அந்தப் பெண்மணி நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் தூரத்து
உறவினர் ஆவார்.அவருக்கு நீதித்துறையில் ஒரு சாதாரண வேலை கிடைத்தது.வேலையில் சேர்ந்த
சில வருடங்களுக்குப்பிறகு,அவருக்கு ஒரு சிக்கல் உண்டானது.அந்த சிக்கலால் அவரது வேலை
காலியாகும் சூழ்நிலையும்,கூடவே சிறைத்தண்டனையும் கிடைக்குமளவுக்கு அந்த சிக்கல் சிக்கலை உண்டாக்கியிருந்தது.மனதுக்குள் ஒன்றை வைத்து,வெளியில்
வேறொன்றை பேசிப்பழகத் தெரியாததால் அந்தப் பெண்ணுக்கு
அவருடன் பணிபுரிபவர்களே எதிரியாக மாறினார்கள்.
வழக்குகளின் சில குறிப்பிட்ட ஆவணங்கள் இவரது பொறுப்பில் பாதுகாக்கப்பட்டு
வந்தது.இவர் விடுப்பு எடுத்த நாளில் யார் அதை பொறுப்பாக பாதுகாத்து வந்தார்களோ,அவர்கள்
வேண்டுமென்றே ஒரு முக்கியமான வழக்கின் முக்கியமான தகவல்களைக் கொண்ட காகிதத்தை ஒளித்து
வைத்துக்கொண்டார்.அடுத்த சில வாரங்களில் அந்த காகிதம் ‘காணாமல் போனது’ அந்த நீதிமன்ற
வளாகம் முழுக்க செய்தியாகப் பரவியது.அந்தப் பெண்மணி மீது விசாரணை செய்து குறிப்பிட்ட
நாளுக்குள் அந்த காகிதத்தை ஒப்படைக்கும்படியும்,முடியாவிட்டால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அந்தப் பெண்மணி மனமொடிந்து போனார்.ஏனெனில்,அவரது சம்பளத்தை
நம்பித்தான் அந்த குடும்பமே இயங்கியது;சில நாட்களாக அவர் ஒரு நாளுக்கு ஒரு தடவை கூட
சாப்பிடுவது அரிதாகிப்போனது;அவரை நன்கு புரிந்து கொண்ட உறவினர் ஒருவர் நமது குருவிடம்
கொண்டு வந்து அவர் சார்பாக பிரச்னையை விளக்கினார்.
அந்தப் பெண்மணியின் சுபாவம்,பிரச்னையின் தன்மை,அவருடைய குடும்ப எதிர்காலம்
இம்மூன்றையும் கருத்தில் கொண்டு அவருக்கு பைரவர் வழிபாடு ஒன்றை தொடர்ந்து 8 வாரங்கள்
செய்யச் சொன்னார்.
ஒன்பதாவது வாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்கும் நாள் வந்தது.அப்போது விசாரணைக்குழுவினர்
காணாமல் போன அந்த காகிதம் அந்த வழக்கு பைலிலேயே இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.இப்போது
அவர்கள் இந்தப் பெண்மணியைச் சமாதானப்படுத்தினர்.விளைவு? பணி நீக்கம் என்ற சூழ்நிலை
போய் பதவி உயர்வுக்கான வழிபிறந்தது.
அன்று முதல் இன்று வரையிலும் அந்தப் பெண்மணி தினமும் பைரவரை வழிபட்டப்
பின்னரே வேலைக்குப் புறப்படுகிறார்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ