RightClick

அருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்கோவில்,சுந்தரபாண்டியம்

விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா சுந்தரபாண்டியம் கிராமம்(க்ருஷணன் கோவிலில் இருந்து சதுரகிரி செல்லும் சாலையில்) இருக்கிறது.இந்த கிராமத்தின் வடக்கு எல்லையில் அருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்கோவில் அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஊட்டுப்பறை என்ற நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.இந்தக் கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் ஒரு மரத்தின் கீழே நள்ளிரவு 12 மணியளவில் பூஜைகளை முடித்துவிட்டு,படையல் சாதத்தை உருண்டையாக உருட்டி வானை நோக்கி வீசுவார்;ஒரு சாதப்பருக்கை கூட கீழே விழாது.இந்த விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொள்ளுவார்கள்;மேலும் இந்தக் கோவிலானது சுமார் 8 சமூகங்களுக்குச் சொந்தமான குலதெய்வம் ஆகும்.
இந்த கோவிலின் வெளியே இருக்கும் ஐயனார்சுவாமிகள் குதிரையில் வரும் பிரம்மாண்டமான சுதை இருக்கிறது.இந்த படத்தை நமது வீட்டில்/அலுவலகத்தில்/பர்ஸில் வைத்திருந்தாலே இவர் நம்மை சூட்சுமமாகப் பாதுகாப்பார் என்பது கடந்த சில நூற்றாண்டுகளாக பல ஆயிரம் முறை நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.
எனவே,இந்த கோவிலின் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

சைவ சமயத்தை கேலி செய்யாதீர்!


எஸ்.தில்லை கார்த்திகேயசிவம், வைதிக சைவ சித்தாந்த மகா சபை, நிறுவனர், கள்ளக்குறிச்சியிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், நடிகர் அஜித் நடித்த, "பில்லா-2' என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தில், வில்லனாக வரும் நடிகர் இளவரசு, "திருச்சிற்றம்பலம், சிவசிதம்பரம்' என்று கூறுவது போல், காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இவர், புறவாழ்வில் மேற்கண்டவாறு கூறினாலும், அகவாழ்வில் சட்டத்திற்கும், சமூகத்திற்கும் புறம்பான செயல்களை செய்வது போல், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த காட்சி அமைப்பு, "திருச்சிற்றம்பலம், சிவசிதம்பரம்' என்று கூறுபவர்கள், புறவாழ்வில் நடிப்பவர்கள்; அகவாழ்க்கையில் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்பவர்கள் என்ற தவறான எண்ணத்தை, பொது மக்களிடம் ஏற்படுத்துவதாக உள்ளது.இதே போன்று, சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் கமல் நடித்த, "அன்பே சிவம்' படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நாசர், "தென்னாடுடைய சிவனே போற்றி' என்று கூறுவது போல், காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இன்றைய நிலையில், சைவ சமயம் நாதியற்று உள்ளது என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன. இல்லையெனில், மேற்கண்ட காட்சிகளை படங்களில் அமைப்பதற்கு இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தைரியம் வருமா?செந்தமிழ் நாட்டின், ஆதி சமயமே சைவம் தான் என்பது, திரு.வி.க., மறைமலையடிகள் போன்றவர்களின் கூற்று.தமிழகத்தில் தோன்றிய அருளாளர்களில், அகத்தியர், திருமூலர் தொடங்கி, 18 சித்தர்கள், நாயன்மார்கள், முற்கால, பிற்கால சோழர்கள், சேர, பாண்டிய மன்னர்களில் பெரும்பான்மையோர், சங்க கால புலவர்களாகிய நக்கீரர், பரணர், கபிலர் உள்ளிட்ட பெரும்பான்மையான புலவர்கள், அருணகிரிநாதர், குமரகுருபரர், தாயுமானவர், வள்ளலார் என, பல அருளாளர்களும் சிவ வழிபாட்டை முதன்மையாகக் கொண்டிருந்தனர்.
இவர்களுக்கும், இன்றைக்கும் உள்ள பல அடியார்களுக்கும், "திருச்சிற்றம்பலம், சிவசிதம்பரம்' என்ற திருவார்த்தைகள், மகா மந்திரங்களாகும். அதேபோல், "தென்னாடுடைய சிவனே போற்றி' என்ற திருவாக்கு, சைவத்தின் மகுடமாகும்.
இந்த மகா மந்திரங்களை இகழ்வது போல், திரைப்படங்களில் காட்சி அமைக்கும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் தவறை உணர்வரா? திருந்துவரா? thanks:dinamalar 31.7.12

இந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது இந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியதுநெருங்கிய நண்பரும், சத்தீஸ்கரின் முன்னாள் கவர்னருமான ஜெனரல் கிரிஷ் சேத் அவர்கள், "அ கேஸ் ஆஃப் இந்தியா" என்ற வில் ட்யுரண்ட் அவர்களின் புத்தகம் பற்றி ஜூலை 15, கடந்த ஞாயிறன்று இந்த வலைப்பூவில் நான் எழுதியிருந்த கட்டுரை பற்றிக் கருத்துத் தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார்.

சேத் கூறுகிறார்:

இந்தப் பதிவு புதிய தரிசனத்தை அளிக்கிறது. இந்தியாவின் இன்றைய தலைமுறையினர் இந்த உண்மைகள் பற்றி நிச்சயமாக அறிந்திருக்க மாட்டார்கள். அதிகபட்சம் இந்தியா ஒரு காலத்தில் தங்க முட்டையிடும் வாத்து என்பதை மட்டும் அவர்கள் அறிந்திருக்கலாம். நம்முடைய பாடப் புத்தகங்கள்கூட இந்த உண்மைகளை வெளிக்கொணரவில்லை. இதை எளிமையாக வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த முயற்சி இந்தப் பதிவு.
ஜெனரல் சேத்
மிகச் சிறந்த வரலாற்றாசிரியரான வில் ட்யூரண்டின் கடும் உழைப்பின் ஒரு சிறு துளியைத்தான் என்னுடைய வலைப்பூ பிரதிபலிக்கிறது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவை நடத்திய விதம் "வரலாற்றின் மாபெரும் குற்றம்" என்ற ட்யூரண்டின் தீர்ப்பை நிறுவக்கூடிய உண்மைகள் இந்தப் புத்தகத்தில் நிரம்பியிருக்கின்றன. என்னுடைய இந்த வலைப் பூவைப் படிக்கும் அனைவருக்கும் இந்த முழுப் புத்தகத்தையும் பரிந்துரைக்கிறேன். அதே சமயம், என் எழுத்துக்களை வழக்கமாகப் படிப்பவர்களுடன் இந்தச் சிறந்த புத்தகத்தின் மற்றுமொரு பகுதியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கல்வி மற்றும் ஆரோக்கியம் பேணுதல் ஆகிய துறைகளில் ஒரு நாட்டின் செயல்திறன் அதன் நிலையை மதிப்பிடுவதற்கான இரண்டு அடிப்படை உரைகல்கள் என இன்றைக்கு உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த்த் துறைகளைப் புறக்கணித்த அரசாங்கங்களை இந்த அளவுகோல்களின் அடிப்படையில் உலகம் எப்போதும் குறைகூறிவந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இங்கிருந்த உடல்நலம் சார்ந்த விஷயங்களை எப்படி வேண்டுமென்றே, திட்டமிட்ட ரீதியில் அழித்தார்கள் என வில் ட்யூரண்ட் கூறுகிறார். சமூக அழிவு எனத் தலைப்பிடப்பட்ட ஒரு அத்தியாத்தை "அ கேஸ் ஆஃப் இந்தியா" கொண்டுள்ளது. இதில் வில் ட்யூரண்ட் எழுதுகிறார்:

பிரிட்டீஷார் இந்தியாவுக்கு வந்தபோது கிராமப்புற சமூதாயத்தினரால் நிர்வகிக்கப்பட்ட சமுதாயப் பள்ளிகள் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் இருந்தது. கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த கிராமப்புற சமுதாயங்களை அழித்தனர்.....

இப்போது (100 வருடங்களுக்குப் பிறகு) இந்தியாவில் 730,000 கிராமங்களும், 162,015 தொடக்கப் பள்ளிகளும் மட்டுமே உள்ளன. 7% சிறுவர்களும் 1 ½ % சிறுமிகளும் மட்டுமே பள்ளிக்கு செல்கிறார்கள், அதாவது மொத்தமாக 4%.

"1911இல் ஹிந்துக்களின் பிரதிநிதியான கோகலே இந்தியா முழுவதிலும் கட்டாயக் கல்விக்கான மசோதாவை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அது பிரிட்டிஷாரினாலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது. 1916இல் பட்டேல் மீண்டும் இதேபோன்ற மசோதாவை அறிமுகப்படுத்தினார், அதுவும் பிரிட்டிஷாரினாலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது."

இதற்குப் பின் நடந்தது இன்னமும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. டுரண்ட் கூறுகிறார்:

"கல்வியை ஊக்குவிப்பதற்கு பதிலாக, அரசு மது அருந்துவதை ஊக்குவித்தது. பிரிட்டீஷார் வந்தபோது இந்தியா போதையில் அமிழாத நாடாக இருந்தது. எளிமையான உணவு, மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்களை முழுவதுமாகத் தவிர்த்திருத்தல் ஆகியவற்றில் "மக்களின் எளிமை" வெளிப்பட்டதாக வாரன் ஹேஸ்டிங்ஸ் கூறினார்."

"பிரிட்டீஷாரால் முதல் வர்த்தக மையம் நிறுவப்பட்டவுடன், ரம் விற்பனைக்கென்று மதுபானக் கூடங்கள் திறக்கப்பட்டன, இந்த வர்த்தகத்தில் கிழக்கிந்திய நிறுவனம் நல்ல லாபத்தைக் கண்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அது தன்னுடைய வருமானத்தின் பெரும்பகுதிக்கு இந்த மதுபானக் கடைகளை சார்ந்திருந்தது; மது அருந்துவதையும் விற்பனையையும் அதிகரிக்கும் வகையில் உரிமம் வழங்கும் முறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன."

"கடந்த நாற்பது ஆண்டுகளில் இதுபோன்ற உரிமங்களிலிருந்தான அரசு வருமானம் ஏழு மடங்கு அதிகரித்துவிட்டது; 1922ல் ஆண்டுக்கு 60,000,000 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. இது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்காக ஒதுக்கப்பட்டதைவிட மூன்று மடங்காகும்."

கேத்தரீன் மயோவின் மதர் இந்தியா என்ற இந்தியாவுக்கு எதிரான அவதூறான நூலைக் குறிப்பிட்டு வில் டுரண்ட் எழுதுகிறார்:

ஹிந்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓபியத்தை ஊட்டுகின்றனர் என்று செல்வி மயோ நமக்குக் கூறுகிறார்; இந்தியா சுயாட்சிக்கு தகுதியற்றது என முடிக்கிறார்.

அவர் கூறியது உண்மைதான். அவர் கூறாமல் விட்டது, அவர் கூறியதை ஒரு நேரடியான பொய்யைவிட மோசமானது.

தாய்மார்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு தினமும் தங்கள் குழந்தைகளை தனியே விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதால் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓபியத்தைப் புகட்டினர் என்பதை அவர் நமக்குக் கூறவில்லை (அவர் அறிந்திருந்தும்கூட).

ஓபியம் அரசால் பயிரிடப்படுகிறது என்பதை அவர் நமக்குக் கூறவில்லை. மேலும், தேசிய காங்கிரஸ், தொழில்துறை மட்டும் சமூக மாநாடுகள், மாகாண மாநாடுகள், பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜம், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என அனைவரின் எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடைகள் மூலம் மது விற்பனை போல ஓபியமும் அரசினால் மட்டுமே விற்கப்படுகிறது என்பதை அவர் நமக்குக் கூறவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் முக்கியமான இடங்களில் ஏழாயிரம் ஓபியம் கடைகளை பிரிட்டீஷ் அரசு நடத்திவந்தது என்பதையும் அவர் நமக்கு கூறவில்லை. மத்திய சட்டப்பேரவை 1921ல் ஓபியம் பயிரிடுதல் அல்லது விற்பனையைத் தடைசெய்யும் மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் பிரிட்டிஷ் அரசு அதன்படி நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது; உணவு தானியங்களைப் பயிரிடுவதற்குத் தேவைப்படுகிற இருநூறு முதல் நானூறு ஆயிரம் ஏக்கர் நிலம் ஓபியம் பயிரிடுவதற்கு அளிக்கப்பட்டது; ஒவ்வொரு ஆண்டும் இந்த போதைப் பொருள் விற்பனை மூலம் அரசின் மொத்த வருமானத்தில் ஒன்பதில் ஒரு பங்கு வருவாய் கிடைத்தது என்பது போன்ற விவரங்களையும் அவர் நமக்குக் கூறவில்லை.

இந்த அத்தியாயத்தின் நிறைவுப் பத்தியில், 1833, ஜூலை 10 அன்று (இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர்) லார்ட் மெக்காலே அவர்கள் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தின் கீழ் அவையில் ஆற்றிய உரையின் சுருக்கத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

லார்ட் மெக்காலே கூறுவதாக ட்யுரண்ட் மேற்கோள் காட்டுகிறார்:

இந்தியாவில் உள்ள கொடுங்கோல் அரசர்கள் புகழ்பெற்ற சிலரின்  லார்ட் மெக்காலேஆற்றலைக் கண்டு அஞ்சினாலும் அவர்களைக் கொல்ல முடியாத நிலையில், அவர்களுக்கு தினமும் போஸ்டா என்கிற ஓபியம் தயாரிப்பை அளிப்பதை வழக்கமாக்க் கொண்டிருந்தார்கள். இந்த போதைப் பொருள் அளிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மனதின் ஆற்றல் அழிக்கப்பட்டு அவர்கள் பயனற்ற முட்டாள்களாகிவிடுவார்கள். வெறுக்கத்தக்க இந்தத் தந்திரம் படுகொலையைவிடவும் பயங்கரமானது. இது பிரிட்டீஷ் தேசத்தின் வழிமுறை இல்லை. மிகச் சிறந்த மக்களின் உணர்வுகளை மழுங்கச் செய்யவும் முடக்கவும்கூடிய போஸ்டாவை இந்தச் சமுதாயத்துக்கு அளிப்பதற்கு நாம் ஒருபோதும் ஒப்புதலளிக்கக் கூடாது.
நன்றி எல்.கே. அத்வானி
thanks:tamilthamarai.com

ஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவம்
அவர் ஒரு பொறியியல் பட்டதாரி! படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்;சொந்த ஊரில் ஒரு சாதாரண வேலையில் இருக்கும்போது ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை ‘ஆராய்ந்து’பார்க்கலாமே? என்ற எண்ணத்தில் நம்மிடம் ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கினார்.அதற்கும் முன்பாகவே சுமார் 21 நாட்களாக தனது வீட்டு பூஜை அறையில் ஸ்ரீசொர்ண பைரவரின் மூல மந்திரத்தை தினமும் 1பதினைந்து நிமிடம் வரை ஜபித்து வந்திருக்கிறார்.அந்த 21 நாட்களில் 14 ஆம் நாளிலிருந்தே அவரது சிந்தனையில் தேவையில்லாத விஷயங்கள்(பொறாமை,கோபம்) நீங்கத் துவங்கின.
அதே சமயம்,அவருடைய நட்பு வட்டம் சிறியது;அந்த சிறிய வட்டமும் பாரில்தான் ஒன்று சேருமாம்;அவரே நம்மிடம் சொன்னது.இந்த சூழ்நிலையில் அவருக்கு ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோ அவருக்கு சென்றடைந்தது.தினமும் காலையில் ஒரு மணி நேரம் மற்றும் இரவு ஒரு மணிநேரம் வீதம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை விடாமல் செய்து வந்திருக்கிறார்.இந்த வழிபாடு துவங்கிய ஒரு  மாதத்தில் இவருக்கு ஒரு புதிய நட்பு உண்டானது.அந்த நட்பும் அவருடைய நட்பு வட்டமும் அந்த ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் காலபைரவரை ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வழிபடுபவர்கள் ஆவர்.மேலும் தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவர் சன்னதியில் பலவிதமான சிவத்தொண்டுகள் புரிபவர்கள் ஆவர்.நமது பொறியியல் பட்டதாரி ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு துவங்கிய காலகட்டத்தில்,அவருக்கும் அவருடைய அப்பாவுக்கும் நல்லுறவு கிடையாது;கிடைக்கும் சொற்ப சம்பளமானது இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதத்தையும்,மனக்கசப்பையும்,கண்ணீரையும் தந்திருக்கிறது.
ஒரு வருடம் வரையிலும் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை தினமும் செய்துவந்தாலும்,நெருங்கிய உறவுகளில் துக்கம்,பிறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் சூழ்நிலையும் உண்டானது.அந்த சூழலில் எதற்கும் செல்லாமல் பிடிவாதமாகவே ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டு வந்திருக்கிறார்.சுமார் 9 ஒன்பது மாதங்களுக்குப் பிறகு,நமது பொறியியல் பட்டதாரியின் குடிகார நட்பு வட்டத்தின் விரிசல் உண்டாகி,அவர்களாகவே ஒதுங்கிவிட்டனர்.இவராக போய் அவர்களிடம் பேசினாலும்,அவர்கள் இவரிடம் சரியாகப் பேசுவதில்லை;இதன் மூலமாக வாரம் ஒருமுறை குடிக்கும் பழக்கமானது நிரந்தரமாகவே நின்றுவிட்டது.


11 ஆம் மாதம் ஆனதும்,அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான மனக்கசப்புகள் அடியோடு நீங்கிவிட்டன.எனது மகன் இப்போது குடிப்பதில்லை;அவனுக்கு எப்போ நல்ல வேலை கிடைக்கணுமோ,அப்போது கிடைக்கட்டும்;அதுபற்றி எனக்குக் கவலையில்லை; என்று அவர் தனது நெருங்கிய நண்பரிடம் கூறியது நமது பொறியியல் பட்டதாரிக்கு வந்து சேர ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.(வீட்டிலேயே நிம்மதி இல்லாவிட்டால் ஒரு இளைஞனுக்கு வேறு எங்குதான் நிம்மதி கிடைக்கும்?நம்மில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது இதைத் தானே!!!)


தவிர,மகனின் பொறுப்பான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை வெகுநாட்களாக கூர்ந்து கவனித்து வந்த அவரது அப்பாவானவர்,தானும் தனியாக வீட்டின் பூஜை அறையில் (மகன் வழிபடும் நேரம் தவிர்த்து வேறு ஒரு நேரத்தில்) ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை துவக்கியிருக்கிறார்.தற்போது அந்த பொறியியல் பட்டதாரிக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் (ஓராண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்த பின்னர்) வேலை கிடைத்துவிட்டது.அவருடைய வார்த்தைகள் அனைத்துமே அவருடைய ஆழ்மனதில் இருந்து உண்டானவை;தவிர,அவர் `12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு காலபைரவர் வழிபாட்டையும் நிறைவு செய்திருக்கிறார்.


தனது ஒரே மகனுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தமைக்கு ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரின் வழிபாடுதான் காரணம் என்பதை உணர்ந்த அவருடைய அப்பா இப்போது தனது ஊரில் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்.(இந்தப் பதிவு அந்த பொறியியல் பட்டதாரியின் அனுமதியோடு வெளியிடப்படுகிறது).அந்த இளைஞர் கடலோர சிவாலய நகரில் பிறந்தவர்!!!


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோடு புளியங்குடியில் ஆடி அமாவாசை அன்னதானம்!!!
ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் ஆசியோடு ஒவ்வொரு ஆண்டும் புளியங்குடியில் ஆடி அமாவாசையன்று அன்னதானத் திருவிழா நடைபெற்றுவருகிறது.இந்த ஆடி அமாவாசை அன்னதானத் திருவிழா கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆடி அமாவாசை (18.7.12 புதன்)அன்னதானத் திருவிழாவை 6 ஆம் ஆண்டாக இந்த நந்தன வருடம்(2012 முதல் 2013 வரை) திரு.விஸ்வாமித்ரன்,ஜே.டி.ஓ.,தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் அவர்களின் தலைமையிலும்,ஒரிசா ஜவுளி உற்பத்தியாளர் புளியங்குடி திரு.சுப்பிரமணிய முதலியார் மற்றும் புளியங்குடி ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் பக்தர்கள் குழுவின் சார்பாகவும் நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களின் ஆசியோடும் புளியங்குடியில் நடைபெற்றது.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

நமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்!!!
பைரவ வழிபாடு செய்ய முடிவெடுத்துவிட்டால்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்;மேலும் எந்த நோக்கத்துக்காக வழிபாடு செய்கிறோம் என்பதை எவரிடமும் சொல்லாமலிப்பதும் அவசியம் ஆகும்.சொன்னால் அந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்ய முடியாமல் போய்விடும்.அந்த அளவுக்கு பொறாமை இன்று தமிழ்நாடெங்கும் பரவியிருக்கிறது.குடும்பத்தோடு அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால்,100% பலன்கள் விரைவாக கிடைக்கும்.யார் வழிபாடு செய்கிறார்களோ,அவர் மட்டும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் 60% பலன்களே கிடைக்கும்.நமது குழந்தையின் படிப்பில் மந்தத்தன்மை நீங்கிட: புதன் கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 முதல் 9 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்கு பின்வரும் பொருட்களோடு செல்ல வேண்டும்;
1.மரிக்கொழுந்து மாலை(வேறு எந்த பூவும் இருக்கக் கூடாது)
2.புனுகு
3.பாசிப்பருப்பு கலந்த சாதம்(வீட்டில் சமைத்திருக்க வேண்டும்)
4.பாசிப்பருப்பு கலந்த பாயாசம்
இவைகளில் பூசாரியிடம் மரிக்கொழுந்து மாலையை பைரவருக்கு அணியச் சொல்லி,கொடுக்க வேண்டும்.நாம் கொண்டு வந்திருக்கும் பாத்திரத்தை பைரவரின் சன்னதியில் வைக்க வேண்டும்.(இவைகளில் பாசிப்பருப்பு சாதமும்,பாசிப்பருப்பு பாயாசமும் தனித்தனி பாத்திரங்களில் இருக்க வேண்டும்)நமது (படிப்பு சுமாராக இருக்கும்) குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு,அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு இந்த சாதத்தையும்,பாயாசத்தையும் பாதி விநியோகிக்க வேண்டும்;மீதியை நமது வீட்டுக்கு எடுத்துச் சென்று,நமது குழந்தைக்குத் தர வேண்டும்.நாமும் சாப்பிடலாம்.


வழக்குகளில் வெற்றி பெற: சனிப்பிரதோஷம் வரும் நாட்களில் பிரதோஷ நேரத்திற்குள் தயிர்ச்சாதம் நமது வீட்டில் தயார் செய்து அருகில் இருக்கும் சிவாலயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.சனிப்பிரதோஷம் முடிந்ததும் (மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்) அங்கிருக்கும் காலபைரவருக்கு தயிர்ச்சாதத்தை படைக்க வேண்டும்;பிறகு நம்முடைய பெயருக்கு(யாருக்கு வழக்கு இருக்கிறதோ அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு அவருடைய சன்னதியில் பைரவர் 108 போற்றியை வடக்கு நோக்கி அமர்ந்து(தரையில் தான்) மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.பிறகு,அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு தயிர்ச்சாதத்தை விநியோகிக்க வேண்டும்.கணவன் மனைவி பிரச்னைகள் தீர: புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.இந்த இரண்டு கிழமைகளும் செய்யக் கூடாது.ஏதாவது ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, 8 வாரங்கள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.
நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள காலபைரவருக்கு வில்வமாலை அணிவிக்க வேண்டும்.நமது பெயர் மற்றும் நமது வாழ்க்கைத்துணை(கணவன் எனில் மனைவி, மனைவி எனில் கணவன்)பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;அர்ச்சனை செய்தபின்னர்,பைரவர் 108 போற்றி அல்லது பைரவர் 1008 போற்றியை அவரது சன்னதியில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுச் சொல்லக்கூடாது)ஸர்ப்ப தோஷம் விலக: ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 ஆம் இடத்தில் ராகு  அல்லது கேது நின்றால் அது ஸர்ப்ப தோஷம் ஆகும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும்;புனுகு பூச வேண்டும்;நாகலிங்கப்பூமாலை அவருக்கு சார்த்த வேண்டும்;பால் பாயாசம்,பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.நமது பெயருக்கு(யாருக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கிறதோ,அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்;அதன்பிறகு,கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் 1008 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால்,அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும்.இந்த திசை முழுவதுமே அசைவம்,மது,போதைப்பொருட்களை கைவிட வேண்டும்.அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தால்,ராகு மற்றும் கேதுவால் ஏற்பட இருக்கும் அவமானங்கள் படிப்படியாக விலகிவிடும்.நிம்மதியும்,சிறந்த வாழ்க்கைத்துணையும் அமைந்துவிடும் என்பது அனுபவ உண்மை ஆகும்.மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத் துணை அமையவும்; திருமணத்தடை அகலவும்: வெள்ளிக்கிழமை ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு பூச ஏற்பாடு செய்ய வேண்டும்;புனுகு பூசச் செய்து,தாமரை மலரை அணிவிக்க வேண்டும்;அவல் கேசரி,பானகம்,சர்க்கரைப்பொங்கல் இவைகளை படையலாக்க வேண்டும்;படைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
மேலும் ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் காலபைரவருக்கு சந்தனக்காப்பு பூச வைத்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கும்,8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வழிபாடு செய்து வர எப்பேர்ப்பட்ட திருமணத்தடையாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவைசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு,எனது ஜோதிட குருவிடம் அடிக்கடி ஜோதிட நடைமுறைகளை கற்றுக்கொள்ளச் செல்வதுண்டு;காலை முதல் இரவு வரை அவரது ஜோதிட நிலையத்தில் அவருக்கு பணிவிடை செய்து பல நடைமுறை நுணுக்கங்களைக் கற்றதுண்டு;குருதொட்டுத் தராத கலை விளங்காது என்பது ஜோதிடப்பழமொழி! பல சுவாரசியங்களும்,சில அதிர்ச்சிகளும் அங்கே நேரடியாக அனுபவித்திருக்கிறேன்.


நாம் ஒரு ஜோதிடரை சந்திக்கச் செல்கிறோம் எனில்,அந்த ஒரு நாளில் அவரை சந்தித்துவிட்டுத் திரும்பும் வரை பொறுமை காக்க வேண்டும்.அவரிடம் பேசும்போது மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்.ஒரு இளைஞர் வந்தார்;அவருக்கு பெண்  குழந்தை இருக்கிறது.அந்த குழந்தையின் வயது  அப்போது 5.அவர் தனது,தனது மனைவி,தனது மகள் என்று மூவரின் ஜாதகங்களையும் கொண்டுவந்தார்.எனது ஜோதிட குரு என்னிடம் இந்த மூன்று ஜாதகங்களிலும் நடப்பு திசை,கோச்சார நிலையை கணிக்கச் சொல்லி உத்தரவிட்டார்;அந்த இளைஞரிடம் என்ன விஷயமா? வந்திருக்கீங்க? என்றும் கேட்கச்  சொல்லியிருந்தார்.தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும்,அடுத்து பிறப்பது ஆணா? பெண்ணா? என்பதை அறியவே வந்தேன் என்றார்.


சுமார் 4 பேர்கள் ஜாதகம் பார்த்தப்பின்னர்,5 வதாக அந்த இளைஞர் ஜாதகம் பார்த்தார்.எனது ஜோதிடகுரு அவர்கள், “தம்பி,உனக்கு அடுத்து ஆண் குழந்தை”என்று தீர்க்கமாக சொன்னார்.
அந்த இளைஞனோ அடுத்து பெண் பிறந்தாலும் எனக்குச் சம்மதமே என்று வேகமாகச் சொன்னான்.
சரி தம்பி குழந்தை பிறந்ததும் வாங்க என்று அனுப்பி வைத்துவிட்டார்.


சுமார்  3  மாதங்களுக்குப்பிறகு,அந்த  இளைஞன் மீண்டும் வந்தான்.முகத்தில் கவலை தென்பட்டது.
என்ன தம்பி,நல்லபடியா பிரசவம் முடிஞ்சுதா? என்று கேட்டார் எனது ஜோதிடகுரு.
ஐயா, நல்லபடியாக பிரசவம் முடிஞ்சுது.நீங்க ஆண் குழந்தைன்னு சொன்னீங்க.ஏன்யா எனக்கு ரெண்டாவதாக பெண் பிறந்தது ? என்று கேட்டான்.
பொறுமையாக நம்ம சொல்லுறதைக் கேட்குறீங்களா? என்று பீடிகையோடு அந்த இளைஞனிடம் கேட்டார் ஜோதிடகுரு.
(மனம் நொந்தவாறு) ஐயா,சொல்லுங்க ,நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேனய்யா என்றான்.
“நீ என்ன விரும்பினாயோ அதுதான் கிடைத்தது” என்று பொறுமையாக விளக்கமளித்தார்.

ஐயா நீங்க சொல்லுறது எனக்குப் புரியல ? என்று அந்த இளைஞன் பவ்யம் காட்டினான்.எனக்கு அந்தக் கணத்தில் எனது  ஜோதிட குரு சொன்னதன் சூட்சுமம் புரிந்துவிட்டது.எனவே,நான் திடீரென சிரித்துவிட்டேன்.எனது சிரிப்பு அந்த இளைஞனுக்கு கோபத்தைத் தூண்டியது.அவன் முறைத்துப் பார்த்தான்.நான் எனது வாயைப்பொத்திக்கொண்டு,சிரித்தேன்.மீண்டும் என்னைப் பார்த்து அவன் முறைக்க எனது சிரிப்பு அடங்கியது.எனது ஜோதிட குரு எனது முதுகில் ஓங்கி அறைந்தார்.நான் அமைதியானேன்.

நான் அந்த இளைஞனிடம் பேசினேன்:தம்பி,அன்னைக்கு நம்ம குரு என்ன சொன்னாரு? என்று கேட்டேன்.
“உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்னு சொன்னார்” என்றான்.
அது நீ என்னப்பா சொன்னே? என்று எதிர்க்கேள்வி கேட்டு மடக்கினேன்.
“எனக்குப் பொண்ணு பிறந்தாலும் சம்மதம்னு சொன்னேன்” என்று நொந்த குரலில் சொன்னான்.
அதைத்தான்பா நம்ம குரு சொல்லுறாரு.அவரு தனது ஜோதிட அனுபவப்படியும்,உனது எதிர்பார்ப்புப்படியும் உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்னு சொன்னாரு.அப்படிச் சொன்னாருன்னா நீ எல்லாம் உங்க ஆசிர்வாதம்னு சொல்லிட்டுப் போயிருக்கணும்.அல்லது சரிங்கய்யான்னு சொல்லிட்டுப் போயிருக்கணும்.நீ குறுக்கே பேசினது நடந்துருச்சு என்று விளக்கினேன்.அவனும் மன சமாதானம் அடைந்தான்.அவன் போனதும்,என்னிடம் ஜோதிட உபதேசம் செய்தார்: இது உனக்கும் பொருந்தும்.நீ யார் கிட்ட ஜோதிட ஆலோசனை கேட்கப்போனாலும் சரி,அல்லது அருள்வாக்கு கேட்கப்போனாலும் சரி.அவங்க உனக்கு கடவுள் மாதிரி;அவங்க மனசுல இருந்து வருவது வெறும் ஜோதிடம் அல்ல;உனது எதிர்காலத்தைத்தீர்மானிக்கும் எதிர்கால உண்மைகள்!!! அப்படி அவங்க பேசும்போது நீ ஒருபோதும் குறுக்கே பேசக்கூடாது.அவங்க பேசி முடித்தப்பின்னர்,அவங்களே உன்னிடம் கேட்பாங்க: 
வேறு என்ன சந்தேகமோ கேளுப்பா என்ற அர்த்தம் வருமாறு அவர்கள் சொன்னபிறகே நீ உனது சந்தேகங்களைக் கேட்க வேண்டும்.
எனது ஜோதிட குரு சொன்னதில் பல உள்ளார்த்தங்கள் இருக்கின்றன.அந்த இளைஞனின் முதல் குழந்தை பெண்.அந்தப் பெண்குழந்தையின் பிறந்த ஜாதகப்படி அவளது லக்னத்துக்கு மூன்றாவது இடத்தில் ஆண் கிரகம் ஆட்சி பெற்று இருக்கிறது.அந்த இளைஞன்,அவனது மனைவியின் ஜாதகங்களும் அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக ஆணே பிறக்கும் என்பதை உறுதி செய்ததை நான் அவர்களுடைய ஜாதகங்களை கணிக்கும்போது மதிப்பிட்டேன்.குருவின் முன்னால்,இவ்வாறு அனாவசியமாக அந்த இளைஞனைப்பேச வைத்தது எது? அதுதான் அவனை இயக்கும் விதி.


இதே போல எனது ஜோதிட வாழ்க்கையிலும் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.ஒரு வயதான அம்மா ஜாதகம் பார்க்க வந்தார்.அவருக்கு ஐந்து பிள்ளைகள்.மூத்த மகனுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்தது.அவர்கள் அந்த மூத்த மகன்,மருமகள்,முதல் பேரக்குழந்தை ஜாதகங்களை வைத்துக்கொண்டு அடுத்த குழந்தை எப்போது பிறக்கும்? அது ஆணா? பெண்ணா? என்று கேட்டார்.


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரும்படி அனுப்பி வைத்துவிட்டேன்.சரியாக இரண்டு ஆண்டு முடியும்போது தேடி வந்துவிட்டார்.அப்படி வந்திருக்கும்போது மீண்டும் அதே கேள்வி கேட்டார்.அவரிடம் தற்போது உங்கள் மருமகள் கர்ப்பமாக இருக்கணுமே? என்று கேட்டேன்.

ஆமாம்யா,அதான் அடுத்தது பெண்ணா? பையனா? னு தெரிஞ்சுக்கறதுக்காக வந்தேன் என்றார்.

நீண்ட கணக்குகள்,மதிப்பீடுகள்,ஜோதிட ஆய்வுகள் செய்து 15 நிமிடத்தில்
“உங்களுக்கு பேத்திதான் பிறப்பாள்” என்றேன்.

“அப்போ பேரன் கிடையாதா?”என்று வில்லங்கமாக பேச,
“பேரனும் உண்டு” என்று திடீரென என்னையறியாமல் பேசிவிட்டேன்.

அந்த வயதான அம்மா என்னை ‘இவனெல்லாம் ஒரு ஜோதிடனா?’ என்ற சந்தேகப்பார்வையை என்மீது வீசிவிட்டுப் போய்விட்டார்.

சில மாதங்கள் கழிந்தன.அவருடைய மூத்தமருமகளுக்கு குழந்தைகள் பிறந்தன.முதலில் ஒரு பெண் குழந்தையும்,அடுத்து ஒரு ஆண் குழந்தையும் =இரட்டைப்பிள்ளளயாக பிறந்தன.


அந்தக் குழந்தைகள் பிறந்து 3 மாதங்களுக்குப்பிறகு,அந்தக் குடும்பமே காரில் தேடிவந்தது.அப்படி வரும்போது இரட்டைக்குழந்தைகளைக் கொண்டு வந்து.என்னைப் பெயர் வைக்கச் சொன்னபோதுதான் எனக்கு ஆச்சரியம் உண்டானது.


ஒவ்வொரு ஜோதிடரும் தெய்வத்தின் பிரதிநிதிக்குச் சமம்! எப்போது தெரியுமா? தனது எதிரியே தன்னிடம் ஜாதகம் பார்க்க வந்தாலும்,அந்த ஜாதகத்தில் இருக்கும் ஜோதிட உண்மைகளை நடுநிலையோடு வெளிப்படுத்தும் போது!!!

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா?


நாம் நம்மைப் போலவே இன்னொரு  உயிரை உருவாக்கவே கடவுள்,நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார்.காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் ஒருபோதும் ஆன்மீக வாழ்க்கையில் நுழைய முடியாது;(ஆனால்,ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறியது போல நடிக்கலாம்;நடித்து பிறரை ஏமாற்றலாம்)எப்போது நம் ஒவ்வொருவருக்கும் காம ஆசை அற்றுப்போகிறதோ,அப்போதே நாம் ஆன்மீக மலர்ச்சியை நமது மனத்தால் அடைவோம் என்பது அனுபவ உண்மை!!!நமது பிறந்த ஜாதகப்படி,நாடிப்பொருத்தம் என்ற ஒன்று உண்டு.நாடிப் பொருத்தம் இல்லாவிட்டால்,திருமணமே செய்யக்கூடாது;(இதில் ஒரு சில அபூர்வமான விதிவிலக்குகளும் உண்டு)இதில் தெய்வீக மற்றும் உடலியல் ரகசியம் புதைந்திருக்கிறது.முழுமையாக இதுபற்றி விவரிக்க எனது குரு அனுமதிக்கவில்லை;எனவே,ஓரளவு மட்டுமே விரித்துரைக்கிறேன்.நாம் இன்று சாப்பிடும் உணவு இன்றிலிருந்து 70 ஆம் நாளில் விந்தாக மாறுகிறது.இந்த விந்து பெண்ணுக்கும் உண்டு;நமது உடலில் இருக்கும் எலும்பு மூட்டுக்களில் இந்த விந்துவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இருக்கின்றன;இந்த விந்துவை அளவோடு செலவழித்தால்,நாம் ஆரோக்கியமாக வாழமுடியும்.நமது வேலை அல்லது தொழிலில் திறமையோடு சாதனைகள் செய்ய முடியும்.நமது வாழ்நாள் முழுக்கவும் மூட்டுவலி வராமல் வாழ முடியும்.நமது உடலுக்கு எடையைத்  தருவது இந்த வெள்ளை அணுக்கள்தான்;இந்த வெள்ளை அணுக்கள்தான் நமது உடலுக்குள் புகும் காய்ச்சல்,தலைவலி முதலான சிறு உபாதைகளை உருவாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி,அழிக்கிறது.அழித்து நமது உடலில் இருந்து கழிவுகள் மூலமாக வெளியேற்றுகிறது.நமது முகத்தில் தேஜஸ்ஸைத்  தருகிறது.நமது இளமையைப் பாதுகாக்கிறது;நமது ஆரோக்கியத்தோடு,செல்வச் செழிப்பையும் ஈர்த்துத் தருகிறது.
இப்பேர்ப்பட்ட இந்த விந்தின் புராதன இந்துப் பெயர்கள் சுக்கிலம் மற்றும் சுரோணிதம் ஆகும்.இதை நாம் எந்த அளவுக்கு அளவாகப் பயன்படுத்துகிறோமோ,அந்த அளவுக்கு நமது உடல்நலம் சிறக்கும்;அதன் மூலமாக நமது மனநலமும் சிறப்பாக இருக்கும்;மன நலம் சிறப்பாக இருப்பின்,நமது குடும்ப நலமும் வலிமையாக இருக்கும்;குடும்ப நலம் சிறப்பாக இருந்தால்,நமது வெளித் தொடர்புகளான பிற குடும்பங்களுடனான உறவுகள் சிறப்பாக மிளிரும்.இப்படியே சங்கிலித் தொடராக வளர்ந்து நமது நாட்டின் நலனும் உயரும்.


இதை அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சிசெய்து கண்டறிந்த கிறிஸ்தவ மேல்நாடுகள் நமது (ஆசியாவின்) நாட்டு மக்களின் ஒழுக்கத்தைச் சிதைக்கும் விதமாக ஆபாச மற்றும் வக்கிரமான காம எண்ணங்களை உருவாக்கும் விதமான இணையதளங்களை இணைய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிறுவியுள்ளன.எந்த ஒரு மின் அஞ்சலையும் ஹேக்கிங் செய்து பார்த்தால்,அதில் காமரீதியான படங்கள்,வீடியோக்கள் ஒன்றாவது நிச்சயம் இருக்கும்.தாம்பத்தியத்தில் கிடைக்கும் மன நிறைவு ஒருபோதும் அதை வீடியோவாகப் பார்ப்பதில் கிடைக்காது என்பது மட்டுமல்ல;தாம்பத்தியத்திலேயே  பேராசையை உருவாக்கிவிடும்.இந்தப் பேராசையால்தான் இன்று தமிழ்நாட்டில்,இந்தியாவில்,ஆசிய நாடுகளில் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது. மேலும்,தாம்பத்திய நடவடிக்கைகள் அதிகபட்சமாக 15 நிமிடங்களில் நிறைவடைந்துவிடும்;அப்படி நிறைவடைந்ததும் ஆழ்ந்த மன நிம்மதியும்,அளவற்ற சுறுசுறுப்பும் கணவனுக்கும்,மனைவிக்கும் உண்டாகும்.


ஆனால்,தாம்பத்தியத்தை விவரிக்கும் வீடியோவில் தாம்பத்தியத்தின் நடவடிக்கை நேரம் 1 மணி நேரமாக காட்டப்படுகிறது.அப்படியெல்லாம் எந்த ஒரு மனிதனும் ஒரு மணி நேரத்துக்கு தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது என்பதை நாம் உணர்வதே இல்லை;இங்குதான் குடும்பம் என்ற அமைப்பு சிதைவதற்குரிய கிறிஸ்தவ மேற்குநாடுகள் சமுதாயத்தைக் கெடுக்கும் வைரஸ் போல செயல்படுகின்றன.இதை நம்மில் எத்தனை பேர்கள் உணர்ந்திருக்கிறோம்?(நமக்குத்தான் நாம் ஒரு பெருமைக்குரிய  இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே தெரியவில்லையே?)


காமம் என்பது நெருப்பு என்கிறார் நெசவு இனத்தில் பிறந்த அரசியல் வல்லுநர் சாணக்கியர்.ஒவ்வொரு காம அனுபவமும் நம்மை சராசரி மனிதன் என்ற நிலையிலிருந்து காம வெறிபிடித்த மிருகம் என்ற இழிவான,கீழான நிலைக்குத் தள்ளிவிடும்;இதிலிருந்து மீள்வது மிகவும் கடினம் என்று தனது அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் விவரித்திருக்கிறார்.எனவே,
இணையம்,டிவிடி,செல்போன்கள்,டிவிடிக்கள்,செல்போன் கேமிராக்கள் போன்றவை நம் ஒவ்வொருவரையும் மிருக நிலைக்குத்தள்ளுகின்றன என்பதை நினைவுகூறுவோம்.இந்த தொழில்நுட்ப வளர்ச்சி நிஜத்தில் மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுத்திருக்கிறது.நாம் முன்னேறிய மனித சமுதாயம் அல்ல;பின் தங்கி வரும் மனித சமுதாயமே!அளவுக்கு மீறி நமது உடலைப் பாதுகாத்து வரும் வெள்ளை அணுக்களை வீணாக்கினால்,நமக்கு முதலில் ஞாபக மறதி வரத்துவங்கும்;அத்துடன் அடிக்கடி வறட்டு இருமலும் உண்டாகும்;இந்த சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்;இது நமக்கு மறைமுகமாக நமது உடலின் பாதுகாப்பு அமைப்பு விடும் எச்சரிக்கை ஆகும்.இந்த காலகட்டத்தில் அளவற்ற காம இச்சையைத் தூண்டுவிதமான எந்த ஒரு செயலையும் அடியோடு நிறுத்திவிட வேண்டும்;(காம ரீதியான படங்கள் பார்த்தல்,அது பற்றிய பேச்சுக்களை ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ளுதல்).இதையும் கண்டுகொள்ளாமல் இருந்து மனம் போல வாழ்ந்துவந்தால்,கடும் அசதி உண்டாகும்;சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாது;அடிக்கடி மூச்சு வாங்கும்; இதையும் கவனிக்காமல் விட்டால்,சாப்பிடும் அளவு ஒவ்வொரு தடவையும் குறையத் துவங்கும்;இறுதியில் மூட்டுவலி உண்டாகும்;நடக்க முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.இந்த சூழ்நிலையானது 1990 வரையில் 30 வயது முதல் 55 வயது வரையிலும் படிப்படியாக உண்டானது;தற்போதோ 20 வயது முதல் 30 வயதுக்குள் பல ஆண்களும்  பெண்களும் இந்த நிலையை எட்டிவிடுகின்றனர்.குறைந்த வயதிலேயே அனைத்தையும் அனுபவித்துவிட்டு முதுமையை எட்டிவிடுகின்றனர்;மீதி வாழ்கையை நடைபிணமாகக் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.ஒருவேளை கொந்தளிக்கும் காம உணர்வுகளால் நமது பாரத நாடு, ஒழுக்கம் கெட்டு போய்விட்டால் என்ன ஆகும்?
ஜெர்மனியில் யுப்பிஸ்(Yuppies) என்ற இனமே உருவாகியிருக்கிறது.இந்த இனத்தைச் சேர்ந்தவர்களின் அப்பா யாரென்றே தெரியாது.அந்த அளவுக்கு ஒழுக்கமின்றி சில தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்கிறார்களாம்.இதேபோல நமது இந்துப் பண்பாட்டைச் சீர்குலைத்து இந்தியாவின் முகத்தை,அடையாளத்தை சிதைக்கவே இந்த தொழில்நுட்பம் வந்திருக்கிறது.


இந்தியாவில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டைப் பிரச்சாரம் செய்யும் என்.ஜி.ஓ.க்கள் கூட வஞ்சகத்தோடுதான் பிரச்சாரம் செய்துவருகின்றன.
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் என்றும் இல்லை எய்ட்ஸ் என்று விளம்பரம் செய்வதில்லை;பிரச்சாரம் செய்வதில்லை;
எய்ட்ஸ் நோயிடமிருந்து உங்களைப் பாதுகாக்க ஆணுறை அணியுங்கள் என்றுதான் விளம்பரம் செய்துவருகின்றன.இதன் அர்த்தம் என்ன? நோயிலிருந்து சிக்காமல் தப்பு செய்யுங்கள் என்றுதான் அர்த்தம்.மேலும் நமது உடலின் ஆதாரசக்தியான இந்த வெள்ளை அணுக்களில் தான் நாம் ஜபிக்கும் எந்த ஒரு மந்திரஜபமும் சேமிப்பாகி வருகிறது.உதாரணமாக நீங்கள் ஒரு நாளுக்கு  ஒரு மணி நேரம்(அல்லது 10 நிமிடம்) ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறீர்கள் எனில்,அந்த மந்திரஜபத்தின் சக்தியானது இந்த வெள்ளை அணுக்களில் சேமிப்பாகிவரும்;இந்த சேமிப்பு அளவுக்கு மீறும்போதுதான் நமது ஜாதகப்படி இருக்கும் தோஷங்கள்,நவக்கிரகங்களில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கத் துவங்கும்.அப்பேர்ப்பட்ட வெள்ளை அணுக்களை அளவுக்கு மீறி வீணடித்தால் நாம் ஜபிக்கும் மந்திரஜபத்தின் சக்தியும் நமக்குள் செயல்படமுடியாமல் போய்விடும்.இந்த பாராவில் சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் பல ஆண்டுகளாக நமது ஆன்மீக குருபரம்பரையினர் ஆராய்ந்து கண்டுபிடித்த வியக்கத்தக்க உண்மை ஆகும்.


எனவே,ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து வருவதே சிறந்தது;ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்ந்து வந்து தினமும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிப்போம்;அளவற்ற தெய்வீக சக்திகளைப் பெறுவோம்;நமது தலையெழுத்தையே இந்த ஒழுக்கத்தாலும் மந்திர ஜபத்தாலும் மாற்றுவோம்!!!

ஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்!!!


நெல்லை மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் கிராமம் சிவசைலம் ஆகும்.இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது அமைந்திருப்பது அத்ரி மகரிஷியின் கோவில் ஆகும்.வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை;அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.


சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது.பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை;இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.


இப்பேர்ப்பட்ட இந்த அத்ரி மலையில் நந்தன ஆண்டின் ஆடிப்பூரத்திருநாளான இன்று 23.7.2012 அன்று நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்  அவர்கள் தலைமையில் ஒரு சிறு குழு வழிபாடு செய்யச் சென்றிருக்கிறது.உலகில் அமைதி வேண்டியும்,வெகு விரைவில் வர இருக்கும் பேரழிவிலிருந்து பூமியையும்,மக்களையும் காக்க வேண்டியும் சிறப்புப் பிரார்த்தனை,சித்த ஆத்ம தியானம் போன்றவைகள் செய்யப்பட்டன.இந்த சிறு ஆன்மீகக்குழுவினர் தியானம் செய்கையில் சில சித்த சுப  சகுனங்கள் தென்பட்டன.நிறைவுடன் திரும்பினர்.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ!!!

ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை

1.7.2012 ஞாயிறு அன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இந்த பயிற்சி வகுப்பினை தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு.வெங்கட்ராமன் அவர்கள் தலைமை தாங்கிட,திருக்குறள் நடராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
திரு.வெங்கட்ராமன் அவர்கள் ராஜபாளையத்தில் இருக்கும்  பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்;இவர் 2010 ஆம் ஆண்டில் தலைசிறந்த நல்லாசிரியராக தமிழ்நாடு அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்;2011 ஆம் ஆண்டில் தலைசிறந்த நல்லாசிரியராக இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.


திரு.திருக்குறள் நடராஜன் அவர்கள் நெல்லை மாவட்டம் இடைகால் என்ற ஊரைச் சேர்ந்தவர்.இவரது அர்ப்பணிப்பு மனப்பான்மையால் பலருக்கு திருக்குறள் மீதும்,தமிழ் மொழி மீதும் அளவற்ற ஆர்வம் பிறந்தது;இரண்டுமுறை இவரை தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது.


நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்கள் ஆத்மபலத்தை அதிகரிக்கும் 13 விதமான தெய்வீக வழிமுறைகளை சொல்லிக்கொடுத்தார்.இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே பின்பற்றினாலே,
1.நமது நீண்டகாலப் பிரச்னையான திருமணத்தடை/பூர்வீகச் சொத்துப்பிரச்னை/குழந்தை பாக்கியம் இன்மை போன்றவை நீங்கும்.
2.நீண்டகாலக் கடன்களைத் தீர்க்கும் எளிய வழிபாட்டுமுறை தெரிந்தது.
3.மறைக்கப்பட்ட பல சம்பிரதாயங்களும்,அவற்றின் சூட்சும ரகசியங்களும் போதிக்கப்பட்டது.
4.அன்னதானத்தின் மகிமைகளைப் பற்றி ஏற்கனவே பல ஆன்மீக இதழ்களில் வெளிவந்திருக்கின்றன;எந்த ஒரு ஆன்மீகப்புத்தகத்திலும் வெளிவராத பல மகிமைகள் சொல்லப்பட்டன.


இந்த பயிற்சி வகுப்பின் நிறைவில்,திரு அண்ணாமலையில் நாம் நடத்திய தெய்வீக விபூதிப் பயிற்சி வகுப்பின் பலன்களை சாட்சிகளோடு நிரூபிக்க முடிந்தது.


நமது தெய்வீக விபூதிப்பயிற்சி வகுப்பில் போதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றியதால்,ஒரு ஆன்மீகக்கடல் வாசகருக்கு 90 நாட்களில் அவரது 15,00,000 ரூபாய் கடன் தீர்ந்தது;அந்த வாசகரே நேரடியாக வந்து பேசினார்.வேறு சில வாசக,வாசகிகள் கூச்சத்தினால் மேடைக்கு வரவில்லை;அவர்களில் ஒருவருக்கு 42 நாட்களில் பூர்வீகச் சொத்துப்பிரச்னை முடிவுக்கு வந்து,அவருடைய பங்கு கிடைத்துவிட்டது;ஒரு வாசகிக்கு அவருடைய குலதெய்வம் நேரில் வந்து பேசுகிறது;அதை இன்னும் ரகசியம் காத்து வருகிறார்;அந்த குல தெய்வத்தின் ஆசிப்படி தனது குடும்பப் பிரச்னைகளைத் தீர்த்து வருகிறார்.அதன் பிறகு,ஹீலிங் சக்தியால் நீண்டகால நோய்களைக் குணப்படுத்தும் திரு.ராமச்சந்திரன் அவர்களை நமது ஆன்மீக குரு அறிமுகப்படுத்தி வைத்தார்;இவருக்கு நவகலசயாகம் செய்யும் வரையிலும் பெண்களுக்கான நோய்களை மட்டும் தனது ஹீலிங் சக்தியால் குணப்படுத்திக்கொண்டிருந்தார்;நவகலசயாகம் செய்த பின்னர்,ஆண்களுக்கும் தனது ஹீலிங் சக்தியால் நோய்களை குணப்படுத்த முடிகிறது என்று தெரிவித்தார்.இப்படி ஹீலிங் சக்தியால் குணப்படுத்துவதற்கு இவர் எந்தவிதமான நேரடி மற்றும் மறைமுகக் கட்டணங்களும் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எந்த நோக்கத்துக்காக ஆன்மீகக்கடல் ஆரம்பிக்கப்பட்டதோ,அந்த நோக்கம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது;நீண்டகாலப்பிரச்னைகளைத் தீர்க்க விரும்பும் நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் அடுத்து நடைபெற இருக்கும் ஆன்மீகப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும்.இதன் மூலமாக நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களை நேரடியாக சந்திக்க சுலபமான வாய்ப்புக்கள் கிடைக்கும்.தனிப்பட்டு சந்திப்பது கடினம்.
ஓம்சிவசிவஓம்

தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்!!!
1.நம்மிடம் பழகும் சிலர் எதெற்கெடுத்தாலும் நெகடிவ்வாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள்;நமது சிலபல முயற்சிகளில் ஒருசில தோல்வியில் முடிவதுண்டு;இதை அவர்களிடம் சொல்லி ஆறுதல் கேட்க நினைப்போம்;ஆனால்,இவர்கள் முகத்தில் சந்தோஷம் பொங்கும்; “நான் தான் அப்பவே சொன்னேன்ல” என்பார்கள்.ஆனால்,இவர்கள் ஒருபோதும் ஆறுதல் சொல்ல மாட்டார்கள்.இப்படிப்பட்டவர்களை நமது நட்பு வட்டத்தில் சேர்க்கவே கூடாது.சேர்த்தால் இவர்களின் மனோபாவம் நமக்கும் பரவி விடும்.அப்படி பரவி விட்டால்,நம் கதி அதோ கதிதான்.

2.சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சொல்கிறது:உங்களின் வயது,சாப்பிடும் மருந்துகள்,பட்ட அவமானங்கள்,நாம் ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் வழிபாடுகள் = இவைகளை ஒருபோதும் பிறருக்குத் தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த கருத்தின் அடிப்படையில் ஒரு பெரிய்ய்ய்ய்ய பதிவே எழுதலாம். நாம் ஏதாவது ஒரு கோவிலுக்கு பரிகாரத்துக்குச் செல்வதாக இருந்தால்,போகும் முன்பும் போய்விட்டு வந்தப்பின்னரும் எவரிடமும் அதுபற்றிச் சொல்லாமல் இருப்பது அவசியம்.இதன் மூலமாக நமது எதிரிகளை(அனுகூல சத்ருக்களையும்)யும் ஏமாற்றிவிடலாம்.
3.அனுகூல சத்ரு என்றால் என்ன? நம்மோடு பழகுவார்கள்;நம்மோடு தினமும் சில மணித்துளிகள் செலவழிப்பார்கள் அல்லது நம்மோடு பணிபுரிவார்கள்;நமக்கு ஒருசில உதவிகளும் செய்வார்கள்.உடனே இவர்களை நாம் நல்லவர்கள் என்று நம்பிவிடுவோம்;
அப்படி நம்பியப்பிறகு நமது குடும்ப அந்தரங்கங்களையும் சொல்லிவிடுவோம்;நமது ஆன்மீக முயற்சிகள்,நமது தொழில் முன்னேற்றங்கள்,நமது சேமிப்புகள்,நமது சொத்துக்கள்,நமது குடும்ப அவமானங்கள்,நமது குடும்பத்தின் பெருமைகள் போன்றவைகளையும் அடிக்கடி மனம் திறந்து சொல்லிவிடுவோம்.இதற்காகத்தான் இவர்கள் இவ்வளவு நாள் காத்திருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது.நம்மைப் பற்றி முழுமையாக அறிந்தபின்னர்,நமது தொழில் வளர்ச்சி அல்லது குடும்ப ஒற்றுமையை சிதைக்கும் விதமாக மாந்திரீக வேலை ஏதாவது செய்துவிடுவார்கள்.
இந்த மாந்திரீகவேலை எப்படி வேலை செய்யும்? கோவில்பிரசாதம் என்று நமக்குத் தரலாம்; வாழைப்பழம் அல்லது பழரசம் அல்லது குளிர்பானம் அல்லது அசைவ உணவு அல்லது நமக்கு விருப்பமான பானம் அல்லது உணவு என்று ஏதாவது  ஒருவிதத்தில் நமது உடலுக்குள் அவர்களின் மாந்திரீகம் சென்று விடும்.அப்படிச் சென்றுவிட்டால்,நமது கனவில் அடிக்கடி எலும்புகள் அல்லது பயமூட்டும் கனவுகள் அடிக்கடி வரும்.அல்லது யார் நம்மீது அக்கறையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு சூட்சுமமாக காட்டும்.இது குறைந்தது 6 மாதங்களுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கும் வேலை செய்யும்.நாம் யார்? நாம் தான் பகுத்தறிவுச் சிங்கமாச்சே! இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடுவோம்.நாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கிவிட்டால்,மாந்திரீகம் வேலை செய்யாமலா போய்விடும்?இவர்கள் தான் அனுகூலச் சத்ருக்கள்! இவர்களை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.
இவர்களிடமிருந்து எப்படி ஒதுங்குவது? எல்லோரிடமும் எப்போதும் உண்மையைப் பேசாதீர்கள்.இப்படி உண்மையைப்  பேசித்தான் பல குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. உண்மை என்ற மகாராணியை பொய் என்ற காவலர்களை வைத்து பாதுகாக்க வேண்டும் என்பது நவீன சாணக்கியத்தனம் ஆகும்.நம்மில் சிலர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வேலை பார்ப்பதாகச் சொல்லுவர்;சிலர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான சம்பளத் தொகையைச் சொல்லுபவர்களும் உண்டு.நமது பார்வையில் இவர்கள் பிராடுகள் என்று நினைப்போம்;இந்த கலியுகத்தில் இவர்களைப் போல வாழப் பழகாவிட்டால் நாம் தொலைந்தோம்.
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் நமது ஒவ்வொருவருக்குமே இன்றைய வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நிறைய்ய போதிக்கிறது.அதில் ஒன்று: வளைந்து நெளிந்து இருக்கும் எந்த ஒரு மரத்தையும் தச்சர்கள் வெட்ட மாட்டார்கள்.நேராக இருக்கும் மரத்தையே வெட்டுவார்கள்.அதுபோல நீங்கள் எல்லோரிடமும் உங்களைப் பற்றிய உண்மைகளை மட்டுமே சொன்னால்,சிலர் பொறாமைப்படுவார்கள்,ஆனால்,பலர் உங்களை உங்கள் துறையில் அல்லது உங்கள் குடும்ப ஒற்றுமையை வீழ்த்திட நீங்களே வழி அமைத்துக்கொடுத்ததாக அர்த்தமாகிவிடும்.

4.ஒருபோதும் இடுப்பில் அரைஞாண் கயிறு இல்லாமல் இருக்கக் கூடாது.இந்த  அரைஞாண் கயிறு சிகப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.இது பெண்களுக்கும் பொருந்தும்.

5.ஒருபோதும் கழுத்தில் கட்டப்படும் ருத்ராட்சம் சிகப்புக் கயிற்றில் மட்டுமே கட்டப்பட்டிருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் பலர் கறுப்புக்கயிற்றில் கட்டியிருக்கிறார்கள்.இது மிகவும் தவறு.இது அவர்களின் மனநிலையை படிப்படியாகப் பாதிக்கும்.
6.ஒருபோதும் நிர்வாணமாக குளிக்கக் கூடாது.அப்படிக் குளித்தால் நமது செல்வச் செழிப்பு நம்மை விட்டுச் செல்வதற்கு நாமே காரணமாகிவிடுவோம்.
7.ஒரு போதும் நிர்வாணமாக தூங்கக் கூடாது.நிர்வாணமாகப்படுத்து,போர்வையை நம் மீது போர்த்தி தூங்கக் கூடாது.இப்படிச் செய்தால் நமது குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோம்.
8.ஒரு போதும் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அது நமது விட்டு மொட்டை மாடியாக இருந்தாலும் சரி,வேறு எந்த இடமாக இருந்தாலும்(காடு,கடற்கரையோரம்,நதிக்கரையோரம்) சரி.இப்படிச் செய்பவர்களை உடனே மோகினி மற்றும் யோகினிகள் பிடித்துக்கொள்ளும்.இதனால் காம இச்சை காம வெறியாக மாறிவிடும்.இந்த காம வெறிக்கு முடிவே கிடையாது.நம்பிக்கைக்குரிய ஆன்மீக குருக்கள் மூலமாகவே இந்த யோகினி அல்லது மோகினியை வெளியேற்ற முடியும்.அப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒருவர் கூட கிடையாதே? ஏன் வம்பினை ஓசிக்கு வாங்க வேண்டும்?(எதிர்காலத்தில்  அதீத உளவியல்துறைக்கு இன்றைய கம்யூட்டர் என் ஜினியரிங் துறை போல அதிகமுக்கியத்துவம் வரும்;அப்போது நமது பூமியில்,நமது தெருவில் இருக்கும் குலதெய்வங்கள்,சிறுதெய்வங்கள்,மோகினிகள்,யோகினிகளை நேரில் பார்க்கவும்,பேசவும் சந்தர்ப்பம் உண்டாகும்.அதுவரை நாம் பகுத்தறிவு வாதிகளாகத்தான்  இருப்போம்!!!)
9.ஒருபோதும் காம அனுபவங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.வீடியோ எடுக்கும் பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது.இது மஹா பாவம் மட்டுமல்ல;இதைவிடக் கீழான செயல் உலகில் கிடையாது.(காம சாஸ்திரம் சொல்லுவது என்னவெனில்,ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு காம இச்சையைத் தூண்டிவிட்டால்,அந்த ஆண் அந்தப் பெண்ணின் காம இச்சையைத் தணிக்க வேண்டும்.இது பெண்ணுக்கும் பொருந்தும்.எனவேதான் காம விஷயங்களில் கணவன் மனைவி என்ற சமுதாய அமைப்பு உருவானது.இதை மீறினால்,மிகப்பெரிய அழிவை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்;இன்று பொழுது போக்காக பலர் காம வலைப்பூக்களையும்,இணையதளங்களையும் நடத்திவருகின்றனர்.இது அவர்களின் பல பிறவிகளையும் கடுமையாக பாதிக்கும்;அவர்கள் வீட்டுப்  பெண்களின் நிம்மதியான வாழ்க்கையைச் சீர்குலைக்கும்.அது மட்டுமல்ல;இப்படி நடத்துபவர்களின் மனைவி,மகள்,பேத்தி என்று ஏழு தலைமுறைப் பெண்களையும் ஒழுக்கரீதியாக கடுமையாக பாதிக்கும்)

10.உடலுறவு முடிந்ததும் குளித்தே ஆக வேண்டும்.குளித்தப்பின்னரே,அந்த இடத்தை விட்டு வேறிடத்துக்கு பயணிக்க வேண்டும்;இல்லாவிட்டால் சில சூட்சும சக்திகளின் கைப்பாவையாக மாறி நாம் வழிபடும் தெய்வமே நம்மை பாதுகாக்க முடியாமல் போய்விடும்.

11.வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்யும் தானங்களும்,உதவிகளும் பலமடங்காகப் பெருகி நம்மைத் தேடி வரும்.வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டும் நாம் யாருக்கும்,எவருக்கும் பணம்,தங்கம்,உப்பு போன்றவைகளைத் தரக்கூடாது.இந்த நம்பிக்கை இன்றும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக பின்பற்றப்பட்டுவருகிறது.

12.வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்போம்;அந்த நூலகத்தில் புராதனமான புத்தகங்களை வாங்கி வைப்போம்;தினமும் அதில் ஏதாவது ஒரு புத்தகத்தின் சில பக்கங்களை வாசிப்போம்;இணையநூலகத்தினால் பக்கவிளைவுகள் அதிகம்.புத்தகம் நமது வாழ்க்கையை புரட்டிப்போடும் அனுபவத் தொகுப்பு ஆகும். நமது வீட்டு நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகங்கள்:
1.சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம்            2.Lectures from Columbo to Almora- Swami Vivekananada
 3.மறைந்திருக்கும் உண்மைகள்- ஓஷோ
      4.வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்- ஓஷோ
5.வந்தார்கள்,வென்றார்கள்=மதன்
6.இது உங்களுக்காக = விகடன் பிரசுரம் வெளியீடு
7.நான் ஏன் நாத்திகனானேன்?= தந்தை பெரியார்
8.தேசப்பிரிவினையின் சோக வரலாறு=ஹெ.வே.ஷேசாத்ரி
9.விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னத்தின் வரலாறு=விவேகானந்த கேந்திர வெளியீடு
10.விழிமின் ;எழுமின்=விவேகானந்த கேந்திர வெளியீடு
11.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=விநாயக தாமோதர சாவர்க்கர்
12.நாதுராம் விநாயக் கோட்ஸே=எழுதியவர் இஜட்.ஒய்.ஹிம்சாகர்(குமரிப்பதிப்பகம்,நாகப்பட்டிணம்)
13.ஓம்சக்தியும்,அணுசக்தியும்
14.பாரதத்தின் விஞ்ஞானச் சாதனைகள்=இராம.கோபாலன்
15.கூடு = பாலகுமாரன் எழுதிய நாவல்
16.எங்கே போகிறோம்? =அகிலன்
17.ஏழை படும்பாடு=விக்டர் ஹ்யூகோ,தமிழில் சுத்தானந்த பாரதி
18.பாரதியார் கவிதைகள்
19.ஸ்ரீரங்கன் உலா
20.நான் நேசிக்கும் இந்தியா=ஓஷோ
21.அடுத்த நூற்றாண்டு=சுஜாதா
22.மனித மனத்தின் அற்புத சக்திகள்
23.காமத்திலிருந்து கடவுளுக்கு=ஓஷோ
24.உங்களால் வெல்ல முடியும்=ஷிவ் கெரா
25.நீங்களும் முதல்வராகலாம்=நக்கீரன் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சுயமுன்னேற்ற நூல்
26.டாலர் தேசம் =பா.ராகவன்
27.சக்கரவர்த்தி திருமகன்=ராஜாஜி
28.எண்ணங்கள்=எம்.எஸ்.உதயமூர்த்தி
29.வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்=ஜேம்ஸ் ஆலன்(தமிழில்)
30.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
31.ஆன்மீகத்திறவுகோல்
32.சொர்ண பைரவர் வழிபாடு
33.ஆன்மீகப்பயணம் இரண்டு பாகங்கள்
34.சிவபராக்கிரமம்
35.இந்தியா 2020=ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்
36.தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்=ரா.பி.சேதுப்பிள்ளை
37.கண் சிமிட்டும் விண்மீன்கள்=சுசீலா கனகதுர்கா
38.திருமூலரின் திருமந்திரம்=எளிய உரையுடன்
39.திருப்பாவை
40.திருவெம்பாவை
41.பைரவ ரகசியம்=காகபுஜண்டர் தருமலிங்கசுவாமிகள்
42.பைரவ விஜயம்
43.மங்களம் வாழ்வருளும் மகா பைரவர்=பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ சுவாமிகள்
44.திராவிடத்தால் வீழ்ந்தோம்=குமரிப்பதிப்பகம்
45.தமிழ் இலக்கிய வரலாறு
46.ஒரு யோகியின் சுயசரிதை
47.வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு
48.மாவீரன் புலித்தேவன்
49.கட்டபொம்மன் அரசாங்கம்
50.விதுரநீதி
51.சுக்கிர நீதி
52.ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்=கண்ணதாசன் பதிப்பக வெளியீடு
53.சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு
54.சுவாமி சித்பவானந்தர்
55.சதுரகிரி ஸ்தல புராணம்=தாமரைப்பதிப்பகம்
56.அதிசய சித்தர்கள்=தினத்தந்தியில் தொடராக வெளிவந்தது
57.சித்தர்களின் சாகாக் கலை=வேணு சீனிவானன்(வெளியீடு விஜயா பதிப்பகம்,கோவை)
58.யுனிவர்சல் மைண்டு பவர்=பி.எஸ்.பி.அவர்கள்
59.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வரலாறு
60.மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்=சுவாமி சுகபோதானந்தா

13.தினமும் பைரவ மந்திரத்தை வீட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோ முன்பு அல்லது கோவிலில் இருக்கும் சன்னதி முன்பாக ஜபிக்கலாம்.
14.ஜோதிடம் பார்க்க நாம் ஒரு புதிய ஜோதிடரை சந்திக்கிறோம்;ஒரு வருடத்தில் அல்லது ஓரிரு வருடங்களில் அவரை பலமுறை ஜோதிடம் பார்க்க சந்திக்கிறோம்;அவர் சொன்னதைப் பின்பற்றிப்பார்த்து அது நமக்கு வெற்றியைத் தந்துவிட்டால்,அதன் பிறகு அவரையே ஆஸ்தான ஜோதிடராக ஆக்கிக் கொள்வது நல்லது.அப்படி ஆஸ்தான ஜோதிடராக்கியப் பின்னர்,அவரையும்,அவரது ஜோதிடக் கணிப்பையும் சந்தேகப்படக்கூடாது.இரண்டாவதாக இன்னொரு ஜோதிடரை சந்திக்கக் கூடாது.
15.ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை இந்த மூன்று நாட்களிலும் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் அன்னதானம் செய்ய வேண்டும்.இப்படி நாம் வாழ்நாள் முழுக்கவுமே அன்னதானம் செய்து வருவது மிகுந்த நன்மை பயக்கும்.
16.எனது ஜோதிட அனுபவப்படி,நீதி நேர்மை,நியாயம் என்று மட்டும் வாழ்பவர்கள் கூட ஒரிஜினல் ஜோதிடரின் ஆலோசனையை பின்பற்றுவதில்லை;இதனால் இவர்கள் வாழ்நாள் முழுவதுமே கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அதே சமயம்,நீதி நியாயத்தை ஓரளவே பின்பற்றி, வசதியாக வாழ்வதற்கு எப்படி வேண்டுமானாலும் வாழ்பவர்கள் தனது ஜோதிடரின் ஆலோசனையை அப்படியே பின்பற்றி தங்களது தப்புக்களுக்கு(தவறு என்பது தெரியாமல் செய்வது;தப்பு என்பது வேண்டுமென்றே செய்வது) பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறார்கள்;அடிக்கடி இப்படி தப்புக்கள் செய்தும்,உடனே அதற்குரிய பரிகாரம்/பிராயச்சித்தம் செய்துகொண்டு இருப்பதும் அவர்களை சொகுசாகவும்,நிம்மதியாகவும் வாழ வைக்கிறது.
நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் முழு நீதி நியாயத்தோடு வாழ முடியாது என்பதை நேர்மையாளர்கள் உணர்வதற்குள் அவர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதி செலவழிந்துவிடுகிறது.இதனால்,நேர்மையாளர்கள் பல அரிய,பொன்னான வாய்ப்புகளை இழந்துவிடுகிறார்கள்.(அவர்களே அவன் அப்படியெல்லாம் அயோக்கியத்தனம் செய்கிறான்;ஆனால் நல்லாத்தானே இருக்கிறான் என்று புலம்பவும் செய்கிறார்கள்;)

17.உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடுமே தனது மதத்தைக் காப்பாற்றவும்,பரப்பவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.ஒவ்வொரு மதத்துக்கும் அரசியல்பின்புலம் இருக்கிறது.அதே சமயம் நமது இந்து தர்மத்துக்கு மட்டுமே அரசியல் பின்புலம் இல்லை;எனவே,நாம் ஒவ்வொருவருமே நமது இந்து தர்மத்தை பாதுகாக்க சிலபல பொறுப்புக்களை சரிவர செய்ய வேண்டும்.அவை அனைத்துமே மிகச் சுலபமானவையே!
அ)பன்னாட்டு குளிர்பானங்களை அருந்துவதை நிறுத்துவோம்;50 பைசாவுக்கு தயார் செய்து,ரூ.15/-விற்கும்  பன்னாட்டு குளிர்பானங்கள் அனைத்துமே,நாம் தரும் ரூ.15/- இல்ரூ.5/-ஐ கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு அனுப்பி வைப்பதை கடமையாகச் செய்துவருகிறது.அதாவது நம்மிடமிருந்தே பணத்தைப் பிடுங்கி,நமது நாட்டிலே வாழ்ந்து வரும் நமது அப்பாவி இந்து சகோதர,சகோதரிகளை கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றப்பயன்படுத்துகின்றன. பன்னாட்டு குளிர்பானங்களால் நமது உடலுக்கு 0.00001% நன்மை கூட கிடையாது.தீமையோ 2000% வரை ஏற்படுகிறது என்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.மேலும் பன்னாட்டு குளிர்பானம் ஒன்றை தாகத்துக்காக நாம் அருந்துவோம்;அருந்தி முடித்ததும்,தாகம் அதிகரிக்கும்.தீராது.
ஆ) மாதம் ஒருமுறை முடிந்தால் வாரம் ஒருமுறை நமது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது வீட்டிலிருந்து அருகில் இருக்கும் கோவிலுக்குச் செல்லுவோம்;அங்கே நமது ஆன்மீக முயற்சிகள்,அதனால் கிடைத்த வெற்றிகள் அல்லது அனுபவங்களை நமது குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்ளுவோம்;இதன்மூலமாக நமது குடும்பத்தாரிடம் இன்னும் நெருக்கம் உண்டாகும்.மேலும் நமக்கு உண்டான பிரச்னைகள் அதை நாம் எப்படி எதிர்கொண்டோம்? அல்லது அதை எப்படி சொதப்பினோம்? என்பதை நமது குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்வது இன்றைய வேகமான காலகட்டத்தில் அவசியம் ஆகும்.

இ) இறை வழிபாட்டைப் பொறுத்தவரையில் விநாயகர் வழிபாடு,குல தெய்வ வழிபாடு மற்றும் நமது இஷ்ட தெய்வ வழிபாடு என்று மூன்றே வழிபாடு செய்தாலே போதுமானது.நிறைய தெய்வ வழிபாடுகள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றாது.இஷ்ட தெய்வ வழிபாட்டைத் தேர்ந்தெடுப்பது சுலபம்.நமது பிறந்த ஜாதகப்படி நமக்கு என்ன திசை நடைபெறுகிறதோ,அதற்குரிய அதிதேவதை வழிபாட்டையே இஷ்டதெய்வ வழிபாட்டாகத் தேர்ந்தெடுப்பது போதுமானது.

18.ஒரு போதும் கடன் வாங்கக்கூடாது;கடன் கொடுக்கக்கூடாது;இந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.அதே சமயம்,நமக்குத் தேவையான அனைத்தையும் நாமே நமது உழைப்பு மற்றும் சேமிப்பின் மூலமாக வாங்கிக்கொள்ளப்பழக வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு பெற்றதாகத் திகழ வேண்டும்.அதற்கு சேமிப்பும்,சிக்கனமும் உதவும்.மீளாத கடன் அல்லது நோய் அல்லது எதிரிகளால் துன்பப்படுபவர்கள் அவருடைய கர்மவினைகளால்தான் இவ்வாறு கஷ்டப்படுவார்கள்.அதை உரிய ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலமாக நீக்கிவிட முடியும்.

19.பல நூற்றாண்டுகளாக நம்மிடையே ஒரு  மூடநம்பிக்கை பரவியிருக்கிறது.சிவனை வழிபடுபவர்களை சிவன் கடுமையாக சோதிப்பார்;அதன் பிறகே நமது கோரிக்கையை ஏற்பார் என்பது அந்த மூட நம்பிக்கை ஆகும்.சிவன் மட்டுமல்ல;எந்த ஒரு இந்துக்கடவுளும் தன்னை வழிபடும் மனிதர்களை சோதிப்பது இல்லை என்பதே அனுபவ ஆராய்ச்சி முடிவு.பிறகு ஏன் நமக்கு ஏதாவது ஒரு தெய்வத்தை வழிபாடு செய்யத் துவங்கியதும்,சோதனைகள் வருகின்றன?

ஏனெனில்,நம் ஒவ்வொருவரைச் சுற்றியும் நமது வாழ்க்கையை இயக்கும் நவக்கிரக சக்திகள் இருந்துகொண்டே இருக்கின்றன.நமது பிரார்த்தனைகளின் வலிமை அவைகளைச் செயல்படவிடாமல் தடுத்து,நமக்கு நன்மைகளை மட்டுமே தர முடியும்.அந்த நவக்கிரக சக்திகளே நம்மை தொடர்ந்து வழிபாடு செய்ய விடாமல் தடுக்கும் என்பது ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு ஆகும்.

20.ஒரு அமாவாசையன்று திரு அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்;அந்த அமாவாசைத் திதி இருக்கும் நேரத்துக்குள் கிரிவலப் பயணம் சென்று முடிக்க வேண்டும்;அந்த கிரிவலப் பயணம் முழுவதும்(சுமார் 14 கி.மீ.தூரம்) ஓம்அண்ணாமலையே போற்றி என்று ஜபித்தவாறே செல்ல வேண்டும்.