RightClick

கணவன் மனைவி பிரச்னையை தீர்த்து வைத்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு!!!


அந்த அண்ணனை எனக்கு சுமார் 15 ஆண்டுகளாகத் தெரியும்.அவரது திருமணத்துக்கு முன்பிருந்தே நல்ல அறிமுகம்.எப்போதும் சிரித்த முகம் தான் அவரை நினைத்ததும் மனதில் தோன்றும்;ஆனால்,எப்போது எதற்காக கோபப்படுவார் என்பதை யாராலும் யூகிக்க முடியாது;அவரோடு நெருங்கிப் பழகி சுமார் 5 வருடங்களில் அவரது மனோபாவத்தை முழுமையாக புரிந்து கொண்டேன்.தற்போது அவருக்கு இரண்டு மகள்கள்;ஒரு மகள் பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருக்கிறாள்;இன்னொரு மகள் பத்தாம் வகுப்பை நெருங்கிக்கொண்டிருக்கிறாள்.அண்ணியோ அரசு ஊழியர்.

இந்த நிலையில் எம்மிடம் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை தட்சிணை கொடுத்து வாங்கினார்;பிரேம் போட்டதும்,என்னை வீட்டுக்கு அழைத்தார்;அவரது வீட்டுக்குள் உரிமையோடு செல்லும் ஒருசிலரில் நானும் ஒருவன்;அவரது வீட்டுக்குள் சென்றால்,நாம் இருப்பது இந்தியாதானா? என்ற அளவுக்கு பிரம்மாண்டமும்,செல்வச் செழிப்பும் நம்மை மிரளச் செய்யும்;ஆனால்,பழகுவதற்கு மிகவும் எளியவர்;அதே சமயம் அவ்வளவு எளிதில் அவரை நெருங்கிவிட முடியாது;ஆரம்ப கட்டத்தில் அறிமுகமாகும் எவரிடமும் திமிராகத் தான் பேசுவார்;இது அவரது ஆளுமைத்திறனில் இருக்கும் பாதுகாப்புக் கேடயம் ஆகும்.ஏமாற்றுபவர்களிடம் பிராடு மாதிரியே பேசுவார்;ஆன்மீக வாதிகளிடம் உண்மைத்தன்மை இருப்பதை உறுதி செய்துவிட்டால்,அளவற்ற பணிவு அவரிடம் தலைதூக்கும்;அவரை சரியாக யாராலும் புரிந்து கொள்ளமுடியாது.
இந்நிலையில் பிரேம் செய்யப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வைத்துக்கொண்டு அண்ணி,மகள்கள் முன்னிலையில் ஒருமுறை சொர்ண பைரவர் வழிபாட்டை செய்து காட்டச்  சொன்னார்.நானும் அதே போல பைரவர் வழிபாடு செய்து காட்டினேன்;முடிவில் அண்ணியும் இருமகள்களும் நிறைய அதே சமயம் நுணுக்கமான சந்தேகங்கள் கேட்டனர்.அதற்கு விளக்கங்களை விரிவாக தெரிவித்தேன்.மூத்த மகள் அதை அப்படியே குறித்துக் கொண்டார்.
தினமும் குடும்பமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை பின்பற்றி வந்தது;14 மாதங்கள் கடந்தன;ஒரு வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு சில நிமிடங்கள் இருக்கும்;பிரதான சாலையில் இருந்து நான்கு தெருக்கள் கடந்து உள்ளே சென்றால்,ஒரு சந்து வரும்;அந்த சந்தில் இருக்கும் மூன்று வீடுகளில் நடு வீடு அவர்களுடையது;பிரதான சாலையில் இருந்து தெருவுக்குள் அந்த அண்ணனின் குடும்பம் நுழைந்தது;வழக்கத்துக்கு மாறாக அனைவருமே நடந்து வந்தார்கள்;திடீரென அந்த மாவட்டத்திலேயே இல்லாத ஒரு வெள்ளை நிற பைரவர்(நாய்தான்!) இவர்களின் கண்களுக்குத் தெரிந்தார்;இவர்களுக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்தார்;இவர்கள் தமது தெருவுக்குள் நுழைந்ததும்,வேகமாக இவர்களின் முன்பாக ஓடிய அந்த பைரவர் இவர்களின் வீடு  இருக்கும் சந்துக்குள் ஓடியது;இதை கவனித்த அந்த அண்ணனின் குடும்பமும் வேகமாக தமது வீடு இருக்கும் சந்துக்கு வந்தனர்;இவர்கள் சந்துக்குள் நுழைவதற்கும்,இவர்கள் முதல் நாள் இரவு வைத்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் படையலை அந்த வெள்ளை நிற பைரவர் சாப்பிட்டு முடிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது;இவர்கள் தமது வீட்டுக்குள் நுழைந்ததும்,அந்த சந்திலிருந்தே திடீரென மாயமாக மறைந்து போனது;

இந்த சம்பவம் நிகழ்ந்த 19 வது நாளில் அண்ணனுக்கு வர வேண்டிய கடன்கள் ஒவ்வொன்றாக வரத்துவங்கின;அதுவும் எப்படி? சுமார் 2 ஆண்டுகளாக அசலும்,வட்டியும் தராத ஒருவர் மொத்தமாக கடனை ஒரே தவணையில் அடைத்துவிட்டார்;எதற்கெடுத்தாலும் கோபப்படும் அண்ணனின் சுபாவம் மாறியிருப்பதை கூர்ந்து கவனித்த அண்ணி,தனது அலுவலகத்தில் பெருமையாகச் சொல்லி வைக்க,அது எப்படியோ சுற்றிக்கொண்டு எம்மைத் தேடி வந்துவிட்டது.முன்பெல்லாம் ஒரு மாதத்தில் ஒரு வாரமாவது தனது குழந்தைகளோடு அண்ணி தனது அம்மாவீட்டுக்கு போய்விடுவார்;கன்னா பின்னாவென்று திட்டித் தீர்க்கும் அண்ணன் வெறும் 3 மணி நேரத்தில் தனது மாமியார் வீட்டில் தவம் கிடந்து,தனது மனைவியை அழைத்துச் செல்ல வருவார்;ஒரு கட்டத்தில் இவர்களின் சண்டையை இவரது மாமியார் வேடிக்கை மட்டுமே பார்க்குமளவுக்கு சாதாரணமாகிவிட்டது;ஆனால்,அண்ணிக்கு அண்ணனின் கோபத்தின் மீது ஒரு பெரும் பயம் இருந்திருக்கிறது.அதனாலேயே சமைக்கும்போதும்,அலுவலகத்தில் பணிபுரியும் போதும் கவனக்குறைவால் பல்வேறு புதிய சிக்கல்கள் உண்டாகியிருக்கின்றன;

அவர்களின் அனுமதியோடு இந்தப்பதிவினை வெளியிடுகிறேன்.
ஓம்சிவசிவஓம்