RightClick

சித்தர்களின் அருளாசியைப்பெறும் வழிமுறை!!!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட ஒரு சித்தவழிபாட்டுமுறையை பின்பற்றலாம்;இந்த சித்தவழிபாட்டுமுறையை பின்பற்றிட முதல் தகுதி:21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்;இரண்டாம் தகுதி:அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்;யார் இந்த சித்தவழிபாட்டுமுறையைப்பின்பற்றுகிறாரோ அவர் மட்டும் (தற்போதைக்கு) அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் போதும்;
முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்டிருக்கும் மாலை(இந்த மாலையில் வேறு எந்த ஒரு பூவும் கட்டப்பட்டிருக்கக் கூடாது.இது மிகவும் முக்கியம்)சில நேரங்களில்/சில ஊர்களில்/சில சந்தர்ப்பங்களில் ரோஜாப்பூமாலை கிடைக்காவிட்டால்,ஒரு தடவை மட்டும் இது இல்லாமல் சித்தர் வழிபாடு செய்யலாம்;

 டயமண்டு வடிவிலான கல்கண்டு ஒரு கிலோ , விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழம் குறைந்தது அரைக்கிலோ;                              விதையில்லாத பேரீட்சைபழம் ஒரு பாக்கெட்,           நெய் தீபம் ஏற்றத்தேவையான பொருட்கள்,நாட்டுவாழைப்பழங்கள் ஆறு,வெற்றியும் கொட்டைப்பாக்கும்,ஒரு பத்திபாக்கெட் போன்றவைகளுடன் ஏதாவது ஒரு சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் உங்கள் ஊரில் இருக்கும் சித்தரின் ஜீவசமாதிக்குச் செல்லவும்.
முதலில் நீங்கள் வாங்கிய ரோஜாப்பூ மாலையை அவருக்கு அணிவிக்கவும்.நெய் தீபம் ஏற்றவும்;டயமண்டு கல்கண்டு மற்றும் பேரீட்சைப்பழங்களின் பாக்கெட்டுகளை கிழித்து வைக்கவும்;நாட்டு வாழைப்பழத்தின் மீது கொண்டு வந்திருக்கும் பத்தியை பொருத்தவும்;சுமார் 30 நிமிடம் வரை உங்களுடைய கோரிக்கை என்ன என்பதை மனதால் பிரார்த்தனை செய்யவும்.
அதன்பிறகு,அவரது சன்னதியின் முன்பாக விழுந்து வணங்கியப்பின்னர் டயமண்டு கல்கண்டுகளையும்,பேரீட்சைப்பழங்களையும் அங்கே இருப்பவர்களிடம் பாதி அளவுக்கு விநியோகம் செய்யவும்;மீதியை வீட்டுக்கு எடுத்துச் செல்லவும்;வீட்டுக்குக் கொண்டு சென்று நமது குடும்பத்தாரிடம் விநியோகம் செய்யவும்.
சில ஜீவசமாதிகளுக்கு நாம் செல்லும் நேரத்தில் ஆட்கள் வராமல் இருக்கலாம்;அப்படி இருந்தால் மொத்த இனிப்புகளையும் எடுத்துக்கொண்டு நமது வீட்டுக்கு வந்து நமது அண்டை வீட்டார் அல்லது நட்பு/உறவு வட்டத்திடம் பகிர்ந்து கொள்ளவும்.
இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் வழிபாடு செய்யவும்.எட்டு சனிக்கிழமை மட்டும் செய்யவும்;எட்டாவது சனிக்கிழமை வழிபாடு செய்து முடித்து 90 நாட்கள் வரை காத்திருக்கவும்;அந்த 90 நாட்களுக்குள் நமது கோரிக்கைகளில் பெரும்பாலானவை விரைவாக நிறைவேறியிருக்கும்;இந்த வழிபாடு துவங்கிய நாளிலிருந்து இந்த 90 நாட்கள் முடியும் வரையிலும் ஒருபோதும் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்;அப்படி இருந்தால் மட்டுமே இந்த வழிபாடு பலன்களைத்தரும் என்பதை மறவாதீர்கள்;
திருப்பதி மலைமீது ஆகாய கங்கைக்கு செல்லும் வழியில் வேணுகோபால் சன்னதி இருக்கிறது.இந்த சன்னதியில் தான் கொங்கணரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;பழனி மலையில் போகரின் ஜீவசமாதி இருக்கிறது;மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சுந்தரரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;நாகப்பட்டிணம் அருகே சுனாமிபாலம் கடந்ததும் கோரக்கரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;திருஅண்ணாமலையில் இருக்கும் கோசாலையில் இடைக்காடரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;மயிலாடுதுறையில் இருக்கும் மாயூரநாதர் கோவிலுக்குள் இருக்கும் விநாயகர் சன்னதியே குதம்பைச்சித்தரின் ஜீவசமாதி ஆகும்;கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் சித்தர்களின் தலைவர் அகத்தியரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;இதே போல தமிழ்நாடு முழுவதும் சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றன;சித்தர்களின் ஜீவசமாதிகளில் மட்டுமல்ல;மற்ற துறவிகளின் ஜீவசமாதிகளிலும் இதேபோல வழிபாடு செய்து நமது பணப்பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.
இந்த வழிபாட்டுமுறையை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களுக்கு கூகுள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்!!!
ஓம்சிவசிவஓம்

நந்தனவருடத்து புரட்டாசி பவுர்ணமியைப் பயன்படுத்துவோம்!!


ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் எந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி வருமோ,அந்த நட்சத்திரத்தின் பெயரே அந்த தமிழ் மாதத்தின் பெயராக நமது முன்னோர்கள் வைத்துள்ளார்கள்:இந்த புரட்டாசி மாதத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது.இந்த நந்தன வருடத்தின் பூரட்டாதி நட்சத்திரம் 28.9.12 வெள்ளிக்கிழமை மதியம் 2.25 முதல் 29.9.12 சனிக்கிழமை மதியம் 3.11 வரை உதயமாகிநிற்கும்;அதே சமயம்,பவுர்ணமியானது 29.9.12 சனிக்கிழமை காலை 8.48 முதல் 30.9.12 ஞாயிறு காலை 9.18 வரை அமைந்திருக்கிறது.அதாவது,சனிக்கிழமை இரவில் புரட்டாசி மாதத்தின் பவுர்ணமி உதயமாகியிருக்கும்.

ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முழுபலம் பெறுவது பவுர்ணமியன்றுதான்.இந்த பவுர்ணமி நாளில் நாம் ஓம்சிவசிவஓம் ஒரு மணி நேரமாவது ஜபித்தால் நமது ஜபத்தின் சக்தி பல மடங்கு அதிகரித்து,நமது கர்மவினைகளை கரைத்துவிடும்;அப்படிக் கரைவதால் நமது நியாயமான ஏக்கங்கள் நிறைவேறும்;நீண்டகாலப்பிரச்னைகள் தீரும்;நமது ஆத்மபலத்தை அதிகரிக்கவும் இந்த பவுர்ணமி ஜபம் பக்கபலமாக இருக்கும்.
29.9.12 சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் 3 மணி வரையிலும்,இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் குரு ஓரை வருகிறது.இந்த நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;30.9.12 ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் 12 மணி வரையிலும்  குருஓரை அமைந்திருந்தாலும்,சனிக்கிழமை ஜபிக்க இயலாதவர்கள் இந்த நேரத்தை ஓம்சிவசிவஓம் ஜபிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்;

நமது வீட்டு மாடியில் ஜபிப்பதால் மிக அதிகமான பலன்களை உணரமுடியும்;நமது ஊரில் இருக்கும் மலைக்கோவில்களில்(முடிந்தால்) இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் ஜபிப்பதால் விரைவான ஜபசக்தி நம்மை வந்து சேரும்;நமது ஊரில் இருக்கும் ஜீவசமாதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் ஜபிப்பதால்,இந்த மந்திரத்தின் ஆற்றல் அதிகளவில் நம்மை வந்து சேர்வதோடு,அந்த ஜீவசமாதிக்குள் மறைந்திருக்கும் மகானின் அருளாற்றலும் நமக்கு உடனே கிடைக்கும் என்பது ஆன்மீக ஆராய்ச்சி முடிவு ஆகும்.

மேலும் பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நாளில் கண்டிப்பாக அன்னதானம் செய்வது மிகமிக நல்லது;இப்படி அன்னதானம் செய்த மறு நாளே சில ப்ரச்னைகள் தீருவதை அனுபவத்தில் உணரலாம்.


செய்வோமா?


விக்ரக ரூபத்தைவிடவும் லிங்க ரூப வழிபாடே உயர்ந்தது!!!
மஹாபாரதத்தில் ஒரு நாள் கவுரவர்கள் சார்பாக பாண்டவர்களோடு யுத்தம் புரிகிறார் அஸ்வத்தாமன்;அவரை வெல்வது எளிதல்ல;அவரிடம் உள்ள அஸ்திரங்களில் அக்னி அஸ்திரம் ஒன்று போதும்;மொத்த உலகத்தையே சாம்பலாக்கிவிடமுடியும்;இது பாண்டவர்களுக்கும் தெரியும்! குறிப்பாக கிருஷ்ண பரமாத்மா நன்கறிவார்.

அன்றைய யுத்தத்தில், அஸ்வத்தாமா அந்த அஸ்திரத்தை இறுதியாகப் பிரயோகித்தார்;மொத்த பாண்டவ சைதன்யமும் சாம்பலாகப்போகிறது என்றே எல்லோரும் நினைக்க,க்ருஷ்ண பரமாத்மா பதிலுக்கு பாசுபதாஸ்திரத்தை பிரயோகிக்கும்படி அர்ஜீனனைப் பணித்தார்;சிவனாரைக் குறித்து தவமிருந்து அர்ஜீனன் பெற்றதே பாசுபதாஸ்திரம்.அது,அக்னியாஸ்திரத்தை அடக்கிவிடுகிறது.அஸ்வத்தாமனிடம் திகைப்பு!!!

அக்னியாஸ்திரத்தை மிஞ்சும் ஓர் அஸ்திரம் இருக்கமுடியுமா? என்று!!! பின்னர்,அவர் வியாசரிடம் இது தொடர்பாக கேட்க,அவர் பதில் கூறத் தொடங்கினார்: “அஸ்வத்தாமா! நீயும் அர்ஜீனன் போன்று மிகச் சிறந்த வீரனாக இருந்தபோதிலும்,அவன் ஈஸ்வரனின் லிங்க ரூபத்தை தியானித்து தவம் செய்து,பாசுபதாஸ்திரத்தைப் பெற்றான்.நீயோ அந்தப்பெருமானை விக்கிரக ஆராதனை புரிந்தாய்.லிங்க ரூபத்தில் சக்தியும் பீடகதியில் கிடக்கிறாள்;ஸ்தூபம் நாதமாக விளங்குகிறது;எனவே,சிவபெருமான் லிங்க ரூபத்தில் வழிபாடு உடையவர்களை,வரம் பெற்றவர்களை முந்தி ஆட்கொள்கிறான்.அதனாலேயே அர்ஜீனனை உனது அஸ்திரத்தால் வெல்ல முடியவில்லை”என்றாராம்.

மஹாபாரதத்தில் கிடைக்கும் இந்தச் செய்திப்படி லிங்க வடிவமே வழிபாட்டுக்கு உரியது என்பது புலனாகிறது;
இதன்படி லிங்கம் என்பது மணியாகும்;மந்திரம் என்பது ‘ஓம்நமச்சிவாய’ எனும் பஞ்சாட்சரமாகும்.விபூதியே மருந்தான அவுஷதமாகும்;இதையே ‘மணிமந்திர ஓளஷதம்’ என்பார்கள்;சித்த புருஷர்களும் மிக எளிதாக,மணி மந்திர ஒளஷதமாக லிங்கத்தை பஞ்சாட்சரத்தை விபூதியைக்கொண்டார்கள்.நன்றி: சக்தி விகடனில் (2.10.2012)வெளிவரும் தொடர்:சித்தம்,சிவம்,சாகசம் தொடர்,பகுதி 2,பக்கம்39.எழுதி வருபவர் இந்திரா சவுந்தரராஜன்
ஓம்சிவசிவஓம்

நாம் ஒவ்வொருவருமே தேசபக்தியும்,தெய்வபக்தியும் பெற வேண்டும்!!! ஏன் தெரியுமா?


தேச பக்தி இல்லாத தெய்வபக்தியால் தான் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டின் நிலப்பரப்பை இழந்தோம்;இந்த கருத்தின் அடிப்படையில் சுமார் 100 பி.எச்.டி.ஆய்வுப்பட்டம் முடிக்க முடியும்.அந்த அளவுக்கு நமது பாரத நாட்டின் வரலாறு பரந்துவிரிந்து இருக்கிறது; அதே சமயம் பல நாட்டு உளவுத்துறைகளின் நயவஞ்சகத்தினால் நமது இந்து தர்மத்தின் பெருமைகளும்,மரபுகளும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கி.பி.1000 வரையிலும் இந்துதர்மம் இன்றைய ஆசியக் கண்டம் முழுவதும் மற்றும் ஆஸ்திரேலியக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது;இன்றும் இந்தியாவைத்  தவிர ஆசியா மற்றும் ஆஸ்திரேலியக் கண்டத்துநாடுகளில் இதற்கான இந்துப்பண்பாட்டு மிச்ச சொச்சங்கள் இருக்கின்றன.இதில் பிரபலமான உதாரணமான கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் ஆலயத்தைச் சொல்லலாம்;ஒரேஒரு கேமிராவிற்குள் இந்த முழு ஆலயத்தின் முகப்பையும் இன்று கூட போட்டோ எடுக்க முடியவில்லையாம்;தவிர,தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்குப்போயிருக்கிறீர்களா? அது பிரம்மாண்டமான சிவாலயம் ஆகும்.சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலுக்குப் போயிருந்தீர்கள் எனில்,அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்தே அசந்து போய்விடுவீர்கள்.சிதம்பரம் நடராஜர் கோவிலின் வெளிப்பிரகாரத்தை ஒரே ஒரு முறை  நீங்கள் சுற்றி வருவதற்குள்ளாக உங்களது கால்கள் வலித்து,ஓரிருமுறையாவது நீங்கள் உட்கார்ந்து தான் சுற்றை முடிக்க முடியும்.

இலங்கைக்கும் தெற்கே இரண்டாயிரம் சதுர கி.மீ.தூரத்துக்கு குமரிக்கண்டம் இருந்திருக்கிறது.அங்கே  இன்றைய சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலை விட பத்து மடங்கு அதாவது சுமாராக ஐந்து சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவுக்கு பிரம்ம்மாண்டமான சிவாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்று சில தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.அவை இன்றும் கடலுக்குள் மூழ்கியிருக்கின்றன.யாராவது வான் வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தால் உங்களது செயற்கைக்கோள்கள் மூலமாக போட்டோ எடுத்து அனுப்புங்கள்;அப்போது தெரியும்!!?


அதே அளவுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீகால பைரவரின் கோவில்களும் இருந்திருக்கின்றன;குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியாக் கண்டம் வடக்கே இன்றைய இலங்கை முதல் தெற்கே அண்டார்டிகா வரையிலும் கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே தென் ஆப்ரிக்கா வரையிலும் பரவியிருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் திருவீழிசை என்னும் ஊரில் ஒரு பாறைவடிப்பு இருக்கிறது.என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும் நோட்டுப்பக்கத்தின் தடிமன் எவ்வளவு இருக்கும்? இரண்டு மில்லி மீட்டர் இருக்குமா? அந்த அளவுக்கு பாறையை இளக்கி காகிதத் தடிமனுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.இன்று இருக்கும் எம்.டெக்.சிவில் என் ஜினியர்கள் யாராவது ஒரே ஒருவரால் இதே போல காகிதத் தடிமனுக்கு ஒரு பாறையை செதுக்க முடியுமா?

இன்றைய கர்நாடக மாநிலத்தில் பேலூர் ஹளபேடு சிற்பங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை என்று பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறோம்;அவையெல்லாம் எப்படி உலகப்புகழ் வாய்ந்தவை என்பதை பாடத்திட்டத்தில் சேர்க்கவே இல்லை;அங்கே ஆயிரம் கால் மண்டபம் ஒன்றுஇருக்கிறது.ஒவ்வொரு தூணின் அடிப்பகுதியும் தரையைத் தொடாமல் இரண்டு செண்டிமீட்டர்கள் மேலே நிற்கின்றன;அதே போல அந்தத் தூணின் மேல்பகுதியும் மேலே இருக்கும் விதானம் அல்லது தளத்தினைத் தொடாமல் (கீழே இருப்பதுபோலவே) இரண்டு செண்டிமீட்டர்கள் இடைவெளிவிட்டு நிற்கின்றன;இந்த இரண்டு செண்டி மீட்டர்கள் இடைவெளியில் ஒரு நோட்டின் காகிதத்தை அந்த தூணுக்கு அடியில் விட்டு எடுக்கலாம்;

நமது பாட்டானார்கள் அனைவருமே 400 வருட வல்லரசாகத் திகழும் அமெரிக்கனைவிடவும்,நமக்குச் சமமாக பொருளாதார வல்லரசாக இருக்கும் நம்ம பங்காளி சீனர்களை விடவும் மிகச் சிறந்த அறிவாளிகளே!அவர்கள் செய்திருக்கும் சாதனைகளை நாம் பாதுகாத்து,நமது அடுத்த தலைமுறைக்குப்போதித்தாலே போதும்;அவர்களின் சாதனையை நாம் முறியடித்ததாக அர்த்தம்.


தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் அவ்வப்போது இந்த நினைவுகள் நினைவுக்கு வரும்;அதோடு சரி! ஆனால் இன்று அதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.ஆஹா! சிவபூமிதான் நாம் வாழும் பூமி என்று தெரிந்ததும் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன்.ஆன்மீகக்கடல் பெருமைப் படுகிறது.இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.இதற்காக நாம் ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தில் நூற்றில் ஒரு பங்கினை இவருக்கு நாம் வழங்குவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம்  இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி,இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி.இந்த சிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

இலங்கைக்கு தெற்கே கன்னி,குமரி,காவிரி என்று ஒன்பது நதிகளும்,ஏழு மலைகளும் கொண்ட மகேந்திரமலை என்ற திருத்தலத்தில் வேதங்களும்,ஆகமங்களும் தோன்றி வளர்ந்து சிவமணம் கமழ்ந்து இருந்தது.ஈசன் அருளிச்செய்த புண்ணிய வேத ஆகமங்கள் தோன்றிய தென்னகம் உலகிலேயே மிகவும் புனிதமான திசை என்று வடநாட்டிலிருந்து வந்து தமிழ்த்தொண்டு புரிந்த திருமூலர் போற்றியுள்ளார்.
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுன்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே     (திருமந்திரம்)

மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்  (திருவாசகம்)
என்று தெய்வத் திருமுறைகள் தென்னாட்டு வேதங்களையும் ஆகமங்களையும் போற்றுகின்றன.திருக்கேதீஸ்வரம்,திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம்  351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்புராணங்கள் தெரிவிக்கின்றன. ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,வாழ்க்கையையும்,பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.எல்சடை என்றால் கரிய சடையுடையவன்  என்று பொருள்.சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.ஜப்பானில் சந்திகளிலும் சதுக்கங்களிலும் சிவாலயங்களை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர். போர்னியா நாட்டுக்குகைகளிலிருந்து ஈசன் திரு உருவங்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுமத்திராவில் பெரிய அளவிலான லிங்கப்பரம்பொருளும் அர்த்தநாரீஸ்வர வடிவமும் கிடைத்துள்ளது.ஹர என்ற வடமொழிச்சொல்லும் அப்பா என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து ஹரப்பா என்றாயிற்று.தென் இந்திய இசையின் ஒரு ராகப்பெயர் கனடா.இந்தப் பெயரில் ஒரு வல்லரசு நாடு இருப்பதை நாம் அறிவோம்;அமெரிக்காவிலுள்ள உருகுவே என்ற ஊரின் பெயர் ஒரு தமிழ்ச்சொல்.ஈரான் என்பது இரட்டைப்பசு என்று பொருள் தரும் தமிழ்ச்சொல்.ஈராக் என்பதற்கு இரட்டையுடல் என்ற தமிழ் அர்த்தம் உண்டு.பஞ்சாக்கை என்ற சிவத்தலத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது.பஞ்சாக்கை என்பது இன்றைய பஞ்சாப் ஆகும்.சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச்சொற்களாகும்.பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸ் ஆனது;ஓமன் என்பது ஓங்காரேஸ்வரனைக் குறிக்கும்;ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜலால்கோட்,பாகிஸ்தானில் இருக்கும் ஜெயில் கோட் ஆகிய பெயர்களில் கோட்டை என்ற தமிழ்ச்சொல் உள்ளது.பாரதப்பெயர்கள் எல்லாம் மூல உச்சரிப்பே தெரியாத வகையில் சிதைத்து வழங்கப்படுவது இன்றும் இயல்பு.தூத்துக்குடி,கோழிக்கோடு போன்றவையெல்லாம் டூட்டிகுரின்,காலிகட் என்றெல்லாம் மாற்றப்படுவழங்கப்படுவது போல,மேற்கூறியவைகளும் மாறியுள்ளன.ஆப்கானிஸ்தானின் பழைய பெயர் காந்தாரம்.இன்றும் இதிலுள்ள ஸ்தானம் என்பது சமஸ்க்ருதப் பெயர்.காந்தார நாட்டு இளவரசியே காந்தாரி.காந்தாரம்,பியந்தைக் காந்தாரம்,காந்தார பஞ்சமம் ஆகியவையெல்லாம் தேவாரத் திருமுறைப் பண்களின் /ராகங்களின் பெயர்களாகும்.ப்ரம்மதேசம் என்பதே இன்றைய பர்மா.அகஸ்தீஸ்வரம் என்பதே இன்றைய ஆஸ்திரேலியா.திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும் இடையே  முழுகிப்போன தலமே கந்தமாதனம் ஆகும்.(பக்கங்கள் 354,355,356)


நாம் செய்ய வேண்டிய கடமை என்னதெரியுமா? நமது குழந்தைகளின் ஏழு வயதுக்குள் அடிக்கடி அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;குடும்பத்தோடு அழைத்துச் சென்று நமக்குத் தெரிந்த அந்த கோவில் வரலாறு,அந்த தெய்வத்தின் பெருமைகள்,வழிபாட்டு முறைகளைச் சொல்ல வேண்டும்;

வீட்டில் நாம் தினமும் சில நிமிடங்களாவது கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்;
பள்ளிப்படிப்பை முடிக்கும்போது,நமது குழந்தைகளுக்கு ஸ்ரீஇராமக்ருஷ்ண மிஷன்,சின்மயா மிஷன்,விவேகானந்த கேந்திரம் போன்ற ஆன்மீக மற்றும் தேசபக்த அமைப்புகளின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறைகள்,பனிரெண்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறை,டிகிரி அல்லது டிப்ளமோ செமஸ்டர் விடுமுறைகளில் அனுப்பி வைப்பதுடன் முடிந்தால் நாம் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது எதிர்கால சந்ததிக்கும் நமது இந்து தர்மத்தின் பெருமைகள் சென்றடையும்.நான் அப்படிப்பட்ட பயிற்சிமுகாம்களில் அடிக்கடி கலந்து கொண்டதால் தான் நமது இந்துதர்மத்தின் பெருமைகளை உணர்ந்தேன்.அப்படி உணர்ந்த ஒவ்வொரு கணமும் எனக்குள் நமது முன்னோர்களைப்பற்றிய பெருமிதம் உண்டானது;

நிறையப்படித்தால் தான் கொஞ்சம் எழுத முடியும் என்பது எழுத்தாளர்களுக்கான அரிச்சுவடி ஆகும்;எனவே,நிறைய்ய்ய்ய படிக்கத் துவங்கினேன்;சில சமயம்,நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை வெளியிடும் திரைக்கூத்து போன்ற இதழ்களிலிருந்தும்  கூட எனது தேடல்களுக்கான விடை கிடைத்தது;எனவே,அதையும் தற்போதெல்லாம் விட்டு வைக்கவில்லை;தெய்வபக்தி இல்லாத தேசபக்தி நமது நாட்டின் அண்டை நாடுகளுக்கும்,நம்மோடு பழகி நமது செல்வ வளம்,மனித வளம்,ஆற்றல் வளங்களை கைப்பற்றும் நாடுகளுக்கும் இருக்கின்றன.அதனால் தான் நாம் நவீன கொத்தடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்; இனியும் நாம் நம்முடைய இந்துதர்மத்தின் பெருமைகளை நமது அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டால்,இந்த நூற்றாண்டு முடிவதற்குள் நமது நாட்டின் நிலை மட்டுமல்ல;நமது அடுத்த தலைமுறையின் சூழ்நிலையும் அதோகதிதான்!!!
இந்த இரண்டு கருத்தின் அடிப்படையிலேயே உலக அரசியலே செயல்பட்டுவருகிறது.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

தினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்=331.சினிமாக் காட்சிகளில் நடிகைகள் மற்றும் ஹீரோயின்கள் தொப்புளைக் காட்டுவதைப் போல காட்சிகளை நமது இயக்குநர்கள் வைக்கிறார்கள்.இதை கவனிக்கும் தமிழ் சகோதரிகள் அதே போல தமது தினசரி வாழ்க்கையை மாற்றிக்கொள்வதன் விளைவாக,மாறுபட்ட சிந்தனையுள்ள குழந்தைகள் பிறக்கின்றன;


நமது பூமிக்கு நேர்கீழே ஏழு உலகங்கள் இருக்கின்றன.அந்த உலகங்களுக்கு ராக்கெட்டில் செல்ல முடியாது;ராக்கெட்டானது நமது அறிவாற்றலால் உருவாக்கப்பட்டது ஆகும்.ஆனால்,அந்த உலகங்களை பார்க்கவோ,தொடர்பு கொள்ளவோ தினசரி தியானம் அல்லது மன சக்தியை அதிகரித்தல் மூலமாகவோ அல்லது ஏதாவது  ஒரு சக்திவாய்ந்த இறைவழிபாடு செய்வதன் மூலமாகவோ மட்டுமே முடியும்.

குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் தொப்புளை வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ பொது இடங்களில் காட்டுவதன் மூலமாக முனி அல்லது வேறு உலகத்தைச் சேர்ந்த ஆத்மாக்கள் அந்த கர்ப்பிணியின் கருவுக்குள் அடைக்கலமாகிவிடுகின்றன.இதனால்,வேறு உலகத்தைச் சேர்ந்தவர்கள் மனிதர்களாக பிறந்துவிடுகிறார்கள்.இந்த பழக்கத்தால் தான் கடந்த சில நூற்றாண்டுகளாக இங்கே மனிதத்தன்மை நிறைந்தவர்கள் பிறப்பது மிகவும் குறைந்துகொண்டே வருகிறது.இதன் மூலமாக,பலருக்கு ஆன்மீக முன்னேற்றங்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

32.முன் ஜன்மம் தொடர்பான காதல் சினிமாக்கள் பெரும்பாலும் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கின்றன;ஏனெனில்,முன் ஜன்மம் நிஜம் என்பதை அதீத உளவியல் நிரூபித்துவிட்டது;இந்த கொள்கையின் அடிப்படையில் தான் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயாவின் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன:இரண்டு பேர் தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தால்,அவர்கள் முன் ஜன்ம நண்பர்கள் ஆவர்;அதே போல தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளாக எதிரிகளாக இருந்தால் அவர்கள் முன் ஜன்ம எதிரிகள் ஆவர்;33.செவ்வாயும் சுக்கிரனும் ஒருவரது பிறந்த ஜாதகத்தில் இருந்தாலே அது தொடர்பாக சுமார் இருபது ஜோதிடப்பலன்களைச் சொல்லலாம்;இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை அவர்களுடைய முன் ஜன்மம் தொடர்பான வாழ்க்கை ரகசியத்தை தெரிவிக்கிறது.விடுபட்ட முன் ஜன்ம வாழ்க்கையின் சில பகுதிகள்/ஆட்கள்/தொழில்/குடும்ப உறவுகளை இந்த பிறவியிலும் தொடர வைக்கப்போகிறது என்று அர்த்தம்.இதற்கு மேல் விளக்கம் சொல்ல முயன்றால் அது சில நூறு பக்கங்களுக்கு விரிந்துவிடும்.34.தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி,உலகமயமாக்கல், கலியுகம் துவங்கி 5000 ஆண்டுகள் கடந்து போய்விட்ட நிலை போன்றவைகளால் இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மனித உணர்வுகள் மழுங்கிக் கொண்டிருக்கின்றன;அன்பு,பாசம்,தனது வாழ்க்கைத்துணையை புரிந்து கொண்டப்பின்னர்,விட்டுக்கொடுக்காமல் இருத்தல்,தியாகம்,தேசபக்தி,தெய்வபக்தி போன்றவைகள் எங்கோ ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கின்றன;ஒரு லட்சம் பேர்கள் வாழ்ந்து வரும் ஒரு நகரத்தில் சுமார் நூறுபேர்களிடம் தெய்வபக்தி இருந்தாலே அதிகம்;மற்றவர்கள் தமது கடுமையான கர்மவினை தீராதா என்ற ஏக்கத்தில் வழிபாடுகளை செய்து வருகின்றனர்;இந்த  சூழ்நிலையில் பணம் உடனே கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடிய சமுதாயமாக நமது இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பக்தியையும்,ஆன்மீகச் சிந்தனைகளையும்,இறைவழிபாட்டையும் அந்த வழிபாட்டிற்கான காரணங்கள்,வரலாறு,காரண காரியம் போன்றவைகளை விளக்கி வழிகாட்ட வேண்டியிருக்கிறது.35.பணம்,அதிகாரம்,காமம் போன்றவைகளே நாம் வாழும் தமிழ்நாட்டையும்,உலகத்தையும் ஆட்சிபுரிந்து கொண்டிருக்கின்றன;கோவில் சன்னிதானத்தில் இருப்பவர்களிடமும் பணத்தாசை புகுந்துவிட்டது;கர்மசிரத்தை எனப்படும் பொறுப்புணர்ச்சி இன்று நமக்கு எப்போது வருகிறது தெரியுமா?
ஒரு பேராபத்து வரும்போது அல்லது ஒரு பெரிய அதிர்ஷ்டம் வரப்போவதை உணரும்போது மேலும் சிலபல காரியங்களில் ஈடுபடும்போது!!!


ஒவ்வொரு சராசரி ஆணுக்கும்,பெண்ணுக்கும் அடிப்படைத்தேவையான நிரந்தரமான வேலை அல்லது தொழில்; கடன் இல்லாத வாழ்க்கை,நோய் அல்லது எதிரிகளற்ற தினசரி வாழ்க்கைமுறையை உருவாக்கவே ஆயுள் முடிந்துவிடுகிறது.அப்படி உருவாக்கிடவே ஆன்மீகக்கடல் வழிகாட்டுகிறது.அப்படிப்பட்ட அடிப்படைத் தேவைகளை உருவாக்கியப்பின்னர்,கொஞ்சம் புண்ணியத்தையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வெகு சிலருக்கே உருவாகிறது;


ஒரு உதாரண குடும்பம்: அந்த குடும்பத்தில் அப்பா அரசு ஊழியர்;அம்மா இல்லத்தரசி;இவர்களுக்கு மூன்று மகன்கள் மட்டுமே! அரசு ஊழியராக இருக்கும் கணவனது ஒழுக்கம் பற்றி விவரிக்கமுடியவில்லை;இதனால் வீட்டுக்கு முழுச்சம்பளம் வருவதில்லை;அந்த இல்லத்தரசி என்ன செய்வாள்? பாவம்! 


தினமும் பக்கத்துவீடுகளிலும் தெருவில் இருக்கும் உறவினர்களிடமும் கடன் வாங்கி மூன்று மகன்களையும் படிக்க வைத்துவிட்டாள்;மூத்தவன் அரசு வேலையில் மிகுந்த போராட்டத்துடன் சேர்ந்துவிட்டான்;அடுத்தவன் வட நாட்டுக்கு போனவன் தகவல்கூட சொல்லவில்லை;மூன்றாமவன் இப்போதுதான் சென்னையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறான்;காலங்கள் மாறுகின்றன;மூத்தவன் அரசுப்பணியில் சேர்ந்த சில வருடங்களில் பழைய அன்போடும் பாசத்தோடும் இருக்கவில்லை என்பதை அம்மா புரிந்துகொண்டாள்;அவனுக்கு பெண் பார்க்கும் வேளைகளில் பெண் வீட்டார் தனது மூத்தமகனை முடிக்கும் விதமாக வருவது தெரிந்தால்,ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறாள்;இந்த சூழ்நிலையில் அந்த மூத்தமகனுக்கு வயது 40 ஐத்தாண்டிவிட்டது;ஒவ்வொரு மாதமும் மூத்த மகன் தரும் சம்பளப்பகுதியில் தனக்கென்று ஒதுக்கி வைத்துக்கொண்டே இருந்திருக்கிறாள்;அப்படி ஒதுக்கி வைத்த பணத்திலிருந்து இப்போது அந்த அம்மா மாதாந்திர வட்டி வருகிறது;அதுவும் எவ்வளவு? தாம் எதிர்பார்க்கும் தொகை வரத்துவங்கியிருக்கிறது;இப்போது கர்மசிரத்தையாக மூத்த மகனுக்கு வரன் தேட ஆரம்பித்திருக்கிறாள்;ஆனால்,அவள் எதிர்பார்க்கும் வரன் தான் கிடைக்கவே இல்லை;இதே சூழ்நிலை சாஃப்ட்வேரில் பணிபுரியும் பல பெண்களுக்கும் உருவாகியிருக்கிறது;இதனால் முதிர்கன்னிகளின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொட ஆரம்பித்திருக்கிறது.ஒரு நாட்டில் முதிர்கன்னிகளின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைக் கடந்துவிட்டால்,அந்த நாட்டில் அழிவுகள் இயற்கையால் ஏற்படும்;இதை யாருக்கு புரியவைக்க? எந்த சட்டத்தினால் இதை மாற்றியமைக்க?இதிலே பல நகைச்சுவை கலந்த கொடூரங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.பாவம் முதிர்கன்னிகளும்,முதிர் இளைஞர்களும்!!!


37.எனவே,தினமும் ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஒரு மணி நேரம் வரை ஜபிப்போம்;


அல்லது


தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவோம்;


அல்லது


வாரம் ஒரு நாள் வீதம் எட்டு வாரங்களுக்கு மட்டும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று வழிபாடு செய்வோம்;இதன் மூலமாக நமது கடுமையான சிக்கல்கள் உடனே தீரத்துவங்கும்;


ஓம்சிவசிவஓம்

கடன் தரக்கூடாத நட்சத்திர நாட்கள்
பின்வரும் நட்சத்திரங்கள் இருக்கும் நாட்களில் ஒருபோதும்,எவருக்கும் கடன் தரக் கூடாது;அப்படித் தந்தால் கடன் திரும்ப வராது என்பதை எமது குருவின் உபதேசம் தெரிவிக்கிறது.
பரணி,
கார்த்திகை,
திருவாதிரை,
ஆயில்யம்,
மகம்,
பூரம்,
சித்திரை,
சுவாதி,
விசாகம்,
கேட்டை,
பூராடம்,
பூரட்டாதி.

எனவே,இந்த நட்சத்திரம் நிற்கும் நாளைத் தவிர,மற்ற நட்சத்திரம் நிற்கும் நாளில் கடன் தரலாம்.நமது முன்னோர்கள் அறிவுக்கு முன்பாக மேல்நாடுகளின் தொழில்நுட்பத்திறமையும்,அறிவாற்றலும் தூசிக்குச் சமம்.எதற்கெடுத்தாலும் மேல்நாடுகளின் வழிமுறைகளைப் பின்பற்றுவதை தவிர்ப்போம்;இந்த உலகத்தையே ஆளப்பிறந்திருப்பது நமது இந்தியர்களே! இந்த உண்மை வெகு விரைவில் நிரூபணமாகும்.


ஓம்சிவசிவஓம்

விநாயகர் அருளை விரைவாகத் தரும் நவவிநாயகர் வழிபாடு!!!

முழு முதற்கடவுளாம் விநாயகர்,கணபதி,பிள்ளையாரின் ஆசியோடும்,குருகணபதியின் வழிகாட்டுதலோடும் இந்தப் பதிவினை ஆன்மீகக்கடல் வாசகப் பெருமக்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறேன்!!!இன்று 19.9.2012,நந்தன வருடம் புரட்டாசி மாதம் மூன்றாம் நாள்,தேய்பிறை சதுர்த்தி ஆகும்.இன்று நமது வீட்டில் மஞ்சளில் ஒரு விநாயகரை பிடிக்க வேண்டும்;அதே போல சந்தனத்தில் ஒரு விநாகயரையும்,குங்குமத்தில் ஒரு விநாயகரையும்,விபூதியில் ஒரு விநாயகரையும்,பசுஞ்சாணத்தில் ஒரு விநாயகரையும்,வெல்லத்தில் ஒரு விநாயகரையும்,வாழைப்பழத்தில் ஒரு விநாயகரையும்,பேரீட்சைப்பழத்தில் ஒரு விநாயகரையும்,வெண்ணெய்யில் ஒரு விநாயகரையும் பிடிக்க வேண்டும்.கொஞ்சம் மஞ்சளை எடுத்து நமது மூன்று விரல்களால் பிடித்தாலே அந்த மஞ்சளில் விநாயக சக்தி வந்துவிடும்.இதேபோல ஒன்பது விநாயகர்களை மேற்கூறியவாறு பிடிக்க வேண்டும்;எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை;
இந்த ஒன்பது விநாயகர்களுக்கும் தனித்தனியே மோதகம் எனப்படும் கொழுக்கட்டைகள்,சுண்டல்களை படையலிடவேண்டும்;ஒன்பது குத்துவிளக்குகளில் தீபமேற்ற வேண்டும்;ஒன்பது முறை விநாயகர் அகவல் பாட வேண்டும்;தவிர,விநாயகரது பாடல்களையும் பாடலாம்;ஜபிக்கலாம்;இன்று எப்போது வேண்டுமானாலும் இந்த வழிபாட்டைச் செய்யலாம்;ஏறு பொழுது எனப்படும் காலை நேரங்கள்,இறங்குபொழுது எனப்படும் மதியம்,மாலை மற்றும் இரவு நேரம் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை;
இது போல இன்று புதன் கிழமை,நாளை வியாழக்கிழமை,நாளை மறு நாள் வெள்ளிக்கிழமை என்று மூன்று நாட்களுக்கு தினமும் ஒன்பது முறை விநாயகர் அகவல் மற்றும் விநாயகர் பாடல்களைப் பாட வேண்டும்;வழிபாடு முடிந்த ஓவ்வொரு நாளும் மோதகங்களையும்,சுண்டல்களையும் அருகிலிருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விநியோகிக்க வேண்டும்;
மறு நாள் புதிய மோதகங்களையும்,புதிய சுண்டல்களையும் ஒன்பது விநாயகர்களுக்கும் படைக்க வேண்டும்.
நான்காம் நாளான சனிக்கிழமை 22.9.2012 அன்று அருகில் இருக்கும் ஆறு அல்லது கிணறு அல்லது கடல் அல்லது நதியில் இந்த ஒன்பது விநாயகர்களையும் கரைக்க(விஜர்சனம்) வேண்டும்.
இதன் மூலமாக கேது திசை நடைபெறுபவர்களுக்கும்,கேது சார திசை மற்றும் கேதுவுடன் சேர்ந்த கிரகங்களின் திசை நடைபெறுபவர்களுக்கும், ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி, சனி திசை நடைபெறுபவர்களுக்கும் வர இருக்கும்,வந்து கொண்டிருக்கும் துயரங்களை விநாயகப்பெருமான் நீக்கிவிடுவார்;மேலும் விநாயகரின் அருள் முழுமையாகக் கிட்டும்;ஜீவகாருண்யம் ஏற்படும்;முன்னோர்களின் அருளாசி கிட்டும்;முன்னோர்களின் சாபம் இருந்தால் அது அடியோடு விலகிவிடும்;


இந்த நந்தன வருடத்தில் புதன் கிழமையும்,விநாயகர் சதுர்த்தியும் வந்திருப்பதால் இந்த வழிமுறைப்படி ஒன்பது விநாயகர் வழிபாடு செய்து வளமோடு வாழ்க! அருள் பல பெறுக!!!


படங்களில் காட்சியருள்வது தங்க விநாயகர்,          ப்ளாட்டின விநாயகர்,வைர விநாயகர்!!!


ஓம்சிவசிவஓம்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!!

விநாயகனே !!!விநாயகனே !!!
வினை தீர்பவனே!!
தாய்  காவலுக்கு தலை தந்த 
தங்கமே !! தங்கமே !!
பஞ்சத்தில்  இருந்த  எம்மை !
பஞ்சு மெத்தையில்  அமர்த்திய 
விநாயக பெருமானே !!
நின்  பாத மலரடி  போற்றி !      போற்றி ! போற்றி !போற்றி !                                                       நன்றி: நமது வாசகர் ஒருவர்

தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றும் சினிமாக் காட்சிகள்!!!
கி.பி.1960 முதல் 1970 வரையிலான தமிழ்த்திரைப்படங்கள் தேசபக்தியையும்,தெய்வபக்தியையும் வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்தன;ஆனாலும் ,அப்போதே கவர்ச்சியை பயன்படுத்தும் விதமான படங்கள் தமிழ் இளைஞர்களின் மத்தியில் காதலுடன் சேர்ந்தே வக்கிரமான காம  எண்ணங்களையும் விதைத்தது;கூடவே பக்திப்படங்கள் , கடவுள் வடிவங்களை சுலபமாக மக்களின் மனதில் பதித்தன;புராணங்கள்,செவிவழிச் செய்திகள் திரைப்பட வடிவம் எடுத்தப்பின்னர்,இறைவழிபாடு பற்றிய நம்பிக்கையும் ஆரம்ப காலங்களான 1950 முதல் 1980 வரை அதிகரித்தன;


சென்சார் போர்டு தலைவராகவும்,உறுப்பினராகவும் இருந்து கொண்டே சில வக்கிரமான காட்சியமைப்புகளை தனது திரைப்படங்களில் வைத்து லட்சக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்தனர் சிலர்;அப்படி சம்பாதிப்பதை பலரும் காறித்துப்பியும்,கவலைப்பட வில்லை;பணம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என்று பலரும் அந்த கவுரவமான மனிதர்களிடம் கேட்டும்கூட அவர்கள் திருந்தவில்லை என்பது சோகமான உண்மை!!!

கி.பி.1970 களில் தண்ணீர்,தண்ணீர் என்று  ஒரு திரைப்படம் வெளிவந்தது;அந்தத் திரைப்படத்தின் மூலமாக அடிப்படைத் தேவைகளை தராத அரசுக்கு மக்களின் கோரிக்கையை சாத்வீகமான விதத்தில் தெரிவிக்கும் வழியே சாலை மறியல் என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டனர்.(இப்போதோ அதையும் தாண்டி பஸ்ஸையும்,பஸ்ஸில் பயணிக்கும் அப்பாவிகளையும்  எரிக்குமளவுக்கு முன்னேறி விட்டனர்)


மனிதனை மனிதனாக பார்க்காமல் பிறவியிலேயே தொழிலாளியாக சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள்,  தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்க திரைப்படங்களை பிரச்சார சாதனமாக  பயன்படுத்திக்கொண்டனர்;1970 முதல் 1985 வரை தியாகராஜன்,ரஜினிகாந்த் நடித்த் திரைப்படங்கள் இதைத் தான் வெளிப்படுத்தின;ஆனால்,கம்யூனிஸ்டுகளின் இந்த முயற்சி வெற்றி பெற்றாலும்,அந்த வெற்றியை தக்கவைக்க அவர்களுக்குத் தெரியவில்லை;ஆனால்,கம்யூனிஸ சிந்தனைகள் மூலமாக பணக்காரர்கள் வர்க்கம் கொத்தடிமைத் தனத்தைக் கைவிட நேர்ந்தது;


ஆனால்,கம்யூனிஸ்டுகளிடமிருந்து பாடம் கற்றுக்கொண்ட,திராவிடத்தை தனது பெயரில் கொண்ட கட்சியானது,சாதாரண மக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சியை கொண்டுவர இந்த திரைப்படங்களைப் பயன்படுத்திக் கொண்டது என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் ஆகும்.அப்படிப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டின் பக்தி,ஒழுக்கம்,மாண்புகள்,பெரியோர்களை மதித்தல் போன்ற தமிழ்ப்பண்பாடுகளை நாத்திகம் என்ற பெயரில் சின்னாபின்னப்படுத்தினர்.இன்றும் தொலைக்காட்சித்தொடர்களின் வாயிலாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு வீடுகளுக்கும் புகுந்து அடிமுட்டாளாக்கி,இவர்கள் கோடிகளில் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர்.(இவர்கள் நினைத்தால்,தமிழ் சமுதாயத்தையே சிந்திக்கும் விதமாக மாற்றமுடியும்;ஆனால்,ஒருபோதும் அப்படி செய்ய மாட்டார்கள்)


நூறாவது நாள் திரைப்படத்தின் மூலமாக ஒரு ஆட்டோ சங்கர் உதயமானான்;  இதனால்,தமிழ்நாட்டில் குற்றவாளிகள் தடயமில்லாமல் கொலை செய்து,துப்பு துலக்க முடியாத அளவுக்கு ஆதாரங்களை அழிக்க சினிமா சொல்லிக் கொடுக்கத் துவங்கியது;13 நம்பர் வீடு பேய்களைப்பற்றிய பயத்தை மாநிலமயமாக்கியது; பேய்களைப் பற்றிய பல மூடநம்பிக்கைகளை தமிழ்நாடெங்கும் பரப்பியது;


உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தின் மூலமாக ஏராளமான சமூக சேவகர்கள் உண்டாயினர்;ரஜினி,கமல்,சத்தியராஜ் நடித்த இருவேடங்கள் உள்ளடக்கிய திரைப்படங்கள் நிஜமான ரவுடிகளின் மத்தியில் ஈகை குணத்தைப்பரப்பியது; இன்று வரையிலும் ரவுடித்தனம் செய்து வரும் பல ரவுடிகள் தாம் சம்பாதிப்பதில் ஒருபகுதியை அன்னதானம்,படிப்புச் செலவு,கோவில் நிர்வாகச் செலவுக்கு செலவழிக்கத் துவங்கினர்.


1990 களில் இந்தியாவுக்கு வந்த தகவல் தொழில்நுட்ப அலை, தமிழ்நாட்டிலும் பரவத் துவங்கியது;1980களின் இறுதியில் கலர் டிவிக்கள் தமிழ்நாட்டில் பரவத் துவங்கின; வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு இந்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூதர்ஷன் ஒலியும்,ஒளியும் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.இந்த ஒரே ஒரு நிகழ்ச்சிக்காக டிவியின் முன்பாக தமிழ்நாடே அணிவகுக்கத் துவங்கியது;அந்த ஒரு மணி நேரத்துக்கு புதிதாக வர இருக்கும்,வெளிவந்திருக்கும் திரைப்படங்களின் பாடல்காட்சிகளை பார்க்க தமிழ்நாடே ஸ்தம்பித்தது;கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பும் அறிமுகமாகத் துவங்கியதும் இந்தக் கால கட்டத்தில் தான்;இந்த இரண்டும் ஒளிபரப்பாகும்போது திரையரங்குகளே முடங்கத் துவங்கின;அந்த அளவுக்கு சினிமா மோகம் இருப்பதை ஒருசிலர் அப்போதே கணிக்கத் துவங்கி,அதை வைத்து காசு பார்க்க நினைத்தனர்;


இதே காலகட்டத்தில்(1980 முதல் 1990 வரை)மதுரையிலிருந்து திரைப்பட இயக்குநராகவும்,கதாநாயகனாவும் ஆன ஒருவர் கிராமத்துக் கலைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்,தமிழ்நாட்டின் கிராமியப்பண்பாட்டை வெளியுலகிற்கு மட்டுமல்ல;இன்றைய நவீன கால இளைஞர்களுக்கும் புரியவைத்தது;அற்புதமான இசையும்,கிராமியக் கலையும் இணைந்து மக்களின் மனதில் குலதெய்வ வழிபாட்டையும்,கிராமக் கலைகள் மீது மரியாதையையும் புதுப்பிக்க உதவின என்பது சர்வேயால் கண்டறிய முடியாத உண்மைகள்!!!

தளபதியை பட்டமாகக் கொண்டவர் தனது அப்பாவாலேயே கதாநாயகனாக்கப்பட்டு,பல திரைப்படங்கள் வெளிவரத் துவங்கின;இந்த திரைப்படங்களின் கதைக்கரு எப்படியெல்லாம் காதலிப்பது? பெண்கள் எப்படியெல்லாம் கவர்ச்சியாக ஆடை அணிவது?உடலை மறைக்க ஆடை என்பது போய்,காமவெறியைத் தூண்டும் விதமாக ஆடை உடுத்தும்  காட்சியமைப்புகள் வெளிவர,செம கல்லா கட்டத்துவங்கினர் அப்பாவும்,மகனும்!இவர்கள் இருவருமே கிறிஸ்தவர்கள்  என்பது பலரால் நம்பமுடியாத உண்மை ஆகும். தமிழ்நாட்டுப் பெண்களின் ஒழுக்கம் நாசமாகத் துவங்கியது இந்த மாதிரியான திரைப்படங்களால் தான்!காதலின் இறுதியே காமம் என்பது போய் காதலே காமம் என்ற எண்ணத்தை தமிழ்நாடு முழுக்கவும் தனது திரைப்படங்களால் பரப்பியது இந்த புண்ணியவான்கள் தான்!தமிழ்ப்பண்பாட்டின் ஆதாரமான பெண்களின் ஒழுக்கத்தை சிதைக்கத் துவங்கினர்.

பேருந்துக்குள் பணிபுரிந்து,நடிகரானவர் தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக பல புத்திமதிகளை தனது திரைப்படங்களில் புகட்டிக்கொண்டே வந்திருக்கிறார்;ஒரு படத்தில் ருத்ராட்சத்தைக் கொண்டு திருப்புமுனைக் காட்சியாக வைத்து  தமிழ் திரையுலகத்தில் ஒரு  ஆன்மீகத் தூண்டலை உருவாக்கினார்;தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ரவுடியாக மாறுவதைப்போல சில படங்களில் நடிக்கக்  கூட செய்தார்.இதன்மூலமாக குடும்பம் என்ற அமைப்பை பாதுகாக்க ரவுடியாக மாறுவது தப்பில்லை என்ற எண்ணைத்தை தமிழ்நாட்டு ரசிகர்களிடம் விதைத்தார்;சாதுக்கள்,துறவிகளைப் பற்றி காட்சிகளை அமைத்ததன் விளைவாக,இன்று அவருடைய பல லட்சம் ரசிகர்கள் ருத்ராட்சம் அணியத் துவங்கிவிட்டனர்;யோகா,தியானம்,குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே துறவு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுதல்,துறவிகளின் வழிகாட்டுதலின்படி குடும்பத்தை நிர்வகித்தல் என்று ஒரு  மகத்தான மவுனப்புரட்சியை உருவாக்கிவிட்டார்.

1995 முதல் உலக வர்த்தக அமைப்பில் இந்தியா உறுப்பினராக கையெழுத்திட்டது;இதன்படி, யார் வேண்டுமானாலும் எந்தப் பொருளை வேண்டுமானாலும்,எங்கு வேண்டுமானாலும் குறைந்த விலையில் விற்கலாம்;வாங்கலாம்;எங்கே? இந்த உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே! உலகில் இருக்கும் 220 நாடுகளில் 185 நாடுகள் இதில் கையெழுத்திட்டன;இந்த உலக வர்த்தக அமைப்பில் சீனாவைச் சேர்க்கவில்லை;இந்தியாவாகிய நாம்தான் ரெக்கமண்டு செய்து சேர்த்தோம்;உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற போர்வையில் அமெரிக்கமயமாக்கல் இந்தியாவுக்குள் ஊடுருவத் துவங்கியது;பூமாலை என்ற வீடியோ பத்திரிகை சன் டிவியாக உருவெடுத்தது;வலுவான அரசியல் பின்னணியோடும்,சிறந்த நிர்வாகத்திறமையோடும்,பெரும் செல்வச் செழிப்போடும் சன் டிவியானது தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறத்துவங்கியது.இன்று சன் டிவியின் அத்தனை கெட்டப் பழக்கங்களும் எல்லா டிவி சேனல்களால் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றப்படுகின்றன.(சன் மியூஸிக்கில் பாட்டை பாதியிலேயே நிறுத்துவது;நிகழ்ச்சிகளுக்கு நடுவே விளம்பரம் என்பது போய்,விளம்பரங்களுக்கு நடுவே நிகழ்ச்சி என்ற அளவுக்கு தரம் தாழ்ந்து கோடிகளை சம்பாதிப்பது;முறையற்ற உறவை பெருமைப்படுத்தும் விதமாக மெகா சீரியல்கள் எடுப்பது;காம மயக்கத்தைத் தூண்டும் விதமாக புதிய,புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது;பேராசையை பரப்பும் விதமாக போட்டி வைத்து அதில் டிவி ரசிகர்களை பங்கேற்க வைப்பது;நகைக்கடைக்காரர்களிடம் மிரட்டி விளம்பரங்கள் வாங்குவது;)

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 1990கள் வரையிலும் பெரும்பாலும் தாவணியும், சேலையும் கட்டிய கல்லூரி மாணவிகள்,2000 வாக்கில் சுடிதாருக்குத் தாவத் துவங்கினர்;2010க்குள் ஜீன்ஸும் டாப்ஸீம் நாகரீகத்தை வெளிப்படுத்தும் ஆடைகளாகிவிட்டன;தாவணியும்,சேலையும் காணாமல் போய்விட்டன;காணாமல் போனது தாவணியும்,சேலையும் மட்டும் தானா? நான் அவன் இல்லை என்று ஒரு திரைப்படம்  சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது;அந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பே,நான் அவன் இல்லை கதாநாயகனும்,நான் அவள் இல்லை கதாநாயகியும் ஊருக்கு ஒருவர் உருவாகிவிட்டனர்;யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாத ஒரு இழிவான சூழ்நிலையை உலகமயமாக்கலும்,அதை பிரதிபலிக்கும் திரைப்படங்களும் உருவாக்கிவிட்டன;அது மட்டுமல்ல;கருச்சிதைவு செய்பவர்களின் வயது சராசரி குறைந்து போய் இன்று டீன் ஏஜின் விளிம்பைத் தொட்டுவிட்டது;

அது மட்டுமல்ல;1995 முதல் 2005 வரையிலும் கிராமத்துப்  பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களிலும் கூட தமிழ் கதாநாயகர்கள் வேட்டி கட்டுவதற்குப் பதிலாக பேண்ட் போட ஆரம்பிக்க,இன்று வேட்டியும் காணாமல் போய்விட்டது;2001 ஆம் ஆண்டு வாக்கில் வெளிவந்த சின்னத்தம்பி,கிழக்கு வாசல் போன்ற திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம்;முன்பெல்லாம் படித்தவர்கள் தான் பேண்ட் அணிவார்கள்;தற்போதோ யார் படித்தவர்,யார் படிக்காதவர் என்பதைக் கண்டறிய முடியாத அளவுக்கு குழப்பம் உண்டாகிவிட்டது;விளைவு? கிராமப்புறத்தில் வாழ்ந்துவரும் மதிப்புமிக்கவர்கள் மட்டுமே வேட்டி கட்டுவார்கள் என்ற நம்பிக்கையை சினிமா தமிழ்நாடு முழுவதும் பரப்பி விட்டது;


அதுவும் ஒரு வருட மனைவி ஒப்பந்தத்தை ஒரு திரைப்படத்தில் கதைக்கருவாக உருவாக்கி,அந்தத் திரைப்படம் வெளிவந்தது.இதன் பின்விளைவாக,அடுத்த சில வருடங்களில் ஒரு வார மனைவி,ஒரு மாத மனைவி,ஒரு மணி நேர மனைவி மட்டுமல்ல;கணவன்களும் உருவாகத் துவங்கிவிட்டனர்;இந்த ஒப்பந்தக் கணவன்,மனைவிகள் சென்னை,கோவை,மதுரை,திருச்சி முதலான மாநகரங்களில் மட்டும் தான் என்று எண்ண வேண்டாம்; சிறு நகரங்களுக்கும் பரவத் துவங்கி,சமுதாயத்தின் ஒரு அங்கமாகிவிட்டது;


இன்று ஆண்கள் அணியும் சட்டைகள் காணாமல் போகத் துவங்கி,டீ ஷர்ட்கள் எனப்படும் ரெடிமேட் ஆடைகள் பல லட்சம் டெய்லர்களின் வாழ்க்கையில் டெய்லரிங் பகுதிநேரவேலையாகி வருகின்றன;

2005 வரையிலும் கல்லூரிக்காதலை மையமாக வைத்தே பெரும்பாலான படங்கள் வெளிவந்தன;அது வரை கல்லூரிப் பருவத்தினரே ஓடிப்போயினர்;அதன்பிறகு பனிரெண்டாம் வகுப்புக்குள் கேமிராக்கள் நுழைய(1989 வாக்கில் வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு முதல்  சமீபத்திய களவாணி வரை) கொஞ்சநஞ்ச தமிழ்ப்பண்பாடும் சிதைந்து போனது; தனது காதலனால் கர்ப்பமாகும் பள்ளிமாணவியே தனது வீட்டுக்கே தெரியாமல் கர்ப்பத்தடை செய்வதும்,கருக்கலைப்பதும் சகஜமாகத் துவங்கியிருக்கிறது.இந்த சூழ்நிலை தமிழ்நாட்டின் சிறு நகரங்களுக்கும் பரவத் துவங்கிவிட்டது என்பது அதிர்ச்சி கலந்த உண்மை ஆகும்.   ஒருவனுக்கு ஒருத்தி என்பது வரலாற்றில் மட்டுமே இருக்கும் ஒரு நிகழ்வு என்ற சூழ்நிலையாகி,ஒருவனுக்கு பலத்தி,ஒருத்திக்கு பலவன் என்ற சூழ்நிலை  உருவாகத் துவங்கியிருக்கிறது.

மேலும் டிவியில் வரும் நகைக்கடை விளம்பரங்கள் டீன் ஏஜ் பெண்களின் மனதில் பேராசையை உருவாக்கிவருவதோடு,சிந்திக்கும் திறனையும் இழந்து வருகின்றனர்.இதன்விளைவாக,நான் அவன் இல்லை என்பது மாறி,நான் அவள் இல்லை என்ற அளவுக்கு சமுதாய ஒழுக்கச் சிதைவு ஏற்பட்டுவிட்டது;

வெற்றி பெறும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்தால்,அதன் பார்முலாவினை அப்படியே பின்பற்றுவது தமிழ்த்திரையுலகத்தின் எழுதப்படாத அரிச்சுவடியாக இருந்தாலும்,இன்று இந்தித்திரையுலகிற்கும்,ஹாலிவுட் திரையுலகிற்கும் வழிகாட்டும் அளவுக்கு தமிழ்த்திரையுலகம் உயர்ந்திருக்கிறது.


கடந்த பத்தாண்டுகளில் சினிமா வில்லன்கள் கதாநாயகனைத் துரத்துவது டாடா சுமோ போன்ற ஒருசில குறிப்பிட்ட வாகனங்களில் மட்டும் தான்;இப்படிப்பட்ட காட்சியமைப்புகளை தொடர்ந்து பல திரைப்படங்களில் வைத்ததன் பின்விளைவு என்னதெரியுமா? தமிழ்நாட்டில் கார் விற்பனை செய்யும் ஏஜன்ஸிகளுக்கு குறிப்பிட்ட விதமான கார்கள் விற்பனை அதிகரிக்கத்துவங்கியது.நம்பமுடியவில்லையா?கார்களை விற்பனை செய்யும் விற்பனைப்பிரதிநிதிகளிடம் கேட்டுப்பாருங்கள்!!!

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரையிலும்,கதாநாயகிகள் கண்ணியமாக ஆடை அணிந்து வந்தனர்;உலக நாயகனுடன் ஓடும் லாரியில் பாட்டுப்பாடி நடித்த நடிகையின் உடலை காட்டத் துவங்கினர்.(இன்று இருவருமே திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்)இன்று கதாநாயகிகளே தமது முழு உடலைக் காட்டுமளவுக்கு ‘முன்னேறி’விட்டனர்.இதன் உச்சமாக,திருட்டுத்தனமாக பார்க்கும் படங்களில் நடித்த கதாநாயகிகளும் வெள்ளித்திரை கதாநாயகிகளாக விஸ்வரூபமெடுக்கத் துவங்கிவிட்டனர்.இதுவும் தமிழ்நாட்டுப் பெண்களின் ஒழுக்கமனநிலையைச் சிதைத்துவிட்டது.

தமிழ் நாட்டின் சமுதாய விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக வெளிவரும் திரைப்படங்கள் மிகக்குறைவே! அப்படி வரும் படங்களும் கடுகு சிறுத்தாலும்,அதன் காரம் அதிகம் என்கிற அளவுக்கு அதன் விளைவுகள் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை தோற்றுவிக்கிறது.கற்றது தமிழ், இந்தியன்,எந்திரன்,ஏழாம் அறிவு,போராளி,சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் சமுதாயத்தில் பலத்த தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன;ஆனால்,அப்படி உருவாகும் தாக்கத்தை சமுதாய மறுமலர்ச்சியாக வெளிப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் சூழ்நிலையும்,சமுதாய ஒழுங்கும் சீரழிந்து போய்விட்டது;ஏனெனில்,இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பிக்கத் துவங்கினால்,சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியோ அல்லது மாறுதலோ உருவாகிவிடும்.அப்படி உருவாகாமல் தடுக்குமளவுக்கு கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பாகும் மானாட,மயிலாட நிகழ்ச்சிகள்;ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் தவறாக வழிநடத்தி சீரழிப்பது என்று போதிக்கும் மெகா தொடர்கள்,இணையத்தின் பரவல்,செல்போன்களின் விலை வீழ்ச்சி,மென்பொருள் நிறுவனங்களின் கிராமப்பரவல் போன்றவை சிந்திப்பவர்களை மழுங்கடித்துவருகின்றன.

நகைச்சுவை கூட நமது மக்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கிவருகிறது;இரட்டையர்கள் செய்த நகைச்சுவையின் தாக்கத்தை விடவும்,வைகைக்கரையில் பிறந்து,பல வருடங்களாக துணை நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர்,தமிழர்களின் பலவீன சுபாவங்கள்,ஏக்கங்கள்,சமுதாய அவலங்களை தமது நகைச்சுவைக் காட்சிக்குப் பயன்படுத்தியதால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிட்டார்.ஆணியே புடுங்க வேண்டாம்;முடியல;ஆஹா நல்லாக் கெளப்புறாங்கய்யா பீதியை; (தன்னைத் தானே ஆட்காட்டிவிரலை காட்டி) உனக்கு வேணும்;அது போனமாசம்,நான் சொல்றது இந்த மாசம்; அது வேற வாய்,இது நாற வாய்;சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு? =இவைகளெல்லாம் இன்று தமிழ்நாட்டின் தினசரி வசனங்களாக மாறிவிட்டன;சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிவிட்டது.


ஐம்புலன்களையும் அடக்கத் தெரிந்தவரே யோகி,துறவி என்பது இந்துதர்மத்தில் எழுதப்படாத தகுதி ஆகும்.ஐம்புலன்களிலும் அதிகமான சக்திவாய்ந்தவை கண்களும்,காதுகளும் தான்! நாம் “பார்க்கும்” எந்த ஒரு காட்சியும் நமது கண்கள் வழியாக மூளையால் ‘பார்க்கப்பட்டு/ரசிக்கப்பட்டு/எரிச்சல்பட்டு’ வலதுபக்க மூளைப்பகுதியில் பதிவாகிறது;காதுகள் மூலமாக கேட்கும் எதையும் மனமானது,வலது பக்கமூளையில் பதிவு செய்துவிடும்;கடந்த கால அனுபவங்களோடு அதை ஒப்பிட்டுப் பார்க்கும்;பிறகே கேள்விப்பட்ட தகவல்களையும்,உண்மைத்தன்மையையும் பிரித்துப்பார்க்கும்;ஒரே நேரத்தில் நமது கண்களையும்,காதுகளையும் ஏமாற்றும் மனித கண்டுபிடிப்பே சினிமாவும்,டிவியும் ஆகும்.நமது மனோநிலையை மாற்றத்துவங்கியப்பின்னரே,மனிதர்களிடையே குற்றங்கள் நுணுக்கமாகவும்,கண்டுபிடிக்கமுடியாத விதமாகவும் பெருகிவிட்டன.அதே சமயம்,தினசரி பிராணயாமம் அல்லது தினசரி ஓம்சிவசிவஓம் அல்லது தினசரி ஓம்ஹரிஹரிஓம் ஜபித்தால் நமது கண்களையும்,காதுகளையும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

காதலும்,வீரமும் தமிழர்களின் பண்பாடாக பல நூற்றாண்டுகளாக இருந்துவந்தன.தற்போது காதலைக் காணவில்லை;ரவுடித்தனமே வீரமாக நம்பப்படுகிறது.இந்த  சூழ்நிலையை உண்டாக்கியது தமிழ்ச் சினிமாவின் வளர்ச்சியே ஆகும்.இனிவரும் காலத்தில் மட்டுமல்ல;எப்போதுமே சமுதாய அக்கறையோடு பெரும்பாலான திரைப்படங்கள் இயக்கப்படுவது அபூர்வமே!

எனவே,திரைப்படங்களையும்,அதில் வரும் காட்சிகளையும் முடிந்தவரையிலும் பின்பற்றாமலிருப்பதே நமக்கு நல்லது.தேசபக்தி,தெய்வபக்தியைத் தூண்டும் விதமாக திரைப்படங்கள் நிறைய வெளிவருவது நல்லது.மனோதத்துவரீதியாக சாதிக்க வைக்கும் டெக்னிக்குகளை காட்சியமைத்து யதார்த்தமான வாழ்க்கையை வெளிப்படுத்தும் விதமாக திரைப்படங்களை வெளியிட்டால் நல்லது.செய்வார்களா நமது திரையுலக பிரம்மாக்கள்? இப்படி ஒரு பத்தாண்டுகள் வரை செய்துவிட்டாலே தமிழ்நாட்டில் ஒரு சிறிய அளவிலான ஆன்மீகப்புரட்சியை உருவாக்கிவிடமுடியும்.


ஓம்சிவசிவஓம்

மனமிருந்தால் பாலைவனமும் பழத்தோட்டமாகும்!!!
மஸ்கட்டில் பல வருடங்களாக பணிபுரிந்துவந்த பட்டுக் சிங் ஜடேஜா தனது சொந்த ஊரான மோட்டாமாவ்தான் என்ற கிராமத்துக்குத் திரும்பினார்.அப்படி திரும்பியபோது அவருக்கு வயது 51.திரும்பிய வருடம் 1990.மோட்டாமாவ்தான் குஜராத் மாநிலத்தில் புஜ் அருகில் இருக்கிறது.இது ஒரு வறண்ட களர்பூமியாகும்.இங்கே இவர் 50 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.இந்த நிலத்தை விளைநிலமாக மாற்றிட இவருக்கு மூன்றாண்டுகள் ஆயின.அந்த பகுதியிலேயே விளையாத கேஸர் என்ற ரகத்து மாம்பழக்கன்றுகள் நூறு வாங்கி பயிரிட்டார்.நல்ல விளைச்சல் உண்டானது;எனவே,மேலும் நிலம் வாங்கினார்.தற்போது 240 ஏக்கரில் அவரது கேஸர் மாம்பழத்தோட்டங்கள் பழுத்து,வெளிநாடுகளுக்குப் பறக்கின்றன.
இவர் தமது நிலத்தை விளைநிலமாக மாற்றிட ஒரு கிராம் கூட ரசாயன உரத்தைப் பயன்படுத்தவில்லை;ஆர்கானிக் ஃபார்மிங் எனப்படும் இயற்கை முறையிலான விவசாய வழிமுறையைப்பின்பற்றினார்.இன்று இவர் ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் டன் கேஸர் மாம்பழங்களை விளைவிக்கிறார்;இதில் பத்து சதவீதம் ஏற்றுமதியாகிறது;2001 ஆம் ஆண்டில் கட்ச் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது;அதன்பிறகு,செயற்கைக்கோள் உதவியுடன் தமது நிலத்தில் எந்தப் பகுதியில் நிலத்தடிநீர் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.இதன் மூலமாக தோட்டப்பயிர் சாகுபடியை இவரால் பலமடங்கு அதிகரிக்கமுடிந்தது;


நன்றி:இந்தியா டுடே 5.7.12

டி.கல்லுப்பட்டியில் அருள்புரியும் யோக பைரவர்!!!


மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் துணை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஊர் டி.கல்லுப்பட்டி ஆகும்.இங்கிருந்து பேரையூர் செல்லும் வழியில் இரண்டு கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது தேவன்குறிச்சி ஆகும்.இங்கே மலையடிவாரத்தை ஒட்டி அமைந்திருக்கும் சிவாலயம் அக்னீஸ்வரர் ஆலயம் ஆகும்.மேற்கு நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்கள் பரிகாரக் கோவில்கள் ஆகும்.இங்கே செய்யப்படும் சிறு பரிகாரமும் உடனடியாக நற்பலன்களைத் தரும்.


இந்த கோவிலை ஒட்டி ஒரு குகை இருக்கிறது.இந்தக் குகை மண்மூடி இருக்கிறது.இந்த குகைக்குள்ளாக ஒரு சித்தர் இன்றும் தவம் செய்து வருகிறார்.தகுதியுள்ளவர்களுக்கு காட்சியளித்து வருகிறார்;கீழே இருப்பது அந்தக் குகையிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் யோக பைரவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் அபிஷேகமும்,ஆராதனைகளும் நடைபெற்றுவருகின்றன.இந்த யோக பைரவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செவ்வரளிமாலை,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளோடு வந்து அபிஷேகத்தில் கலந்து கொண்டு நேராக அவரவர் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 16 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது 16 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்துவர நமது தீராத பிரச்னைகள்,வழக்குகள்,சொத்துத் தகராறுகள் தீர்ந்துவிடும்.ஆனால்,ஒரே ஒரு நிபந்தனை இவரை வழிபட ஆரம்பித்தப்பின்னர்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்;மது,(மனைவியைத் தவிர) மற்ற மாதுவைத் தொடாமல் இருந்தால் விரைவான பலன்கள் கிடைக்கும்;பைரவரது தரிசனமும் கிட்டும்.இவர் அவ்வ்வளவு சக்தி வாய்ந்தவர் ஆவார்.மேலே இருக்கும் போட்டோவில் அவர் தான் இருக்கிறார்.


ஓம்சிவசிவஓம்

மஹாளயபட்சத்தினுள் ஒளிந்திருக்கும் இந்துதர்ம(ஜோதிட)விஞ்ஞான ரகசியம்:அவசியமான மறுபதிவு

பல ஆண்டுகளாக எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டது.இறந்த நமது தாத்தாக்கள்,பாட்டிகள்,முப்பாட்டன்கள்,முப்பாட்டிகள்,பூட்டன்கள்(தாத்தாவின் தாத்தா),பூட்டிகள்(பாட்டியின் பாட்டி) என முன்னோர்களுக்கு திதி கொடுக்க புரட்டாசி மாத அமாவாசையை ஏன் நமது ஆன்மீகப் பெரியவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்? ஆவணி மாத அமாவாசையைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே?ஏனெனில்,ஆவணி மாதத்தில் ஆத்மாக்காரனாகிய சூரியன் ஆட்சியாக இயங்குகிறார்.இதற்கான விடை நேற்றுதான் எனக்கே தெரிந்தது.அப்படித் தெரிந்த உடனே,எனது ஆன்மீகக்கடல் வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்தே ஆக வேண்டும் என்று துடித்தேன்.விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழ்நாட்டுப் பிரிவுகளில் ஒன்று கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை! இந்த அமைப்பிலிருந்து ஒரு மாத இதழ் வெளிவருகிறது.அந்த மாத இதழின் பெயரே பூஜாரி முரசு.இதன் செப்டம்பர் 2011 ஆம் வெளியீட்டில் 4,5ஆம் பக்கங்களில் விரிவான விளக்கம் வந்திருக்கிறது.(இந்து இயக்கங்களை பத்திரிகைகள் பிற்போக்கானவர்கள் என எழுதித் தள்ளிவருகின்றன.ஆனால்,இந்து இயக்கங்கள் இந்து தர்மம் ஒரு விஞ்ஞான பூர்வமானது என்பதை ஆராய்வதோடு,ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுவருகிறது)நாம் மெக்காலே கல்விமுறைப்படி படித்தவர்கள்.எந்த ஒரு இந்துதர்ம நடைமுறையையும்,நமது பகுத்தறிவுக்கு உட்பட்டு அது நிஜம் என நம்பினால் மட்டுமே அதைப் பின்பற்றுவோம்;ஆனால்,ஜீன்ஸ் அணிவது,சிறிதும் சத்து இல்லாத கார்ன் பிளக்ஸ் மெல்லுவது,ஈ மொய்த்தாலும் கெண்டகி சிக்கன் சாப்பிடுவது,குடித்த உடனே தாகம் எடுக்கும் கோக்,பெப்ஸியைப் பற்றி நமது பகுத்தறிவு சந்தேகப்படாது!?! இல்லையா?சரி,விஷயத்துக்கு வருவோம்.புரட்டாசி மாதம் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வதற்குப் பெயர் போனது.மஹாளய அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை காலத்தைப் பித்ரு பட்சம் என்று அழைக்கிறார்கள்.அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லும் புராணக்கதைகள்,தர்ம சாஸ்திர நீதி நூல்கள் பல இருக்கின்றன.வானவியல் ரீதியில் அதன் விஞ்ஞான ரகசியத்தை இங்கு பார்ப்போம்.புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னிராசியில் சஞ்சாரிக்கிறார்.கன்னி ராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.நம்மையும் சேர்த்து,சூரிய மண்டலம்,நமது பக்கத்தில் இருக்கும் சில நட்சத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது.அந்த மையத்தைப் போல பல சிறு(அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள்;ஒரு ஒளி ஆண்டு என்பது ஒன்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தைக் கொண்டது.புரியாதவர்கள் இயற்பியல் பட்டதாரிகளிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளவும்) மையங்கள் ஒருங்கிணைந்து கன்னிராசியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன.இந்த சுழற்சி வரையிலும் நமது வானவியல் விஞ்ஞானிகள் பல கோடி பெறுமானமுள்ள டெலஸ்கோப்கள் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.பொதுவாகவே மையம் என்பது ஒரு ஆதாரமாக செயல்படுகிறது.பூமிக்கு மையம் சூரியன்! அதுவே பூமிக்கு ஆதாரம்!! எப்படியெனில் பூமி முதலான கிரகங்கள் சூரியனிடமிருந்தே உருவாகின.அந்த சூரியன் தரும் சக்தியால்தான் பூமியில் உயிர்கள் நிலைபெற்று இருக்கின்றன.இந்தக் கருத்து படிப்படியாக ஒவ்வொரு மையத்துக்கும் பொருந்தும்.அப்படிப் பார்க்கும்போது கன்னிராசி என்னும் மண்டலமே நமக்கு ஆதாரமாகிறது.எப்படி பூமியானது சூரியனிலிருந்து உண்டாகி,சூரியனால் வாழ்விக்கப்படுகிறதோ,அப்படியே நாமிருக்கும் மண்டலம் கன்னிராசியிலிருந்து உண்டாகி,அதனால் வாழ்விக்கப்படுகிறது என்று சொல்வது பொருந்தும்.ஒரு மையத்திலிருந்து உண்டானது,பிரளயகாலத்தின்போது படிப்படியாக அந்த மையத்துக்குள் ஒடுங்கும்.நாமிருக்கும் பூமி சூரியனில் ஒடுங்கும்;சூரிய மண்டலம் அதற்கடுத்த மையத்தில் ஒடுங்கும்;அந்த மையம் கன்னிராசியில் ஒடுங்கும்;மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால்,உடலை விட்டு பிரிந்த உயிர்,இந்த கன்னிராசி இருக்கும் மண்டலத்தில் ஒடுங்குகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.எனவேதான் , கன்னிராசி இருக்கும் மண்டலத்தைப் பித்ருயானம்(பித்ருக்களின் வழி)என்பார்கள்.இந்த கன்னிராசி தென் திசையில் இருக்கிறது.இங்கு ஒரு கேள்வி எழலாம்? பூமியில் தான் தெற்கு வடக்கு என்று திசைகள் இருக்கின்றன.பூமிக்கு வெளியே சென்றுவிட்டால்,ஏது திசை?முடிவே இல்லாத பிரம்ம்ம்ம்மாண்டமான பிரபஞ்சத்திற்கு ஏது திசை?இதைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது.துருவ நட்சத்திரம் தெரியும் வட துருவப் பகுதி வடக்கு ஆகும்.அதற்கு நேர் எதிராக இருக்கும் துருவப் பகுதி தெற்கு ஆகும்.இந்த இரண்டு துருவங்களையும் இணைக்கும் ஒரு கற்பனைக்கோடு பூமியின் அச்சு எனப்படும்.பூமிக்கு வெளியில் இருந்து பார்த்தாலும் இந்த அச்சை அடையாளம் கண்டு,எது வடக்கு, எது தெற்கு என்று சொல்ல முடியும்.இங்குதான் ஒரு அதிசய ஒற்றுமை இருக்கிறது.கன்னிராசியானது ,பூமியின் தென் துருவத்துக்குக் கீழ் தென்படுகிறது.அதாவது அந்த ராசி தெற்குத் திசையில் இருக்கிறது.அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்னும் வழக்கம் உண்டானதற்கு இதுவே காரணம் என்று தெரிகிறது.நாம் உண்டான மையம் தெற்கு திசையில்,கன்னிராசியில் இருக்கவே,இறந்தப் பிறகு அந்தத் திசையில் உள்ள மண்டலத்தில் நமது பித்ருக்கள் வாழ்கிறார்கள்.எனவே,அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்கிறோம்.அந்தத் திசையில் சூரியன் சஞ்சாரிக்கும்போது விசேஷமாகவே பித்ரு காரியம் செய்கிறோம்.இதை அடுத்து ஒரு கேள்வி எழலாம்.இறந்தவர்களது திதியன்று சிரார்த்தம் செய்கிறோம்.அது அந்த ஒரு திதியில் மட்டுமே செய்யப்படுகிறது.அப்படி இருக்க இந்த பித்ரு பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட தேய்பிறை காலம் முழுவதும் செய்யப்படுவது ஏன்? இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்,நாம் பித்ருக்களின் காலக்கணக்கைப் பார்க்க வேண்டும்.சூரியனது சுழற்சியை வைத்து சூரிய வருடம் என்று இருப்பது போல,சந்திரனது சுழற்சியை வைத்து சந்திரவருடம்(சந்திரமானம்) என்பது உண்டு.அதேபோல்,பித்ருக்களின் பித்ருவருடம் என்று இருக்கிறது.இது சந்திரனை வைத்து உருவாகும் திதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.அதன் விளக்கம்:ஒரு பட்சம் = 15 நாட்கள்(வளர்பிறை அல்லது தேய்பிறை)

2 பட்சம் = ஒரு பித்ரு நாள்(நமக்கு ஒரு சந்திர மாதம்)30 பித்ரு நாள்(60 பட்சம்)=ஒரு பித்ரு மாதம்12 பித்ரு மாதம்(720 பட்சம்)=ஒரு பித்ரு வருடம்===இதை திதியாக மாற்றினால்,

ஒரு பித்ரு வருடம் =(720 பட்சம்,15 திதி)=10,800 திதிஒரு சந்திர வருடத்தில் 360 திதிகள் இருக்கவே,10,800 திதி/360 திதி =30 வருடம்அதாவது நம்முடைய சந்திர வருடக்கணக்கில் 30 வருடம் என்பது பித்ருக்களின் ஒரு வருடம் என்பதாகும்.ஒருவன் 30 வருடங்களுக்கு தனது பித்ருக்களாகிய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால்,பித்ருக்களின் வாழ்நாளில் ஒரு வருடத்துக்கு மட்டுமே அந்த சிரார்த்தம் கிடைத்தது என்று ஆகும்.அவ்வளவு காலமாக ஒருவர் சிரார்த்தம் செய்வது மிக மிக மிக அபூர்வம்.அதனால்,பித்ரு உலகமான கன்னிராசி இருக்கும் மண்டலத்துடன் சூரியன் இணையும் புரட்டாசி மாதத்தில் ஒரு முழு பட்சத்தையும்(15 நாட்கள்) பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர் நமது முன்னோர்கள்.தேய்பிறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால்,அதுதான் பித்ருக்களின் பகல்காலம் ஆகும்.அவர்கள் விழித்திருக்கும் அந்தக் காலகட்டத்தில் புரட்டாசி மாத பித்ரு பட்சத்தில் அவர்கள் உலகை நோக்கி நாம் அவர்களை வழிபடுகிறோம்.இந்த பட்சத்தில் நாம் செய்யும் வழிபாடு,சிரார்த்தம் செய்யப்படாத அனைத்து பித்ருக்களையும் சென்றடைகிறது.இவ்வாறு அனைத்து ஜீவன்களையும் அரவணைக்கும் விதமாக நம் இந்து முன்னோர்களால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.அது மட்டுமல்ல,ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் விஞ்ஞானத்தையும்,மெய்ஞானத்தையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் மக்கள் சமுதாயத்துக்கு உயர்ந்த பலன்களையும் தரும் விதம்,நமது ஹிந்து தர்மத்துக்கு மட்டுமே உண்டு.இதனால்தான் நமது மிஸ்டிக் செல்வம் ஐயா,ஒருவன் புரட்டாசி அமாவாசையன்று(15.10.2012 திங்கள்) அன்னதானம் செய்தால்,12 ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியத்தை அடைகிறான் என தெரிவித்துள்ளார்.

பின்குறிப்பு:படத்தில் இருப்பது கன்னி ராசி மண்டலம்.உற்றுப்பாருங்கள் நமது முன்னோர்கள் தெரிகிறார்களா?

நால்வர் வழி யாத்ரா திருகூட்டம் தினசரி மாலை 7 மணி முதல் 7.05சிவமயம்திரு ஆருரா! தியாகேசா ! 

நால்வர் வழி யாத்ரா திருகூட்டம் தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வழிபாட்டு முறை 

உலகத்தில் உள்ள சிவனடியார்களும் , திருஆரூர் பெருமானின் திருஅருள் துணை கொண்டு தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வடதிசை நோக்கி அவரவர் விண்ணப்பங்கள் , வேண்டுதல்களை இந்த குறிபிட்ட நேரத்தில் வைத்து கூட்டு வழிபாடு பிரார்த்தனைகளை கடைபிடிக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

இந்த வழிபாடு நேரத்தில் சொல்லவேண்டிய பதிகங்களும் , முறைகளும்

1 எந்த இடத்திலும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வட திசை நோக்கி பிரார்த்தனை செய்யலாம் .( கைலாயம் வட திசையில் இருப்பதினால் )

2 முதலில் அவரவர் விண்ணப்பங்களை பெருமானை நினைத்து வைக்க வேண்டும்

3 நால்வர் துதி சொல்லி வழிபாட்டினை தொடங்க வேண்டும் .

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி 
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி,,,,, 

4 சிவாய நம முடிந்தவரை சொல்ல வேண்டும்.

5 வான்முகில் வழாது பெய்க என தொடங்கும் வாழ்த்து சொல்லி முடிக்க வேண்டும்.

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம் 


திருஆருரா வீதிவிடங்கா

நாமும் நாடும் வளம் பெற தினசரி 7 மணி அளவில் ஒரு ஐந்து நிமிடம் ஆரூர் பெருமான் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அருள் புரிய பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலும் தொடர்புக்கு :

சிவத்திரு . மாரிமுத்து ஐயா
திருஆரூர் 
            9842545536