RightClick

தமிழ்ப்பண்பாட்டைச் சிதைக்கும் மெகா தொடர்கள்


கேள்வி:டி.வி.மெகாத் தொடர்களால் எதையாவது சாதிக்க முடியுமா?
பதில்:அமெரிக்க டிவி சேனல் ஒன்றில் ‘தி ரூட்ஸ்’ என்ற மெகா தொடர் வந்தது. அதை எழுதியவர் பெயர் அலெக்ஸ் ஹெய்லி.அது நாவலாகவும் அதே பெயரில் வெளிவந்தது.(இந்த நாவல் மொழிமாற்றம் செய்யப்பட்டு,தமிழில் ஏழு தலைமுறைகள் என்ற பெயரில் வெளி வந்துள்ளது)
அமெரிக்காவில் வாழும் கறுப்பர்களின் ரிஷிமூலம் பற்றியும்,அமெரிக்காவின் வளத்துக்காக அவர்கள் அடிமைகளாகப்பட்ட வேதனைகள்,அவமானங்கள்,வெள்ளை எஜமானர்களின் குரூர முகங்கள் ஆகியவை அதன் மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டன.

அந்தத் தொடர் டி.வி.யில் ஒளிபரப்பான காலகட்டத்தில்,அந்த நாட்டு விமான நேரங்கள் மாற்றி அமைக்கப்படும் அளவுக்கு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தின.தெருக்கள் வெறிச்சோடின.தொடர் முடிந்த ஒரு சில தினங்களில் தன்னிச்சையாகக் கூடிய 1,50,000க்கும் மேலான வெள்ளையர்கள் ஒரு சதுக்கத்தில் மண்டியிட்டு தங்களது முன்னோர்கள் கறுப்பர்களுக்கு  இழைத்த கொடுமைகளுக்காகக் கண்ணீர் விட்டு பிராயச்சித்தம் தேடினர்.இந்த மாதிரியான ஒரு விளைவை நம் மெகா தொடர்களால் சாதிக்க முடியுமா?
ஆதாரம்:ஆனந்தவிகடன்,நானே கேள்வி,நானே பதில் பகுதி,பக்கங்கள் 22,23;வெளியீடு 8.8.12
ஆன்மீகக்கடலின் முதல் கருத்து:தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய டி.விக்கள் நம்மை பொறாமைப்பிடித்தவர்களாகவும்,அடுத்தவரின் வாழ்க்கையை எப்படிக் கெடுப்பது என்பதையும் மெகாத் தொடர்கள் மூலமாகச் சொல்லிக்கொடுக்கின்றன.தமிழனத்தை காப்பாற்ற வந்த கட்சியின் டிவியாக இருக்குமாம்;ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்பண்பாட்டைச் சிதைக்கும் விதமாக மெகாத் தொடர் எடுத்து ஒளிபரப்புவார்களாம்;நாமும் அறிவில்லாமல் அதை மாதா மாதம் பணம் கட்டி பார்ப்போமாம்;எப்படி?
மானாட மயிலாட என்றெல்லாம் நிகழ்ச்சி ஒளிபரப்பி, தமிழ்நாட்டில் வாழும் அத்தனை பேர்களின் மனத்திலும் காம வெறியைத் தூண்டுவார்களாம்;நாமும் அதையே லயித்துப் பார்ப்போமாம்;யாராவது பணம் கட்டிவிட்டு தனது ஒழுக்கத்தைக் கெடுப்பார்களா? தமிழர்களாகிய நாம் கெடுப்போம்.
கடந்த 30 வருடங்களில் திரைப்படங்களும்,மஞ்சள் பத்திரிக்கைகளும் தமிழ்நாட்டு  பண்பாட்டைக் கெடுத்ததை விடவும்,தமிழ் டி.வி.சேனல்கள் 10 வருடத்தில் நாசமாக்கியது அதிகம்! இது தொடர்பாக சர்வே எடுத்தால் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
ஆன்மீகக்கடலின் இரண்டாம் கருத்து:கி.பி.1700 முதல் இன்று கி.பி.2012 வரை கிறிஸ்தவ ஆங்கிலேயன் இந்தியாவையும்,இந்து தர்மத்தையும் கெடுத்ததற்கு மேற்கு உலகமே மன்னிப்புக் கேட்டு மன்றாட வேண்டும்.அவ்வளவு அழிவு வேலைகளை கடந்த 300 ஆண்டுகளாகச் செய்திருக்கிறான்.அதைப் பற்றி முழுமையாக உணரக்கூடிய சிந்தனா சக்தியை ஒட்டு மொத்த இந்தியர்களும்,இந்துக்களும் பெற்றிருக்கவில்லை;
முதலில் நமது விவசாயத்தின் முதுகெலும்பை ஒடித்தான்;அடுத்தபடியாக நமது நெசவு மற்றும் கைத்தொழில்களை நாசமாக்கினான்;பிறகு நமது பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறைகளை நம்மிடமிருந்து  பிரித்தான்;பிறகு நம்மை ஆங்கில மோகத்துக்கும்,ஆங்கில நாகரீகத்துக்கும் அடிமையாக்கினான்.இறுதியாக இந்த நாட்டையே கிறிஸ்தவ நாடாக்கிடப்போராடுகிறான்.
எப்படியெல்லாம் நம்மை நமது இந்து தர்மத்தினை அழித்தான் என்பதை உணர  ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் அல்லது ஒரு வாரத்துக்கு 2 மணி நேரம் அல்லது ஒரு மாதத்திற்கு 3 மணி நேரம் வீதம் ஓராண்டு வரை ஒரு குறிப்பிட்ட தேசபக்தியை ஊட்டும் இயக்கத்தின் பயிற்சியை நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.நாம் எங்கே அம்மாதிரியான வெட்டி வேலையெல்லாம் செய்யப்போகிறோம்?

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ