RightClick

இதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5
இந்த சம்பவம் 1.7.2012 அன்று ராஜபாளையம் நகரில் நிகழ்ந்தது.ஒரு சராசரிக்குடும்பத்தினர் நமது ஆன்மீக குரு சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்திக்க வந்திருந்தனர்.அந்தக் குடும்பத்தில் ஒரே ஒரு மகள்;வயது 3.கணவனும் மனைவியும் தினமும் வேலைக்குச் சென்றால்தான் வாழ முடியும் என்ற நிலை!

இந்த சூழ்நிலையில் வந்தவர்கள்,நமது குருவிடம் தங்களின் குறையைச் சொன்னார்கள்:இந்த பெண்குழந்தை தனது 6 வது மாதத்திலிருந்து இன்று வரையிலும் திடீர் திடீர் என்று அழுதுகொண்டே இருக்கிறது;தன்னை விட மூத்தவர்களை அடித்துக்கொண்டே இருக்கிறது.எத்தனையோ டாக்டர்களை பார்த்தும்,பலவிதமான தாயத்துக்கள் கட்டியும்,மந்திரித்தும் ஒன்றும் நடக்கவில்லை;இவளின் அழுகையால் எங்களால் நிம்மதியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை;

அந்த குழந்தையை சில நொடிகள் கவனித்தார்;பிறகு அதன் தலையில் கை வைத்தார்;அதன் காதில் ஏதோ சொன்னார்;அவ்வளவுதான் ! அந்த அறையிலிருந்து அங்குமிங்கும் ஓடோடிக்கொண்டிருந்த அந்த பெண்குழந்தை இப்போது அமைதியானது;அதன் முகத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கின.

பிறகு,அந்த தம்பதியினரிடம், “உங்கள் மகளின் உடலுக்குள் ஒரு மனித ஆவி இதுவரை இருந்து வந்திருக்கிறது” என்றவர்,சட்டென, அந்த தம்பதியினரை நோக்கி, “நீங்க கர்ப்பமாக இருக்கும்போது துக்க வீட்டுக்கு போனீங்களா?” என்று கேட்டார்.
சிறிது நேரம் யோசித்த அந்த பெண்குழந்தையின் அம்மா,        “ஆமாம் சாமி” என்றாள்.
அப்படிப் போனதுதான் தப்பு;சரி இனிமேல் உங்களுடைய மகளுக்கு இந்த நொடி முதல் நிம்மதியான தூக்கம் வரும்;இனி தேவையில்லாமல் அழமாட்டாள்;யாரையும் அடிக்கமாட்டாள் என்று சொன்னவர்,மேலும் சில சுலப வழிமுறைகளை வீட்டில் செய்யும் விதமாகச் சொன்னார்.
அவர்கள் புறப்பட்டுப் போனபின்னர்,
எந்த ஒரு பெண்ணும் கர்ப்பிணியாக இருக்கும்போது,துக்க வீட்டுக்குச் செல்லக் கூடாது;மீறிச் சென்றால் அந்த கர்ப்பிணியின் தொப்புள் வழியாக அந்த துக்க  வீட்டில் இருக்கும் இறந்த ஆவியானது அவளின் உடலுக்குள் புகுந்துவிடும்;குழந்தையின் பூர்வபுண்ணியம் வலிமையாக இருந்தால்,அம்மாவை பாதிக்கும்;இல்லாவிட்டால் இந்த பெண் குழந்தையைப் போன்று கஷ்டப்பட வேண்டும். என்று நேரடி விளக்கம் கொடுத்தார்.
குருவே,இந்த பெண் குழந்தைக்குப் பேய் பிடிச்சிருந்ததா?
ஆமாம்.கருவில் இருக்கும்போதே இப்படி பிடிச்சிருக்கு;பிறந்து 3 வயது ஆகும்போதுதான்; அதான் இன்னிக்குத்தான் அதை வெளியேற்றியிருக்கிறோம் =என்று போதித்தார்!
அந்த தம்பதியினர் கொடுத்த பணத்தை வாங்காமலேயே அவர்களை அனுப்பி விட்டார்.


ஆன்மீகக்கடலின் கருத்து: சினிமா பார்க்கும் ஆண்களின் உணர்ச்சியைத் தூண்டுவதற்காக சினிமாவில் நடிக்கும் பெரும்பாலான பெண்களை தொப்புள் தெரிய நடிக்க வைக்கிறார்கள்இந்தமாதிரியான காட்சிகளைப் பார்க்கும் ஆண் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால்,கவர்ச்சியாக படம் எடுப்பவர்களின் பாக்கெட் நிரம்புகிறது.அதைப் பார்க்கும் ஆண்கள் வெறிபிடித்து அலைகிறார்கள்.

.அந்த சினிமாக்காட்சிகளைப் பார்க்கும் பல கோடி அப்பாவிப் பெண்கள் அதே போல தொப்புள் தெரிய சேலை கட்டுகின்றார்கள்.இதனால் சில பெண்களுக்கு காம இச்சை கட்டுக்கடங்காமால் போய்விடுகிறது.அந்தப் பெண்கள் வசிக்கும் தெருவில் ஒழுக்கம் காணாமல் போய்விடுகிறது.நாகரீகமே இல்லாத மேல்நாடுகளை காப்பியடிப்பதற்கு ஒரு அளவே கிடையாதா?

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ