,இந்த பிரபஞ்சம் முழுவதையும் நிர்வாகிக்கும் பொறுப்பை ஸ்ரீகாலபைரவரிடம் ஒப்படைத்தார்.இந்த புராணச் சம்பவம் நிகழ்ந்த இடமும் இந்த திருக்கோவிலூர் வீரட்டானமே!!

எனவே,தேய்பிறை அஷ்டமி நாட்களில் வரும் இராகு காலத்தில் திருக்கோவிலூர் வீரட்டானத்தின் வெளிப்பிரகாரத்தை 64 முறை சுற்றினால்,ஏழேழு ஜன்மங்களாக உண்டான பாவவினைகள் நசிந்து போகும்;வளர்பிறை அஷ்டமி நாட்களில் வரும் இராகு காலத்தில் திருக்கோவிலூர் வீரட்டானத்தின் வெளிப்பிரகாரத்தை 64 முறைச் சுற்றினால் சகல செல்வ வளங்களும் இந்தப் பிறவியிலேயே உண்டாகும்.ஒருமுறையாவது தேய்பிறை அஷ்டமியில் 64 முறை திருக்கோவிலூர் வீரட்டானத்தை வலம் வந்தப்பின்னரே வளர்பிறை அஷ்டமியன்று இங்கே வருகை தந்து 64 முறை சுற்ற வேண்டும்;நமது கர்மவினையை கழிக்காமல் நாம் ஒரு போதும் செல்வச் செழிப்பை அடைய முடியாது என்பது ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு ஆகும்.

சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரைத் தலைமையகமாகக் கொண்டு உலகத்தை(இன்றைய ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா) ஆண்ட சோழ மன்னர் ராஜராஜசோழன் ஆவார்.அவர் கருவூர் சித்தரின் வழிகாட்டுதலின் படி,திருக்கோவிலூர் வீரட்டானத்தில் இருக்கும் ஸ்ரீகால பைரவரை வழிபட்டார்;அப்படி வழிபாடு செய்ததால் தான் உலகத்தை ஆளும் வல்லமையைப் பெற்றார்.

இரண்டாவது வீரட்டானமான திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலூர் விழுப்புரம்,திரு அண்ணாமலைக்கு அருகில் அமைந்திருக்கிறது.
மறுபிறவியிலும்,இப்பிறவியிலும் சனியின் தாக்கம் இல்லாமல் இருக்கவும்,சகலவிதமான கர்மங்களை சுலபமாகவும்,விரைவாகவும் கரைக்கவும் நாம் செய்ய வேண்டிய வழிபாடு ஸ்ரீகால பைரவர் வழிபாடு மட்டுமே!!!


ஓம்சிவசிவஓம்