RightClick

உலகமயமாகிக்கொண்டிருக்கும் இந்து தர்மம்!!!நாம் வாழ்ந்துவரும் உலகத்தை ஒரு வீடாகச் சுருக்கினால்,அந்த வீட்டின் பூஜையறையாக நமது பாரத நாடு இருக்கும்;அதில் இருக்கும் வழிபாட்டுமுறையாக நமது இந்து தர்மமே இருக்கும்.இதை நாம் உணர்ந்திருக்கிறோமோ இல்லையோ கத்தோலிக்க கிறிஸ்தவத் தலைமையான வாடிகனும்,கத்தோலிக்க கிறிஸ்தவ வல்லரசு நாடான அமெரிக்காவும்,நம்மை 300 ஆண்டுகளாகச் சுரண்டிய கிறிஸ்தவ இங்கிலாந்தும் முழுமையாகவே உணர்ந்திருக்கின்றன.நாம் தான் இன்னும் நமது இந்து தர்மத்தின் பெருமைகளை உணரவில்லை;அப்படி உணரவே ஆன்மீகக்கடல் நடத்தப்படுகிறது.


கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் உலகத் தலைமையகமான வாடிகனுக்கு ஒரு மெகா திட்டம் உண்டு;அது என்னவெனில்,கி.பி.3000க்குள் இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் கிறிஸ்தவமாக்குவது;அதற்காக வாடிகன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப்பின்பற்றும் பல நாடுகளின் உளவுத்துறைகளுடன் இணைந்து பல திட்டங்களை தீட்டி செயல்படுத்திவருகிறது.கி.பி.1000க்குள் அவர்கள் ஐரோப்பாவையும்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவையும் கிறிஸ்தவமயமாக்குவதில் வெற்றி பெற்றனர்.இந்த கண்டங்களில் இருந்த புராதனமான மதங்கள் அழிந்தன;கி.பி.1001 முதல் கி.பி.2000க்குள் ஆப்ரிக்கக் கண்டத்தை சிலுவையின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்தனர்.இதற்காக பல லட்சக்கணக்கான பாதிரியார்களை ஆப்ரிக்காவிற்குள் இருக்கும் பெரும்பாலான நாடுகளுக்குள் அனுப்பி வைத்தனர்.ஆப்ரிக்காவின் பல நாகரீகங்கள் அடையாளமின்றி காணாமல் போயின;இவ்வாறு காணாமல் போனதை ஆப்ரிக்க மக்கள் பல்வேறு வடிவங்களில் கதைகளாக,கவிதைகளாக,நாவல்களாக வெளிப்படுத்தியுள்ளனர்.அதில் ஒரே ஒரு சுருக்கமான கதையை உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்:


கிறிஸ்தவப்பாதிரியார்கள் எங்கள் நாட்டுக்குள் அடியெடுத்து வைத்த போது,அவர்களிடம் பைபிள் இருந்தது;எங்களிடம் எங்கள் நாடு இருந்தது;
அவர்கள் பைபிளைக் கொண்டு பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள்;
நாங்கள் பிரார்த்தனை செய்து முடித்து கண் திறந்த போது,எங்கள் கைகளில் பைபிள் மட்டும் இருந்தது;அவர்களிடம் எங்கள் நாடு!!!


இதே சூழ்நிலையை கி.பி.2001 முதல் 3000க்குள் ஆசியக் கண்டத்தில் கொண்டுவர பல திட்டங்களைத் தீட்டியிருக்கின்றனர்.உலக மக்கள் தொகையில் சரிபாதி ஆசியாவுடையது;சீனாவும் இந்தியாவும் சரிபாதியாக இருந்தாலும்,கத்தோலிக்க கிறிஸ்தவ மதமாற்றத்தை சீனாவுக்குள் சுதந்திரமாகச் செயல்படுத்த முடியவில்லை;சீனாவுக்குள் இருக்கும் சர்வாதிகார கம்யூனிஸ அரசு அதற்கு சிறிதும் இடம் கொடுக்கவில்லை;மிஞ்சியிருப்பது நமது பாரதம் எனப்படும் இந்தியாதான்.(மற்ற ஆசிய நாடுகளை வெறும் 10 அல்லது 20 அல்லது 30 ஆண்டுகளில் கிறிஸ்தவத்தின் கீழ் கொண்டு வந்துவிட முடியும்)


எனவேதான் இந்தியாவை கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாக மாற்றிட வாடிகன் பல ஆயிரம் கோடி டாலர்கள் செலவழித்து கிறிஸ்துவ மயமாக்கிடத் துடிக்கிறது.இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான மதமாற்றத்திட்டங்களை வகுத்து,அதை வெளிப்படையாகவே அறிவித்து மதமாற்றும் வேலைகளில் ஈடுபட்டுவருகின்றன.ஏனெனில்,இந்து தர்மம் எந்த ஒரு தனி மனிதனின் கட்டுப்பாட்டிலும் இயங்கவில்லை;அதே சமயம் இந்துக்களாகிய நாம் சகிப்புத்தன்மை,மனிதநேயம்,விட்டுக்கொடுத்தல்,குடும்ப அமைப்பு போன்றவைகளால் வளர்க்கப்பட்டு வருகிறோம்;எவ்வளவு நாட்களாக தெரியுமா?சுமார் இருபது லட்சம் ஆண்டுகளாக!!

பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் நார்ஸ்டர்டாமஸ் தனது நூற்றாண்டுகள் என்ற  ஜோதிடப்புத்தகத்தில் கி.பி.1400 முதல் கி.பி.2100 வரை இந்த பூமியில் என்னென்ன மாற்றங்கள் எப்போது நடைபெறும் என்பதை கணித்து எழுதியிருக்கிறார்.அதில் அவர் கணித்த அனைத்தும் நிகழ்ந்து வருகின்றன;இந்து தர்மம் பற்றி அவர் கூறியிருப்பது என்னவெனில், “பெருங்கடலின் பெயரைக் கொண்ட மதமானது,கி.பி.2010க்குப்பிறகு உலகமெங்கும் பரவும்;அதன் பிறகு வேறு மதங்கள் உயிர்த்துடிப்புடன் இராது”இந்தக் கருத்தை வாடிகன் பலமுறை உறுதி செய்த பின்னர்தான்,நமது இந்தியாவில் இந்து மதம் என்ற பெயரில் கிறிஸ்தவம் மட்டுமே இருக்க வேண்டும்;(பலர் கருப்பசாமி,மாடசாமி,வேலாயுதம் என்ற பெயரில் இருக்கலாம்;ஆனால் இவர்களுக்கு சர்ச்சில் வேறு பெயர்கள் இருக்கும்;இவர்கள் அரசாங்கத்திடம் தாழ்த்தப்பட்டவர்களின் சலுகைகளை அனுபவிப்பார்கள்;ஆனால், இவர்கள் பின்பற்றும் மதம் கிறிஸ்தவமாக இருக்கும்;நமது அரசுப்பட்டியலில் கிறிஸ்தவம் BC பட்டியலில் இருக்கிறது.)இந்து மதம் என்ற முகமூடியுடன் கிறிஸ்தவமே உலகை ஆள வேண்டும் என்ற நோக்கத்துடன் படுவேகமாக மதம் மாற்றும் வேலையில் பல லட்சக்கணக்கான பாதிரியார்களையும்,கன்னியாஸ்திரிகளையும் ஈடுபட வைத்துள்ளனர்;
மறுபுறம் கடந்த கால வரலாறுகளையும் நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டும்;கி.பி.1897 இல் சிகாகோவில் சர்வசமய மாநாடு நடைபெற்றது.அந்த சர்வசமயமாநாட்டின் நிஜமான நோக்கம் என்ன தெரியுமா?
உலகில் இருக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் இறுதிப் புகலிடம் கிறிஸ்தவமே என்று அறிவிப்பது!!
சர்வசமய மாநாட்டில் உலகில் இருக்கும் எல்லா மதத்தின் தலைவர்களும் இருக்கும்போதே இவ்வாறு அறிவித்துவிட்டால்,யார் தான் கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுக்க முடியும்?
ஆனால்,நடந்தது என்ன?
சுவாமி விவேகானந்தர் பேசிய இரண்டே இரண்டு வார்த்தைகள் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் நயவஞ்சகத்தை செயல்படுத்த முடியாமல் போகுமளவுக்கு சிதைத்துவிட்டது;
“அமெரிக்க சகோதர,சகோதரிகளே!”                என்றார் சுவாமி விவேகானந்தர்!!!அந்த வார்த்தைகளிலிருந்து ஆரம்பித்த நவீன இந்து யுகம் இன்று எந்த ஒரு அமைப்பின்றியும்,எந்த ஒரு ஒருங்கிணைப்பும் இல்லாமலும் மேற்கு நாடுகள் இந்து தர்மத்தை நோக்கி நகரக் காரணமாகிவிட்டது.

கி.பி.1911 இல் மஹாராஷ்டிராவில் குச்வாடா என்ற குக்கிராமத்தில் பிறந்த ஒரு சிந்தனையாளன் தனது 25 ஆம் வயதில் தத்துவத்தில் பி.எச்.டி.முடித்தான்.வெறும் 20 ஆண்டுகளில் அமெரிக்காவையும்,கிறிஸ்தவத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டான்.இன்னும் பத்தே பத்தாண்டுகள் அவன் உயிரோடு இருந்திருந்தால்,கிறிஸ்தவம் கல்லறைக்குப் போயிருக்கும்;பைபிளில் இருந்து அந்த சிந்தனையாளர் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் வாடிகன் பதில் சொல்லவில்லை;அவரது இருபதாண்டு பிரச்சாரம் கிறிஸ்தவத்தின் ஆணிவேரையே அரித்து விட்டது;எதையும் அறிவுபூர்வமாக அணுகும் மேல்நாட்டினருக்கு இந்த சிந்தனையாளரின் பைபிள் சந்தேகங்கள்,மேற்கு நாடுகளையே சுயமாக சிந்திக்க வைத்து,பைபிளிலிருந்து வெகு தூரம் விலகிச் செல்ல வைத்துவிட்டது;இந்த சிந்தனையாளரின் சிந்தனைகளுக்கு ஈடு  கொடுத்து நிற்க முடியாத அமெரிக்கா அந்த சிந்தனையாளரைக் கொல்ல முயன்று அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.ஆமாம்! தனது சி.ஐ.ஏ.வின் மூலமாக அந்த சிந்தனையாளரின் உடலில் தாலியம் என்ற மெல்லக் கொல்லும் விஷத்தை செலுத்திவிட்டது.ஆனால்,அதை விடவும் சக்தி வாய்ந்த விஷத்தை அந்த சிந்தனையாளர் கிறிஸ்தவத்தினுள் செலுத்தி விட்டார்.அந்த மாபெரும் சிந்தனையாளர்தான் ஓஷோ என்ற ரஜனீஷ்!!!
ஓஷோ ஒன்றும் செக்ஸ் சாமியார் அல்ல;அவர் சொன்ன கருத்து எளிமையானது;மனிதனாகப் பிறந்த எவரும் காமசுகத்தில் ஒரு முழுமை பெறாமல் ஆன்மீகத்தில் வளர்ச்சியடைய முடியாது;எனவே,முதலில் காமத்தை போதுமென்ற அளவுக்கு அனுபவியுங்கள்;பிறகு ஆன்மீகத்துக்கு வாருங்கள்!!!

இன்று உலகமெங்கும் இந்து தர்மம் எப்படியெல்லாம் பரவிக்கொண்டிருக்கிறது தெரியுமா?

நம்மை ஆள்கிறேன் என்ற பெயரில் நமது சொத்துக்களையும்,நமது அறிவுக்களஞ்சயங்களான ஓலைச்சுவடிகள்,புராதனமான வைரங்கள்,சுவாமி சிலைகள் போன்றவைகளைத் திருடிய இங்கிலாந்தில் பின்பற்றப்படும் பாடத்திட்டம் நமது குருகுலக் கல்வித்திட்டம் ஆகும்.கி.பி.2000 முதல் இங்கிலாந்தில் இருக்கும் பருவப்பெண்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் தனக்குப் பொருத்தமான கணவனைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்;
பில்கிளிண்டன் ஆட்சிக்காலத்தில் வெள்ளை மாளிகையில் பல ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ,மாணவிகள் பில்கிளிண்டன் முன்பாக ‘திருமணம் ஆகும் வரை  மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பேன்;வேறு எவரிடம் டேட்டிங்(உடலுறவு) வைத்துக்கொள்ள மாட்டேன்’ என்று உறுதி மொழி எடுத்துள்ளனர்.
ஹாலிவுட் நடிகர்கள்,நடிகைகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கைப்படி வாழத்துவங்கியிருக்கின்றனர். ‘எனது வாழ்க்கை வெற்றிக்குக் காரணம் எனது மனைவிதான்’ என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தப் பேட்டியால் உலகெங்கும் இருக்கும் அவர்களின் ரசிக,ரசிகைகள் ஒருவனுக்கு ஒருத்தி என்பதைப்பின்பற்றத் துவங்கியிருக்கின்றனர்.
கீழை நாட்டுத் தத்துவங்கள் என்ற பெயரில் அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ,ஸ்பெயின்,நார்வே,ஸ்வீடன்,       ஜெர்மனி,இங்கிலாந்து,பிரான்ஸ்,உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் பட்டப்படிப்புகள் இருக்கின்றன.இந்த படிப்புகள் படிக்கும் பல மேல்நாட்டு மாணவ,மாணவிகள் இந்தப் படிப்பு படித்து முடியும் முன்பாகவே இந்து மதத்துக்கு தானாகவே மாறிவிடுகின்றனர்;மேலும் இவர்கள் அனைவருமே இந்தியக்குடியுரிமை பெற்றுவிடுகின்றனர்;
இந்து தர்மத்தின் உணவுகள்,இந்து தர்மத்தின் ஆடைகள்,இந்து தர்மத்தின் திருவிழாக்கள்,இந்து தர்மத்தின் ஜாதிகள்,இந்து தர்மத்தின் ஜாதிப்பழக்க வழக்க நடைமுறைகள் போன்றவைகளை ஆராய இண்டாலஜி என்ற துறையை மேல்நாடுகள் தமது பல்கலைக்கழகங்களில் உருவாக்கியிருக்கின்றன.இந்த இண்டாலஜி மூலமாக யாரெல்லாம் டாக்டரேட் முடிக்கிறார்களோ அவர்களெல்லாம் இண்டாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நேற்று(15.8.2012) திரு அண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோவிலில் இருக்கும் கால பைரவர் சன்னதியில் மாலை 6 மணிக்கு ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது.பிரதோஷமும்,சிவராத்திரியும் ஒன்றாக வந்த நேற்று பிரதோஷ நேரத்தில் கால பைரவருக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது;அப்போது ஒரு மேல்நாட்டு வயோதிகர்,ஒரு மஞ்சள் துண்டினை கால பைரவரின் முன்பாக விரித்து அதில் அமர்ந்து பத்மாசனமிட்டு கண்களை மூடி கால பைரவரை வழிபட்டுக்கொண்டிருந்தார்.என்னாலேயே நம்ப முடியவில்லை?அந்த சந்தோஷத்தில் அவரை போட்டோ எடுக்க மறந்து போனேன்.

பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு பகவத் கீதையின் கருத்துக்கள் போதிக்கப்பட்டுவருகின்றன;இதன் மூலமாக அவர்களால் எந்த விதமான மன பதட்டமும் இல்லாமல் பணிபுரிய முடிகிறது என்பதை ராணுவ மனோதத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களின் சந்தைப்படுத்துதலுக்கு(MARKETING) பகவத்கீதையின் கருத்துகள் பக்கபலமாக இருக்கின்றன;எனவே,பன்னாட்டு நிறுவனங்கள் தமது புதிய பணியாளர்களுக்கு பகவத்கீதையின் கருத்துக்களின் அடிப்படையில் பயிற்சிகளை வழங்கத்துவங்கியிருக்கின்றன;குறிப்பாக நிர்வாகத்துறை(MANAGEMENT),சந்தைப்படுத்துதல் இந்த இரண்டு துறைகளுக்கும் பகவத்கீதையின் கருத்துக்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன.
பிரான்ஸில் பெண்களிடையே செந்தூரம் வைக்கும் பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது;
யோகாசனமும்,முத்திரைப்பயிற்சியும் அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் பல லட்சக்கணக்கானவர்களால் தினமும் பயிற்சி செய்யப்பட்டு வருகிறது;
ஜோதிடவியல் படிப்புகள் அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் ஒரு பாடத்திட்டமாக இருக்கிறது.இந்தப் பட்டப்படிப்புகளில் மேல்நாட்டைச் சேர்ந்தவர்களே முதல் மதிப்பெண்கள் பெற்றுவருகின்றனர்.
Bristish Association of Vedic Astrology,American Association of Vedic Astrology என்று வேத ஜோதிடத்தைப்பின்பற்றுபவர்களால் சங்கங்கள் துவங்கப்பட்டுவருகின்றன.

கனடா,ஜர்மனி மேலும் சில நாடுகளில் பள்ளிப்பாடங்களில் யோகாசனம் ஒரு விருப்பப் பாடமாக இருக்கிறது.
இந்தியாவில் தயாராகும் ஆயுர்வேத மருந்துகள்,உணவுப்பொருட்கள்,அழகுசாதனப் பொருட்களுக்கான சந்தை மேல்நாடுகளில் ஒவ்வொரு வருடமும் விரிவடைந்துகொண்டே செல்கிறது.
களரி,பரத நாட்டியம்,ஆயுர்வேத மருத்துவப்படிப்புகள்,சிற்பக்கலை,யோகாசனம்,இந்தியப் பாரம்பரிய உணவுத்தயாரிப்பு,சமஸ்க்ருதமொழி,தமிழ் இலக்கியம் போன்றவைகளை கற்றுக்கொள்ள ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் இளைஞர்கள்,இளைஞிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ரமணமகரிஷியின் ஆன்மீகக்கருத்துக்கள் கி.பி.1950 முதல் பதினான்கு ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு,ஐரோப்பா முழுவதும் பரவிக்கொண்டே இருக்கின்றன;அந்தப் புத்தகங்களில் ஏதாவது  ஒன்றை மட்டும் வாசிக்கும் ஐரோப்பியரை ரமணமகரிஷி ஈர்த்துவிடுகிறார்.இதனால்,திரு அண்ணாமலைக்கு வரும் ஐரோப்பியர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
அஞ்சல் வழியாக சமஸ்க்ருதம் பயிலும் மேல்நாட்டு மாணவ,மாணவிகள் (நாம் ஆங்கிலத்தில் பேசுவதைப்பெருமையாக நினைப்பதுபோல) தினமும் சமஸ்க்ருதம் பேச ஆரம்பித்துள்ளனர்.இதனால்,இந்தியாவில் சமஸ்க்ருதம் பேசுபவர்களை விட வெளிநாடுகளில் சமஸ்க்ருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது.((அமெரிக்காவின் மக்கள்தொகை+ இங்கிலாந்தின் மக்கள் தொகை=சுமார் 50 கோடி;ஆனால்,இந்தியாவில் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கை 1.1.2012 அன்று 60 கோடியைத் தாண்டிவிட்டது))அதே அளவுக்கு திருக்குறளை நாம் சர்வதேச மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வில்லை;(ஆனால் என்ன? தமிழ் பயிலும் வெளிநாட்டினர் அதிகரித்து வருகின்றனர்;தமிழின் அத்தனை இலக்கியங்களையும் இனி உலகமயமாக்கப்போவது தமிழர்களாகிய நாம் செய்யப் போவதில்லை;தமிழ் பயின்ற வெளிநாட்டினரே அதை சாதிக்கப் போகின்றனர்!!!)

மகரிஷி மகேஷ்யோகியின் ஆழ்நிலை தியானத்தின் மூலமாக இந்து தர்மத்தை அறிந்துகொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 100 கோடி மேல்நாட்டினர் என்றால் நாம் நம்பத்தான் போகிறோமா?
சுவாமி விவேகானந்தர்,ரமண மகரிஷி,வேதாத்திரி மகரிஷி,மாதா அம்ருதானந்தமயி,மகரிஷி மகேஷ்யோகி,ஓஷோ,சுவாமி சித்பவானந்தர் போன்றவர்களின் இந்து தர்மக்கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கின்றன.இந்த கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் வேறு எங்கேயும் எப்போதும் இல்லை என்பது ஒரு அதிசயம்!!!

வெகு விரைவில் இந்த பூமி இந்துபூமியாக மாறப்போகிறது;வெகு விரைவில் அன்பும்,விட்டுக்கொடுத்தலும் உலகமயமாகப் போகிறது;வெகுவிரைவில் அர்ஜெண்டினாவிலிருந்தும்,மெக்ஸிகோவிலிருந்தும்,       நார்வேயிலிருந்தும்,கானாவிலிருந்தும்,ஜப்பானிலிருந்தும், உஸ்பெகிஸ்தானிலிருந்தும் சபரிமலைக்கு பாதயாத்திரை வரப்போகிறார்கள்;திருஅண்ணாமலை கிரிவலத்துக்கு வரப் போகிறார்கள்;பழனிக்கும் திருச்செந்தூருக்கும் அலகு குத்தி செர்ரிக்காவடி,ஆலிவ் காவடி,ஏ.கே.47 காவடி,பிஸ்ஸா காவடி,பர்கர் காவடி எடுத்து வரப்போகிறார்கள்;

திருப்பதி வெங்கடாஜலபதிக்கு டாலரிலும்,ரிங்கிட்டிலும்,யூரோவிலும்,யென்னிலும் காணிக்கைகளைப் போடப்போகிறார்கள்;காசிக்கும்,ராமேஸ்வரத்துக்கும் வந்து தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்போகிறார்கள்;இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவே இருக்கும் ராமர் பாலத்தை தொட்டுக்கும்பிட திருப்புல்லாணிக்கரைக்கு வரப் போகிறார்கள்;

வைகுண்ட ஏகாதசி நாட்களுக்கு திருப்பதிக்கும்,ஸ்ரீரங்கத்துக்கும் மேல்நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு ஏராளமான சிறப்பு விமானங்கள்இயக்கப்போகிறார்கள்;ஒவ்வொரு சனிப்பிரதோஷத்துக்கும்,சிவராத்திரிக்கும் திருஅண்ணாமலைக்கு ஆங்கிலேயனும்,ஆப்ரிக்கனும்,ஜப்பானியனும்,ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகளும் வந்து குவியப்போகிறார்கள்.

இப்போது நாம் அமெரிக்காவுக்கும்,சிங்கப்பூருக்கும்,மலேஷியாவுக்கும் வேலைக்குச் செல்வதையும்,அங்கே குடியுரிமை வாங்குவதையும் பெருமையாக நினைக்கிறோம்;அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவுக்கு வருவதையும்,இந்துவாக மதம் மாறுவதையும்,இந்தியக்குடியுரிமை பெற்று இந்தியாவில் வாழ்வதையும் மேல்நாட்டு மக்கள் பெருமையாக நினைக்கப் போகிறார்கள்.இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

 நாம் நமது குழந்தைகளுக்கு நமது இந்து தர்மத்தின் பெருமைகளை எப்போது சொல்லப்போகிறோம்?

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ