RightClick

இந்து வைத்தியமுறையின் பெருமைகள்!!!
சென்னையில் 1995 இறுதியில் நடந்து முடிந்த இந்திய தொழில்நுட்ப மாநாட்டில் ஒரு ஆன்றோர் பின்வருமாறு கூறினார்:நான் பரிகாரகன்; மக்கள் நோய் வாய்ப்பட்டபோது எங்கள் இனம் பரிகாரம்(சிகிச்சை) செய்து வந்தார்கள்.உடலின் பல பாகங்களிலும் புண் ஏற்பட்டபோது அந்த இடத்தில் உள்ள முடியை நீக்கிவிட்டு பரிகாரம்(சிகிச்சை) செய்தோம்.நாடு பிடிக்க வந்த கிறிஸ்தவ வெள்ளையரின் மருத்துவம் (அரசியல் அகம்பாவத்தால்) கை ஓங்கியபோது நாங்கள் வெறும் சிரைப்பவர்களாக மட்டுமே ஆகிப்போனோம்.


இப்படி அவர் சொல்லிக்கொண்டு வந்த பொழுது அந்த வீட்டுப்பெண்கள் கிராமம் முழுவதற்கும் பேறுகால மருத்துவம் பார்த்து வந்தது நினைவிற்கு வந்தது.இன்று நகர்ப்புற மருத்துவமனைகளில் இடுப்புவலி வருவதற்கு முன்பே அறுவை சிகிச்சை மேற்கொள்(ல்)வதும் நினைவிற்கு வருகிறது.
“வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணிகனுக்குக் கொடுக்கணும்” என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார்.எள்,தேங்காய் நிறைய விளையும் மாதங்களில் ஆட்டி,குடத்தில் அடைத்து வைப்பார்கள்.குழந்தை முதல் முதியவர் வரை எல்லோரும் வாரத்தில் இரண்டு நாள் எண்ணெய் தேய்த்து முழுகினார்கள்(குளித்தார்கள்).குழந்தைக்கு எண்ணெய்க்குளியல் செய்து வைத்த பிறகு உரை மருந்து ஊட்டினார்கள்.அதைப் பரிகாரர்கள் தயாரித்து கொடுத்தார்கள்.சாம்பிராணி புகை அனைவரும் நுகரும்படி செய்தார்கள்.


“ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பது பின்னால் வந்த வழக்கு.சிறு பிள்ளையில் கரிசாலை இலையால் பல் தேய்த்தோம்;பத்து வயது தாண்டியதும் ஆல மரத்து விழுதும் வேப்பங்குச்சியும் பல் குச்சியானது.புதர்க்காடுகள் பக்கமாக வாழ்ந்தவர்கள் ஆவாரங்குச்சியைக்கொண்டு பல் துலக்கினார்கள்.மருந்தியல் ஆழமாகக் கற்றவர்கள் நாயுறுவி வேரால் பல் துலக்கச் சிறந்தது என்று சொன்னதை செய்து பார்த்தேன்.சிறப்பை உணர முடிந்தது.அவர்கள் சொன்ன மற்றொன்றை இன்னும் செய்ய வாய்ப்பு வரவில்லை; 45 நாள் துலக்கும் 45 நாயுறுவி வேர்களை கழுவிப் பத்திரப்படுத்த வேண்டும்;பிறகு அவற்றை தீ இட்டு கொளுத்திய சாம்பல் கொண்டு 45 நாள் பல் துலக்க வேண்டும்.


வெட்டுக்காயப் பச்சிலை குணம் தெரிந்து கொண்ட போது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைத்தீவு வளாகத்தில் இருந்தேன்.நானும் குழந்தைகளும் பிளேடால் விரலை அறுத்துக்கொண்டு விட்டு சாறு பிழிந்துவிட்டோம்.தழும்பு இல்லாமல் புண் ஆறியது.தோட்டத்தொழிலாளர்களிடம் இது பற்றிச் சொன்னேன்: “நாங்கள் அரிவாள்,மண் வெட்டியால் வெட்டிக்கொள்ளும் போதெல்லாம்  வெட்டுக்காயப் பச்சிலையைத்தான் பயன்படுத்துகிறோம்” என்றார்கள்.


ஆனால்,வேளாண் கல்லூரியில் படிக்கும்போது பயாலஜியில் டாக்டரேட் வாங்கிய பேராசிரியர் அதை தோட்ட நிலக்களை(Garden land weed) என்று வர்ணித்தார்.அவரைச் சொல்லிக் குற்றமில்லை;அவர் படித்த கிறிஸ்தவ மெக்காலே பாடத்திட்டமான பயாலஜி,மைக்ரோ பயாலஜியில் அப்படிப்பட்ட மலட்டுப்பாடங்கள் தான் இருக்கின்றன.


நன்றி:விஜயபாரதம்,பக்கம்6,20.7.12