RightClick

இதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில் பார்த்த நிஜம்!)இன்று 2.7.12 திங்கட்கிழமை!ஒரு ஆணும்,ஒரு பெண்ணும் வந்திருந்தார்கள்.அவருக்கு வயது 55 இருக்கும்;அவருடன் வந்த பெண்ணுக்கு 45 இருக்கும்;அந்தப் பெண்ணை தனது உடன்பிறந்த சகோதரி என்று அறிமுகப்படுத்தினார்.இருவரின் முகங்களும் ஒரே ஜாடையில் இருந்தன.அந்தப் பெண்மணி பழைய ஆடையில் இருந்தார்.பார்க்கவே பரிதாபதோற்றத்தில் இருந்தார்;முகத்தில் ஒரு பயம் குடியிருந்தது.

சொல்லுங்க,உங்களுக்கு என்ன பிரச்னை? என்று நமது ஆன்மீக குரு சகஸ்ரவடுகர் கேட்டார்.

“ஐயா,இவ என்னோட தங்கச்சி,கடந்த 4 மாசமா இவளுக்கு பேச்சு வர மாட்டேங்குது. . .” என்றவர் என்னைப்பார்த்து லேசாக தயங்கினார்.
அதைப் புரிந்துகொண்ட குரு,
“இவரு நம்ம ஆளுதான்.விபரமாச் சொல்லுங்க”என்றார்.

“எனக்கு 3 தங்கச்சிங்க;எல்லோருக்கும் படிச்சு முடிச்சபின்னாடிதான் கல்யாணம் நடந்திச்சு;இவள் 12 படிக்கும்போது ஒருத்தன் பொண்ணுபாக்க வந்தான்;எனது மற்ற சகோதரிகள் அவனை விட்டு விலகி இருக்கும்படி என்னிடம் கூறினார்கள்.அவனது நோக்கம் நல்ல நோக்கம் அல்ல;என்றும் கூறினார்கள்.ஆனால், அவன் என்னை தினமும் வந்து சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தான்.எல்லோர் முன்பாகவும் என்னை புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தான்;எனது சகோதரிகள் சொன்னதற்கு மாறாக அவனது நடவடிக்கை இருந்ததால்,என்னால் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை;நான் குழம்பிப்போனேன்;

 ஒரு நாள் அவன் காபியில் எதையோ கலந்து எனக்குக்  குடுத்தான்.அதனால் அவனை எதிர்த்து எதுவும் என்னால் பேச முடியல;அவனுக்கு ஆதரவாக எனது அம்மா அப்பாவிடம் பேசிவிட்டேன்.இவளோட படிப்பையே பாதில விட்டுட்டு கல்யாணம் முடிக்க வேண்டியதாகிப்போச்சு;இப்போ இவளுக்கு 3 பசங்க;மூத்தவன் இந்த வருஷம் டிகிரி முடிக்கப் போறான்;அடுத்த இரண்டு பேர்களும் பொண்ணுங்க;ஒண்ணு பாலிடெக்னிக் படிக்குது;அடுத்தது 10 படிக்குது;இவளுக்கு அடிக்கடி அருள் வாக்கு வரும்;அப்படி வரும்போதெல்லாம் இவ பக்கத்துல யாரு இருக்காங்களோ அவங்களுக்கு நிறைய வழி சொல்லுவா;இவ புருஷனுக்கு இதை தாங்க முடியல;அவன் தான் எதோ செஞ்சு இவளை பேச விடாமலேயே பண்ணிட்டான்.

அது மட்டுமில்லீங்கய்யா,இவ புருஷன் இவளை நானே ஆஸ்பத்திரியில் சேர்த்து பார்த்துக்கறேன்னு சொன்னான்.ஆனால்,இவ வீட்டுப்பக்கத்துல இருக்குறவங்க அவனை நம்பாதீங்க;ஆஸ்பத்திரியில உங்க தங்கச்சிய விஷ ஊசி போட்டு கொல்லப்பார்க்கிறான்னு சொன்னாங்க.அதான் கூட்டிட்டு வந்துட்டேன்.

அந்தப் பெண்மணியை நமது குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் சில நிமிடங்கள் உற்றுநோக்கினார்.பின்னர் ஒரு பென்சிலை எடுத்து அந்தப்பெண்ணின் கையில் திணித்தார்;அந்தப் பெண் திமிற,அவரோடு வந்த அவரது சகோதரன் அந்தப் பெண்ணின் கையில் பென்சில் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.சுமார் 30 நிமிடங்கள் ஆனது;அந்தப் பெண்ணின் முகத்தில் மாற்றங்கள் தெரிந்தது;அவள் கையெடுத்துக்கும்பிட்டு ஏதோ சொல்ல முயன்றாள்;ஒரு எழுத்துதான் பேச முடிந்தது.அதன்பிறகு,அந்தப் பெண்ணுக்கு நெற்றியில் விபூதி பூசினார்;வீட்டுக்குச் சென்று சில வழிபாடுகள் செய்யச் சொன்னார்;

இரண்டுநாட்கள் சென்றன;அந்தப் பெண்மணியே நமதுகுருவுக்கு போன் செய்து பேசினார்;நேற்றுமுதல் சரளமாக பேச ஆரம்பித்திருப்பதாகவும்,இனிமேல் தனதுகுழந்தைகளோடு வாழ விரும்புவதாகவும்,அதற்கு உதவி செய்யும்படியும் வேண்டினார்.

இந்த உதவியை நான் ஆயுள் முழுக்க மறக்கமாட்டேன்;இனி நான் எனது அம்பாளை நினைத்து தினமும் தியானம் செய்யப்போகிறேன் என்று கூறினார்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ