21.நம்மில் பலர் அசைவம் சாப்பிடும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்கள்;அது
தப்பில்லைதான்;ஆனால்,நமது பிறந்த ஜாதகப்படி சில பரிகாரங்கள்(இத்தனை வாரங்களுக்கு இந்தக் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும்) செய்ய
ஆரம்பித்தால்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திவிட்டே அந்த பரிகாரங்களைச் செய்ய
வேண்டும்.இல்லாவிட்டால்,அந்தப் பரிகாரங்கள் பலன் தராது என்பது அனுபவ நிஜம் ஆகும்.
ஏனெனில்,அசைவம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் நாட்களில் நமது உடலில்
இருந்து வெளிப்படும் வியர்வையில் அந்த அசைவத்தின் வாசனை வெளிப்படும்;அது நமது வீட்டுக்கு
வரும் தெய்வீக சக்திகள்,நமது குலதெய்வத்தின்
ஆசிகள்,நாம் செய்து வரும் அன்னதானம் மற்றும் பரிகாரங்களின் பாதுகாப்பு ஆன்மீக அலைகளை
தடுத்து வாசலிலேயே நிறுத்திவிடும்.இதை வெகுவிரைவில் நவீன விஞ்ஞானம் நிரூபிக்கப்போகிறது.அப்படி
நிரூபிக்கப்பட்டாலும்,அவைகள் பரவலாக வெளிவராமல் இறைச்சிக்கடை அமைப்புகள் தடுத்துவிடும்
22. நமது நாடு மற்றும் பண்பாட்டின் பெருமைகளை அறிந்து கொள்ள நாம் வாசிக்க
வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.இந்தப் புத்தகங்களில் பெரும்பாலானவை மறுபதிப்பாக வரவில்லை;சில
பழைய புத்தகக்கடைகளில் மட்டுமே கிடைக்கும்.
23.நம்மில் பலருக்கு நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய இந்து சமயம்
சார்ந்த நடைமுறைகள் தெரியவில்லை;எதற்கெடுத்தாலும் இதைச் செய்யக்கூடாது;அதைச் செய்யக்கூடாது
என்று சொல்ல மட்டுமே தெரிந்திருக்கிறது.
உதாரணமாக,சிவன் சொத்து குல நாசம் என்பது பழமொழி மட்டுமல்ல;அனுபவ மொழியும்
கூட! இதை இந்த வேகமான கம்யூட்டர் யுகத்தில் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள்
தெரியுமா? சிவாலயத்துக்கு செல்கிறோம்;சிவனை வழிபடுகிறோம்;பூசாரி விபூதி கொடுக்கிறார்.அதை
வீட்டுக்குக் கொண்டு வராமல் அங்கேயே போட்டுவிட்டு வந்துவிடுகிறோம்;ஏன் என்று கேட்டால்,சிவன்
சொத்து குல நாசம்;சிவனின் அம்சமான விபூதியை வீட்டுக்குக் கொண்டுவந்தால்,நமது குலத்தை
நாசமாக்கிவிடுமாம்;எப்படி அர்த்தப்படுத்திக்கொள்கிறோம்.
நிஜத்தில் சிவாலயத்தில் தரப்படும் விபூதி,குங்குமத்தை ஒவ்வொரு நாளும்
நமது வீட்டுக்குக் கொண்டுவந்து பூஜையறையில் வைக்க வேண்டும்;இப்படி சேமித்து வைத்துக்கொண்டே
இருந்தால்,சிவனது அருட்பாதுகாப்பு நமக்கும்,நமது குடும்பத்தாருக்கும் கிடைக்கும்.
இன்னும் சிலர் குதர்க்கமாகக் கேட்கிறார்கள்:சிவன் சொத்துதானே குல நாசம்!
பெருமாள் சொத்து? என்று! சிவன் சொத்து மட்டுமல்ல;பெருமாள்,விநாயகர்,முருகர்,காளி,அங்காள பரமேஸ்வரி என எந்த இந்துக்கடவுளின் சொத்தையும்
திருடினால் திருடியவனின் குலமே சர்வநாசமாகிவிடும் என்பது உண்மை.ஒரு சர்வே எடுக்கலாம்: கடந்த 30 ஆண்டுகளில் நாத்திகக் குஞ்சுகளாக
இருந்து தமிழ்நாட்டின் கோவில்களின் அறங்காவலர்களாக இருந்தவர்களின் தற்போதைய வாழ்க்கையைப்
பற்றி விசாரித்தால்,சிவன் சொத்து குல நாசம் என்பதற்கு பல ஆயிரக்கணக்கான ஆதாரங்களைத்
திரட்ட முடியும்.
24.யார் என்ன சொன்னாலும்,அதாவது
இதைச் செய்யக் கூடாது;அதைச் செய்யக்கூடாது
என்று சொல்பவர்களிடம் ஏன் செய்யக் கூடாது? என்று எதிர்க் கேள்வி கேளுங்கள்.அப்போது
அவர்கள் சொல்லும் பதில் தடுமாற்றமில்லாமலும்,கோபப்படாமலும் இருந்தால் அதை,அவர்கள் சொல்வதை
ஏற்றுக்கொள்ளலாம்.
இந்த குழப்பமான சூழ்நிலைக்குக் காரணம் நமது இந்தியாவின் கடந்த 1000 ஆண்டுகால
வரலாறுதான்! சுமார் 800 ஆண்டுகளாக இஸ்லாமியப் படையெடுப்பும்,சுமார் 300 ஆண்டுகளாக கிறிஸ்தவப்படையெடுப்பும்(ஆங்கிலேய)
நமது இந்து தர்மத்திற்கு பலவிதமான துன்பங்களையும்,மாறுதல்களையும் கொடுத்துவிட்டது.கிட்டத்தட்ட
குரு சிஷ்ய பரம்பரையே அடியோடு அழிந்து போய்விட்டது.இந்து தர்மமானது அரசியல் ரீதியாக
ஒருங்கிணைக்கப்படாததும் ஒரு முக்கியமான முதன்மையான காரணமாகிவிட்டது.
மற்ற மதங்கள் அரசியலை ஒரு கருவியாகவும்,தேவைப்பட்டால்
கேடயமாகவும் கொண்டு தம்மை பாதுகாக்கவும்,வளர்க்கவும்,பரப்பவும் செய்துவருகின்றன.ஆனால்,உலகின்
பழமையான இந்து தர்மமோ அரசியல் என்னும் அரக்க சக்தியால் இன்றும் கூட பலவிதமான பிரச்னைகளையும்,அவமானங்களையும்
சந்தித்து வருகிறது.இந்துக்களாகிய நாம் வழக்கம்போல தூங்கி எழுகிறோம்;நமது இந்து தர்மத்தை
எவன் கிண்டல் செய்தாலும் சிரிக்கிறோம்;நமது வேலைகளை கவனமாகப்பார்க்கிறோம்!! இது சரியா?
25.உங்கள் குழந்தைகள் பத்தாவது வகுப்பு முடித்துவிட்டார்களா? ஆம் எனில்,அவர்களுக்கு
நீங்கள் ஞாயிறு தோறும் உங்கள் ஊரில் இருக்கும் நூலகத்துக்கு அழைத்துச் சென்று,பத்திரிகை
மற்றும் வார மாத இதழ்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள்.ஏனெனில்,நாம் வாழ்ந்து
கொண்டிருப்பது அறிவு யுகம் ஆகும்.மற்றவர்களை விடவும்,கொஞ்சம் கூடுதலாக பொது அறிவு நமது
குழந்தைக்குத் தெரிந்திருந்தால்,போட்டிகளிலும்,நேர்காணல்களிலும், மேல்படிப்பிலும்,புதிய முயற்சிகளிலும் ஜெயிக்கும்.
பொது அறிவு மட்டுமல்ல;பல துறைகளைப்பற்றிய அடிப்படை அறிவில் தேர்ச்சி
பெற்றிருந்தால்தான் இந்த போட்டிநிறைந்த காலத்தில்
தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.
Knowledge Update must for Success to our Child.
26.தியானம்,யோகா அல்லது மந்திர ஜபத்துக்கும் உங்களின் குழந்தைகளைப் பழக்குவது அவசியம்.மேலும் ஒரு வருடம் வரை அதை தினமும்
பின்பற்ற வைப்பது நமது கடமை ஆகும்.
27.ஓய்வு நேரங்களில் நமது முன்னோர்களாகிய சித்தர்களின் வாழ்க்கைச் சம்பவங்களைப்பற்றியும்,
நமது தமிழ் மொழியின்பெருமைகளைப் பற்றியும் விவரிப்பது அவசியம்.இப்படி விவரிக்கும்போது
எக்காரணம் கொண்டும் செல்போன் தொல்லை இராமல் பார்த்துக் கொள்வதும் அவசியம் ஆகும்.
28.கல்லூரியில் படிக்கும் நமது குழந்தையிடம் நாம் நமது பள்ளி,கல்லூரி
வாழ்க்கையில் ஒரு பிரச்னையை எப்படி சொதப்பினோம்? எப்படி ஜெயித்தோம்? என்பதை சுவைபட
விவரிப்பது நமது கடமை ஆகும்.இப்படி விவரிக்கும் முன்பு உங்கள் குழந்தையிடம் நீங்கள்
ஆழ்ந்த அன்பு செலுத்தி உங்களுக்கும்,உங்களுடைய குடும்பத்துக்கும் ஏற்றவிதமாக வளர்த்திருப்பது
அவசியம்.(பல குடும்பங்களில் ஒவ்வொருவருமே தீவு போல வாழ்ந்து வருவதை நேரில் பார்க்கும்
போது கண்ணீரே வருகிறது)இப்படி மாதம் ஒருமுறை நாம் சுவைபட விவரித்துக்கொண்டே வந்தால்,எதிர்காலத்தில்
நமது குடும்பத்தில் சிக்கல்கள்,பிரச்னைகள் வரும்போது அதை இலகுவாக கையாளும் திறன் நமது
பட்டப்படிப்பு படிக்கும் குழந்தைக்கு(ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்) வந்துவிடும்.டெஸ்ட்
செய்துதான் பாருங்களேன்.
29.தினமும் முடியாவிட்டாலும்,வாரம் ஒருமுறை குடும்பத்தோடு அருகில் இருக்கும்
புராதனமான கோவிலுக்குச் சென்று வழிபடுவது அவசியம்.வாரம் ஒருமுறை செல்ல முடியாவிட்டால்,மாதம்
ஒருமுறையாவது கோவிலுக்குச் சென்று வருவது அவசியம்.குடும்ப அமைப்பும்,கோவில் வழிபாடுமே
இந்து தர்மத்தின் வேர்கள் ஆகும்.முடிந்தவரையிலும் வேர்களை பலப்படுத்துங்கள்.எதிர்காலம் இனிப்பான பழங்களைத் தரும்.
30.பல குடும்பங்களில் மணமாகி,மணவிலக்கு பெற்ற மகள்கள் தடம் மாறிச் சென்றால்
அவர்களை ஒதுக்கி வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.இந்த ஒதுக்கி வைக்கும் பழக்கமே
சமுதாய அமைதி சீர்குலையக் காரணமாகிவிடுகிறது.மன்னிப்பை விட வேறு சிறந்த ஆயுதம் எதுவும்
இல்லை;
இதனால் தான் மாநகரங்களில் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை லட்சங்களைத்
தொட ஆரம்பித்திருக்கிறது.தனது மகளை மன்னிப்பதை விட,தனது கவுரவம் கெட்டுவிட்டதே என்று
வறட்டு கவுரவத்தால் வீம்பு பிடிக்கும் பெற்றோர்களே அதிகமாக இருக்கிறார்கள்.நமக்கு அடிப்படை
உணர்ச்சிகள் இருப்பதைப் போல நமது மகள்களுக்கும் இருக்காதோ? இருக்கக் கூடாதோ?தவறான பாதையில்
எவ்வளவு தூரம் சென்றாலும் திரும்பி வருவது தப்பே இல்லை;
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ