நெல்லை மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் கிராமம் சிவசைலம்
ஆகும்.இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது அமைந்திருப்பது அத்ரி மகரிஷியின்
கோவில் ஆகும்.வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை;அத்ரி மகரிஷி
அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.மேலும்
அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.
சித்தர்கள்
பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு
இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே
இருக்கிறது.பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும்
மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை;இங்கு
வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய
வழக்கம்;வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு
இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.
இப்பேர்ப்பட்ட இந்த அத்ரி மலையில் நந்தன ஆண்டின் ஆடிப்பூரத்திருநாளான
இன்று 23.7.2012 அன்று நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் ஒரு
சிறு குழு வழிபாடு செய்யச் சென்றிருக்கிறது.உலகில் அமைதி வேண்டியும்,வெகு விரைவில்
வர இருக்கும் பேரழிவிலிருந்து பூமியையும்,மக்களையும் காக்க வேண்டியும் சிறப்புப் பிரார்த்தனை,சித்த
ஆத்ம தியானம் போன்றவைகள் செய்யப்பட்டன.இந்த சிறு ஆன்மீகக்குழுவினர் தியானம் செய்கையில்
சில சித்த சுப சகுனங்கள் தென்பட்டன.நிறைவுடன்
திரும்பினர்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ!!!