RightClick

ஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்மீகப்பயிற்சி வகுப்பு

தீபலட்சுமி வழிபாட்டு முறையும் அதை பின்பற்றும் வழிமுறைகளும்!!!
கலியுகத்தில் யார் கோடீஸ்வரர்கள் தெரியுமா? தனது கல்வித்தகுதி,வேலை,கிடைக்கும் சம்பளம்,மனோபாவம் இவைகளுக்குத் தகுந்தாற்போல பொருத்தமான வாழ்க்கைத்துணை(ஆணுக்குப் பொருத்தமான மனைவி; பெண்ணுக்குப் பொருத்தமான கணவன்) அமைவதுதான் முதல்படி!
அடுத்து இந்த இருவருக்கும் கடன்,நோய்,எதிரி,குடும்பக்குழப்பங்கள் இல்லாமல் இருப்பது இரண்டாம் படி!!
மூன்றாவதாக விரும்பும் விதமான வீடு,சொத்துக்கள்,மழலைச்செல்வம்,ஆரோக்கியம் இவைகள் இருந்தால் மூன்றாவது மற்றும் இறுதிப்படி!!!
நான்காவது படி:நட்பு மற்றும் உறவினர்களின் உளப்பூர்வமான மரியாதை நமது குடும்பத்தின் மீது இருக்க வேண்டும்.
இந்த நான்கு படிகளும் நாம் வாழ்ந்துவரும் கலியுகத்தில் கிடைப்பது அரிதிலும் அரிதே ஆகும்.
இந்த குறைகளை நீக்கிட,பல சித்தர்கள்,மஹான்கள்,சிவனடியார்கள் போதித்த பல தெய்வீக ரகசியங்கள் தீபலட்சுமி வழிபாடாக  மலரப்போகிறது.
பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட தெய்வீக ரகசியங்கள் இந்த தீபலட்சுமி வழிபாட்டுப் பயிற்சியின் மூலமாக உங்களுக்குக் கிடைக்க இருக்கிறது என்பது அனுபவ உண்மை!!!
தீபலட்சுமி வழிபாட்டுப்பயிற்சியில் தாங்கள் கற்ற தெய்வீக ரகசியங்களை தினமும் 15 நிமிடம் மட்டும் பின்பற்றுவதன் மூலமாக உங்களுக்கு பின்வரும் வரங்கள் ஓவ்வொன்றாகக் கிடைக்கும்:
1.நீண்டகாலமாக தடைபட்டிருந்த திருமணம் உடனே நடைபெறும்;தகுந்த கணவன் அமைவான்;
2.நீண்டகாலமாக கணவன் மனைவிக்குள் இருந்துவரும் மனக்கசப்புகள் அடியோடு நீங்கிவிடும்;நெருங்கிய அந்நியோன்னியம் உண்டாகும்.(என் வீட்டுக்காரர் திருந்துவாருன்னு கனவுல கூட நினைக்கல என்று 48 நாட்கள் பின்பற்றியப்பின்னர் சொல்வீர்கள்!!!)
3.பல பெண்களுக்கு குழந்தை கருவில் தங்காமல் கலைந்துவிடுகிறது;இதைச் சரி செய்ய பலர் ஏராளமான பணம் செலவழித்தும்,அந்தக் குறை நீங்காமல் தவிப்பவர்களுக்கு இந்த தீபலட்சுமி வழிபாடு ஆசியைத் தரும்;அதன் மூலமாக அவர்களுக்கு குழந்தை கருவில் தங்கும்;சுகப்பிரசவம் நிகழும்.
4.பல பெண்கள் தங்கள் குழந்தைகளுக்காகத்தான் எல்லா வேதனைகளையும் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.அதே சமயம் அவர்களுக்கு அவர்கள் தினமும் வழிபடும் தெய்வ அருளால் மன உறுதி கிட்டிவருகிறது.அந்த தெய்வத்தை தரிசித்து,கலந்துரையாடும் பாக்கியம் இந்த தீபலட்சுமி வழிபாடு மூலமாகக் கிடைக்கும்.
5.சபலத்தாலோ,சந்தர்ப்ப சூழ்நிலையாலோ பல பெண்கள் மணமான பின்னரோ/மணம் ஆகும் முன்பாகவோ தனது ரத்த உறவுகளால் துரத்தப்பட்டிருக்கிறார்கள்.அப்படி துரத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சில லட்சம்பேர்கள் தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் தனித்து வாழ்ந்து வருகிறார்கள்.

என்னதான் ஓடி ஓடி சம்பாதித்து சொந்தக்காலில் நின்றாலும் அவர்களின் ஆழ்மனதில் தான் தனது குடும்பத்தாரின்(அம்மா,அப்பா,அண்ணன்,அக்கா,கணவன்,      மகன்,மகள்,பேரன்,பேத்தி)
பாசத்துக்கு ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.தன்னை விரட்டியவர்கள் தன்னிடம் அன்பு காட்டிட மாட்டார்களா? என்று ஏங்குகிறார்கள்.அந்த ஏக்கம் இந்த தீபலட்சுமி வழிபாட்டைக் கற்று குறைந்தது 48 நாட்கள் பின்பற்றினால்,எப்பேர்ப்பட்ட பிரிந்த/சிதைந்த/சிதறிய குடும்பமும் இந்த தனித்து வாழும் பெண்களைத் தேடி வரும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளத் தகுதி: 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.
எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனுமதி உண்டு.
சமுதாயத்தில் எந்த விதமான சூழ்நிலையில் இருந்தாலும் அனுமதி சுலபமாகக் கிடைக்கும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள பின்வரும் மின் அஞ்சலுக்கு தங்களின் பிறந்த ஜாதக நகல்,போட்டோ,பிறந்த ஊர்,தற்போது வாழ்ந்து வரும் ஊர்,செல் எண் போன்றவைகளை அனுப்பி வைக்கவேண்டும்:aanmigakkadal@gmail.com
உங்கள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி:3.8.2012
தேர்ந்தெடுக்கப்படும் ஆன்மீகக்கடல் வாசகிகளுக்கு 4.8.2012 முதல் 10.8.2012 வரை மின் அஞ்சல் மூலமாகவும்,செல் எண் மூலமாகவும்,குறுந்தகவல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.இப்பயிற்சிக்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.பயிற்சி நேரம்: மூன்று மணி நேரம் மட்டுமே!
பயிற்சி நடைபெறும் இடம்: குற்றாலம்,நெல்லை மாவட்டம்
பயிற்சி நடைபெறும் நாள்:தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்படும்.
ஓம்சிவசிவஓம்